Author Topic: மனப் பறவைகள்  (Read 801 times)

Offline Guest 2k

மனப் பறவைகள்
« on: September 11, 2019, 01:07:55 AM »
உறக்கமற்ற இரவுகளின் தேக்கநிலைகளில்
வெளியேறி விழும்
நிதானமிழந்த வார்த்தைகள்
இடம்புகும் கவிதைகளுக்கு
மனமிறங்கி
கொஞ்சம் ஆறுதல் அளியுங்கள்
கவிதைக்கும்
கொஞ்சம் ஆறுதல் தேவை தான்


°°°°°°°°°°°°°°°°°
வலசை போகும் பறவைக்களுக்கென
சொல்வதற்கு செய்திகளொன்றுமில்லை
தூர தேசத்தில்
நினைவுகளாய்
சில சிறகுகளை
விட்டுவிட்டு வரட்டும்


°°°°°°°°°°°°°°°°°°°
தலையணையை கண்டறிந்தவன்
யாரென்று தெரியவில்லை
தெரிந்திருந்தால்
அன்றே கைகூப்பி கெஞ்சியிருக்கும்
அவனிடம்
தினம் தினம்
இந்த முகம் புதைந்த அழுகைகளை
என்னால் தாங்கி நிற்க
இயலாதென


°°°°°°°°°°°°°°°°°°°°
காலை சுற்றி உரசிடும் பூனைகள்
வேண்டுவதெல்லாம்
சில நிமிட தலை நீவல்களை தான்
உதறிவிட்டு செல்வது
ஸ்பரிசங்களையல்ல
ஏக்கங்களை


°°°°°°°°°°°°°°°°°°°°°
வழிதவறி விழிக்கும்
வழிப்போக்கனிடம்
எங்ஙனம் உரைப்பேன்
நானே
தொலைந்து நிற்கும்
கதைகளை


°°°°°°°°°°°°°°°°°°°°°°


காக்கா கதை சொல்லு அத்த
என மார்மீது
விரல் சூப்பிக் கிடக்கிறாள்
அபிக்குட்டி
எத்தனையாவது முறையாகவோ
இன்னேரத்தில்
தூக்கத்தில் இருக்கும் காக்கைகளை
எழுப்ப போகிறேன்


°°°°°°°°°°°°°°°°°°°°°°°


பின்னிரவில் வரும் அலைபேசி
ஒலியினை கேட்டு
தன்னிச்சையாக மனம் வேண்டிக் கொள்கிறது
கைத் தவறி அழைப்பு
வந்திருக்க வேண்டுமென


°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாலைவனத்தில் நிழல் தேடி
அலையும்
பறவை ஒன்றினை
நீங்கள் கண்டுகொண்டால்
எனக்குத் தெரியப்படுத்துவீர்களா?
வேறொன்றுமில்லை
என் மனப்பறவைக்கு
கூண்டென்று எதுவும் இல்லை
« Last Edit: September 11, 2019, 08:39:49 AM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: மனப் பறவைகள்
« Reply #1 on: September 13, 2019, 10:35:27 PM »
Chikku  superb.  Neraya varigal enakkum thodarbudayadha irundhuchu. 
Vaazhthukkal. 💐💐💐
« Last Edit: September 13, 2019, 11:42:06 PM by Unique Heart »

Offline Guest 2k

Re: மனப் பறவைகள்
« Reply #2 on: September 13, 2019, 11:16:23 PM »
அன்பும் நன்றியும் யுனிக்கு

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்