Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 148  (Read 3126 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 148
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 10:58:39 AM by MysteRy »

Offline thamilan

நாம் மனிதர்கள்
மண்ணின் மைந்தர்கள்
மனிதனுக்கோர் தனி அடையாளம் மனித நேயம்
இது மனிதரிடம் இருக்கிறதா
இல்லை என்பதே உண்மை

அவசர உலகம் இது
அடுத்தவனை முந்த
அடித்துப் பிடித்துக் கொண்டு
முட்டி மோதிக் கொண்டு
முன்னேற துடித்திடும் உலகம் இது
விழுந்தவனுக்கு கை கொடுக்கக் கூட
நேரமின்றி அவனை மிதித்துக் கொண்டு
முன்னேறும் மனித இனம் இது

இல்லாதவனிடம் இருந்து இருப்பதையும்
பிடுங்கித் தின்னும் ஒரு கூட்டம்
இருப்பவனுக்கு கால் வருடும்
இன்னொரு கூட்டம்

மனித நேயம் என்பது
மனிதனிடம் இருந்து மறைந்து போய்
பல நூற்றாண்டுகள்  விட்டன
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
குறிஞ்சி மலர்களாக ஒரு சிலர்

மனிதனின் மாண்பு
சக மனிதனிடம் காட்டும் அன்பில்
மனிதனின் அடையாளம்
மனித நேயமே

அன்னை திரேசா
மனித குலமே அன்னையாக மதித்தது
காரணம் அவரது மனித நேயமே
சக மனிதரிடம் அவர் காட்டிய அன்பே
கடவுளுக்கு நிகராக அவரை போற்றவைத்தது
 
உயிர்களின் மேல் அன்பற்றவன்
மிருகங்களுக்கும் கீழானவன்
நாயிடம் இருக்கும் அன்பு கூட
மனிதனிடம் இன்றில்லை
நாயை விட கேவலமான நிலையில்
மனிதனின்று

உலகில் விலையற்றது உயிர்
ஒன்று தான் - அது
மனிதனோ மிருகமோ
உயிர் ஒன்று தான் 
 சக உயிர்களிடம்  அன்பு வைப்போம்
மனித நேயம் காப்போம்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
ஆறறிவு மனிதனையும்
ஐந்தறிவு விலங்குகளாக்கிய
இருபத்தியோராம் நூற்றாண்டின்
விந்தையை என்ன சொல்வது

நின்று திரும்ப நேரமில்லா
இயந்திர வாழ்க்கையிலே
ஜீவகாருண்யம் பார்க்கும் நேரம்
உலக அதிசயமல்லவா

ஆனால் விதிவிலக்காய்
குழந்தைகளின் மனம்
கள்ளம் கபடம் இல்லா
கடவுளின் உருவம்

போட்டி பொறாமை
வஞ்சம் பகைமை
இல்லா குழந்தை உள்ளம்
கொண்டதுவே ஜீவகாருண்யம்

காண்பவர்களிடம் எல்லாம் இரக்கமும்
பிஞ்சு கரங்கள் செய்ய
விளையும் உதவிகளும்
பார்ப்பவர் நெஞ்சமெல்லாம்
உருக வைக்கும் உள்ளம்
கொண்ட மழலைகள்

வஞ்சனைகள் ஏதும் அறியா
துள்ளி திரியும் குழந்தைகளாய்
நாம் கடந்து வந்த
அழகிய  பருவமோ
கண்முன்னே காட்சியாக விரிய

நெஞ்சத்தே அழுக்காறு மறந்து
மாறிடுவோமே மீண்டும்
அன்பு கொண்ட
கடவுளின் குழந்தைகளாய்


"புவி கொண்ட ஜீவன்களின்
உயிர் காக்க உதவும்
நல்லுள்ளம் வேண்டுமே
அதுவே ஒரு நாள் உன்
தலை காக்குமே"

 
 **விபு**
« Last Edit: May 21, 2017, 06:54:53 PM by VipurThi »

Offline ReeNa

ஓடி ஓடி களைத்து 
ஓயாமல் சுற்றி திரிந்து 
சறுக்கி சறுக்கி விழுந்து
நம்பிக்கை நித்தமும் இழந்தேன்

எழும்ப முடியாத அந்நாளில்
சுட்டி சுட்டி பசங்க இரண்டு
எட்டி எட்டி பார்த்தே நின்று
கைகளை காட்டி காட்டி மறைந்தனர்

அசைந்து மறைந்த
வெறும் கரங்களின்
மொழி அறியேன்

பிஞ்சுகள் இரண்டும்
சொல்லி சொன்றதோ
இரு வாறேனென

வந்தனர் எனை மீட்க
கைகளில் கைப்பையுடன்
ஏங்கி ஏங்கி கண்கள் கலங்கியதே

உதவி வரும் கரங்கள் வரமே 
உத்தம மனிதன் இருப்பது உண்மையே
இரக்கம் உருக்கம் உள்ளவர் இங்கேயே 

உதவியென நின்றிடில் காணாது ஓடும்
மனிதர்கள் உலகில் இரங்கி உதவும் குணம்
குழந்தைகள் மனதின் கபடற்ற உயிர் நேயமே

பணம் இருந்தும்  திராணி இருந்தும் 
உதவும் மனம் யாருக்குண்டு
இல்லாமையிலும் இயலாமையிலும்
மனமிருந்தால் போதும் அபாயம் நீக்க   

பணம் இருந்தும்
மனமில்லாத மாந்தர் எங்கே
ஏதும் இன்றி
இருப்பதை கொடுத்து
வள்ளல் ஆகும்
மனித நேயம் எங்கே

பிஞ்சு மனம் இரண்டும் பணம் பொருள்
கொண்டா உதவியது
மனம் கொண்டு உதவினார்கள்
அவர்கள் மனித நேயம்
ஓவியமாகியதில்
மகிழ்ச்சி அடைகின்றேன்
 
« Last Edit: May 23, 2017, 05:53:27 PM by ReeNa »

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
வேற்று கிரகத்தில்
வீடு தேடும் மனிதா!
சக இனம் வாழும்
உனது கிரகத்தின்
மாண்பினை மறந்தாயே

அறிவியல் கற்ற நீ
ஆக்க அல்ல
அழிவுகளை தந்திடவே
உன் அறிவினை
மெருக்கேற்றினாய்

இயற்கை வளம் அழித்து
ரசாயன உணவு கொண்டாய்

பூமியின் புவியீற்பை
போற்றிக் காக்கும்
இயற்க்கை வளங்களை
பெருளாதரமாக்கும்
உன் போர் குணத்தால்
மனித நேயம் மறந்து

சக மனிதரின்
மாண்புகளை மறந்து
தன் இனமென்று
கூட பாராமல்
கொன்று குவிக்கும்
கொடிய நிலை
என்று மாறும்

வாயில்லா ஜீவனுக்கு
வழக்கை தேடும்
மானிடனே!
உன் அண்டை வீட்டாரின்
அன்பை பெற்றாயா

எதை தேடுகிறாய்
மனித இனமே
எத்தனை ஏற்றம் கண்டாலும்
மாசு மறுவற்ற
மனித நேயத்தை
மறக்காதே மனிடமே!

மின்சார அறைகளில்
நிமிடங்களில் சாம்பலாகி
போகின்றாய்
ஆறடி நிலம் கூட
சொந்தமில்லை
நீ போகும்போது

உனக்கு மட்டுமே
நேசிக்கும் ஆற்றல்
உனக்கு மட்டுமே
யாசிக்கும் ஆற்றலை
தந்திருக்கிறேன்
என்கிற இறைவனின்
வாக்கை
காப்பாற்றுவாயா

மனித நேயம் கற்போம்
மானிடம் வெல்வோம்

அன்புடன் சன் ரைஸ்

Offline ChuMMa

எதிர்பார்ப்பில்லாமல் வாழ
கற்று கொள்கிறேன்
ஏமாற்றம் கற்று தந்த பாடம்

நீ நலமா என கேட்கும்
நட்பு கிடைப்பது எளிது

நீ நலமில்லை எனினும்
நட்பு தொடர்வது வலிது

நன்றியுள்ள ஜீவன் யார் என்றால்
இன்றும் சொல்கிறோம் "நாய் என்று
நாம் நன்றியில் நாயை இன்னும்
மிஞ்சவில்லை போலும் ...

ஐந்தறிவு ஆறறிவு பெற்ற
நம்மை விட உயர்ந்தே இருக்கிறது
உதவுவதில்

தாகம் போக்க உன் வீட்டு முற்றத்தில்
ஒரு குவளை தண்ணீர் -அது போதும்
ஐந்தறிவிற்கு நீ செய்யும் நன்றி கடன்!

அழும்போது ஆறுதல் சொல்லும்
ஓரிரு வார்த்தை போதும்
நீ மனிதனாக

வீழ்ந்தவனுக்கு உன் ஒரு கரம் கொடு போதும்
நீ தெய்வமாக

துவண்டு விழும்போது
தாங்கிகொள்ளும் உன் ஒரு கரம்
போதும் விண்ணையும் கடக்க

தோழா ,
வாழ்க்கை என்பது சாகும் வரை வாழ்வதல்ல
மற்றவர் மனதில் நாம் வாழும் காலம் வரையே

வாழ்வதற்கு உயிர் மட்டும் தேவை இல்லை
பிறருக்கு உயிராய் இருந்தும்  உதவு ...


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
« Last Edit: May 22, 2017, 03:11:04 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline Jabber


தண்ணீரில் தத்தளிக்கும் குரைமுகன்..
கண்ணீரில் மீட்டெடுக்கும் இறைமகன் !!

அடித்து சென்ற இனமோ நீ கூரன்..
பிடித்து வென்ற மனமோ நீ வீரன் !!

 கரம் பற்றி நீ மீட்டது ஓர் சகுடம்..
 சிரம் பற்றி இட்டாலும் ஈடாகுமா மகுடம் !!

பயமின்றி பாதுகாப்போர் பைரவர்..
வயதின்றி காத்தோர் உனை வைரவர் !!

நன்றிக்கோர் சான்றாய் நீ நாயே...
பாலகனாய் வென்றோர் நீரும் தாயே..!! 







Offline MyNa

விசித்திரமான உலகமடா
இது மானிடா !!
பசிக்கும் குழந்தைக்கு பாலூட்டிட
தாய்க்கு நேரமில்லை..
தவிக்கும் வாய்க்கு நீர் கொடுத்திட
யாருக்கும் மனமில்லை ..
துடிக்கும் உயிருக்கு கரம் நீட்டிட
எவருக்கும் தயவில்லை ..

ஆனால்

புறம் பேசுவதும்
பிறர் வாழ்வை கெடுப்பதும்
பொய்யாக நடிப்பதும்
வீண் புகழ்ச்சி தேடுவதும்
அன்றாட வாழ்க்கையாகி விட்டது..

தேவைதானா இந்த
தற்பெருமை
நாடகம்
வஞ்சகம் ??


மனிதன் மனிதனாக இல்லாமல்
எதையோ தேடி ஓடுகின்றான் முடிவின்றி
தான் மனிதன் என்பதை மறந்து ..

ஒரு நொடி நின்று
யோசித்துப்பார் மானிடா !!
நீ மனிதனாய் பிறருக்கு செய்ய
கடமைகள் கோடி உண்டு ..
நீயும் உயர்ந்து  பிறருக்கும்
தோள்கொடுத்து உயர்த்திடு ..
இல்லையேல் உனக்கும் ஐந்தறிவு 
ஜீவராசிகளுக்கும் வித்தியாசம் தான் ஏது ??

பாவம் வஞ்சம் அறிந்திடா குஞ்சுகள் பார் ..
கையில் பலம் இல்லை அறிவிலும் முதிர்வில்லை
தங்கள் ஆபத்தும் உணரவில்லை ..
உதவும் உள்ளம் ஒன்றே கொண்டு நாய்க்கும் இரங்கி
நானிநலம் போற்றிட நம்நடுவே உயர்ந்துவிட்டனர் ..

வாழும்போது உன்னை பற்றி
பிறர் பெருமையாய் பேசாவிடினும்
இறந்த பின் உன்னை இகழ்ந்து
பேசுவார் இல்லையேல் அதுவே சிறந்தது ..

பொய்யாய் சுயநலமாய்
வாழ்ந்து மடிவதைவிட
உண்மையாய் நேர்மையாய்
வாழ்ந்து மாண்டிடு மானிடா !!


~ மைனா தமிழ் பிரியை ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
கூடவந்த குழந்தை இரண்டு


பொய்த்தது மழை
வறட்டியது வெய்யில்
எடுத்தது தாகம்
கொதித்தது மேனி

சுற்றி எங்கும் 
வானின் உதவி நாடி
வறண்ட நிலங்கள் புற்கள்
வாதைப்படும் கோலம்

மழையெனும் விதை நிறைந்த
குளக்கட்டில் முட்டி மோதிய
நீரெல்லாம் மாயம்

நன்றிகெடா பண்பென்
இனப்பெருமை
கூடவந்த குழந்தை இரண்டு
தாகத்தால் தவிக்கையில்

வற்றிய குளத்தடியில்
தண்ணீர் கண்டேன்
குழந்தைகள் இறங்குவது
இயலாத முதலைக் குளம்

கட்டுயர தாழ்ந்த குளம்
இறங்கி வாயிலே
நீர்மெண்டு நிமிர்கையிலே
தவறிவிட்டேன் எனக் கருதி
இறங்க இயலா குழந்தையர்
இரங்கி விட்டார் எனக்குதவ 


வறண்டும் வாழும் புல்லை
வறுகிப்பிடித்து மறுகரத்தால்
பையின் பட்டியில் தொங்க
மறுகுழந்தை பட்டி மறுமுனை
பற்றி கரம் கொடுத்தார் எனை மீட்க

என்னால் தாவ முடியும்
நான் மிருகம்
மனிதனாக முதிர்ந்தபின்
மனதிலே வஞ்சம்
குழந்தயாக வாழ்கையில்
தெய்வகுணமுனக்கு


வளந்தோரெல்லாம்
எங்கே தெலைத்தனர்
அன்பு நன்றி பரிவு இரக்கம்
கொண்டு உதவும்குணம்

மனிதனுக்கு மிருகமும் உதவும்
மிருகத்துக்கும் மனிதன் உதவி
உலகம் உய்ய சமநிலையை 
பேணவேண்டும் மானிடனே

ஒருவருக்கு ஒருவர் உதவிடா வாழ்க்கை
ஒருபோதும் உதவாத வாழ்க்கையென
உணர்ந்து விட்டால் விடிந்துவிடும் உலகு


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
« Last Edit: May 24, 2017, 09:32:30 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....