Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 137  (Read 2105 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 137
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Sweetie அவர்களால்    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
« Last Edit: October 12, 2018, 10:51:47 AM by MysteRy »

Offline MyNa

மதுவுக்கு  மயங்காத  ஆண் இருக்கலாம்
பொன்னுக்கு  மயங்காத  பெண் இருக்கலாம்
ஆனால் மொழி  வரம்பின்றி கான மழையை
உலகெங்கும் பொழிய  செய்த இசையே
உனக்கு மயங்காத மனம்தான் உண்டோ ?

சிணுங்கும்  குழந்தையாய்
சீரும்  கடல் அலையாய்
உயிரெனும்  இதய  துடிப்பாய்
எங்கும் குடிகொண்ட  இசையே ..
உனக்கு  இல்லை ஈடு இணையே ..

தனித்து வாடுகையில்  தாயானாய்
துவண்டு  கிடக்கையில்  தந்தையானாய்
வலி  தீர்க்கும்  மருந்தானாய்
தினம் செவிக்கு  நீயே விருந்தனாய்
உதிரத்திலும் கலந்து  உயிரானாய் ..

திசை எங்கும் ஒலிக்கும் இசையே
என்னை கொள்ளை கொண்ட  இசையே
என்னையே உன்னில்  மறந்தேன்
உன்னை  எண்ணியே  கரைந்தேன்
உன்னோடு ஒன்றாய் கலந்தேன்..

இசையால் வாழ்கிறேன் ..
இசையோடு வாழ்கிறேன் ..

தமிழ் பிரியை மைனா
« Last Edit: March 07, 2017, 01:10:19 AM by MyNa »

Offline thamilan

இசை கேட்டால்
புவி அசைந்தாடும்
ஓம் என்ற நாதத்தில
உயிர் வாழ்ந்திடும்  உலகம்

நாதம் இல்லாமல் உலகம் ஏது
எங்கு இல்லை இதில் இல்லை இசை
இறைவன் உலகையும் இசையையும்
ஒன்றரக்கலந்தே படைத்திட்டான்

வீசும் தென்றலில்
கொட்டும் மழையில்
கரையை தழுவிச் செல்லும் கடல் அலைகளில்
எங்கும் இசையே

மகிழ்ச்சி ஆரவாரம் முதல்
மரணஓலம் வரை
எல்லாம் இசையே
ஆலய மணியோசை முதல்
மயான சங்கோசை வரை
எல்லாம் இசையே 

மனிதன் படைத்திட்ட இசைக்கும்
இயற்கை படைத்த இசைக்கும்
இருதுருவ வித்தியாசங்கள்
மனதை மயக்கிடும் மனிதன் படைத்த இசை
மதியை மயக்கிடும்
இயற்கை படைத்திட்ட இசை
கேட்டதும் இனித்திடும்
அப்புறம் மறந்திடும் மனித இசை -நம்
உயிரோடும் உணர்வோடும்
ஒன்றாக்கலந்தது இயற்கையின் இசை
 

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
  இசையே இதயம்

ஏழு சுவரங்களில் எட்டுத்திக்கும்
உலாவும் ஓர் உன்னத வருடல்.....
இசையில் தியங்கிட மறுக்கும்
இதயங்கள் உண்டோ உலகில்.....

ராகங்களில் பாடாத
கானமேது.....
ராகங்களில் அடங்கா..... 
தாளம் பாவம் சந்தங்கள் 
ரசங்கள் தான் எவையோ.....

ஏழு சுவரங்களில் ஆடி அடங்கா
நாளங்கள் நரம்புகள் உண்டோ.....

பிறப்பு முதல் இறப்பு வரை
இதயங்களை வசப்படுத்தும்.....
உருவமில்லா ஓர்.....
இதம்... சுகம்... வருடல்... 
 
இன்பம் சோகம் கண்ணீர் சிரிப்பு.....
அனைத்தும் உண்டாக்கும் வலிமை
இசைக்கும் உண்டு.....

மன்னியுங்கள் மறந்திடுங்கள்
இசைக்கு உருவம் உண்டாம்.....


கருவிகளில் விரல்கள்.....   
கருவிகளில் கால்கள்.....
கருவிகளில் நாவும் உதடும்.....
இணைந்து உண்டாக்கும்
ஒலிகளும் இசையாகும்.....

கருவிகள் கொண்டு எழுப்பும்
இசையோடு குரல் புணர்ந்து.....
முத்தமிழில் மத்தியவள்
இசைத் தமிழெனப் பிறப்பாள்.....
உள்ளங்களில் நிலைப்பாள்....

இசை உலகையும் கட்டியாளும்.....
இசை இதயங்களை கட்டிப்போடும்.....
இசை மனிதனின் கவலை போக்கும்
மருத்துவர் தராத தற்காலிக மாத்திரை.....

இதழும் நாவும் ஒலிகளை எப்போதும்
இசைப்பதில்லை.....
இசைகருவிகளும் மனிதனோ மிருகமோ
தீண்டாவிடில் மௌனிகள்.....

மனித உடலில் கணமும் ஓயாது இசைக்கும்
இரு ராகங்கள் உண்டு.....
ஒன்று சுவாச ராகம்
மற்றொன்று இதய ராகம்
இரண்டில் எந்தராகம் ஓய்ந்தாலும்.....
ஓய்ந்துவிடுவோம்.....

சுவாச ராகம் சுவரங்களை மாற்றும்
வயதுக்கும் நேரத்துக்கும் ஏற்ப.....
இதய ராகம் எப்போதும் மாறாது..... 
எட்டாம் சுவரத்தில்.....
லப் டப்... லப் டப்... லப் டப்... என்றே
ஓயும்வரை ஓயாது இசைக்கும் ராகம்.....


இதயம் ஓய்கையில் பிரியும் உயிர்போல்.....
இசை இல்லாத உலகமும் இதயமும்.....
பட்டுப் போன பாலை மரமே.....

படைத்த பரமன் படைக்கையில்
கூடவே படைத்த இசை.....
இதயமெனும் உருக் கொண்டு
உலகெங்கும் உலாவரும் அற்புதம்.....


இசையே..... இதயம்.....
இதயமே..... இசை.....
இசையின் உருவம் இதயமே..... 
மனிதர் வாழும்வரை வாழும்
வயதாகா வரம்பெற்ற மூத்தவளே இசை.....

 
குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

தாய் தான் அறிமுகப்படுத்தினாள்
இசையை முதலில் தன் தாலாட்டினூடே

வாலிப பருவம் அடைந்தவுடன்
அறிமுகமாகியது ஓர் நாள் இரவு
இளையராஜாவின் மெல்லிசை

சுகமும் துக்கமும் என்னுடன்
பகிர்ந்துகொண்டது அவரின் இசை

நான் பயணிக்கும் நேரங்களில் எல்லாம்
என்னுடன் பயணித்தது இசை

தூக்கம் இல்லா இரவுகளில் என்னுடன்
தூங்காமல் கண் விழித்தது இசை

என்னை சுவாசிக்க வைத்தது இசை
என்னை காதலிக்க தூண்டியது இசை
என்னை பிறரை நேசிக்க வைத்தது இசை

இசையின் எழுத்துக்கள் எனக்கு புரிவதில்லை
ஆனால் என் உடல்  புகுந்து ரத்த நாளங்களில்
மாற்றம் செய்தது  கத்தியின்றி !

இரவும் பகலும் ,மழையும் வெயிலும்
மாறிக்கொண்டிருக்கலாம்

உனக்கும் எனக்குமான பந்தம்
ஒரு போதும் மாறாதே !


  ----சும்மா --------

Where words fail, music speaks.
Without music, life would be a mistake





En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook



நாட்டுப்புற பாடல்


பாட்டு ஒன்னு பாடிக்கிட்டு
பள்ளத்தூர் போகையில
பருத்திக் காட்டுக் கொல்லையில
மாமன் மகள் நின்றாள் தனிமையில

மச்சான் என்னப் பார்த்ததும்
பளிச்சினு ஒரு சிரிப்பு
வெடிச்சு விரிஞ்ச
பருத்தியப் போல
பாதையை விட்டு நான் இறங்க
சுளுக்குனு ஒரு சிரிப்பு
காஞ்சி ஒடிஞ்ச
குச்சியப் போல

வளையல் கைய
நான் தொட்டேன்
விசுக்கினு ஒரு இழுப்பு
சொளையில் உருவிய பஞ்சைப் போல



- மாறன்




Offline SweeTie

விடிகாலை  இளம் குயில்களின் கூ கூ இசை 
 இருள் விலக முகில் சிந்தும் பனித்துளிகள்
பசும்புல் மேல் விழும்  ஓசை
மொட்டவிழ்ந்த மல்லிகையை நுகர்ந்து ரசிக்க
வட்டமிடும் வண்டுகளின் ரீங்காரம்
இத்தனைக்கும் மேலாக  ஆயிரம் மைல் கடந்து
காற்றிலே மிதந்து  வந்து  காதோரம் கிசுகிசுக்கும் 
‘’இனியவளே  கண்திறவாய் ‘’ .... என்னவன் பாடும் பூபாளம்

கார்மேக  வானத்தில் பளிச்சிடும் மின்னல்
இடியோசை  முதல் செல்ல தொடர்ந்து வரும்
மழை கொட்டும்  மிருதங்கம்   
மலையில்  ஊற்றெடுத்து   தவழ்ந்து வரும்   
நீர்வீழ்ச்சி இசைக்கின்ற  ஜலதரங்கம்
தென்றல் காற்றிலே  அசையும் மூங்கில்களின்
உரசலில் உண்டாகும்  மரகத வீணை இசை
ரசனையில் பிறந்த நம் அழியாத காதல் உணர்வுகள்
என்றென்றும் பாடிடும்  சரணங்கள்.

பச்சிளம்  குழந்தையை பசி மறந்து துயிலவைக்கும் 
அரவணைக்கும்  அன்னையின்  தாலாட்டு 
அண்டமதை  அதிரவைக்கும் சிவனையும்
மயக்கிய  இராவணன் மீட்டிய வீணையிசை     
கண்ணனின் இதயம்  சொந்தமென  காதல்கொண்ட
ராதையவள் மயங்கிய புல்லாங்குழலிசை   

இயற்கையின் கொடையில் இசை  அழகு
நாதத்தில்  அலைகள்  மீட்டும் சுரங்கள்  அழகு
மொழி இல்லாத வார்த்தைகளின்  வர்ண  ஜாலங்கள் அழகு
இதயத்தை கட்டிப்போடும்   உன்  காதலுடன்
என் கால் கொலுசு எழுப்பும் சிணுங்கல் இசையும்  அழகு

 

Offline சக்திராகவா


செவிக்குணவாய் ஒலியலைகள்
கருவிகள் இயங்கி காதுகள் மயங்க!
காலத்தில் நீங்காத
காற்றின் கலைவடிவம்!

திக்கெட்டும் திசையென்பார்
திசையெங்கும் இசையென்பார்

கத்தும் குழந்தையும்
கதறும் பறவையும்
சிதறும் மணிகளும்
சிலருக்கு இசைதான்

வரிகளில் வார்த்து
வயலினை சேர்த்து
வருகிற பாடல்
வருடிடும் தோகையாய்

வகைபிறிந்து வாழ்ந்தாலும்
மருந்தும் விருந்தும்
மாறா இசையே
மறவா மொழியே!!

சக்தி ராகவா

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
பிறப்பின் ஒலி சங்கீதம்
ரீங்காரமாய் கேக்கும் இசை கானமாய்
மழலையின் ராகம்  தேனாய்
அம்மாவின் திட்டு நேர்த்தியாய்
அப்பாவின் பாராட்டு இசையாய்
அண்ணாவின் விளையாட்டு இன்பமாய் 

லப் டாப்... லப் டாப்...
இதயத்தின் ஒலி துல்லியமாய்
டிக் டிக்... டிக் டிக்...
நாடி துடிப்பின் மெல்லியதாய்
வல்லினமும், மெல்லினமும்
உருமாறும் கணம்
உயிர்ப்பின் கணமாய்.... 


காற்றின் மொழி மெல்லிசையாய்
அலையின் ஒலி வெட்கமாய்
தீயின் ஒளி பயமாய்
ஆகாயம் பூமி அழகாய்

கனவே மெதுவாய் கலையவே
கரங்கள் கணமாய் கரைவதேன்
நினைவே என்னை அறையவே
எனது உலகம் உடைவதேன்
இசையில்  கலந்து
அதன் உணர்வில்  மிதப்பதால்!.



« Last Edit: March 07, 2017, 07:41:36 PM by BlazinG BeautY »