Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 142  (Read 2711 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 142
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:54:13 AM by MysteRy »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
இலட்சம் உயிர்கள் இழந்தோம் உனைக்கொண்டு
தலைநிமிர.....


தழிழே.....
என் அன்னை நீ..... என் சுவாசமும் நீ.....
என் வாழ்வின் அடையாளமும் ஆதாரமும் நீ.....
என் மேனியில் பாயும் உயிராம் குருதியும் நீ.....

உலகில் மூத்தவள் நீ.....
முதிர்ச்சி உள்ளவளும் நீ..... ஆனால்
முதுமை இல்லாதவளும் நீயே.....

எப்போது பிறந்தாய் தாயே.....
கடவுளை அன்றி உன்னை
ஈன்றதாய் சொல்ல..... உலகில்
வேறு மொழியுண்டோ தாயே உனக்கு முன்......


என்ன பாவம் செய்தாய்..... 
உன்னை அன்னையென சொல்லும்
பிள்ளைகள் யாவரும் தேச பேதமின்றி..... 
திரும்பும் திசையெல்லாம் அடிபடவும்.....
அவமானப்படவும்.....

நீ ஈன்ற பிள்ளைகள் ஓதிய நன் நெறிகொண்டு.....
உலகையும்..... உலகில் வாழும்யாவையும்.....
எம்மைப்போலவே நேசித்திடினும்...... காரியமாய்
அன்றி எம்மை நேசித்திட யாருண்டு உலகில்.....

யாவரும் உனக்கு எதிரியோ உலகில்.....
நீ கொண்ட ஆயுதம் ஒன்று
நீ கண்ட உயிர்கள் பன்னிரெண்டு
நீ செய்த மெய்கள் பதினெட்டு
உயிரும் மெய்யும் கொண்டு நீ ஈன்றவை
இரு நூற்று பதினாறு.....
அனைத்தும் மொத்தமாய் இருநூற்று
நாப்பத்தி ஏழு.....


இருநூற்று நாப்பத்தி ஏழுக்கு வெளியே
எழுத்துக்கள் கொண்டு எழுதுவதே
உன்னை இகழும் செயல்.....
தாயே உன்னைப் படித்திடவே பிள்ளைகள்
நாம் ஆர்வமாய் இல்லை பாவம் நீ.....
முதல் பிறந்தும் தொலைவில் விட்டு விட்டோம் தாயை.....

தமிழரும் உன்னையே உயிரென சொல்லும்
நானுமே உன்னை இகழ்வதில் தயங்குவதில்லை.....
நீ தன்னிறைவு கொண்டவள் தாயே.....
உன்னை கற்றிட ஆர்வமில்லை எமக்கு.....
எனவேதான் பிறமெழிச் சொற்கள்கொண்டு
உன்னை எழுதுகின்றோம் மன்னித்தருள்.....

உன்னை காக்க உயிர் ஈன்ற பிள்ளைகள்
ஏராளம் தீக்கிரையென.....
விஞ்ஞான ஆயுங்கள் கொண்டு போர் செய்து
மண்கேட்டோம் சுதந்திரமாய் வாழ.....
மண்கேட்க்கும் தகமையும் உரிமையும் 
தமிழெனும் தாயே நீயேதந்தாய்.....


உன்னையே வாழ்வின் அதரமாக கொள்ளாவிடில்
தமிழரென இனமேது.....
தமிழருக்கென நாடேது.....
இலட்சம் உயிர்கள் இழந்தோம் உனைக்கொண்டு
தலைநிமிர.....
தமிழருக்காய் இப்போது ஏதுமில்லை சுதந்திரமாய்.....
தாயே தமிழே நீ இருக்கும்வரைதான் தமிழினம்
மார்பை நிமித்தி வாழ்ந்திட முடியும்.....

தாயே வாழ்க..... தமியே வாழ்க..... நீ வாழாது
நாம் அடையாளம் கொண்டு வாழ்ந்திட
முடியாது.....
ஆகவேயேனும் நீ வாழ்ந்திடவேண்டும் பூவினிலே.....
வாழ்க மானுடம்... வாழ்க தமிழர்... வாழ்க தமிழ்.....
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு.....



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: April 09, 2017, 01:12:33 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline thamilan

தமிழ் எனது  தலைக்கவசம்
துவிச்சக்கர வண்டியில்  போகும் போதும்
அதை நான் அணிந்திருப்பேன்

தமிழ் எனது மூக்குக்கண்ணாடி
குளிக்கும் போதும்
அதை நான் அணிந்திருப்பேன்

தமிழ் எனக்கு செய்த்தித் தாள்
அதை படிக்காமல்
பல்துலக்க மாட்டேன்

தமிழ் எனக்கு சொல்லிடப் பேசி
சொல்லாத ரகசியங்களை
அதனிடம் செல்லமாக சொல்லிவைத்திருப்பேன்

தமிழ் எனக்கு சேமிப்பு வாங்கி
சொற் காசுகளை அதில்
சேமித்து வைத்திருப்பேன்

தமிழ் எனக்கு ஆரம்பப்பள்ளி
அம்மா அப்பா சொல்ல சொல்லித் தந்தது
அந்தப் பள்ளி தான்

தமிழ் எனக்கு உயர்நிலைக்கல்வி
இங்கே தான் சொற்களை
ஆளும் வல்லமை பெற்றேன்

தமிழ் எனக்கு சுவாசக்காற்று
இதை சுவாசிப்பதால் தான்
நான் இன்னும் உயிர் வாழ்கிறேன்
« Last Edit: April 09, 2017, 10:31:11 AM by thamilan »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
என்னை ஈன்றெடுத்த அன்னைக்கு
இணையான அன்னையே

உன்னை இந்த மண்ணில் விதைக்கவே
சத்ய சோதனை எனும் வேதனை
கொண்டோரோ கோடி

அனைத்தையும் அற்பமாய் கடந்தாய்
தமிழரின் உயிர் மூச்சாகி நின்றாய்

வேற்று மொழிக்கில்லை நீ
கொண்ட பெருமை
அதை எண்ணி கர்வம்
கொள்வதோ என்றும்
எங்கள் உரிமை

செந்தமிழாய் நீ
முத்தமிழாய் நீ
முடிவற்ற உலகின்
முடி சூடா ராணியாய் நீ
வேர் கொண்ட பெரும்
விருட்சமாய் நீ
உன் உயிர் கொண்ட
விழுதுகளாய் நாம்

எங்கள்  சிரமே பறிபோனாலும்
உன் சிரம் தாழ விடமாட்டோம்

தோன்றில் தமிழர் எனும்
புகழ் கொண்டு தோன்றுக
இல்லையேல் தமிழர் எனும்
புகழ் கொண்டு மடிக

                                  **விபு**
« Last Edit: April 12, 2017, 07:34:22 PM by VipurThi »

Offline MyNa

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்ப தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர் !!

பிழைப்பு தேட வந்த இடத்திலே
இரு மனங்கள் இணையவே
தலைமுறை தலைமுறையாய் நாங்கள்
இன்று வரை வேற்றுவாசியின் மண்ணில்
பிற மொழியினை பேசி பிழைக்கின்றோம் ..

இந்த வேற்றுவாசியின் மண்ணிலே
என் தாய்மொழி அழிந்திடாதிருக்க
சிசுக்களுக்கு தமிழிலே பெயர் சூட்டினர்
ஆரம்ப கல்வியினை தமிழிலேயே புகட்டினர்
கலை கலாச்சாரம் அனைத்தையும் போதித்தனர்

இங்கே இந்த மண்ணிலே ..
எனக்கு அடையாளம் தந்தது எம் மொழி
வாழ தூண்டும் வெறியை தந்தது எம் மொழி
துணிந்து போராட கற்று கொடுத்தது எம் மொழி
எல்லாமாகவும் இருப்பது எம் தமிழ்மொழி !!

இருந்தும் என்ன பயன் ??
வேற்று மொழியின் மேல் உள்ள மோகத்தினால்
தமிழ் பாலூட்டிய எம் தமிழ் அன்னையையே
மம்மி என்றழைத்து அவளை பிணமாக்கி
வேடிக்கை பார்க்கிறது இந்த சமுதாயம்..

தமிழ் அவமானம் இல்லை அடையாளம்
என்று நாம் உணரும் காலம் தூரமில்லை
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று கூறியே
தமிழனை ஊமையாக்கி அடக்கியாண்டு
வரலாற்றை கொன்று புதைத்திட்டனர் ..

இனியும் தயக்கம் வேண்டாம்
பெற்றெடுத்த அன்னையை நாமே கைவிட்டால்
அவள் வேறு யாரிடம் அடைக்கலம் நாடுவாள் ??
அவள் கரம் பிடித்து முன்னோக்கி செல்வோம்
தமிழோடு முன்னேறுவோம்
பெருமிதம் கொள்வோம் ..


தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !!
வீழ்வது நீயாகினும் எழுவது தமிழாகட்டும் ..
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு :)


~ மைனா தமிழ் பிரியை ~

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
என்னை  ஈன்றெடுத்த  தாய் ..
எனக்கு  முதலில்  கற்பித்த  வார்த்தை  அம்மா ...

இதில்  என்  தாய்  மொழி  தமிழ்  அடங்கி  உள்ளது  என்று  உணர்கையில்  நான் பெண்ணாக  எமது  நாடு  தமிழ்  நாடு  என்று  உச்சரிகையீல் நான்  பெருமை  படுகிறேன்

உறவுகள்  உறவாட
உணர்ச்சிகள்  திளைத்தோட  வித்திட்டு  விதையை  வீரமாய்
வீற்றெழுந்து ...

நயமாய்   விழுந்தோடி 
நாவினில்  ருசி  கொண்டு
மொழியால்  கருவாய்
மரபை  போற்றும்  எம்
தமிழே ....

அ  எழுதும்  போது
என்னுள்  பிரவகிக்கும்
அன்னியோன்னியம்  அன்பாய் 
செல்கிறது  எனது  தாய்
மொழி  தமிழ்   என்று ...!!

தாய்  மொழி  தமிழ்  என  சொல்ல  இந்நாட்டு  மக்கள்
வெட்க  படுகிறாரகள்
ஆங்கில   மொழியே  தன்னை  பெருமை  படுத்துகிறது  என்று  எண்ணுகிறார்கள்
அவர்களுக்கு  நான்  எப்படி  சொல்லி  புரிய  வைப்பேன்  தாய்  மொழி  தமிழ்  உன்  அன்னை  என்று


இனி  ஒரு  மொழி  இல்லை
உன்  புகழ்  பாட
காலங்கள்  காவியமாய்
மரபுகளை  போற்ற
மற்றுமொரு
ஆண்டில்  புதிதாய்
பூக்கிறாய் பழமையை  பாட
புத்தாண்டில்  தமிழனின்
புகழ்  கூறும்  இனிய   ஆண்டை

பாக்களை  புனைந்து  விடவே
ஆக்கமாய்  நீ  இருக்க
நூறு  பூக்களை  தொடுத்து
உனக்கு  நான்  அணிவிப்பேன்
யாக்கை  அழிந்து  அது
காக்கைக்கு   ஆக்கமும்
இவன்  வாக்கினிலே  வந்துருவாய்
தாயே  என்  தமிழ்  தாயே
என்று  போற்றி  செலவிடும்  எங்கள்  தமிழை

மாதா  பிதா  குரு தெய்வம்
நன்  குழந்தையாக  பள்ளியில்  பயிலும்  பொழுது  எனக்கு  சொல்லி  தந்த  ஆசிரியரின்  வாய்  மொழி  தமிழ்  மொழி  தான்

தமிழ்  மொழி  என்  மூச்சி
அதை  இழிவு  படுத்த  நினைக்கும்  நண்பர்களே
எம்  நாட்டு  மக்களிடம்  கேட்டு  தான்  பாரேன் 
எங்கள்  தமிழ்  மொழியின்  சிறப்பை ...

எம்  மொழி  தமிழ்  மொழி  எம்  நாடு  தமிழ்  நாடு  என்று  என்  மூச்சி  என்னை  விட்டு  விலகும்  வரை  தமிழ்  மொழியை  போற்றி  புகழ்ந்து  மகிழ்வேனே
« Last Edit: April 10, 2017, 05:53:58 PM by JeSiNa »

Offline DeepaLi

செம்மொழியான தமிழ் மொழியை பற்றி கூற
அகராதியில் வார்த்தைகள் தேடினேன்
கிடைக்க வில்லை..
பிறகு தான் தெரிந்தது.. காதலை போல
தமிழும் உணர்வுகளை கொண்டது என்று..

அன்னையினும் தந்தையினும் மேலான
நம் தமிழை உலக அதிசயங்களில்
ஒன்றாகவே நான் பார்க்கிறேன்..

கவிதைக்கே கவிதை சொன்னேன்
தமிழ் என்னும் கவிதைக்கு தமிழில்..

உலக உணர்வுகளையும்.. மனித உணர்வுகளையும்
இணைக்கும் தமிழ் நம் உணர்வுகளை
காதலோடு வெளிப்படுத்துகிறது..

முக்கனியின் சாறு போல
தித்திக்கும் எம் தமிழை..
எத்திக்கும் சென்று தேடினும்
நிகரான ஒன்று கூடுமோ..

ஓயாமல் அலைகள் இல்லை..
விடியாமல் இரவு இல்லை..
முடியாமல் எதுவும் இல்லை..
அது போல தமிழுக்கு அழிவே இல்லை..
நம் தமிழுக்கு அழிவே இல்லை..

அடுத்த பிறவி எனக்கு நிச்சயம் வேண்டும்..
மனிதனாய் பிறப்பதற்கு அல்ல..
தமிழனாய் பிறப்பதற்கு..

வாழ்க தமிழ்..



தீபாளி

Offline SweeTie

கவிஞனின்  கற்பனையில்
கலந்துவிட்ட  தமிழ் மகளே
கவிதைக்கு மெருகேற்றி 
காவியம்  படைத்தவளே

தமிழ் ….உன்  பேரைச் சொல்கையிலே
அண்ணத்தில்  ஒட்டுதடி நாக்கு
மயக்கத்தில் கிறங்குதடி  கண்கள்
துளி துளியாய் தேன் சொட்டுதடி  காதில்

உணர்விலே  இரண்டறக்  கலந்தவளே
மூச்சிலே  நிலையாய்  நிறைந்தவளே
என் உயிர் பிரியும்வரை பிரியேனடி
உன்னை விட்டு

காலங்கள் மாறலாம்
உன் நடை உடை மாறலாம்
உன்மேல் நான் கொண்ட காதல்
கணப்பொழுதும்  மாறாதடி

காதலுக்கு நன்றி சொல்வேன்
கன்னி நீ  என் கடைவிழியில்
விழுந்தாய்  நான் கவிஞனானேன்
என்றும் நீ என்னருகில் வேண்டுமடி   

தமிழ்...உன்னை அழைக்கும்
கணமெல்லாம்  என் இதயம் இனிக்குதடி
கன்னத்தில் முத்தமிடும் காதலியை
தினம் காணத்  துடிக்கும்  காதலன் போல் . 


தமிழ்..... நீ என்றென்றும் வாழவேண்டும்
உன்னுடன்  பகிர்ந்த  நினைவுகளும்
உறவுகளும்  ஊடல்களும்
சிரஞ்சீவியாய்  வாழவேண்டும்.   
 
« Last Edit: April 11, 2017, 08:34:19 AM by SweeTie »

Offline சக்திராகவா

தாய் பிரிந்தும் தனித்ததுண்டு
தமிழ் பிரிந்து தவித்ததில்லை
தவழும் நாள் தொடங்கி
தமிழை நா பழக்கி

எதுகையும் ஏந்திகொண்டு
மோனையில் முத்தம் தந்து
மாற்றான் மொழிபயின்றும்
மகுடத்தில் உள்ள தமிழ்

ஓலைகள் சுமந்தமொழியென
ஓரங்கட்ட பார்ப்பவரை
கற்கோபுரமும் சுமுக்குதென
கண் புருவமுயர்த்த வைத்த தமிழ்

காப்பியம் கண்டு
யாப்பையும் கொண்டு
தொடயுடை செய்யுளாள்
தொடமுடியாத உயரத்தில்

செதுக்கிய கல்லிலும்
செப்பேட்டு தகட்டிலும்
பதுக்கிய பைந்தமிழ்
பற்றற்றுப் போகாது

பேச்சுத் தமிழுக்கே
பேய் அறைந்தார் போலாவர்
மூச்சே தமிழென்பேன்
முன்வந்து நிற்க சொல்
முதுமொழி யறியாதவனை

வட்டத்தில் அடையாது
வட்டாரத்தின் தமிழ் வழக்கு
சட்டத்தில் சன்னல் வைத்து
சந்தி பேசவைத்தாலும்

கொஞ்சும் தமிழுக்கோ
கொஞ்சமா திமிரிருக்கும்
அஞ்சி பழக்கமில்லை
அஞ்சிலே கற்ற மொழி

சக்தி ராகவா