Author Topic: வாழைக்காய் மசாலா  (Read 728 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
வாழைக்காய் மசாலா
« on: January 11, 2019, 01:38:49 PM »
வாழைக்காய் மசாலா

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1,
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
தனியா - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
பூண்டு - 3 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி, வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய வாழைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக விடவும்.
வாழைக்காய் வெந்து தண்ணீர் வற்றியவுடன், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 நிமிடம் கிளறி இறக்கவும்


உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால