FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: gab on October 28, 2012, 11:51:58 PM

Title: Aanandhi (ஆனந்தி)
Post by: gab on October 28, 2012, 11:51:58 PM
பாடல்: கண்ணிலே அன்பிருந்தால்
திரைப்படம்: ஆனந்தி
 பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1965

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணாடி கேட்பதென்ன?

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்