FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 10, 2018, 11:42:28 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: Forum on March 10, 2018, 11:42:28 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 177
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/177.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: JeGaTisH on March 11, 2018, 01:22:31 AM
குடி நீர் இன்றி குடிமக்கள்
குடம் தூக்கி நெடும் தூரம் நடையாக.

நெடும் தூரம் நடக்கிறோம் நீர் தேடி
கால்களில் இல்லை வலி
மனதிற்கு தெரிகிறது தாகத்தின் வறட்சி

நீர் இன்றி அமையாது உலகு ஆனால்
அருந்த சொட்டு நீர் இல்லாமல் மக்கள்.

மரம் இழந்தான் வெயிலை பெற்றான்
மழையோடு நீரையும் இழந்துவிட்டான்.

குளத்தில் விளையாடி குதுகுலமா இருந்த நாள்போய்
குழி குழியாக தோன்றினாலும் நீர் இல்லாமல் போனது.

மண்ணை போல தண்ணீருக்கும் கோடு போடுகிறாய்
ஆனால் அது உன் வறுமை கொடு என தெரியாமல்.

தண்ணிருக்கு விலையிட்டு தலை எழுத்தை மாற்றினாய்
தண்ணீர் இன்றி இறக்கும் சடலங்களை எண்ணவா !

நிலவில் சென்று நீர் தேடும் மனிதா
நீ நிலத்தில் நீரை சேமித்தல்
நிலைவையே நீரில் காணலாம்

மரம் வளர்த்து மழை பெரு
நீர் சேமித்து நீ வாழ்.




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: KaBaLi on March 11, 2018, 04:59:08 PM
காலனி கூட இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில்
பொடி  நடையாய்  நடந்து தகாத்தை தணிக்க
அல்லல் படும் அன்பு தோழியே !

நன்னீரைத் தொலைத்து
கண்ணீரில் கரையும்
மாந்த இனம்..

ஈரப்பதம் எங்கள் உடம்புகளில் குறைந்ததால்
இரத்தம் கூட கட்டிகளானதே!

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று சொல்லிய மக்கள்
இன்று பூமியே பொறுமை இழந்து
வாடிப்போய் நிற்கிறது
 தண்ணீருக்காய் கண்ணீரோடு !! 

குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
குடமே குழந்தையாய் மாறியதால் தானோ!

அணைவரின் தாகத்தை தீர்த்த கிணறுகளும், ஏரிகளும்
தவித்து நிற்கிறது தண்ணீருக்காய்!!

பொருத்துப் பொருத்துப் பார்த்து விட்டு,
வயிற்றுக் குழந்தை கூட வெளியில் வந்து
"அம்மா, கொஞ்சம் தண்ணீர் கொடு!" என்றதே!

நீரே எங்களை காத்திடு இந்த பஞ்சத்தின் நரகத்திலிருந்து ..........

கோடை காலம் என்றாலே கடலின் வாசம்
காதில் ஓங்கிக்கொண்டிருந்த கடல் அலையின் ஓசை -இன்று
கடலும் அழிந்து வருகிறது சமூகத்தின் அநாகரிக செயலால் !!

நீரே!  உல‌கில் முக்கால் பாக‌ம்  நீதான் ... !!!  ஆயினும்
நீ கிடைக்க‌வில்லை என்றுதான்
உல‌க‌மே மூக்கால் அழுகிற‌து!

பிள்ளை பெறுவதற்கு தவம் இருந்த மக்கள்
இன்று பச்சிளங்குழந்தை கூட தவமிருக்க செய்து விட்டு சென்றாயே

நீ  தாக்கத்திற்காய் பயன்பட்ட நாட்கள் கடந்து
இன்று லாபத்திற்காய்  உலாவிக்கொண்டிருக்கிறாயே

நீரே ! நீர் மட்டும் ஏன்  நீர்வழிச்சாலையாய் அமையாமல் போனாய் .

நீர் இல்லாமல் எங்கள் வயலும் வாடியதே
முலை சப்பி களைத்த இந்த குழந்தையின் கயல் விழியும் காய்ந்ததே

நீரே ..!! இந்த பச்சிளங் குழந்தையை பார்
இன்னுமா எங்கள் மேல் இரக்கம் வரவில்லை
நேற்று பிறந்து இன்று தன் வயிற்று பசிக்ககா
ஏழு கடல் தாண்டி உன்னை தேடி வருகிறதே
ஏன் எங்களை வாட்டி எடுக்கிறாய்..!!

சுத்தப் படுத்தி கடல் நீர் குடிக்க
சுக்கா? மிளகா? 

நீயே  எவ்வுயிர்க்கும் தாய்ப்பால் ஆகும்!
நீயே நம்வாழ்வும் வளமுமாகும்!

மழை நீரை சேமித்து  தம்மையும் தம் வளத்தையும்   காப்போம்

தண்ணீரைக் காத்திட
தேசம் கடந்து
கை கோர்ப்போம்  நீர் வளம் காத்திடுவோம்  !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: AnoTH on March 11, 2018, 05:09:03 PM
சிதைந்து போகும் உலகினில்
புதைந்து போன  செல்வங்களாய்
மனிதகுலம் காத்த சின்னங்களை
அழித்தே  வந்தோம் எண்ணங்களால்

வியந்து பார்த்த உலகினை
நயந்து பாடிய உவமைகள்
நாதியற்ற நிலையினில்
நாளை தொடரும் வாழ்வியல்

அலைந்து தேடும் நீரினால்
விழைந்த வாழ்வை எண்ணி நாம்
விதைத்த காலம் ஒன்றைத்தான்
மீட்டுப் பார்க்க ஏங்கிறோம்..............

வரட்சி கொடுத்த வாழ்க்கையால்
புரட்சி செய்த கூட்டம் அதை
சாயம் பூசி நாமும் தான்
விவசாயம்  செய்ய மறுத்திட்டோம்.

வானிலிருந்து வீழுகின்ற
நீர்த்துளிகள் யாவையும்
வாவி நிலங்கள் ஏதுமின்றி
வாடிய நிலங்கள் ஆக்கினோம்.

வரண்டு போகும் உலகினை
திரண்டு மீட்டிட வந்தணை 
பாரதம் காத்த மண்ணினை
விவசாயம் கொண்டு ஒன்றிணை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: Mr.BeaN on March 12, 2018, 12:33:27 PM
கழிமுகம் தொடுகின்ற கடல் நீர் சூழ..
கதிர் பாய்ச்சி கனலாக்கும் கதிரவன் ஆள..
பல்லுயிர் வாழ படைத்திட்டதை போல..
பசுமை நிறைந்தே பளிச்சிட்டது ஞாலம்!

பேரண்டம் கொண்ட நெற்றித்திலகம்..
பேரின்பம் பொங்க இருந்தது உலகம்..
இறைவனின் கருணையில் அதிசய கிரகம்..
ஆனதே மனிதனால் மிகப்பெரும் நரகம்!

ஆதாமும் ஏவாளும் அலைந்திட்ட மண்மீது..
அகதியை போலவே ஆகி விட்டோமே..
ஆசையும் தேவையும் அதிகரித்த போது..
அவஸ்தைகள் சூழவே நாமும் வாழ்வோமே..

அறிவியல் கொண்டுதான் ஆட்சிகள் செய்கிறோம்..
அதிசயம் காணவே ஆர்வமும் கொள்கிறோம்..
அறிவிலி போலவே நாமும் மாறியே..
அழகிய இயற்கையை காத்திட மறந்திட்டோம்..

பூமியின் பசுமையை காப்பதும் நீரடா!
பூமியில் முழுமுதல் கடவுளும் நீரடா!
மனிதனின் தேவையில் முதன்மையும் நீரடா!
நீரின்றி வாழவும் முடியுமா கூறடா?
நீர்நிலை மாசினால் வீணாகும் தண்ணீரடா!
பார்க்கின்ற போதிலே கண்களில் கண்ணீரடா!!!

பூமியின் புனிதத்தை காக்க மறந்தாலே!
புகழிடம் இன்றியே தேடி அலைவோமே!!

நீர் நிலை காப்போம்..! நம் நிலை காப்போம்..!
நதிகளை இணைப்போம்..! நாமும் இணைவோம்..!

உங்களின் தோழன் பீன்....
[/size][/color][/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: RyaN on March 14, 2018, 04:04:06 AM
ஒரு துளி
தண்ணீரின்
அருமை
தாக்கத்தில்
இருப்பவனுக்கு
மட்டும் தான்
தெரியும்,
அது விலை மதிக்க
முடியாத
ஆபரணம்
என்று.

நம்மில் எத்தனை
பேருக்கு
தெரியும்.
தண்ணீர்
விலை
மதிக்க
முடியாத
புதையல்
என்று.

தண்ணீரின் 
அருமை
தெரிய
ஒரு தடவை
பாலை வனத்திற்கு
சென்று
வாருங்கள்

தண்ணீருக்காக
மற்றொரு
உலக போர்
வரலாம்.

அன்பு இல்லாத
மனிதர்கள்
உயிரினங்கள்
பார்க்க முடியும்
தண்ணீர் அருந்தாத
மனிதர்கள்
உண்டா

மெரினா கடற்கரையில்
இல்லாத
தண்ணீரா.
பருக தான்
முடியவில்லை.

கேட்டு பாருங்கள்
ஓவ்வொரு
நாளும்
எவ்வளவு 
வீணாக்குகிறோம்
என்று.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: யாழிசை on March 14, 2018, 09:25:48 AM
மானிடா...

நீரின்றி நிற்காது  உலகு
ஆனால் நீராகவே  இருந்தாலும்
நிற்காது  உலகு

இதய  துடிப்பில் மட்டுமே
வாழ்வதாக நினைத்தாய்
ஆனால் மரங்களின் பிடிப்பில் வாழும்
நிதர்சனமா உண்மையை எப்போது அறிவாய்

வண்ண பூக்கள் பூத்து
குலுங்கிய சோலையில்
இன்று கள்ளி செடி
துளிர்விடவும் யோசிக்கின்றது

சிறகடித்து பறந்த பட்டாம்பூச்சிகளும்..
சோலை கிளிகளும்...
சொப்பனத்திலும் எட்டா தூரம்
சென்றதென்ன மாயம்...

மண்ணோ வறண்டது
ஆனால்
மனமோ வறண்டு போகா..

கண்ணோ குறுகியது...
குருதியோ வெப்ப கனலில் கொதித்தது...

கால்கள் தள்ளாடியது ..
ஆனால்
கனவுகள் தோயவில்லை...

தேகம் சோர்ந்தது ..
ஆனால்
தேடல் ஓயவில்லை ...

நீரைத் தேடி நில்லாமல் நடக்கும் கால்கள் ....

சொல்ல இயலா சோகத்தைச்
சொக்க வெள்ளி குடத்தில் சுமந்தபடி .....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: VipurThi on March 14, 2018, 04:36:54 PM
நீயின்றி நானில்லை என்று
வசனமளப்பவன் கூட
நீரின்றி சர்வமுமில்லை என
மறந்திடும் காலமிது

மழை தரும் மேகமோ
ஒளிந்து கொண்டது எங்கோ
பச்சை வளங்களை
காணாத சோகமோ
இல்லை கொடூர மனிதனை
கண்ட பயமோ

பிள்ளையை கிள்ளி விட்டு
தொட்டிலையும் ஆட்டும் கபட மனிதா
மழையில்லை என்ற உன்
முதலைக் கண்ணீரில்
தலை கவிழ்ந்து விழ
இயற்கை அன்னையோ முட்டாள் அல்ல

மரங்களை வெட்டியழிக்கும்
கயவர்களின்
கவலையற்ற பிழைகளால்
வரட்சியெனும் காலனின் பிடியிலே
கண்ணீரும் வற்றி மாண்ட
அப்பாவிகள் எண்ணிலடங்கா

இன்று கூட நீ வருவாயென
வானம் பார்த்து காத்திருக்கும்
நல்ல உள்ளங்களுக்காய் ஒரு கணம்
மண்ணைத் தொட்டு விடு அவர்கள்
மனக்கவலை போக்கிடு....


மரங்களை நடுவீர்!!!
மழை வளம் பெறுவீர்!!!
மனித உயிர் காப்பீர்!!!


                     **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: NiYa on March 14, 2018, 09:16:31 PM
நீரை நம்பி
நதியை அண்டி வாழ்ந்த
மனிதன் இன்று நீருக்கு
அலைந்து திரியும் நிலை

மழையை நம்பி
மண்ணில் விதைத்து
பசியாற்றிய மருதம்
இன்று பாலையாய்

வறட்சி நிவாரணத்துக்காய்
புரட்சிக்காய் தன்மானம்
இழந்து அரை நிர்வாண
போராட்டத்தில் நம் விவசாயிகள்

இவர்களின் அவலத்திற்கு
காரணம் நாம் தான்
நகரமயமாக்கல்
காடழிப்பு  இவைதான்

மரத்தை வெட்டி
நகர் அமைத்தால்
மழை எங்கிருந்து வரும்
நெல் எப்படி விளையும்

எம் நீர்நிலைகள்
கட்டாந் தரையாகிப் போக
இந்த மென் பானங்கள்
தான் காரணம் இதை அறிவீரா

கையில் கை பேசியும்
மடியில் மடிகணணியுமாய்
அலையும் நகர வாசிகளே
நீரின் அருமை அறிவீர்களா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 177
Post by: சக்திராகவா on March 14, 2018, 11:04:01 PM
வற்றிய நீரும்
வரி விழுந்த பூமியும்
வாட்டும் வறுமையும்
வரமோ சாபமோ

தண்ணீரை தேடி தேடி
கண்ணீரும்  கண்டதில்லை!
கனவெனவே ஆகிடுமோ
பச்சைநிற புல்லெலாம்

அறியாத வயதினிலே
அனுபவமாய் ஆகிறதே
அக்காவின் கை பிடித்து
அக்கறை தேடி......

சக்தி ராகவா