FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MoGiNi on April 07, 2021, 01:18:12 AM

Title: தேடல்
Post by: MoGiNi on April 07, 2021, 01:18:12 AM
இந்த இரவு ...
ஏன்
இதனை நீட்சி உள்ளதாய்...

யார் யாரோ இருந்தும்
யாருமற்றவாளாய்
ஏதோதோ இருந்தும்
ஏதிலியாய்
வாழ்விருந்தும்
வசந்தம் தொலைத்தவளாய் ...

வண்ணங்கள் குழைத்து
அப்பிய விம்பங்கள்
ஏதும் செப்பிட முடியாமால்
தத்து பித்தென
எண்ணச் சிதைவுகளாய் ..

திடீரென விழிக்கும்
பொழுதுகளில்  எல்லாம்
நிரம்பி வழியும்
உன் நினைவுகளை
யாசகம் கேட்கிறேன்
எதற்கு இந்த வன்மம்
தொலைந்தது தொலைவாக கூடாதா ?

உன்னிடம் தொலைத்த
என் உணர்வுகள்
என்னிடம் திரும்புவதாய்  இல்லை
எத்துணை எத்தனிப்புகள்
எத்தனை யாசகங்கள்
என்னிடமே எனக்கு,
எதுவும்
எனக்கு உதவுவதாய் இல்லை ..

என் இரவுகளை
நீட்ச்சி கொள்ளவைக்கிறாய்
யுகம் யுகமாக
உன்னருகில்
துயிலாது புரள்கிறது மனது ..

சபிக்கப்பட்ட வாழ்வின்
சாரல்கள் கூட
சலனமுள்ளவை தான்
நீ எங்கிருக்கிறாய்
எதுவாக இருக்கிறாய்
யாரோடு இருக்கிறாய்
எதுவும் தேவையற்றதாகி இருக்கிறது ..

ஒற்றையாய் உருகி வழியும்
நிலவின் நிலைகூட
மனதுள்
நிர்மலத்தை கொடுப்பதாயில்லை ..

எத்தனை இரவுகளை
என்னுடன்
ஏகாந்தமாய் ஸ்ருஷ்டித்திருப்பாய் ..
அந்தகாரமான
பொழுதுகள் அனைத்திலும்
ஆழமாய் அருகில் இருந்து
அணைக்கத் தவறுவதில்லை
உன் நினைவுக் கரங்கள்

ஊடல் விதைத்த
கூடல் நினைவுகள் எல்லாம்
தேடல் இன்றியே தவிக்கிறது
காதல் சுமந்து
கனந்து வழியும்
கண்கள் பகிர்கிறது
ஓர் இன்மையின் தேடலின்
உயிர் வலி ....

என் தேடல் ஒன்றுதான்
என்றாவது ஒருநாள்
உன் தோள்சாய்ந்து
இருதயத் துடிப்போடு
கலந்து கரைத்துவிட ..
அன்றோடு ஆயுள் கரைந்தாலும்
ஆனந்தமே ..

அதுவரை ...
Title: Re: தேடல்
Post by: Maran on April 26, 2021, 01:28:28 PM





மிக அழகான கவிதை தோழி மோகினி. பாராட்டுகள்...  :)