FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: gab on October 28, 2012, 10:33:42 PM

Title: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:33:42 PM
பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி


பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக


மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வதுமட்டும்
என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..................
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:34:19 PM
பாடல்: அத்தை மகள் ரத்தினத்தை
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி


அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்பு சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார் ...........அத்தை மகள் ............

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தை கலைத்து விட்டேன்
கோலத்தை கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே .
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே ...........அத்தை மகள் ............
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:35:14 PM
பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி



ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும் (2)
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே (2)


ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று )

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
(ஒன்று )
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:35:41 PM
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரைபக்கத்திலேகாத்திருக்கேன்வாடி
தோ..தோ...தோ...தோ..தோ..தோ..தோ..

ஈஸ்வரி: வாடியம்மா வாடிவண்டாட்டம் வாடி
ஆத்தங்கரைப் பக்கத்திலேகாத்திருக்கேன் வாடி
சுசீலா: சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
ஈஸ்வரி: பலிங்க் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தைப் பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டுப் பக்கம் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு சடுகுடு சடுகுடு


காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


வாடியம்மா வாடிவண்டாட்டம் வாடி
ஆத்தங்கரைப் பக்கத்திலேகாத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு


மாமா மகளே வந்தியா சரியா
மாப்பிள்ளை இருக்கான் பார்க்கலாம் வாரியா
சுசீலா: தோ..தோ...தோ...தோ..தோ..தோ..தோ..
அத்தை மகள் வந்தியாஅகபட்டுக் கிட்டியா
அத்தானைப் பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடுதோ
தோ தோ......தோ...தோ..தோ..தோ..தோ..தோ தோ தோ......தோ...தோ..தோ..தோ..தோ..


கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியண்ணு குறு நகை புரியுது
கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியண்ணு குறு நகை புரியுது
குறு நகை புரியுது .. குறு நகை புரியுது
புரியுது..புரியுது ..புரியுது ... புரியுது ..புரியுது
சுசீலா: தோ..தோ...தோ...தோ..தோ..தோ..தோ..

உடலிலே கண்டாங்கி மினுக்குது குலுங்குது
ஓடி வந்த குதிரை இளைக்குதுகளைக்குது
ஹோ..ஹோ..ஹோ...ஹோ..ஹோ...
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியண்ணு பதுங்குது ஒதுங்குது
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்டபுலியின்னு பதுங்குதுஒதுங்குது
தோ..தோ..தோ..தோ...தோ..தோ..தோ..தோ..


புலி கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:36:06 PM
பாடல்: உன்னை நம்பினார் கெடுவதில்லை
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே


உள்ளத்தில் விளக்கெடுத்து உறவென்னும் நெய்யெடுத்து
அன்பென்னும் கோவிலிலே அழகாய் ஏற்றி வைத்து ..
அழகாய் ஏற்றி வைத்து ..
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே


கனியை மரம் அறியும்காதலை மனமறியும்
கனியை மரம் அறியும்காதலை மனமறியும்
கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலை தெரியும்
ஆண்டவனுக்கொரு மனதுஆண்களுக்கிரு மனது
தோன்றிய நாள் முதலாய் துடிப்பது பெண் மனது


நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே


பாதி வரை கை கொடுப்பான்பாதையில் சிறகொடிப்பான்
பாதி வரை கை கொடுப்பான்பாதையில் சிறகொடிப்பான்
தேனாக இனிப்பவனே தீயாக உருவெடுப்பான்
கண்ணீரில் ஆட வைத்த காதலை வேண்டுகிறேன்
இன்னும் ஒரு பெண் மனதை
எண்ண வைத்து ஏய்க்காதே


நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:36:35 PM
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில் கொண்டு வந்து போடும்


பறக்கும்
பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது


இது தான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு


பறக்கும்
பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது


முதல் நாள் இரவில் தனியே
என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி
என்று இழுத்தோடி வரும் கண்கள்
அருகில் மிக அருகில்
கண்டு அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும்
இன்று அலை பாய்ந்து வரும் உள்ளம்


பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:36:57 PM
ஹோய்.. ஹோ ஹோ ஹோய்...
இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா...
இப்படி என்று சொல்லியிருந்தால்தனியே வருவேனா...


சொல்லில் அடங்காத எழுத்தில் அடங்காத
சுகத்தை அறிந்தாயோதூக்கம் வளராமல்
பாக்கி தெரியாமல்ஏக்கம் அடைந்தாயோ
அதுவரை வந்தால் போதும் போதும்
அடுத்தது என்னம்மா..

ஆரத்தி மேளம் மணவறைக் கோலம்வருமா சொல்லம்மா..
கைதானா இது நெருப்பா
கனிந்து விட்டாளென்று நினைப்பாஅனுபவமில்லாத
மனதுகொஞ்சம் அமைதி அமைதி அமைதி


நில்லாதே அந்த நிலவு..
வெறும் நினைவில் வருமோ உறவு
சில்லென்ற மனதின் துடிப்பு
கொஞ்சம் அருகே அருகே அருகே
அம்மம்மா இது கொடுமை
நான் அறியாதிருந்த புதுமை
பேசமுடியாத பெருமை
இந்த இனிமை இனிமை இனிமை


எங்கெங்கோ நான் பறந்தேன்
ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
கண்களை மீண்டும் திறந்தேன்
சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
(இதுவரை)
Title: Re: Panakkaara Kudumbam (பணக்கார குடும்பம்)
Post by: gab on October 28, 2012, 10:39:05 PM
பாடல்: அத்தை மகள் ரத்தினத்தை
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி


அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

ஓஹோ ஓஹோ ஓஹோ ஒஹோ ஹோஹோஹோஹோஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஒஹோ அ ஆஆஆஆஆஆஆஆஆ

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா?
முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்ணழகை விடுவாரா? பெண்ணழகை விடுவாரா?
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா?
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா?

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா?
கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா? கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா?
வேளைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் வருவேனா?

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோஹோஹோஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஒஹோ அ ஆஆஆஆஆஆஆஆஆ

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?