FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 15, 2017, 11:20:25 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: Forum on July 15, 2017, 11:20:25 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 154
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/154--.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: NiYa on July 16, 2017, 12:26:39 AM
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
எதிர்த்து  நின்று போராடு மனிதா
படித்தது ஏதோ
செய்யும் வேலை ஏதோ

படித்த பட்ட படிப்புக்கு
வேலை இல்லை
எண்சாண் வையிருக்காக
பிடிக்காத வேலை
அதுவும் அந்நிய நாட்டுக்கு அடிமையாக

ஒரு நாளில் பாதிக்கு மேல்
மூளைக்கு வேலை
ஓய்வு என்பதை உடலும்
உள்ளமும் மூளையும்  கூட
மறக்கும் நிலையில் நாம்

சிரித்துமகிழ  நேரம் இல்லை
சிரிக்க மறந்த இயந்திர மனிதன் தான்
இப்பொது உலகில் வலம் வருக்குறார்கள்
என்னையும் சேர்த்துதான்

கணனி முன் உறக்கம்
இல்லாமல் இருக்கும் மனிதா
மூளையை கசக்கி பிழியும் நீ
அடிக்கடி உன் மனதையும் கசக்கி பிழி
நீ யார் என்று புரிந்துகொள்
மனஅழுத்தம் தவிர்த்து
சிரித்து வாழ்வாய்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: SunRisE on July 16, 2017, 09:33:17 AM
எத்தனை இழப்புகள் எம் முன்பு
ஏனி கெட்டி நின்றாலும்
கலங்காது இந்த கள் நெஞ்சம்

படபடத்து துடிக்கும்
பன்மை பெற விதி இல்லை
என எண்ணி
எதையும் தாங்கும் இதயத்தை
எனக்களித்த இறைவன்
ஏன் என் உறவுகள்
என்னை விட்டுச் செல்லும்
போதும் மட்டும்
அதே இதயத்தை இடமாற்றி
சுக்கு நூறாய் உடைந்து
உலகம் உறைந்து
உணவு மறந்து
நாவில் உலறல் தறுகின்றாய்

காதல் எனும் மூனறெழுத்தில்
வந்தால் ஒருத்தி
கோடையிலும் வசந்தம்
உலக மேடையிலும் கர்வம்
அவள் தந்தாள்
ஏனோ தெறியவில்லை
இதயத்தை ரனமாக்கி
இரன்டாய் கிழித்து
மீள தூயரத்தை என்னுள்
ஊட்டிச் சென்றாள்

நண்பன் நான் இருக்கின்றேன்
உன் துயரம் என் துயரம்
என கிழிந்த இதயத்தில்
நட்பெனும் மருநது பூசி
என்னை மீட்ட அவன்
வாழும் முன்பே
வழி தவறி
சொர்க்க வாசல் சென்றான்

என்னை விட்டு போனானம்மா
ஏன ஏங்கி அழுத போது
தலை கோதி
கணணீர் துடைத்து
கலங்காதே மகனே
அம்மா இருக்கின்றேன்
நாமூம் ஒரு நாள்
போக வேன்டும் அங்கு
அதன் முன்பு வரும்
இழப்புகள் யாவும் இயற்கை
என்று நீயும் சென்றாயே

நானும் ஒர் நாள் இறப்பேன்
அது என்னவோ இயற்கை
இழப்புகள் எனக்கு
செயற்கை ஆகிப் போனதே

தவிக்கின்றது மனம்
தடிக்கின்றது ரணம்
என் புண் பட்ட இதயத்தில்.........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: thamilan on July 16, 2017, 11:00:57 AM
கவலைகள் என்ன கைவிரல் நாகமா
உதிராமல் போவதற்கு
அது ஆடையில் தூசுகளே
தட்டி விட்டால் உதிர்ந்து விடும்

படிப்பும் பட்டமும்
மனிதன் முன்னேறத்தான்
அந்த முன்னேற்றத்துக்கு விலை
உனது நிம்மதியா
சுவரை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்

மூலையில் அமர்ந்து
கவலை முகமூடிக்குள்ளே
முகத்தை மறைத்துக் கொண்டால்
பகல் கூட
இருட்டாய் தான் தெரியும்

அழுது கொண்டே வாழ்வதை  விட
சிரித்துக் கொண்டே சாவது சுகமானது
விளக்கு வீட்டுக்குள்ளே  எரிவதை விட
இதயத்தில் எரியட்டும்
பிறகு பார்
இருட்டும் உன்பாதம் வணங்கி
பாதையை காட்டும்

சோகப்பட்டவன்
வீணையை கூட
விறகாக்கி விடுகிறான் 
மகிழ்ச்சியாக இருப்பவனோ
மண்பானையையும் வாத்தியம்மாக்கி
வாசித்துக் காட்டுவான்

இங்கே நீ பிறந்து வந்தது
கண்ணீரிலும் கவலையிலும் வாழ்க்கையை
கரைத்து விடவா
சிரிப்பில் தான் நம்
வாழ்க்கை அர்த்தப்படுகிறது
கவலைகளிலோ அது
அமங்களப் படுகிறது

மகிழ்ச்சி
இந்த மாவிலை தோரணங்கள் 
உன் மனவீட்டை அலங்கரிக்கட்டும்
ஏன் அங்கே கவலை ஒட்டடைகளை
குவிய விடுகிறாய்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: VipurThi on July 16, 2017, 11:48:17 AM
காலையிலே கண் விழித்து
கையிலே தேநீருடன் நாளிதழை
நான் புரட்டி ஓட விட்டேன்
வானொலியை

மெல்லிசையின் மோகத்திலே
கண் மூடி நானிருக்க
அடுத்து வந்த பாடலோ எந்தன்
அக கண்ணை திறந்தது

ஆபீஸின் காவலாளியோ நேற்று
செயலிழந்து ஓய்வெடுக்க 
சாவி கொத்தோ என் சட்டை பையில் ஓய்வெடுக்க 
நானோ என் வீட்டில் ஓய்வெடுக்க
இன்று ஆபீஸ் திறப்பு விழா
என் முறை என மின்குமிழ் ஒளிர்ந்தது
 
பதறியடித்து பல் விளக்கி
காக்கா குளியல் நான் குளித்து
அரை குறையில் உடை உடுத்தி
பைத்தியக்காரனாய் சப்பாத்து நாடா கட்டி
தலை கவசமதை கையில் ஏந்தி
என் புல்லெட் நோக்கி நான் நடக்க
புல்லெட்டோ பஞ்சர் ஆகி
புஸ்வாணமாய்  பார்த்து நின்றது

மேலதிகாரியின் தக்காளி முகம்
கண் முன்னே நிழலாட
முட்டி வந்த கண்ணீரை
மூச்சடக்கி மென்று விழுங்கி
எட்டி வைத்தேன் ஓரடியை
தட்டி கூப்பிட ஆட்டோவை

சொன்ன இடத்தில் கொண்டு நிறுத்தியவன்
மீட்டரில் குளறுபடி செய்ய
அவன் சட்டையை உலுக்கும்
திராணியற்றவனாய் வயிறெரிய
திணித்தேன் அவன் கையில்
முன்னூறு ரூபாய் சுளையாக
 
பாய்ந்து பாய்ந்து ஏறிய படியில்
என் பைல் விழுந்து காகித கோலம் போட
அங்கங்கு பொறுக்கியதை
அள்ளி ஒரு மூட்டை கட்டி
தாவி வந்து கதவு திறக்க
சாவியதை உள்நுழைத்தேன்

ஈ கூட இல்லா இடத்திலே
நேரம் பார்க்க கை பார்த்தேன்
மறந்துவிட்டேன் கைக்கடிகாரமதை
எடுத்து கொண்டேன் கை தொலைபேசிதனை

நேரம் பார்த்த என் கண்ணோ
நின்று கொண்டது நாளினிலே
அரசபணியாளன் எனக்கோ
உறைத்துக்கொண்டது இன்று ஞாயிறு என

பர பரப்பில் நாட்காட்டியின்
நாள்தனை பார்க்கமுடியாமல்
தேடிக்கொண்ட விளைவிலிருந்து
விழித்துக்கொண்ட நானோ வானம் பார்த்து
அமர்ந்து கொண்டேன் கன்னத்தில் கை வைத்து ::) ::)


"எண்ணுகையில் கேளிக்கையான விடயம்
நிஜ வாழ்க்கையில் முட்டாள் தனம்
இயந்திர வாழ்க்கையின் இயலாமையில் இருந்து
மன அழுத்தம் இல்லா மனித வாழ்வின்
நிதர்சனம் காண்போம் வாரீர்"


                      **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: joker on July 19, 2017, 12:02:37 PM
அழகான காலை
அம்மாவின் கையில் தேநீர்
அன்போட எழுப்பி  கொடுத்து விட்டு
சென்றாள்

காக்கைகளின் ரீங்காரம்
ஆம் குயிலும் சிட்டுக்குருவிகளும்
மறைந்து விட்டன நம் விஞ்ஞான வளர்ச்சியை
கண்டு இப்போது காக்கை மட்டும் துணை உண்டு

அப்பாவின் அர்ச்சனை தொடங்கி விட்டது
நேரம் ஆகிறது சீக்கிரம் கிளம்பி செல் என

பேருந்தில் ஏறி அலுவலகம் சென்றால்
எனக்காய் எடுத்து வைத்த வேலைகள்
மூழ்கினேன் அதில்

பசி மறந்து நானிருக்க இடை இடையில் அதிகாரியின் திட்டுக்கள் வேறு
தீவிரம் காட்டி முடிக்கையில் நியாபகம் வந்தது
ஒலியின்றி இருக்க செய்த என் தொலைபேசி

எடுத்து பார்க்கையில் அவளிடமிருந்து வந்த அழைப்பை
எடுக்காமல் விட்ட எண்ணிக்கை பத்து
குறுந்செய்தி சொல்லியது இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்த  மறந்ததால் உறவு முறிந்தது என

அவளை சொல்லி என்ன குற்றம்
அதிகாரியை சொல்லி என்ன குற்றம்

தலை மேல் கை வைத்து சிறிது உட்கார்ந்தேன்
அலுவலக படிகளில் வீடு செல்ல பிடிக்காமல்

சிறிது கழித்து நடந்து பேருந்தில் ஏறினேன்
ஒருவழியாய் கடைசி இருக்கை இருந்தது
பயணம் தொடங்க சொல்லி தந்தது வாழ்க்கை பாடம்

வாழ்க்கை திடீர் திடீர் என்று
தூக்கி தூக்கி அடிக்கும் பேருந்தின் கடைசி இருக்கை போல
பத்திரமாய் இருந்து கொள் என !

வீட்டுக்கு வந்ததும் அப்பா
அம்மாவிடம்  சிரித்து  பேசி கொண்டிருந்தார்

எத்தனையோ கஷ்டங்கள், அவமானங்கள்
துன்பங்கள் , கடந்து தான் அவரும் வீடு வந்திருப்பார்
இது நாள் வரை எதையும் எங்களிடம்
காண்பித்தது இல்லை

அது என் வாழ்க்கை பயணம் தொடர நம்பிக்கை
தந்தது ...

இதுவும் கடந்து போகும் ..

--------ஜோக்கர் --------
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: SweeTie on July 21, 2017, 04:48:12 AM
பள்ளி சென்று படித்திட் டோம்
பல கலையும்  கற்றிட்டோம்   
கல்வி என்ற மலைமீதேறி
பட்டங்களும் வாங்கிட்டோம் 
   
வாழ்க்கை என்னும் சாலையிலே
வாழ்க்கை  ஓட்ட  வழியில்லை 
கறிக்கு உதவாத ஏட்டு சுரைக்காய்
ஆனதே யான் பெற்ற  கல்வியும்  .

தினமும் ஒரு உடை அணிந்து 
படியேறி நடை நடந்து
பல ஆண்டு  செலவு  செய்தும்
வேலை என்னும் வேலி
தாண்ட முடியவில்லை 

காலங்கள் மாறும் ஒருநாள் 
அறிவியலும்  ஏற்றம்  காணும் 
கணணியும்  மாற்றம் காணும் 
மனிதன் முடக்கமும் வேரூன்றும்

கைகட்டி  நிற்காத  பாமரன்
உழைப்பால் உயர்ந்த உத்தமன்
வானும் நிலமும் அவன் தோழன்
வறுமையும் நோயும் ஓடி போகும்
அவனே உலகின் அற்புதன் !!!
/b]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: BreeZe on July 21, 2017, 10:05:34 AM

ஒவ்வொரு முறையும் வீழும் போதும்
எழுவதற்கான எச்சரிக்கை உணர்வுகள்
எழாமல் இல்லை

மீண்டும் வீழ்ந்து வீழ்ந்து
மனம் விதியென்னும்  மூடத்தில்
மூழ்கிக் கிடக்கிறது
விதியை வென்றுவிட
வேறொன்றும் வேண்டாம்
அடுத்தமுறை
விழமாட்டேன் என்ற நம்பிக்கை
ஒன்றே போதும்

வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பது தான் ........
எழும்பி நின்று எம்பிக்  குதிப்பவனால்  தான்
விழ முடியும்
காலம் பூராவும்
கால்நீட்டி படுத்திருப்பவன்  விழுவதில்லை
வாழ முயன்றால் தானே
வீழ்ச்சி

தோல்வி என்பது
வெற்றிச் சரித்திரத்தின்
எழுதப்படாத முன்னுரை

எப்படியாவது உயிர் பிழைப்பது தான்
வெற்றி என்றால்
உலகில் வெற்றி பெற்றவனே
கிடையாது

வெற்றி என்பது
ஓர் இலக்கைத் தொடுவதல்ல
பல இடர்களை முறியடிப்பது
சறுக்கு மரத்தில் சிறிது
சரிந்து   விட்டால்
சாதனைகள் மறைந்து விடாது

   
தோல்விகளை தூக்கி
பரண்மேல் போடு
கவலைகளை காலில்
போட்டு மிதி

நீ உயர உயர பறக்கும்
பட்டாம் பூச்சி
காற்று நின்றதால்
கதிகலங்கிப் போகாதே
 உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை
பற
நடந்தது பலவும் பலசாகும்
உலகம் உனது வசமாகும்

பதிப்புரிமை
BreeZe
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 154
Post by: DeepaLi on July 21, 2017, 03:47:34 PM
பிறக்கும் போதே என் வழக்கை இப்படி தான் அமைய வேண்டும்..
என்று நினைத்து நான் பிறக்க வில்லை..
நினைத்தது போல் என் வாழ்க்கையும் அமையவில்லை..

குடும்ப சூழ்நிலையையும் தாண்டி படிக்க ஆசை பட்டு..
மெல்ல நீண்டு சென்ற என் படிப்பில்..
வந்த முற்று புள்ளியாய் தந்தையின்  இழப்பு..

அன்றே உடைந்த என்னை மீட்டு..
படிப்பை தொடர வைத்த..
பல நல்ல உள்ளங்கள் ஏராளம்..

படித்தால் முன்னேற்றம் என்ற எண்ணத்தில் படிப்பை முடித்து..
அதற்கு தகுந்த வேலையை கிடைக்காத போது..
எழுந்தது ஏன் படித்தோம் என்ற எண்ணம்..

பலர் செய்த கேலிக்கு இடையில்..
முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில்..
அமைந்தது ஒரு வேலை..

அன்று படித்த படிப்புக்கு கிடைக்காத வேலை..
இன்று கிடைத்ததே என்று ஏற்று கொண்டு..
பல மேல் அதிகாரிகளின் கோபங்களுக்கு ஆளாகி..
அதையும் காப்பாற்றி கொள்ள முடியாமல்..
பட்டு வந்த துன்பங்கள் ஏராளம்..
 
கண் இமைத்து நடந்த நாட்களை விட..
என் கல்வி சான்றிதழ்களுடன்..
அலைந்த நாட்கள் தான் ஏராளம்..

நான் இழந்த பதவியையும்..
இடத்தையும் பிடித்து கொள்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது..
ஆனால் முடிந்த நாட்களை எப்படி அமைத்து கொள்வேன்..

வேலைக்காக என் உறவுகளை இழந்து..
பல கனவுகள் சுமந்து ..
பல எல்லைகள் தாண்டி வந்தேன்..
ஆனால் எனக்கு கிடைத்தது இலவச காற்று மட்டுமே..

அடிபடிந்து வாழ்வதை விட..
நிமிர்ந்து சாவது மேல் என்ற கொள்கையுடன்..
இன்னும் தேடி அலைகிறேன்..
நான் காணாத அழகிய வாழ்க்கையை..


deePaLi