Author Topic: கிச்சன் கேள்விகள்... நிபுணர் பதில்கள்! அரிக்காத கருணைக்கிழங்கு...  (Read 264 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218361
  • Total likes: 23059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கிச்சன் கேள்விகள்... நிபுணர் பதில்கள்! அரிக்காத கருணைக்கிழங்கு... கசக்காத பாகற்காய்!!



வீட்டிலேயே பனீர் செய்யும்போது, பாலைத் திரியவைக்க எலுமிச்சைச் சாற்றுக்குப் பதில் வேறு என்ன பயன்படுத்தலாம்?

தண்ணீரில் கரைத்த படிகாரம் (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்தலாம். வினிகர் ஊற்றியும் பாலைத் திரியவைத்து பனீர் தயாரிக்கலாம். வீட்டிலே செய்வதால் குறைந்த செலவில் அதிகம் பனீர் தயார் பண்ணலாம்.

பித்தம், தலைச்சுற்றல், முடக்குவாதத்தை சரிசெய்யும் முடக்கத்தான் கீரையில் தோசை தவிர வேறு என்ன பண்ணலாம்?

முடக்கத்தான் கீரையில் துவையல், ரசம், சூப், வடை, அடை, குழிப்பணியாரம் செய்து அசத்தலாம்.

குருமாவுக்கு மசாலா அரைக்கும்போது கசகசா மட்டும் சரியாக அரைப்படமாட்டேங்குதே... இதற்கு என்ன செய்யலாம்?

எப்போதும் கசகசாவை அரைப்பதாக இருந்தால் சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து அரைத்த பிறகு மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

கழுவினாலும்கூட, சமையல் செய்யும்போது மஷ்ரூம் கறுப்பாகிவிடுகிறதே? இதற்குத் தீர்வு என்ன?

ஒரு ஸ்பூன் மைதாவை இரண்டு டம்ளர் நீரில் கரைத்து, மஷ்ரூமை அதில் அலசி உபயோகப்படுத்தினால் நிறம் மாறாது.

சட்னி அரைக்கும்போது சில நேரம் தவறுதலாக நீர் அதிகமாகி தளர்ந்துவிடுகிறதே... எப்படி சரிசெய்வது?

சுத்தமான மெல்லிய துணியில் அல்லது பிளாஸ்டிக் வடிகட்டியில் போட்டு, அதிகப்படியான தண்ணீர் வடிந்ததும் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

காலிஃப்ளவர் சமைக்கும்போது சுடுநீரில் அதைப் பிரித்துப் போட்டு கழுவினாலும் புழு ஒட்டிக்கொண்டு விடுகிறது. அந்தப் பூவை வெட்டி வீசவே வேண்டியிருக்கிறது. காலிஃப்ளவர் வீணாகாமல் சமைப்பது எப்படி?

இளஞ்சூடான நீரில் சிறிது வினிகர் ஊற்றி காலிஃப்ளவரை அதில் போட்டு வைத்த பிறகு கழுவ வேண்டும். அல்லது வினிகருக்குப் பதில் கல் உப்பும் பயன்படுத்தலாம் இப்படிச் செய்தால் புழுக்கள் வெளியே வந்துவிடும்.

கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், பாகற்காயை கசப்பு இல்லாமல் சமைக்கவும் என்ன வழி?

அரிசி கழுவிய தண்ணீரில் கருணைக்கிழங்கை நறுக்கிப்போட்டு எடுத்து, புளி நீரில் வேகவிட்டு சமைத்தால் நாக்கு அரிப்பு ஏற்படாது.

பாகற்காயை நறுக்கி புளித்தண்ணீரில் போட்டு எடுத்து, பிறகு சிறிது தயிர் விட்டு வேகவிட்டு துளி வெல்லம் சேர்த்து சமைத்தால் கசக்காது.

வாயுத்தொக்கை தராத பஜ்ஜி செய்வது எப்படி?

பஜ்ஜி மாவில் சோடா உப்பு சேர்க்காமல், இஞ்சி - பூண்டு விழுது, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து தயார் செய்யலாம். வாழைக்காய், உருளைக்கிழங்குக்குப் பதில் பிரெட், கத்திரிக்காய், காலிஃப்ளவர், வெங்காயம், பெரிய பஜ்ஜி மிளகாய் பயன்படுத்தலாம்.

துவரம்பருப்பை குழைவாக வேக சுலபமான வழி இருக்கிறதா?

துவரம்பருப்புடன் அதிக நீர் விட்டு வேகவைத்தால் வேக நீண்ட நேரம் ஆகும்; குறைவாக நீர் விட்டாலும் சரியாக வேகாது. துவரம்பருப்பை வேகவைக்கும்போது அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சிறிதளவுவிட்டு வேகவைத்தாலும்... தேங்காய்த் துண்டை நறுக்கிப் போட்டு வேகவைத்தாலும் வெண்ணெய் மாதிரி குழைந்து வரும்.