Author Topic: செய்திச்சுடர்  (Read 6354 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
செய்திச்சுடர்
« on: November 05, 2012, 03:58:51 AM »
ஒபாமா மீண்டும் அதிபராவாரா? - ஒரு விரிவான பார்வை

 வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், இந்தியாவின் லோக்கல் அரசியலை விட ஏக பரபரப்புடன், அமெரிக்க அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

ராம்னி வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிலரும், ஒபாமாவின் வெற்றி நிச்சயக்கப்பட்டு விட்டது என பெரும்பான்மையினரும் நம்பத் தொடங்கியுள்ளனர்.

கடைசி கட்ட கருத்துக்கணிப்புகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளதால், ராம்னி தரப்பு டல்லடிக்க ஆரம்பித்துள்ளது. சான்டி புயலில் ஒபாமாவின்  சின்சியரான நடவடிக்கைகள், கட்சி சார்பற்றவர்களின் வாக்குகளை அவர் பக்கம் திருப்பியுள்ளது.

நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க்

இரண்டு முறை குடியரசுக் கட்சி சார்பிலும், மூன்றாவது தடவை சுயேட்சையாகவும் நின்று வெற்றி பெற்ற நியூயார்க் நகரின் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2008 தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. சில விஷயங்களில் ஒத்த கருத்து இல்லையென்றாலும், எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒபாமாவின் தொலை நோக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான திட்டங்களுக்காக ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

பெரும் மரியாதைக்குரியரவாக திகழும் ப்ளூம்பெர்க்கின் ஆதரவு ஒபாமாவுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் ஒபாமாவை முன்மொழிந்துள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், சிகாகோ ட்ரிப்யூன்ஸ் ஆகிய முண்ணனி பத்திரிக்கைகள் ஒபாமாவுக்கு ஆதரவாக இறங்கிவிட்டன.

மயாமி ஹெரால்டு பத்திரிக்கையின் ஆதரவு, கடும்போட்டியுள்ள ஃப்ளோரிடாவில் ஒபாமாவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ராம்னியின் மர்மன் மத மக்கள் பெருவாரியாக வசிக்கும் யுட்டாவில், சால்ட் லேக் ட்ரிப்யூன் பத்திரிகையின் ஒபாமா ஆதரவு, ராம்னி குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தேசிய அளவில் யார் அதிக வாக்குகள் பெற்றாலும், அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் மாநில அளவிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. கடும்போட்டி நிலவும் ஒஹயோ, ஐயோவா, விஸ்கான்ஸின், வர்ஜினியா, ஃப்ளோரிடா, நெவடா, கொலோராடோ, நியூ ஹாம்ஸ்ஷையர் ஆகிய எட்டு மாநிலங்கள் தான் வெற்றியை தீர்மானிக்க உள்ளன.

ஒபாமா முண்ணனியில் இருக்கும் ஒஹயோ, விஸ்கான்ஸின், ஐயோவா மாநிலங்களில் வெற்றி கிடைத்தாலே அவரது வெற்றி உறுதியாகி விடுகிறது. ஏனைய மாநிலங்களில இருவருக்கும் கடும் போட்டி என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கட்சி சாராதவர்களின் வாக்குகளே அதிபரை தேர்தெடுக்கும் என்ற சூழல் நிலவும் வேளையில், அமெரிக்காவில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்கள், கட்சி சார்பற்ற பிரபலங்களிடம் பேசினோம்.

"ஒபாமாவுக்கு மாற்று ராம்னி என்ற நிலை இல்லாத்தால்தான் தேர்தல் போட்டி கடுமையாக தெரிகிறது. ராம்னி ஏன் வெற்றி பெறவேண்டும் என்று ஆணித்தரமான கருத்துக்கள் உருவாகவில்லை. நல்ல பிஸினஸ்மேன் என்றாலும், தெளிவான மாற்று கொள்கைகளை அவர் முன் வைக்கவில்லை. முதல் விவாதத்தில் சற்று முன்னேற்றமாக தென்பட்டாலும், அடுத்தடுத்து நம்பிக்கை தரும் விதத்தில் அவர் தெளிவான கருத்துக்களை மக்கள் முன் வைக்கவில்லை.
ஒபாமா இன்னும் கூடுதலாக செயல்பட்டிருக்கமுடியும் என்று நம்பினாலும், கடுமையான நெருக்கடியில் பதவியேற்ற அவரது ஆட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது" என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது.
நமது கருத்து சேகரிப்புகளை இருவிதமாகத்தான் பிரிக்க முடிந்தது. எதனால் ஒபாமா வெற்றி பெறுவார் அல்லது ராம்னி ஏன் வெற்றி பெற முடியாது என இங்கே தொகுத்திருக்கிறோம்...

ராம்னிக்கு பாதகங்கள் ஐந்து

1. பதினெட்டு மாதங்களாக ராம்னியின் பேச்சுக்களைப் பாருங்கள்... 'அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒபாமா தான் காரணம்' என்ற ரீதியில் குறை சொல்லி மக்களை பயமூட்டும் விதமாகத்தான் அவர் பேசி வருகிறார்.

வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பது உண்மைதான். அதை ஒபாமாவும் மறுக்கவில்லை. ஆனால் இப்பிரச்சினைக்கு ஒபாமா தான் பொறுப்பு என்பதை நடு நிலையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. முந்தைய 8 ஆண்டு புஷ் ஆட்சிதான் நிலைமை சீரழிந்த்தற்கு காரணம் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

ஒபாமாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் போதாது என்றால், அதற்குரிய மாற்று வழியை முன்வைக்க வேண்டுமல்லவா? அதை செய்யாமல் எதிர்மறையான பிரச்சாரங்கள் செய்ததன் விளைவாக  நடு நிலையாளர்கள் ராம்னியிடமிருந்து விலகிவிட்டனர். தவிர அமெரிக்கா குடியரசுக்கட்சியினருக்கு மட்டுமே சொந்தம் என்ற ரீதியில், சிறுபான்மையினரின் ஆதரவை முற்றிலும் இழந்து விட்டார். குடியேற்ற உரிமை சட்ட சீர்திருத்த்தில் அவருடைய நிலையினால், ஹிஸ்பானிக் இன மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.


2. ராம்னி அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘அமெரிக்காவை நம்புகிறேன்' என்பதாகும். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரது தொழில்கள், முதலீடுகள் எல்லாமும் அயல் நாட்டிலேதான் இருக்கின்றன. அமெரிக்காவை நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு, சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்துள்ளவரை,  நடுத்தர மக்களால் நம்பிக்கையோடு பார்க்க முடியவில்லை. அமெரிக்க உற்பத்தி துறை வேலைகள் சீனாவுக்கு சென்றுவிட்டன என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு, சீனாவுக்கு தனது நிறுவன்ங்களின் வேலையை அனுப்பிய ராம்னி மீது நம்பிக்கை எப்படி வரும்?


3. ராம்னியின் தொழில்களும் வருமான வரியும்- இருபத்தைந்து வருடங்களாக தொழில் செய்து வருகிறேன். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி என்று எனக்கு தெரியும் எனபதுதான் அவரது பிரதான வாதம்.
பணத்தைப் போட்டு ஒரு நிறுவனத்தை வாங்குவது. அதனை மற்றவரிடம் விற்று லாபம சம்பாதிப்பது என்ற 'முதலிடு செய்வது'. மட்டுமே அவரது தொழில்களாக இருந்திருக்கின்றன. இன்று வரையிலும் இன்ன தொழில் தொடங்கி இத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன் என்று அவரால் ஒரு நிறுவனத்தை கூட அடையாளம் காட்டமுடியவில்லை.

மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. அப்படிப்பட்ட எந்த நிறுவனத்தையும் ராம்னி  தொடங்கவில்லை. அதனால் இருபத்தைந்து ஆண்டுகள் தொழில் செய்தாலும் புதிய வேலைகளை உருவாக்குவதில் அவருக்கும் அனுபவம் இல்லை.


4.    மேலும் அவரது வருமான வரி சதவீதம், சாமானியனை விட குறைவாக 14 சதவீதம் மட்டுமே. பொதுவாக அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுபவர்கள் கடந்த பத்து வருட வருமான வரி விவரங்களை வெளியிடுவர். ராம்னியின் தந்தையே அதை பின்பற்றி வெளியிட்டுள்ளார். ஆனால் ராம்னி கடைசி இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வெளியிட்டுள்ளார். முந்தைய வரிவிவரம் வெளிவந்தால், அவரது தொழில் திறமை, நேர்மையின்மை அம்பலமாகிவிடும் என்ற பயத்தினால் வெளியிடவில்லை.
இதன் மூலம் ராம்னி வெளிப்படையானவர் அல்ல ரகசியமானவர் என்ற முத்திரையும் கிடைத்துள்ளது.


5. வாக்குறுதிகளை அள்ளிவிடும் ராம்னி, அதை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டால், ஆட்சி முதலில் வரட்டும் அப்புறம் சொல்கிறேன் என்று விஜயகாந்திற்கே சவால் விடும் வகையில் பேசுகிறார். இது அவர் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.  நான்கு ஆண்டுகளில் 12 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவேன் என்கிறார். அப்படியென்றால் மாதத்திற்கு இரண்டரை லட்சம் புதிய வேலைகள். தற்போதைய சூழலில் அது சாத்தியமே அல்ல என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் 5 ட்ரில்லியன் கூடுதல் வரிவிலக்கு, 2 மில்லியன் கூடுதல் ராணுவச்செலவு என செலவுகளை அதிகரிக்கிறாரே தவிர அதை எப்படி ஈடுகட்டப்போகிறேன் என்று சொல்ல முடியவில்லை. ஒருவேளை அவர் சொன்னதை செய்ய நேர்ந்தால், அது  நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி உயர்வையே ஏற்படுத்தும்.

தெளிவற்ற கொள்கைகள், அடிக்கடி நிலையை மாற்றிக்கொள்ளுதல் போன்றவைகளால், எதைச் சொல்லியாவது ஆட்சிக்கு வந்து விடவேண்டும் என்ற பேராசைதான் வெளிப்படையாக தெரிகிறதே தவிர ஒபாமாவுக்கு மாற்று ராம்னி என்ற கருத்து ஏற்படவில்லை. அதற்கான முழுப்பொறுப்பும் ராம்னியையே சாரும்.

ஒபாமாவின் சாதகங்கள் ஐந்து

1. ஒபாமா ஆட்சிக்கு வந்த போது நாள் தோறும் அமெரிக்கர்கள் வேலைகளை பறிகொடுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தடுத்து நிறுத்துவதுதான் அவருடைய தலையாய கடமையாக இருந்த்து. சீர்கெட்ட வங்கி நிர்வாகம், அதனால் பாதிப்படைந்த வீட்டுத்துறை, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி என பன்முனை தாக்குதல்களை அவர் சமாளிக்க வேண்டியிருந்த்து.

முந்தைய 8 ஆண்டுகள் புஷ் ஆட்சியில் எடுத்த பல முடிவுகளை மாற்றி, ஒபாமா எடுத்த நடவடிக்கைகளால நிலைமை மோசமடைவது தடுக்கப்பட்டு, வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. இரண்டரை ஆண்டுகளில் ஐந்து மில்லியன் வேலைகள் உருவாகியுள்ளன. இதே கணக்கு தொடர்ந்தால் அடுத்த நான்காண்டுகளில் எட்டு மில்லியன் கூடுதல் வேலைகள் நிச்சயம். புதிய துறைகளின் முன்னேற்றம் என்றால் இன்னும் அதிக்மாக சாத்தியம் இருக்கிறது.

2. வெளியுறவுக் கொள்கைகளில் ஒபாமாவின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர், ஆஃப்கானிஸ்தானிலும் முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்துள்ளார். அதே சமயத்தில் ஒசாமா பின்லேடனை ஒழித்து கட்டவும் மறக்கவில்லை. போர் செலவுகளை அதிகம் ஏற்படுத்தாமல் மத்திய கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுத்தார். மத்திய ஆசிய மற்றும் ஏனைய உலக் நாடுகளுடன் நல்லுறவு வலுப்பட்டது. ஒபாமா ஆட்சியில், அமெரிக்க்ர்களின் மீதான வெறுப்பு உலக அளவில் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து இதே அணுகுமுறையும் கால அவகாசமும் தேவைப்படுகிறது.

3.    நடுத்தர வர்க்க மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் முழுமையாக உணர்ந்தவராக ஒபாமா இருக்கிறார். காப்பீடு திட்ட சீரமைப்பு, புதிய திட்டங்கள் அனைத்து அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதியை உறுதி செய்கிறது. நெடுங்காலமாகஇதுவரை எந்த அதிபரும் செய்யத் துணியாத செயல் அது.
4.    கல்வி சீரமைப்பு, புதிய தொழில்களை நோக்கி செயல்திட்டம் போன்றவை உடனடித் தேவகைகளுக்கு மட்டுமல்ல, அடுத்த நூற்றாண்டுவரையிலும் தொலை நோக்கு கொண்டதாக இருக்கிறது. அதிபராக பதவியேற்ற புதிதில் பெங்களூருக்கு வேலை செல்லக்கூடாது என்று கூறியவர், சில வேலைகள் அமெரிக்காவுக்கு திரும்பாது என்ற உண்மையை தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

கம்ப்யூட்டர் துறை உள்ளிட்ட புதிய தொழில் நுட்ப வேலைகளுக்கு அமெரிக்கர்கள் தயாராக இல்லாததால்தான் அவை வெளிநாடுகளுக்கு செல்கின்றன என்ற உண்மையை முற்றாக உணர்ந்துள்ள அவர், அமெரிக்கர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். உடனடி தீர்வு கொடுக்காத நிலையிலும், எதிர்காலத்தை கருதி அவரின் தொலை நோக்கு பார்வையை இங்கே கவனிக்க வேண்டும்.

5. முக்கியமாக அவரது நம்பகத்தன்மை, கடின உழைப்பு, நேர்மை, வெளிப்படையான செயல்பாடுகள் அதிபருக்குரிய தகுதிகளாக கருதப்படுகிறது, இந்த அம்சங்களில் ஒபாமா பன்மடங்கு உயர்ந்தவராக தெரிகிறார். ஏற்கனவே நான்கு ஆண்டுகள் அவரது அணுகுமுறையை பார்த்து வரும் நடுநிலையாளர்களுக்கு, ராம்னியை விட ஒபாமாவே தொடர்வது அமெரிக்காவின் மதிப்பை தக்கவைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒபாமா மீது ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஊதாரித்தனமான செலவீனங்களோ வெளிவரவில்லை. வெள்ளை மாளிகையில் அவரது இருப்பிடத்திற்கான மாற்றியமைக்கும் செலவைக்கூட அவரே ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளன். மக்களோடு மக்களாக வலம் வரும் ஒபாமா நடுத்தர வர்க்கத்தின் நண்பனாக தெரிகிறார்.. ராம்னியோ சந்தேகத்திற்குரியவராக தெரிகிறார். இதுவும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.


இன்னும் 48 மணி நேரம் மட்டுமே...

நாம் தொடர்பு கொண்ட கட்சி சாராதவர்களின் கருத்துக்களின் அலசல்கள் ஒரு புறம் இருக்கையில், இன்னும் மூன்று நாட்களில் ஒட்டு மொத்த அமெரிக்கர்களின் விருப்பத்திற்குரியவர் யார் என்று தெரியப்போகிறது.

2000 ஆம் ஆண்டைப்போல், இந்த தேர்தலின் முடிவும் சில நூறு வாக்குகளில் அமைந்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று தான் ஒபாமாவும், ராம்னியும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

கடைசியில் வந்த தகவல் படி, ஃப்ளோரிடாவில் ஆரம்பித்துள்ள 'முன் வாக்கு பதிவு'க்கு கூட்டம் அலைமோதுகிறது.  நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள். பெரும்பாலும் நடுத்தர, ஏழை வாக்காளர்களே 'முன் வாக்கு பதிவில்' கலந்து கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ஒபாமாவுக்கு தான் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன!
« Last Edit: November 05, 2012, 04:33:46 AM by Global Angel »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #1 on: November 05, 2012, 04:02:21 AM »

ஊழல் ஒரு புற்றுநோய்.. ஊழலை ஒழிக்கப் போராடுவோம்: டெல்லி பொதுக்கூட்டத்தில் சோனியா


டெல்லி: ஊழல் ஒரு புற்றுநோய் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.. ஊழலை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம் என்று ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு லட்சம் பேரை திரட்டி டெல்லியை உலுக்கி எடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை டெல்லியில் திரட்டி குவித்து பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது. இப்பேரணிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தலைமை வகித்தார்.
பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றினர்.
ஊழலை ஒழிப்போம்- சோனியா
இக்கூட்டத்தில் சோனியா பேசுகையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. ஊழல் ஒரு புற்றுநோய் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது நோய்தான்.. இந்த நோய்க்கு எதிராக நாம் போராடுவோம். ஊழலை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம். ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானோர் தண்டனையில் இருந்து தப்பித்துவிடக் கூடாது. ஊழலைப் பற்றி பேசுகிறவர்கள் ஊழலில் திளைத்துப்போனவர்களாக இருப்பதையே காண முடிகிறது.
நாட்டின் ஜனநாயக அமைப்புகளை அதன் வேரை பலவீனப்படுத்தவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மக்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன எதிர்க்கட்சிகள். மக்கள் பிரச்சனைகளை பேசவிடாமல் விவாதிக்கவிடாமல் தடுக்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தப் போக்கை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டின் அரசியல் சாசனத்தை எப்போதும் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கவே செய்யும். காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கானது.விவசாயிகளுக்கானது. மதச்சார்பற்ற கட்சிதான் காங்கிரஸ். 2004,2009-ம் ஆண்டு தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதைப் போல் மீண்டும் மக்களின் நம்பிக்கையை இனிவரும் தேர்தல்களிலும் பெறுவோம் என்றார் அவர்.
லோக்பாலை நிறைவேற்றுவோம்- ராகுல்
இக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் விரைவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும். பொறுத்திருந்து பாருங்க.. லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன. ஆனால் நாங்கள் நிச்சயம் மீண்டும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பது பற்றி விவசாயிகளிடம் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அன்னிய நேரடி முதலீடு மூலமாக குளிர்பதன வசதி கிடைக்கும். நமது நாட்டின் விவசாயிகளுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
ஏழைகள் வெறும் வயிற்றுடன் படுக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை. ஏழை மக்களின் விளைநிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காகவே உணவு பாதுகாப்பு மற்றும் நில ஆர்ஜித சட்டங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வருகிறது என்றார் அவர்.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #2 on: November 05, 2012, 04:04:12 AM »
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்: மன்மோகன்சிங்டெல்லி:  அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் மக்களுக்கானது... ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் ஒளிமயமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இலட்சியத்தை நாம் அடைய நீண்டதூரம் பயணித்தாக வேண்டும்.
சில மாற்றங்களை செய்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்குமெனில் அவற்றை நிச்சயமாக நாங்கள் செய்வோம். அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியில் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல.
100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்தார்கள். ஆனால் 8 கோடிப் பேர் பயனடைந்திருக்கின்றனர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 12 கோடி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியமானவை. அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தவறான தகவல்களை சொல்லி வருகின்றன எதிர்க்கட்சிகள். கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்காக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார் அவர்



அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #3 on: November 05, 2012, 04:09:02 AM »
4 மணி நேர தாமதம்- ரூ22,000  நஷ்ட ஈடு கொடுக்க ஸ்பைஸ்ஜெட்டுக்கு உத்தரவு!


   டெல்லி: காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை 4 மணி நேரம் தாமதமாக இயக்கியதற்காக பயணி ஒருவருக்கு ரூ22 ஆயிரம் நட்ட ஈடு கொடுக்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.

டெல்லி- காத்மாண்டு வந்து செல்ல ஜகிஸ்கான் அகர்வால் தமது குடும்பத்தினருடன் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி ஸ்பைஸ்ஜெட்டில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். அகர்வால், பார்வை குறைபாடுடையவர். காத்மண்டுவில் காலை 10.45க்கு புறப்பட வேண்டிய விமானம் மாலை 3.24க்குத்தான் புறப்பட்டது. விமானம் தாமதமாக கிளம்பியதற்கு காரணம், ஏர் டிராபிக் என்று ஸ்பைஜெட் என்று சொல்வதில் உண்மை இல்லை என்பது அகர்வாலின் புகார். இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு ரூ22 ஆயிரத்தை நட்ட ஈடாக அகர்வாலுக்கு கொடுக்க உத்தரவிட்டது!

ஸ்பைஸ்ஜெட் தரப்பில் விமானம் தாமதமாக புறப்பட்டதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை என்பதால் நுகர்வோர் தீர்ப்பாயம் இத்தீர்ப்பை அளித்தது.
« Last Edit: November 05, 2012, 04:37:43 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #4 on: November 05, 2012, 04:29:19 AM »
கோவை துணை போலீஸ் கமிஷனர் ஹேமா கருணாகரன் புற்றுநோயால் மரணம்


கோவை: கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஹேமா பிரமீளா கருணாகரன், புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.

கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்தார் ஹேமா கருணாகரன். இவரது கணவர் கருணாகரன் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறார். ஹேமா மதுரையைச் சேர்ந்தவர்.

ஹேமா கருணாகரனுக்கு சமீபத்தில்தான் புற்று நோய்த் தாக்கம் குறித்து தெரிய வந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடையவே மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார் ஹேமா கருணாகரன்.

ஏடிஎஸ்பி, எஸ்பி, உதவி ஆணையர், துணை ஆணையர் என பல நிலைகளில் பணியாற்றியவர் ஹேமா. மது விலக்குப் பிரிவு உதவி ஆணையராகப் பணியாற்றியபோது சிறப்பாக செயல்பட்டதற்காக உத்தமர் காந்தி விருது பெற்றவர்.

மதுரையில் தனது காவல்துறைப் பணியைத் தொடங்கியவர் ஹேமா. முதலில் மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையராகவும், வரதட்சணை தடுப்புப் பிரிவிலும் பணியாற்றினார். மதுரையிலேயே மது விலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர், தல்லாகுளம் உதவி ஆணையராக இருந்துள்ளார்.
மேலும் மதுரையில் கூடுதல் துணை ஆணையராகவும் இருந்துள்ளார். சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பியாகவும் இருந்துள்ளார்.
கோவையில் சிறப்புக் காவல் படையில் சிபிசிஐடியின் கூடுதல் எஸ்.பியாக இருந்துள்ளார்.
« Last Edit: November 05, 2012, 04:37:13 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #5 on: November 05, 2012, 04:31:09 AM »
அரசு விழாவில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி புறக்கணிப்பு: கொந்தளித்த புதிய தமிழகம் தொண்டர்கள்

ஒட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் அத்தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படாததைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் கொந்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதியம் புத்தூர் தொகுதியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். ஆனால் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த புதிய தமிழகம் கட்சியினர் அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழா நிகழ்ச்சியிலிருந்தும் புதிய தமிழகம் கட்சியினர் வெளியேற அமைச்சர் செல்லப் பாண்டியனும் சிறிது நேரத்திலேயே விழாவை முடித்துவிட்டு கிளம்பினார்.
« Last Edit: November 05, 2012, 04:36:38 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #6 on: November 05, 2012, 04:49:33 AM »
   
   கட்காரி மீண்டும் தலைவராவாரா?: பாஜகதான் முடிவு செய்யனும்: ஆர்.எஸ்.எஸ்.

சென்னை: பாஜக தலைவர் நிதின் கட்காரி மீதான ஊழல் புகார் விவகாரத்தில் ஒதுங்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது அவரது தலைவர் பதவி விவகாரத்திலும் விலகி நிற்கிறது.


சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் அதன் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவின் தலைவராக நிதின் கட்காரியை 2-வது முறையாக தேர்வு செய்வது என்பது பற்றி அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். கட்காரியின் வணிகம் தொடர்பான புகார்களில் சட்டம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். இதேபோல் 2014-ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் அந்த கட்சியே தீர்மானிக்கும்.


காவிரி நதிநீர் பிரச்சனையில் நாட்டின் உயரிய அமைப்புகள் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதை பின்பற்றுவது அவசியமானது. கூடங்குளம் அணு உலை அவசியமானது. அதனால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்றார் அவர்.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #7 on: November 06, 2012, 01:44:15 AM »
மீண்டும் வருகிறது ‘தேமுதிக’ புயல்... கரையைக் கடக்கும் போது முரசு முடங்கும்?
சென்னை: தமிழக அரசியலில் கடந்த ஒருவார காலம் ஓய்ந்துகிடக்கும் ‘தேமுதிக' எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடும் விவகாரம் மீண்டும் விஸ்வரூப புயலாக உருவெடுக்க இருக்கிறது. ஆனால் இம்முறை இந்தப் புயல் 'முரசு' சின்னத்தை முடக்கி ‘விஜயகாந்தை' கட்சியைவிட்டே நீக்கும் அளவுக்கு கரையைக் கடக்கலாம் என்று கூறப்படுகிறது
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #8 on: November 06, 2012, 01:45:49 AM »
சர்ச்சைக்குரிய தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் சென்னைக்கு திடீர் மாற்றம்

சென்னை: தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் சென்னை கூடுதல் காவல்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  தென் மண்டலப் பணியில் அவர் இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து பல்வேறு பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவற்றை சரிவர கையாளவில்லை ராஜேஷ் தாஸ் என்ற புகார் இருந்து வந்தது.

குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரப் பிரச்சினை மற்றும் கூடங்குளம் பிரச்சினை. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் அவர் அடக்குமுறையைக் கையாண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தேனி மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து கேரளாவுக்கு எதிராக போராடியபோது அதை ஒடுக்கியவர் ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசினார் என்றும் சர்ச்சை எழுந்தது. அப்போதே ராஜேஷ் தாஸை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதேபோல கூடங்குளம் போராட்ட விவகாரத்திலும் ராஜேஷ் தாஸின் அணுகுமுறை கடும் அதிருப்தியை அரசுக்குப் பெற்றுக் கொடுத்தது.

அதை விட உச்சமாக கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது போலீஸார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தலித் மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதுவும் ராஜேஷ் தாஸின் அணுகுமுறைத் தவறை அம்பலப்படுத்தியது.

அதேபோல சமீபத்தில் நடந்த தேவர் குருபூஜை சமயத்தில் நடந்த பயங்கர மோதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோல 6 தேவர் சமுதாயத்தினர் கொல்லப்பட்டதால் ராஜேஷ் தாஸின் பெயர் மேலும் கெட்டுப் போனது.
பரமக்குடி கலவரம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு என ராஜேஷ் தாஸ் சர்ச்சையில் சிக்கியபோதெல்லாம் மாற்றாத அரசு, தற்போது அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான தேவர் சமுதாயத்தினரிடையே கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து தூக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், ஐ.ஜி.ராஜேஸ்தாஸ் அப்பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் உள்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர காவல்துறையின் குற்றவியல் பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த அபய்குமார் சிங், தென்மண்டல ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


நெல்லை டூ சென்னை
இதுதவிர சென்னை மாநகர போலீஸ் தலைமையகத்தில் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய சுனில்குமார் சிங்,நெல்லை போலீஷ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கருணாசாகர், சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா,சென்னை மாநகர காவல்துறை தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #9 on: November 06, 2012, 01:50:02 AM »
தேவர் ஜெயந்தி படுகொலைகள்: 7ம் தேதி மாநில அளவில் 'பந்த்' அறிவிப்பு

மதுரை: தேவர் ஜெயந்தியின் போது 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி விசாரணை கோரி வரும் 7ம் தேதி தமிழகம் முழுக்க கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தேவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.


இது குறித்து மதுரையில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்எல்ஏ, அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கூட்டாக கூறியதாவது,


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது பிடிக்காத சிலர் சதித் திட்டம் தீட்டி கலவரத்தை தூண்டி தேவரின தொண்டர்களான 3 பேர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளனர். சிலர் பலத்த தீக்காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த சதிக்கு பின்னால் உள்ளவர்கள் குறித்து கண்டறிய தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கொலையாளிகளை கண்டறிந்து, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பும் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். மேலும் வரும் டிசம்பர் 9ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.


இந்த கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி, பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய தேவர் பேரவை, அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை, வீரவிடுதலை முக்குலத்தோர் மக்கள் இயக்கம், நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்ட 15 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றனர்.
« Last Edit: November 06, 2012, 01:51:46 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #10 on: November 06, 2012, 01:53:50 AM »
''டெங்குன்னு சொல்லப்படாதாம், மர்மக் காய்ச்சல்னு சொல்லனுமாம்.. அடப் பாவிகளா!''

சென்னை: டெங்கு,மலேரியா, காலரா போன்றவற்றை அந்தப் பெயர்களைச் சொல்லி சொல்லக் கூடாதாம், மர்மக் காய்ச்சல்னுதான் சொல்லனுமாம். அடப் பாவிகளா.. என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் அரசைக் கடுமையாக வாரினார். அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து சில துளிகள்...

நான்தான் முதல்லயே சொன்னேனே


முதன் முதலில் திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு பரவியது. அப்போது முதல் நான் சொல்லிவருகிறேன். எச்சரிக்கை செய்தேன். சென்னையில் டெங்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உடனடியாக கொசுவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

கொசுவே வந்து கடின்னு மக்களா சொல்றாங்க


இதற்கு யார் பொறுப்பு. அரசுதான் பொறுப்பு. என்னை கடி என்று கொசுவிடம் மக்களா சொல்கிறார்கள். நான் எச்சரிக்கை செய்தும் அரசு அக்கறை காட்டவில்லை.

அந்த அமைச்சர் பேரு என்ன...?


இன்றைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அவரது பெயர் என்னவோ சொல்கிறார்கள். இப்ப இருக்கிற அமைச்சர்களில் ஒருத்தர் பெயர் கூட ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. (மேடையில் இருந்தவர்கள் விஜய் என்று சொன்னார்கள்) ஆம். விஜய். விஜய். அவர் ஊர் வேலூர் மாவட்டம் அங்கேயே இரண்டாயிரம் பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மர்மக் காய்ச்சல்னு சொல்லனுமாம்


இப்ப என்ன சொல்கிறார்கள். டெங்கு என்று சொல்லாதீர்கள். மர்மக் காய்ச்சல் என்று சொல்லுங்கள் என்கிறார்கள். அது என்ன மர்மமான நோயா. அடப்பாவிகளா. டெங்கு காய்ச்சல்ல யாராவது இறந்தால் டெங்கு என்று சொல்லக்கூடாதாம். சென்னையில் யாராவது காலரா நோயால் இறந்தால் காலரா என்று சொல்லக்கூடாதாம். அவற்றிற்கெல்லாம் மர்மக்காய்ச்சல் என்று சொல்ல வேண்டுமாம்.

இனி புதிய அவதாரம்


இனி திமுக, அதிமுக என இரு கட்சிகளோடும் இணையாமல், தமிழகத்தில் நாங்கள் புதிய அவதாரம் எடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் இந்த இரு கட்சிகளையும் ஒழிப்பதற்கு, பாமக வரவேண்டும் என்று காலதேவன் எங்களுக்கு கட்டளை போட்டுள்ளது. பாமகவைத் தவிர வேறு கட்சிக்கு தகுதிஇல்லை.


அப்படியே எண்ணிப் பாருங்கள்

இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் அப்படியே எண்ணிப் பாருங்கள் தமிழகத்தில் இருக்கும் இந்த இரு கட்சிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் எந்தக் கட்சி வரும் என்று. நாங்கள் ஜெயலலிதாவை குறை சொல்கிறோம் என்றால், அதற்கான வழிமுறைகளையும், தீர்வுகளையும் சொல்கிறோம். சும்மா குறை சொல்லவில்லை. அந்த வகையில்தான் மற்ற கட்சிகளைவிட பாமக வேறுபடுகிறது என்றார் அவர்.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #11 on: November 06, 2012, 01:56:00 AM »
பிரபல சமையல் கலை நிபுணர் 'செஃப்' ஜேக்கப் திடீர் மரணம்

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா என்ன ருசி என்ற சமையல் கலை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வந்த பிரபல சமையல் கலை நிபுணர் ஜேக்கப் என்கிற ஜேக்கப் சகாயகுமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.


மறைந்த ஜேக்கப்புக்கு வயது 38தான் ஆகிறது. சன் டிவி மூலம் பிரபலமடைந்தவர் ஜேக்கப். இவரது சமையல் கலை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக இருந்ததால் குறுகிய காலத்திலேயே பிரபலமானது. சமையல் செய்வதை கிச்சனோடு நிறுத்தாமல் வெளியிடங்களுக்கும் கொண்டு சென்று ஏரிக்கரையில் சமைப்பது, குளத்தின் நடுவே சமைப்பது, அருவிக்குக் கீழே சமைப்பது என வித்தியாசப்படுத்தினார் ஜேக்கப்.


2010ம் ஆண்டு இவர் தொடர்ந்து 24 மணி நேரம் 485 விதமான உணவுகளைத் தயாரித்து கின்னஸ் சாதனையும் படைத்தார்.


தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார் ஜேக்கப்.


ஜேக்கப்புக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #12 on: November 06, 2012, 01:57:58 AM »
அய்யய்யோ என்று விஜயகாந்த் காலில் விழுந்தாரே அமைச்சர், மறந்து போச்சா?.. தேமுதிக கேள்வி

சென்னை: அய்யய்யோ, அதிமுகவுடன் நீங்கள் கூட்டணி இல்லையென்று சொன்னவுடன் நான் பிரசாரத்தையே ரத்து செய்து விட்டேன் என்று விஜயகாந்த் காலில் விழுந்து கதறினாரே அமைச்சர் மூர்த்தி. மறந்து போய் விட்டதா என்று கேட்டுள்ளார் தேமுதிக எம்.எல்.ஏ விருகம்பாக்கம் பார்த்தசாரி.


விருகம்பாக்கம் பார்த்தசாரதியை விட்டு கேப்டன் டிவியில் ஒரு பேட்டி கொடுக்க வைத்துள்ளது தேமுதிக. அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:


கடந்த 20 வருடமாக சட்டமன்றத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்றத்திற்கு வந்தது கிடையாது. கடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா கொடநாட்டிலே இருந்துகொண்டு அறிக்கை விடுவார். அவரது கட்சிக்காரர்கள்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சட்டமன்றத்திற்கு விஜயகாந்த் வந்தால்,அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதை கொடுக்க தெரிய வேண்டும். அப்படிப்பட்ட மரியாதை கொடுக்க தெரியாதவர்கள்தான் அதிமுக உறுப்பினர்கள்.


விஜயகாந்த்தோ, தேமுதிக உறுப்பினர்களோ சட்டமன்றத்தில் பேசினால், அந்தத்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் பேச வேண்டும். ஆனால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை. பதில் சொல்ல தெரியவில்லை என்பதை காட்டிக்கொள்ளாமல் விஜயகாந்த் மீது குறை சொல்லுகிறார்கள்.


சட்டசபையில் முனுசாமி வயதில் மூத்தவர். அவர் நிதானத்தோடு இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் பற்றி பேசுகிறார். வளர்மதியும் தவறாக பேசுகின்றார். அவர்கள் மட்டும்தான் பேச வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கக் கூடாது. எங்களுக்கும் வரலாறு தெரியும். சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வீதி வீதியாக பேச முடியும்.


சட்டமன்றத்தில் இப்படி பேசக்கூடியவர்கள் 2011 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அவரது காலில் யார் யார் விழுந்தார்கள், டெம்போ வேனில் இருந்த நாற்காலியை தொட்டு கும்பிட்டவர்கள் யார் யார் என்று தெரியாதா.


தற்போது மாதவரம் எம்எல்ஏவும், அமைச்சராகவும் இருக்கும் மூர்த்தி, தீவிர பிரச்சாரத்தில் இருந்த விஜயகாந்த் காலில் விழுந்து, அய்யய்யோ நீங்கள் கூட்டணி இல்லையென்று சொன்னவுடன் நான் பிரச்சாரத்தையே ரத்து செய்துவிட்டேன் என்று சொன்னவர். ஆனால் அவர் இன்றைக்கு சட்டமன்றத்திலே எங்களால்தான் தேமுதிகவுக்கு 29 இடங்கள் கிடைத்தது என்று பேசுகிறார்.


உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் கூட்டணியை தேடி போகவில்லை. அவர்கள்தான் தேடி வந்தார்கள் தேமுதிகவை.

எத்தனை கொலை, எத்தனைக் கொள்ளை


செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசனை போலீசார் கைது செய்தனர்.அவர் ஒன்றும் கொலை குற்றவாளி அல்ல. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் உங்கள் மீது வழக்கு உள்ளது. கைது செய்ய வேண்டும் என்று சொன்னால் அவரே நேரடியாக  வந்திருப்பார்.


தமிழகத்தில் எத்தனை கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. உதாரணத்திற்கு  சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ. ஆல்வின்சுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டீர்களா?


முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சில் படுகொலை செய்யப்பட்டாரே அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டீர்களா? கடந்த 10 நாள் முன்பு வேலூரில் பாஜக பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டாரே அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தீர்களா?


தென் மாவட்டங்களில் வெடிகுண்டு வீசி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைதான் நடந்துகொண்டிருக்கிறது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை சரி செய்ய அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.


சட்டமன்றத்திலே என்ன பேசுகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கிறது. இதையெல்லாம் பெரிதுப்படுத்தி பேசவேண்டாம் என்கிறார்கள். கொலை என்பது சாதாரணமாகிவிட்டதா முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு. ஒரு உயிரை உயிராக பார்க்கக் கூடாதா. தமிழகம் முழுவதும் நடந்த நகைக்கொள்ளைகளில், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேருக்கு தீர்வு ஏற்படுத்தி தந்தீர்கள் என்று கேட்டார் பார்த்தசாரதி.

அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #13 on: November 06, 2012, 01:59:59 AM »
முல்லைப் பெரியாறு அணை வழக்கு.. பிப். 19ம் தேதி இறுதி விசாரணை



டெல்லி:  முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை சரியில்லை, அணை பலவீனமாக உள்ளது, உடைந்தால் பேராபத்து என்று கேரள அரசு பிரச்சினை கிளப்பியது. இதையடுத்து அதை மறுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வறிக்கையும் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


அதில் அணை நல்ல பலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதிக் கட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெரும் என்றும், ஜனவரி 28ம் தேதி இடைக்கால உத்தரவகுள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும் ஆனந்த் குழுவின் அறிக்கை நகல்களை கேரள அரசு, தமிழக அரசுக்கு வழங்க  வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வழக்கு தொடர்பான ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரிசீலனை செய்து, அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து ஜனவரி 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கோரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மக்கள் நலப் பணியாளர் நீக்க விவகாரம்

இதற்கிடையே, மக்கள் நலப்பணியாளர் நீக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்றும், இந்த வழக்கு குறித்து 4 வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: செய்திச்சுடர்
« Reply #14 on: November 06, 2012, 02:03:31 AM »
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மறு தேர்வு: 42% பேர் புறக்கணிப்பு.. ஏன், ஏன், ஏன்?



சென்னை: டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 மறுதேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் அரசுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிட்டத்தட்ட 42 சதவீதம் பேர் இந்தத் தேர்வை எழுத வரவில்லை. இதனால் பாதிக்கும் மேற்பட்ட மையங்கள் வெறிச்சோடிப் போய்க் காணப்பட்டன.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்பதி வாளர், உதவி வணிகவரி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3687 காலி இடங்களுக்கு குரூப்-2 தேர்வை அறிவித்தது. இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி தேர்வு நடத்தப்பட்டது.

மறுதேர்வு அறிவிப்பு


மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகாரை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு 4-ந்தேதி நடத்தப்பட்டது.

தீவிர கண்காணிப்பு


அதன்படி தமிழகம் முழுவதும் 114 மையங்களில் 3456 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்திருந்தது.


ஈரோட்டில் உள்ள பிரச்சினைக்குரிய மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் கண்காணிக்கப்பட்டனர். மேலும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

சென்னையில் வெறிச்சோடிய மையங்கள்


சென்னையில் பெரும்பாலான தேர்வு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 20 பேர் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட அறைகளில் 7 முதல் 10 பேர் மட்டுமே வந்திருந்து தேர்வு எழுதினர்.


சென்னை முழுவதுமே அனைத்து தேர்வு மையங்களிலும் இதே நிலையே காணப்பட்டது. 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் ஏராளமானோர் மறுதேர்வை புறக்கணித்துள்ளனர்.

வேலூரில் 35 சதவிகிதம்


சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் இதே நிலையே காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

காலியான தேர்வு மையங்கள்


ஒருசில மாவட்டங்களில் மட்டுமே தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை தாண்டியது. குறிப்பாக ஊட்டி  மையத்தில்தான் தமிழகத்திலேயே மிகக் குறைந்த அளவிலானோர் தேர்வு எழுதினர். மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் தேர்வு மையங்கள் காலியாகவே கிடந்தன.

இந்த ரிசல்டாவது வருமா?


தேர்வை புறக்கணித்தவர்கள் ஒருபுறம் இருக்கையில் தேர்வெழுதிய மாணவர்களே நம்பிக்கை இழந்து பேசியதை காண முடிந்தது. ஆகஸ்ட் மாதம் நன்றாக படித்து குரூப் 2 தேர்வினை நன்றாக எழுதியதாக கூறிய பட்டதாரிகள் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் வேதனை அடைந்தாக கூறினர். இருப்பினும் மறுதேர்வுக்கு நன்றாக படித்து எழுதியிருக்கிறோம். இந்த தேர்வு முடிவாவது விரைவில் வெளியாகுமா என்று கேள்வி எழுப்பினர் அவர்கள்.


டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் அரசு வேலை குறித்த தங்களின் கனவு நனவாகாமல் போய்விடுமோ என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.


தமிழகம் முழுவதும் சராசரியாக 42 சதவீதம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இது அரசுக்கும் கூட அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.


45 நாட்களில் ரிசல்ட்


இதனிடையே நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மறு தேர்வு முடிவுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார். குரூப் 2 தேர்வுக்கான விடைகள் இன்னும் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், விரைவில் கணினி வழித் தேர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அன்புடன் ஆதி