Author Topic: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2019  (Read 1687 times)

Offline Forum


எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. ஆக்கமும்,கருத்துக்களும் நிறைந்த உங்களுடைய கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கவிதைகள் தீபாவளி திருநாள் பற்றிய  சொந்த கவிதைகளாக அமைந்திட வேண்டும்.
இந்த பகுதியில் முன்பதிவு செய்தல் கூடாது.


அதிகமான கவிதை பதிவுகள் வரும்பட்சத்தில்  குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும்  இங்கு குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பதிவுகள் அனுமதி மூடப்படும் . எனவே தங்கள் கவிதைகளை  விரைவில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கவிதைகளை எதிர்வரும் 21 ஆம் தேதி   (திங்கள் கிழமை ) இந்திய நேரம் இரவு 12:00 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தீபாவளி திருநாளில் உங்கள் கவிதைகள் நண்பர்கள் இணையதள வானொலி வழியே ஒலிக்கட்டும். தீபாவளி திருநாளில் உள்ளம் மகிழட்டும். 

Offline ShaLu

தீபாவளி :

தீபங்கள் ஏற்றிடும் அழகிய  தீபாவளி
இருள் நீக்கி வாழ்வில்
பிரகாசம் தந்திடும் தீபாவளி
தீமைகளை அழித்து
நன்மைகள் பல பெருகிடும் தீபாவளி
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து
மக்களின் வாழ்வில்
நிம்மதி நிலைக்க செய்த தீபாவளி

எண்ணெய் குளியலும், 
புத்தாடையும் பலகாரங்களும்
பல்வகை அறுசுவைகளும்
பஞ்சமின்றி கேளிக்கைகளும்
இனம் புரியா சந்தோஷமும்
அண்டை வீட்டாருடன் குதூகலமும்
ஆனந்த ஆர்ப்பரிக்க செய்யும்
தீபாவளி !!!

பட்டாசுகள் ப்ரகாசமிடும்
அகல்விளக்குகள் அம்சமாய் ஜொலிக்கும்
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு இன்றி
எல்லாரையும் மகிழ்வித்திடும்
மக்களின் வாழ்வுதனில்
நலமும் வளமும் வந்து சேர்ந்திடும்
தீபாவளி

அன்று கிருஷ்ணர் அழித்ததோ
ஒரு நரகாசுரனை
இன்றோ எண்ணிலடங்கா நரகாசுரர்கள்
இனியொரு அவதாரம் எடுப்பானோ
நம் இன்னல்களை எல்லாம் நீக்கிட

சூதும் வஞ்சமும் பொறாமை குணமும்
காழ்ப்புணர்ச்சியும்  கொண்டு
ஒருவரை ஒருவர் துன்புறுத்தி கொள்ளும்
இவ்வுலகில்
இவற்றையெல்லாம் மறந்து
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
இனிமையாய் கொண்டாடிட
இறைவன் ஏற்படுத்தி கொடுத்த
பண்டிகையே இத்தீபாவளி ..!!

இந்துக்கள் மட்டுமின்றி
ஜைனர் பௌத்தர் சீக்கியர்என 
அனைவருமே கொண்டாடும்
தீபாவளி

இந்நன்னாளில் பறவைகளையும்
விலங்குகளையும் துன்புறுத்தாமல்
சுற்று சூழலை மாசடைய செய்யாமல்
இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி
இனிமையாய் கொண்டாடிடுவோம்
இந்த தீபாவளியை …!!
« Last Edit: October 15, 2019, 01:12:36 PM by ShaLu »

Offline JeGaTisH

திக்கெட்டும் பீகிள் சத்தங்களுடன்
தீபாவளி என் கதவை தட்டியதோ !

வானமெல்லாம் நட்சத்திர பூக்கலாய்
மனமெல்லாம் சந்தோஷத்தின் உச்சத்தில் !

ஒவ்வொருவர் வீட்டிலும் தீபங்கள் ஒளிக்க
ஆடலும் பாடலுமாய் தெருவெங்கும்
ஒவ்வொருவரும் சந்தோஷ மழையிலே !

பணம் இருப்பவன் தீபாவளியிலே
பணம் இல்லாதவன் தீபங்களின் ஒளியிலே
ஒருவேளை சோற்றுக்கா காத்திருக்கிறான்  !

ஏழை எளியவர் என பாராமல்
அவன் கரம் தூக்கி நிறுத்திட்டு!
அதுவே நீ தீபாவளி நாளன்று செய்யும்
பெரும் தொண்டாக இருக்கட்டும் !

நான் சிரிக்கும் சிரிப்பு இனி
ஒவ்வொருவர் முகத்திலும் இருக்க !
இத் தீபாவளி இனிதாக ஆரம்பிக்க
இறைவனை வேண்டிகொள்கிறேன்



இனிய தீபாவளி வாழ்த்துக்கள்  FTC  ...உங்கள் SINGLE சிங்க குட்டி ஜெகதீஷ்






Offline thamilan

தீபாவளித் திருநாளாம் இன்று
இல்லங்களில் அகல் ஒளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
சிதறும் பட்டாசுஒலி வாழ்வில்
துன்பங்கள் சிதறும் சிரிப்பொலியாக மலரட்டும்

அரக்கனை அழித்து
உலகுக்கெல்லாம் வெளிச்சம் உண்டாக்கிய
இந்த நாளில்
பேராசை, பொறாமை,
கோபம், குரோதம்  என்ற
அரக்கர்களைக்  கொன்று
நம் மனதிலும் சமாதானம் எனும்
தீபத்தை ஏற்றுவோமாக

அகந்தை எனும் அரக்கனை
அழிப்போமாக
அன்பை மட்டுமே
விதைப்போமாகுக

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும்
சிலைகளாக
மனிதன் தான்
கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துபோகிறான்
காற்றாக - ஆகவே
இனிப்புடன் சேர்த்தே
நம் நட்பையும் அனைவருக்கும் வழங்குவோம்
 
பட்டாசு கொளுத்தும் போது
நம் பொறாமை குணத்தையும்
சேர்த்தே கொளுத்துவோம்
வேண்டாத வெறுப்புகளை
வெடித்திடுவோம் சரவெடியாய்

தீபங்கள் வீடுகளில் மட்டுமல்ல
உங்கள் வாழ்விலும் ஒளியேற்றட்டும்
இனிமை இனிப்புகளில் மட்டுமல்ல
உங்கள் இதயங்களிலும் இனிக்கட்டும்
சந்தோசம் என்றும் உங்கள் வாழ்வில்
பூக்களாக பூத்துக் குலுங்கட்டும்
 
 FTC நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Offline KuYiL

 
 
அதிகாலை சேவலை போல்
அதிகார குரலில் அம்மா எழுப்ப ..

ஐப்பசி மாத மழை மேகத்தில்
ஒளிந்து கொண்ட சூரியன் போல்
போர்வைக்குள் புதைந்து விட்ட
என் கற்பனை கனவு உறக்கம்
தெருவில் வெடித்த பாட்டாசு
சத்தத்தில் புகை மண்டலமாய்
மறைந்தது !
   
கார்கால குளிரில் காது மடல்கள்
சிலிர்க்க இறுக்கி கட்டிய கைகளில்
உதிர்ந்தன அரைத்து வைத்த
மருதாணி இலைகள்....

நடுநடுங்கும் குளிரில் ,எண்ணெய்
தேய்த்து ,வெந்நீரில் ஆவி பறக்க
அதிகாலை குளியல் அன்றுமட்டும் சுகம் !

குடும்ப பட்ஜெட்டில்  துண்டு
விழுந்தாலும் பத்து கடை
ஏறி இறங்கி பார்த்து பார்த்து
வாங்கும் துணிக்கு மவுசு அதிகம் தான் !

அரக்கு பச்சை வண்ணத்தில்
நேர்த்தியாய்  நெய்த பட்டுப்புடவையில்
கோவில் சிலை உயிர் பெற்று
புவிதனில் பிறந்த  தேவதையாய் ..
வரைந்த ஓவியமாய் நிழல் ஆடிய  என்னை
திருஷ்டி கழித்து விரல்களில் சொடுக்கு
எடுத்தாள் என் அன்னை ...

எட்டாக்கனியாய் தங்கம் ஆனாலும்
அப்பாவின் போனசில் ...
எடுப்பாய் என் காதில் அழகாய் ஆடியது
ஒரு ஜோடி கம்மல் ...
       
ஆசையாய் அன்பாய் வளர்த்த செல்லக்கொடி
பற்றி படர நல்லதொரு ஆண்மகனை
நான் தேட வேண்டுமே...என் அப்பாவின் ஆதங்கம்
தன் மூக்கு கண்ணாடியை துடைத்து
என்னை பார்த்த போது புரிந்தது....

பத்து வயது சிறியவன் என் கருவறை தோழன்
தன் ஆசைகளை மட்டுமே நினைக்க தெரிந்த வயது....
iPad வாங்கி கொடுக்க மறுத்த
அப்பாவை பட்டிமன்றம் பார்க்கவிடாமல்
Remote ஐ தன்வசப்படுத்தி அவரை
பழிவாங்கிய சந்தோஷத்தில் முறுக்கை
ஆவேசமாக  கடித்தான்  ..
         
எதிர்வீட்டு மாமியும்
பக்கத்து வீட்டு  வெண்ணிலா அக்காவும்
மேல் வீட்டு சுந்தரி அத்தையும்
பின் வீடு பானு பெரியம்மாவும்
சொந்தங்கள் ஆகிப்போனார்கள்
என் அம்மா செய்த முறுக்கு , சீடையில்....

பட்டுச்சேலை  சரசரக்க துள்ளிக்குதித்து
தெருவில் மத்தாப்பு கொளுத்திய போது
மனதுக்குள் ஆயிரம் மத்தாப்புகள் சிதறின ...

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து
சொல்லிவிட்டோமா ?
என்று அம்மா கேட்க ...
என் மனதில் வெட்கம்
பளீரென்று மின்னல் போல் ...

சொல்லி வைத்தாற்போல் கைபேசி ஒலித்தது
யாரென்று பார்க்க சொன்னாள் அம்மா..
தெரியாத ஒரு 18 இலக்க எண்
ஹலோ என கேட்டது மறுமுனையில்....

கணீர் என்று ஒரு ஆண்மகனின் குரல்
"யாரென்றேன் .."
பதிலாக ஒரு சிரிப்புடன் சொன்னது அந்த குரல்
"உன் அத்தை மகன் என்று.."
ஆயிரம்  கம்பி மத்தாப்புகள் மனதிற்குள்  ஒளிர
அம்மாவிடம் கொடுக்கிறேன் என்று
சொன்ன போது....

பல்லாயிரம் மைல் தாண்டி
பாவை உன்னிடம் பேச தான்
அழைத்தேன் ....அடுத்த தீபாவளியில்
உன் அத்தை மகன் ..முறை மாமனாய் ஆவேன்..

வெட்கத்தில் என் முகம் சிவக்க
ரோல் கேப் போல் மனதிற்குள்
சுழன்று சுழன்று வெடித்தது
அவன் சொன்ன வார்த்தைகள்....

ஆசையாய் அத்தை சொன்னாள்
"மருமகளே" எப்படி இருக்கிறாய் என்று...
பூந்தொட்டி மத்தாப்பு போல்
பூமாரி பொழிந்தது என் மனதில்

ஆனந்தத்தில் ஆற கட்டி கொண்டேன் என்
அம்மாவை ...
திடீரென்று சூழ்ந்த மேகம் மழையாய்
பெய்த போது சங்கு சக்கரமாய்
என் மாமனை எண்ணி சுற்றியது என் உள்ளம்...

என் மாமனோடு கொண்டாடப்போகும்
அடுத்த தீபாவளியை
இப்போதே எண்ணி கனவு
காணத்தொடங்கினேன்  ..

இறக்கை முளைத்த என் ஆசை பறவை
விண்ணோக்கி பாய்ந்த ராக்கெட்டை போல்
விண்வெளி நோக்கி பறந்தது .....




« Last Edit: October 21, 2019, 10:46:14 AM by KuYiL »

Offline Guest 2k

ஒவ்வொரு பண்டிகைக்கான குதூகலமும் அந்த அந்த
மாதங்களில் ஆரம்பிக்கையில்,
பொங்கும் உள்ளமாய்
வருட நாட்காட்டியை
வாங்கும்பொழுதே
கண்கள் தேடி நோக்குவது
என்றைக்கு தீபாவளி என்று தான்!
தீபாவளி மாதம் நெருங்க நெருங்க
ஒவ்வொரு மனதிற்கும்
ஒவ்வொருவித உற்சாகம்
ஒவ்வொருவித கனவுகள்
ஒவ்வொருவித ஏக்கங்கள்.
குழந்தைகளின் மனங்களில்
புத்தம் புதிய உடையகளும்
வண்ண வண்ண பட்டாசுகளும்
வட்டமிடும் பட்டாம்பூச்சியாய் கனவுகளில் திரிய,
வீட்டுப் பெண்களின் கைககளோ
அரக்க பறக்க அரிசி மாவை
அரைத்துக் கொண்டும்,
பரணில் இருக்கும் முறுக்கு அச்சுகளை
தேடிக்கொண்டிருக்கும்.
ஆர்வத்தோடும், குறுகுறுப்போடும்
வரவு செலவுகளை கணக்கிட்டு
கையிலடங்கா செலவுகளை
எண்ணி துவண்டும்
பிறகு
வருடத்திற்கு ஒரிரு முறைதானே
என குடும்பத்தின் கனவுகளை
வலுப்படுத்திக்
கொண்டிருக்கும் சில மனதுகள்.
தொலை தூரத்திலிருந்து வரும்
சொந்தங்களுக்காக
திறந்தே கிடக்கும் வீடுகளும் மனதுகளும்.


நாட்கள் நெருங்க நெருங்க
நண்டு சிண்டுகளுக்கு
ஒன்று போதாதென இரண்டும்
இரண்டு போதாதென மூன்றும்
உடைகள் எடுத்து,
"எனக்கு இந்த கலரே பிடிச்சிருக்கு"
என 'தாராள மனதுடன்'
கம்மி விலை உடைகளை
எடுத்துக்கொண்டு
தன் நத்தைக் கூட்டுக்குள் சுருங்க நினைக்கும் தாயின் வழமையான
விட்டுக்கொடுத்தல்களும்,
"பெரிய தியாக செம்மல், பிடிச்சத எடுத்துக்கோ" என அதட்டலோடு அரவணைக்கும் தந்தையும்
ஒரு கூட்டு பறவைகளை தாங்கி நிற்கும் ஆலமரம் போல்
நிறைவும், சுணக்கமும், பிணக்கமும் நிறைந்து வழியும்
ஜவுளி கடைகளில்


வீதியெங்கும் திருவிழா கோலம் போடும்
புது புது பட்டாசு கடைகள்
தெருவில் செல்லும் குழந்தைகளை
கைப்பிடித்து இழுக்கும்.
அடம்பிடித்து
அவர்களின் தந்தைகளையும்
கைப்பிடித்து இழுக்கும்
இந்த வெடி வாங்குவதா அந்த வெடி வாங்குவதா
என குழப்பம் நிறையும் மனதுகளுக்கு
இரண்டையும் வாங்கும்படி
தூபம் போடும்
கடைக்காரரை ஓரக்கண்ணாலேயே
விரட்டும்
தந்தையின் கண்கள்.
எவ்வளவு எவ்வளவு என்று வாங்கினாலும்
போதவில்லை என கூறும் மனதிற்கு
மத்தாப்பூ கொளித்திச் செல்லும்
இறுதியில்
கடைக்காரர் இலவசமாய் தரும்
கம்பி மத்தாப்பு பெட்டி

முதல் நாள் இரவு அம்மா இடும்
வட்ட வட்ட மருதாணி பொட்டுகள்
யாருக்கு அதிகம் சிவக்கும் என
தொலைத்தூரத்தில் ஒலிக்கும் வேட்டு சத்தங்களை
கேட்டபடி
கனவுகளோடும், ஆசைகளோடும் உறங்கச் செல்லும்
இளந்தளிர்கள்
எப்பொழுது விடியும் எப்பொழுது விடியும்
எனக் காத்திருந்து
ஊரின் முதல் வேட்டு சத்தம் கேட்கும்
அதிகாலையில் அதிசயமாய் விழிப்பு வரும்
ஐப்பசி மாத குளிருடன்
மருதாணி குளுமை
சேர்ந்து இறுகியிருக்கும் விரல்களை அவசர அவசரமாக
கழுவிக்கொண்டு,
சற்று நேரத்தில் வெடிக்கப் போகும் வெடிகளையும்
சற்று நேரத்தில் அணிய போகும் ஆடைகளையும்
தடவி தடவி பார்த்து
உற்சாகும் கொள்ளும் சிறு மனது

தலையிலிருந்து வழிந்தொழுகும்
எண்ணையுடன் சேர்ந்த சிகைக்காய்
கண்களை உறுத்த
கங்கா ஸ்நானமும் காவிரி ஸ்நானமும்
கடமைக்கென நிகழ
புது உடைகளின் மீது
கைவைக்கும் நேரம்
இட்லி அவியும் மணமும், கடுகு தாளிக்கும் சத்தமும்
மிதந்து வரும்
அடுப்பங்கரையில் இருந்து
சேர்ந்தே ஒலிக்கும் அம்மாவின் குரல்
புது உடைகளுக்கு மஞ்சள் வைக்க சொல்லி

முதல் வெடியின் திரி கிள்ளி பற்ற வைக்கும் பரவசமும்,
வெடித்து முடித்த வெடி மருந்தின் வாசமும்,
திரி கிள்ளிய கைகளின் கருப்பும்,
உடையின் பொத்தான்களை பிரித்து அணியும் குதூகலமும்,
புது உடையின் வாசனையும்,
தின்று தின்று தீராத முறுக்குகளும், அதிரசங்களும்,
கலகலக்கும் அணிகலன்களுடன்
வீடுகளில் பலகாரத்தட்டுடன் ஏறி இறங்கும்
வண்ண வண்ண சிட்டுகளும்,
வாசலில் இட்ட கோலங்கள் மீது
சிதறி கிடக்கும் காகிதங்களும்
கையில் வெடி பிடித்து அலட்சிய பார்த்து திரியும் காளைகளும்,
காளைகளை கடைகண் பார்வை பார்த்து செல்லும்
வாலைகளும்,
ஒரு வேலை முடிந்ததுவென
தொலைக்காட்சியில் புதைத்துக் கொள்ளும் பெரியவர்களும்,
சிலருக்கு பரபரப்பாகவும்
சிலருக்கு பரபரப்பின்றியும்
மற்றுமொரு நாளென கடந்து செல்லவியலாத
தாக்கத்தோடு
இரவில் ஒளிரும் வானவெடிகளும், சங்குசக்கிரங்களும்
முடிந்தது முடிந்தது
என அறிவிக்கும் கடைசி சரவெடிகளும், மத்தாப்புகளும்
முடித்து வைக்கும் பாவனையுடன்
தெருவோரங்களில் குவிந்து கிடக்கும் காலி அட்டைப்பெட்டிகளுடனும்
மீதமிருக்கும் வெடிகளும்
பலகாரக பட்சணங்களும்
பண்டிகை நாள் முடிந்ததற்கான சாட்சியங்களுடன்
அசந்து கிடக்கும் உடல்களுக்கும் உள்ளங்களுக்குமிடையே
மெல்லியதாய் ஒலிக்கும் ஒரு குரல்,
“ம்மா அடுத்த வருசம் எப்ப தீபாவளிம்மா” !

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


தீபங்களின் வரிசை அரங்கேறும் நேரம்
மனவானில் ஒரு ஓரத்தில் வெள்ளி முளைக்கும்
பிறக்கின்ற அவ்வொளி, தீபவொளி போல
இருண்மை நிறைந்த மனங்களுக்கு
வெளிச்சத்தைபாவி செல்லட்டும்

பகிர்தலின் பண்டிகையில் விருப்பு வெறுப்பு கடந்து, அன்பை மட்டும் பகிர்ந்தளிப்போம்.
நண்பர்களுக்கு இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்
« Last Edit: October 22, 2019, 07:22:49 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!

Aikkkkkkkkkkk
நாளைக்கு  தீபாவளி
எப்படியும் நாளைக்கு ஸ்வீட்ட்ட்ட்டூ ,
முருக்க்க்க்குனு இருக்கும் .
வெளுத்துக்கட்டிட  வேண்டியதுதான்.
இன்னும்  ஏண்டி  முழிச்சு  இருக்கே !
கைப்புள்ள  தூங்கிர்ர்ர்ர்ரு.....

அடியே  எருமே  !
எழுந்திருடி
மணி  4 ஆச்சு ,
 ஏ !!
இன்னைக்காச்சும்  நல்லா தேச்சு  குளிச்சுடு !! 
போயி  குளிச்சுட்டு வா !!
காலைலயே காரி துப்பும் அம்மா !!
ஆரம்பமே அமர்க்களம்...

அரைத்தூக்கம்
காக்கா குளியல்
கலரு கலரு பாவாடை  சட்டை
வேர்த்துஒழுகும் மூஞ்சி
தட்டு நெறய பலகாரம் 😋
சாக்குப்பை  நெறய பட்டாசு
அங்க  அங்க கைலே  சூடு  😢
அழுக்காத  நண்பர்  கூட்டம்
எத்தனை எத்தனை இன்பம்
எத்தனை எத்தனை சிறுவயது நியாபகங்கள் !!
ஆமா அதுலாம் ஒரு காலம்...

ஆனால் இன்று,

￰சிலர் தீபாவளியா ?
Its just a normal day.

Dress எடுத்துட்டியா  ?
தீபாவளிக்கு  யாரது டிரஸ் எடுப்பார்களா? தோணும்போது  எடுப்பேன்.

பட்டாசு  வெடிச்சியா ?
சின்ன பசங்களா நாம  இன்னும்   பட்டாசு வெடிக்க  ..

என்னோட தீபாவளி எப்படி  தெரியுமா  ?
காலையிலே அதிரடி  சரவெடி
Nightலே  நமத்துபோனா சங்குசக்கரம்
நடுல ஒரு புதுப்படம்
மூக்குமுட்ட சோறு
அங்க இங்கனு  குட்டி  குட்டி  தூக்கம்
திரும்ப  ஒரு குழந்தையாய்  மாறும்  தருணம்  எனது தீபாவளி ..
பெட்லே  படுத்துகிட்டே  ஐயோ !  தீபாவளி முடிஞ்சுபோச்சே ..
சரி விடுடி கைப்புள்ள!
தீபாவளி போன என்ன அடுத்து christmas வருதுலே
குறட்டை வுட்டு தூங்ங்ங்ங்கு......

தீபஒளி  திருநாளில்
தீமைகள் அனைத்தும்   ஒழிந்து
கவலைகள்  அனைத்தும் கரைந்து
சந்தோசம்  அனைத்தும் மலர்ந்து
புதியதொரு  மலராய் மலருவோம்
மகிழ்ச்சியாய் இந்நாளை  கொண்டாடுவோம் .
அனைவருக்கும் என் இனிய தீபாவளி தின நல்வாழ்த்துகள்.



« Last Edit: October 22, 2019, 11:56:49 PM by SaMYuKTha »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
ஹா ..ஹா ..ஹா  ...
நா செத்துட்டேன்னு  எவ்ளோ  சந்தோஷமா
கொண்டாடரிங்க  முட்டா பசங்க
அவுங்ககிட்டேயே  கேட்போம்  நாம  செத்துட்டோமான்னு?

என்னோட ஜாதி
என்னோட மதம்
வேறே  ஜாதி  பையனே கல்யாணம்  பண்ணா கொன்னுடுவேன்  😡
மாட்டுக்கறி  சாப்பிட்டா உன்ன  வெட்டி கூறுபோட்டுடுவேன்   😡
இப்படியாக ஜாதிமத  வெறிபிடிச்ச 
ஆளுக  இருக்கற  நாட்டுலே  இருந்துகிட்டு
நான் செத்துட்டேன்னு கொண்டாடறிங்க
இப்போ சொல்லுங்க
" நான் செத்துட்டேனா " ?

அஞ்சு  வருஷம் கஷ்டப்பட்டு  படிச்சு 
doctor  பட்டம்  வாங்க  நெனச்ச  புள்ளையே 
சுடுகாட்டுக்கு  அனுப்பிட்டு,
வெட்கமேயில்லாம doctor  பட்டதா
மேடையேறி  வாங்கற 
ஆளுக வாழுற  நாட்டுலே இருந்துகிட்டு
நா செத்துட்டேன்னு சந்தோசமா கொண்டாடறிங்க !
இப்போ சொல்லுங்க
" நான் செத்துட்டேனா" ?

கீழடி இப்போ  காலடி
என் மொழி தான்  பெருசுனு
ஒரு இனத்தோட வரலாறே 
மறைச்சு அழிக்க நினைக்கும்
ஆளுக வாழுற நாட்டுலே இருந்துகிட்டு 
நான் செத்துட்டேன்னு சந்தோசமா கொண்டாடறிங்க.
இப்போ  சொல்லுங்க
"நான் செத்துட்டேனா"?

நான் செத்துட்டேன்னு இவ்வளவு சந்தோசமா கொண்டாடறீங்க
நான் இன்னும் செத்துவிடவில்லை  உங்களில்  ஒருவனாக  வாழ்ந்துகிட்டு  இருக்கேன் .
ஒரு  சுயநலவாதியா
ஒரு நேர்மையற்றவனா
ஒரு  கொடூரமானவனா 
ஒரு திமிரு  பிடிச்சவனா
ஒரு  துன்புறுத்துவனாக
ஒரு பேராசைக்காரனாக
ஒரு ஏமாற்றுக்காரனாக
ஒரு பொறுப்பற்றவனாக
நீங்களா  உங்களை  மாற்றிக்கொள்ளும்  வரை உங்களுள் 
ஒரு நரகஸ்வரனாக  வாழ்ந்து  கொண்டுதான்  இருப்பேன்.

இப்படிக்கு நரகஸ்வரன்

இந்த தீபஒளி திருநாளில்
நம்மில் இருக்கும் நரகஸ்வரன்களை அழித்து
பகுத்தறிவுகளை எண்ணத்தில் வளர்த்து
நல்லவைகளை  எல்லாம்  மனதில்  கொண்டு
நெருப்பைப்போல நிமிர்ந்து
உண்மைக்கு  துணை  நின்று
பிறருக்கு  அன்பை  பகிர்ந்து  வாழ்வோம்
அனைவர்க்கும் இனிய தீபஒளி திருநாள்   நல்வாழ்த்துகள்.

சிலர்  சிந்திப்பதில்லை
சிலரை சிந்திக்கவிடுவதில்லை  சிந்தியுங்கள்
ஒருவரின் இறப்பை  கொண்டாடுவது  சரியா?
நாம் மனிதர்களா என்று !!!

« Last Edit: October 23, 2019, 01:08:41 AM by சாக்ரடீஸ் »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

FTCயில் தீபாவளி

ஊரெங்கும் கோலகலமாய் தீபாவளி களைகட்டியிருக்க
உங்களுக்கெல்லாம் கொஞ்சமும் சளைச்சவங்க இல்ல நாங்க
என FTCயில் தீபாவளி ஏற்பாடுகள் பரபரப்பாக நடக்குது பாருங்க!
வீட்டுல கூட்டம் கூடி
என்ன ஸ்வீட் செய்யலாம்னு ப்ளான் பண்றது போல
போட்டாங்க பாருய்யா ஒரு conference
கான்ப்ரன்ஸ்னாலே பலருக்கு அல்லு சில்லு தெரிக்கும்
இன்னைக்கு யாரை தெறிக்க விட போறாங்கன்னு பார்த்தா
தீபாவளி ப்ரொக்ராம்ஸ்கு கான்பிரன்ஸா
”ஹப்பாடா”ன்னு ஓரமா ஒரு சீட் போட்டு உட்கார்ந்தா
வீட்டுல ஒவ்வொருத்தரு ஒரு ஸ்வீட் கேக்கறது போல
ஒவ்வொரு ப்ரொக்ராமா கேக்கிறாங்க
பட்டிமன்றம் வேணும், பாட்டு வேணும்
கவிதை வேணும், காமெடி வேணும்னு
விட்டா ஆடலும் பாடலும் நிகழ்ச்சி கூட கேப்பாங்க போல
ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டே
இந்த கூட்டத்துக்குள்ள என்ன வெடிய கிள்ளி போடலாம்னு
யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே
எல்லாரும் கடைய சாத்திட்டு கிளம்பிட்டாங்க

அடுத்த நாள் பார்த்தா வீட்டுல பரபரப்பா
முறுக்கு சுட ஓடுற அம்மா போலவே
குறுக்கு மறுக்கா ஓடிட்டு இருக்காங்க நம்ம RJஸ்
இவங்க என்ன முறுக்கு சுட போறாங்களோன்னு
ஒரு ஓரமா போய் கட்டைய நீட்டினா
வாய்க்குள்ள மைக்க விட்டு
பாட்டு பாடு பாட்டு பாடுனு
பாடவா பாடவா ப்ரொக்ராமுக்கு பாட்டு கேக்றாங்க
என்னைய ஜப்பானுல ஜாக்கி சான் கூப்பிட்டாக
அமெரிக்கால மைக்கல் ஜாக்‌ஷன் கூப்பிட்டாக
அங்கெல்லாம் விட்டுட்டு என் கிரகம் இங்க பாடுறேன்னு
என் சூப்பர் சிங்கிங் திறமையை எடுத்துவிட்டேன்
முறுக்க அண்டால மொத்த முறுக்குலையும்
ஒரு பெஸ்ட் முறுக்கு இருக்கும்ல அது என்னோட முறுக்குதானாக்கும்

தீபாவளி அன்னைக்கு பட்டாச எடுத்து வெடிக்கிற
சின்ன குழந்தைங்க பரப்பரப்பா போல
எப்ப ப்ரொக்ராமெல்லாம் போடுவாங்கன்னு
எல்லாருமே காத்துக் கெடக்காங்க
சாயந்திரம் ஆச்சோ இல்லயோ
தெருவுல வெடிக்கிற
பட பட பட்டாசு போல
சர சர சங்குசக்கிரம் போல
மனசெல்லாம் பூக்குற மத்தாப்பு போல
சொய்ய்ய்ய்ய்ங்கின்னு போற ராக்கெட்டு போல
ஒவ்வொரு ப்ரொக்ராமா நம்ம FTC fmல வர்ர வர்ர
புஸ்வாண பூப்போல மனசெல்லாம் பொங்கி விரியுது

வச்சு செய்யறதுக்குன்னே வருது பாருங்க ப்ரொக்ராம்
பின்ன நீங்க சாப்பிட்டதெல்லாம் செரிக்க வேண்டாமா
ஒவ்வொருத்தரா ஸ்டேஜுல கூப்பிட்டு
இவங்க பத்த வைக்கிற வெடி இருக்கே
ஒன்னு அதிரடி சரவெடியா வெடிச்சா
இன்னொன்னு புஸ்ஸுன்னு புட்டுக்கிட்டு போயிடுது
நல்லா கொளுத்திப் போடுங்கன்னு
ஜாலியா காலாட்டிக்கிட்டு உட்கார்ந்தாலும்
ஒருவேள
அடுத்த வெடிய நம்ம மேல கொளுத்தி போட்ருவாங்களோன்னு
உள்ளுக்குள்ள பயமா தான் இருக்கு

தீபாவளி அன்னைக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றமெல்லாம்
எம்மாத்திரம்
எங்க FTC பட்டிமன்றத்த கேளுங்க
நாங்க சுடாத ஜிலேபியா
விதவிதமா ரகரகமா ஒவ்வொரு அணியும்
அப்பப்ப்பா என்னாமா ஜிலேபி சுத்துறாங்க

ஒஹ் இதென்ன? ஓஹோ வடையா
வடையா, சுய்யமா ?
ஒஹ் கவிதையா!
நல்லாதான் இருக்கு நல்லாதான் இருக்கு
என்னோட கவிதைக்கு இப்படி கமெண்ட் சொல்லிக்கிட்டே
தீபாவளி கிப்ட்டு மழையா என்மேல அள்ளிக் கொட்டறீங்க
தீபாவளி கலக்‌ஷன் சுமூகமா முடிஞ்சிது
எனக்கு வயிறும் நிறைஞ்சுது
மனசும் நிறைஞ்சுது

இப்படி ஒவ்வொரு முறுக்கும், ஸ்வீட்டுமா
எடுத்து வயித்துக்குள்ள நிரப்புறது போல
ஒவ்வொரு ப்ரொக்ராமா கேட்டு கேட்டு
டயர்டாகிதான் போகனுங்க!

எல்லா ப்ரண்ட்ஸ்சும்
வீட்டுல சுட்ட முறுக்கையெல்லாம் கறுக்கு மொறுக்குன்னு
சாப்பிட்டுக்கிட்டே
சந்தோஷமா எல்லா ப்ரொக்ராமும் கேட்டுக்கிட்டு
விழுந்து பொரண்டு சிரிச்சிக்கிட்டு
நண்பர்களோட வாழ்த்துகளை பகிர்ந்துட்டு
ஒரு குடும்பம் போல FTCயில கொண்டாடுற தீபாவளிக்கு
ஈடு எதாவது உண்டா?


[color]

Copyright by
BreeZe
« Last Edit: October 23, 2019, 08:34:26 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline SweeTie

வைகறையில் துயிலெழுந்து
எண்ணெய் வைத்து நீராடி
வண்ண வண்ண பட்டுடுத்தி
குடும்பமாய்  கோவில்சென்று
வகைவகையாய்   உணவுண்டு
வலம் வந்த நாட்கள் எங்கே?

அப்பாடா!!   ஒரு நாள்  விடுமுறை
வீணாக வேண்டாமே !
விடிய விடிய  தூங்கி
காலையிலே   வாட்ஸ் அப்  இல் வாழ்த்து
முகபாதகத்தில்  மற்றவர்க்கு
 சாப்பாடும்   இருக்கவே இருக்கிறது
குளிர்சாதன பெட்டியில்
சமையலுக்கும்  விடுமுறை
சிறப்பான  கொண்டாட்டம்

அன்று
வகை வகையாய் பலகாரம்
முறுக்கு பட்சணங்கள்
தின்ன தின்ன  இனிக்கும் 
அம்மாவின்  கைப் பக்குவம் 
சொந்தங்கள் பந்தங்கள் 
சொல்லாமலே வருவர்
பச்சரிசி பாயாசமுடன் 
அன்புடனே விருந்தோம்பல்
உண்ட களைதீர  உறங்கிடுவார்
திண்ணையிலே!!

இன்று
பணியாரம்  செய்ய  நேரமில்லை 
பாபட்ச்சனமும் தேவையில்லை
விதம் விதமாய்   பணியாரம்
கடை கடையாய் விடுகிறார்கள்
எண்ணெய்ப்  பலகாரம்   அது
உண்டால்  ;கொலெஸ்ட்ரோல்   வரும்
இனிப்பு  பணியாரம்   இது
தின்றால்   சக்கரை வியாதி வரும்
இப்படியே சொல்லிடுவார்
மொத்தத்தில்  பணியாரம்
இப்போ  outdated


காலத்தின் மாற்றங்கள்  இன்று
தேவையற்றதை  வேண்டுகிறோம்
தேவைகளை   மறந்துவிட்டோம் 
சம்பிரதாயங்களை  மாற்றிவிட்டோம்
கலாச்சாரங்களை  அகற்றிவிட்டோம்
நாகரீகம்   என்னும் சொல்
சர்வ நாசம்  என்றாகிவிட்டது

மங்கல  விளக்கேற்றி 
மகிழ்வுறும்  தீபாவளி
இன்பங்கள்  சூழ   
இனித்திடும்  தீபாவளி
அகமும்  புறமும்   விழிப்புற
பண்பும்  பாசமும்  செழிப்புற
இல்லங்கள் தோறும்  இனிமையும்
உள்ளங்கள்  யாவும்  பூரிப்பும்
பொங்கிட   கொண்டாடுவோம்
இனிய தீபாவளி

அணைத்து   தோழர் தோழியருக்கு   ஜோவின்   இனிய தீபாவளி  வாழ்த்துக்கள்