Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 164  (Read 2893 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 164
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Ftc Team சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 11:11:13 AM by MysteRy »

Offline KaBaLi

சூரியன் உதித்த  நேரம்
சட்டைய்பையில் மடலோடும்
கரங்களில் மலரோடும்
நெஞ்சுகுளியில் சிறு பயத்தோடும்
என் காதலை ஏற்பாயா என ஏக்கத்தோடு
மலரை பரிமாறிக்கொள்ளும் இரு இதயம்...!!

சொல்ல முடியாத
துயரத்திலும்
தூக்கம் இல்லாத
இரவுகள்
என்னில் எத்தனையோ...
அதை நீ அறிய வாய்ப்பில்லை
உன்னிடம் சொல்லமுடியாத
எத்தனையோ வலிகள்
உனக்குள்  ஒரு பக்கம் இருந்தாலும்

என் காதலை ஏற்க மனம் வந்த
என்னவளின் உண்மை  அழகு தான் !!

மனித மிருகங்களின்
ஜாதி வெறியில் பிடிபட்டு
கிடக்கும் சில காதல்
காமத்தின் பிடியில் சில காதல்
அழிவில் மிதக்கும் சமுதாயம்
சமுதாயத்தின்  வேற்றுமை
மக்களின் ஏமாற்றம்

இவை அனைத்திலும் சிக்கிக்கொண்ட
பெண் ஆணின் காதலை
ஏற்க மறுக்கும் என்னவளின்
இதயம் அழகு தான் !!

நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருந்தால்,
அவர் நீங்கள் விரும்பும் விதமாக மட்டுமே இருக்க வேண்டும்
நீங்கள் விரும்பும் வகையில் மட்டுமே
நடந்து கொள்ளவேண்டும்
என்ற எதிர்பார்ப்பை வெறுக்கும்
என்னவளின்  காதல் அழகு தான்..!!!

தனெக்கென்ன ஒரு தற்காப்பு , தனக்கென்ன ஒரு வாழ்கை
தனக்கென்ன ஒரு முடிவு என வாழும்
என்னவளின்  தனித்துவ வாழ்க்கை அழகோ அழகு தான்

சுதந்திரமான இந்த உலகில் சுதந்திரமற்ற
பறவைகள் பெண்கள் தான்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்...
அதிலும்
ஆண் பறவைகளை விட பெண்
பறவைகளே அதிகம்...!
மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு...
மனமில்லாமல் போவது ஒருவனோடு....

உன் காதலை ஏற்றுக்கொண்டால்
நான் இறந்துவிடுவேன்
நீ உன் குடும்பத்தை இழந்து விடுவாய்
என கூறிய அம்மாவின் வார்த்தை நினைவில்
மனதை கல்லாய் மாற்றிக்கொண்டு
என்ன செய்வது என தெரியாமல்
பரிதவித்து நிக்கும் பெண்ணின் இதயம் !!!

உன் மனம் கல்லாக
இருந்தாலும் கவலையில்லை

அதில் கொஞ்சம் இடம் கொடு

என் அன்பை செதுக்கி
வைத்துவிட்டு செல்கிறேன் - சொல்லும் மறு இதயம்


இவன் நம்மை ஏமாற்றித்தான் போவான்  -என தெரிந்தும்
ஆணின் சந்தோசம் தான் முக்கியம் என
மலரை வாங்க துடிக்கும் ஒரு இதயம் !!
 
ஐயோ , எப்போ டி எண் காதலை ஏத்துக்குவா
என துடிக்கும்  மறு இதயம் - இரண்டுமே அழகு தான்

எப்போது ஜாதி மறையுதோ
அப்போது தான்  காதல் மலரும்

மனம் உண்டால் மார்க்கம் உண்டு
« Last Edit: November 22, 2017, 03:32:37 AM by KaBaLi »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
மலரும் மொட்டைப்போல
மழலைக் காதல் கொண்டேன்.
மலர்களை ஏந்தி வந்து
மதி நிழலினில் நானும் நின்றேன்.

மனதினில் தயக்கமின்றி
மறை வார்த்தை   சொல்ல வந்தேன்.
மதி முகத்தாள் உன் முன்னால்
மதி கெட்டான் என  ஆனேன்.

ஆணவன் உன் முன்னால்
 ஆயிரம் நம்பிக்கை காத்திருக்க
உன்னை நம்பிக் கைபிடிக்க 
என்  சிந்தையில்  தடுமாற்றம்

மனதோடு மனம் சேர்ந்து
 மதிக்கோர் இடமின்றி
எம்மை நாளை மதிப்போர்
உன்னையும் என்னையும்
இணைப்போர்.

இளையவளே ! உனக்காக என் மனதில்
இடமொன்றை விதைத்திருக்க
இனியொரு இடத்தை நாட  நான் மறுப்பேன்
இனிதொரு நாளை எண்ணி உனக்காக காத்திருப்பேன்.

இளையவனே ! உனக்காக வாழ்ந்திருக்கும்
இல்லத்தார்க்கு கடமையாற்று.........
வாழ்வில் உதவி இல்லோர்க்கு நண்பனாயிரு.......... 

நாளை உனக்குள் முளைத்த 
மொட்டு மலர்ந்தால்
என் காதலாகிடு
அதுவரை சற்று காத்திரு.............
« Last Edit: November 19, 2017, 03:52:28 PM by AnoTH »

Offline JeGaTisH

உன் முன்னால்  முதல் தடைவை நிற்கிறேனடி 
என் நிழலோ என்னையும் முந்தி நிற்கிறதடி
என்னுள் தோன்றிய உணர்வு உனக்கு  புரிந்துமா 
என்னை  அழ விட்டு வேடிக்க்கை  பார்க்கிறாய். 

உதிக்கும் சூரியனுக்கு முன்னே  என் காதல்
உன்மேல் உதிக்க கண்டு மகிழ்ந்தவன் நான்
இன்று  அதில் கண்ணீரும் உண்டென  தெரிய வைத்தாய்
உன்னை பார்தவேளை   அதை உணர்ந்தேனடி

என் கால்கள் நடனமிட  தலைகுனிந்து நான் காத்திருக்க
தாமரை இதழ் போன்ற இரு பாதங்கள் என் கண்ணெதிரில்
மெல்ல மெல்ல தலை உயர்த்திய நேரம்  என்
மௌனமான நொடிகள் மலர்ந்து போயின

உன் முகம் பார்க்க என் அகம் தொலைத்தேன்
கையில் ஏந்தி வந்த மலர்கள்  உன்  கை பட ஏங்கியது
என் மனதில் உள்ள  காதலை எவ்வாறு சொல்வேனோ
சொல்லிய காதலை அவ்வாறே ஏற்றுகொள்வாளோ என்ற தயக்கம்

கடவுள் மேல் பரத்தை போட்டு காதலை சொல்ல துணிந்தேன்
உன் கண்களை  பார்த்தேன் வார்த்தைகள் வற்றிப்போயின 
சொல்ல வார்த்தைகள் தேடி சோர்வுணர்வு அற்று இருதேன்
நீ கண் சிமிட்டிய நொடியில் உணர்தேன் என்னை

என்னுள்  உதித்த காதலை  உன்னிடம் சொன்னேன்
உன்  ஒரு பாதமோ என் காதலை ஏற்றுகொள்ள
மறு பாதமோ  காதலை ஏற்காதே என்று
உன்  மனதை  வருந்துவதை  நானறிந்தேன்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்
இவன் அன்பு இப்போது போல் எபோதும் நிலைக்குமா என
என் அன்பை எடைபோடுவதை   உன்  வட்டக்கருவிழிகள்
சொல்லாமல்  சொல்லிற்று .
 
காதலை சொல்லியும் ஏற்றுகொள்ள ஒரு மனம் இருந்தும்
காதலைச்  சொன்னவனை  காயபடுத்த நினைக்காத மனதை
உன் மௌன மொழிகள் பேசிடவே  தலை  குனிந்தாய்
உன் பதிலுக்காக காத்திருப்பேன் என்று  கூறாமல்
உனக்காக காத்திருப்பேன் என்று கண்ணீருடன்  விடை பெற்றேன்...
 
                                                    நன்றி ஜெகதீஷ்

« Last Edit: November 20, 2017, 12:44:09 AM by JeGaTisH »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
பள்ளி செல்லும் பருவத்திலே
தோள் சேர்த்தவன் என்
பல வண்ண பேனைகளாலே
முதல் பெயர் ஆனவன்

இடைவிடாது பேசும் என்னை
கண்ணில் முறைப்பவன் ஆனால்
இமைகள் கூட இமைக்க மறந்து
மனதில் இரசிப்பவன்

மலர் கொத்தை கையில் நீட்டி
மனதை பறித்தவன்
என் குணம் அறியும் இவனோ
என் மழலை காதலன்

எண்ணுகையில் நெஞ்சிலோரம்
சிலிர்ப்பை தந்தவன்
அன்று கண்விழிக்கும் முன்னே
என் கனவாய் போனவன்

இன்று சிந்தனையில் புன்சிரிப்பை
பரிசாய் தந்தவன்
என் கனவுதனை நிஜமாக்க
வருவானா அவன்??? ???

                       **விபு**

Offline thamilan

காதல் கந்தக நதியல்ல - அது
ஜீவ நதி
இந்த நதிக்கரை நாகரிகத்தின்
அகரம் ஆதாம்
சிகரம் ஏவாள்

இளமை முதுமை என்பது
இல்லாதது காதல் - அது
எங்கு வரும் எப்படி வரும் எப்போது  வரும்
இறைவனுக்கே தெரியாது

சிறு வயதில் அம்மா மேல்
அளவற்ற காதல்
பள்ளிப்பருவத்திலே பக்கத்து பெஞ்ச்
பஞ்சவர்ணத்தின் மேல் காதல்
பாடசாலையில்  பாடம் எடுத்த
பரிமளா டீச்சர் மேல் காதல்
பருவம் வந்ததும்
பக்கத்து வீட்டு பைங்கிளி
மேல் காதல்

இப்படி பருவம் தான்
மாறியதே தவிர
காதல் மாறவே இல்லை

ஒவ்வொரு காதலிலும்
ஒவ்வொரு வித பரிமாணம்
காதல் என்றால் என்னவென்று
அறியாத ஒரு பருவம்
காதல் ஒருஉணர்வு என்று
புரிந்தும் புரியாத இன்னொரு பருவம்
காதல் தான் உலகம் என்று
உணவை வெறுத்து உறக்கத்தை வெறுத்து
சுற்றித்திரியும் இளமைப்பருவம்

உலகம் அழியலாம்
உயிர்கள் அழியலாம்
காலத்தால் அழியாதது காதல்
காலன் வந்து அழைத்தாலும்
கலங்காதது காதல்

« Last Edit: November 21, 2017, 05:46:07 PM by thamilan »

Offline SweeTie

பௌர்ணமி இரவு 
ஊடுருவும்  சில்லென்ற காற்று
காதல் விடும் வெப்ப மூச்சுக்களை 
தணிக்கை செய்துகொண்டிருந்தது
இமைக்க மறந்த  இரு சோடிவிழிகள்
விழுங்கிய  உணர்வுகளை
ஏப்பம்  விட்டன இதயங்கள்.

சிறு பிராயத்தில்
பள்ளியில் இருவரும் ஒன்றாய் படித்த நாட்கள்
அடிக்கடி மலர்கள் கொடுத்த ஞாபகங்கள்
என் ஜடையில்  வைத்து அழகு பார்த்த நினைவுகள்
என்னை சீண்டி வம்புக்கிழுத்த  நேரங்கள்
என்னிடம் திட்டு வாங்கிய தருணங்கள்
இன்று அடிக்கடி வந்துபோகும் காட்சிகள்

காலத்தின் வேகத்தில் வளர்ந்தோம்
பருவம் எங்களை ரசிக்கலாயிற்று
கட்டிளம் காளை  அவன்  அரும்பு மீசையில்
சொக்கி போகும் பருவ மங்கை நான்
அவன் விழிகளை  எதிர் நோக்க சக்தியில்லை
ஒரப் பார்வையில் என் இதயம் தொங்கலாயிற்ற
நாண த்தின்  கட்டுப்பாட்டில் நானோ கைதியானேன்

காதல் இதுதானா ??
கேள்விக் கணைகள் என் நெஞ்சை கூறுபோட்டன
காதலா சொல்லிவிடடா காதலை
கணங்கள் யுகமாவதை புரிந்தேன்
விளக்கில் விழுந்த    விட்டில்  பூச்சியானேன்
காதலை சொல்வதற்கு காலம் எதற்கு
இதயம் கொடுத்த துணிவில்
என்னை அவன் முன் நிறுத்தினேன் 

நான்கு  கண்கள் சந்தித்த வேளையில்......
அள்ளிக் கொட்டியதோ  லட்ச வார்த்தைகள்
ஏற்றுகொள்ளடி சகியே அவன் முந்திக்கொண்டான்
காதலில் விழுந்தோம்
இறுகத்  தழுவிய இனிய இரவு 
எங்களை  ஆட்கொண்டது.   


 
 
« Last Edit: November 22, 2017, 07:08:56 AM by SweeTie »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அழகான காலை
மேகம் மூடிய வானம்
முகம் காட்ட துடிக்கும் சூரியன்
தீடீரென இடி இடித்தது
அட எப்படி ?

விடை தந்தது அம்மாவின் குரல்,
காலையில் கனவு கண்டு படுக்காம
கல்லூரிக்கு கிளம்பு என்று

உன்னை காண போகிறேன்
என்று தெரியாமல் சென்றேன்
கல்லூரிக்கு
உன்னை நான் கண்ட முதல் நாள்

அழகான இசை எதுவென்றால்
உன் கால் கொலுசின் ஒலி என்பேன்

உன் கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
என் உயிரும் சிறை கொள்ளுதடி

காதல் ஒரு மாயை
வந்த நேரம் தெரிவதில்லை-அது
சொல்லிக்கொண்டும் வருவதில்லை

காதலுக்கு மூன்றெழுத்து
அவளால்வந்த கவிதைக்கும்
மூன்றெழுத்து

பூ போல உன்னை தாங்குவேன் என
உணர்த்த காதலுடன் பூச்செண்டு கொண்டு
காத்திருக்கிறேன்
பூச்செடியில்  முள்ளும் உண்டு என
உணர்த்தி போவாளோ !?

உணர்வுகள்தான்
வாழ்வின் ஆதாரம் என்றால்
உன் மேல் நான் கொண்ட
காதல் உணர்வு தான்
என் வாழ்வின் ஆதாரம்

ஆணின் அன்பில்
மென்மை இல்லாமல்
இருக்காலம் ஆனால்
உண்மை இருக்கும்

பெண்ணின் அன்பில்
மெய்யும் இருக்கும்
தாய்மையும் இருக்கும்

காத்திருக்கிறேன், விடை சொல்
என்னை தாலாட்ட வருவாயோ!?
உன் காதல் சொல்ல வருவாயோ !?


****ஜோக்கர் *****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "