Author Topic: ஐபோன்-5 மற்றும் கேலக்ஸி எஸ்-3: சிறப்பு ஒப்பீட்டு பார்வை  (Read 1544 times)

Offline Anu

வெளி வந்த பிறகு வெற்றி நடை போடும் ஸ்மார்ட்போன்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்னும் விற்பனைக்கே வராமல் வெற்றி வாகை சூட காத்திருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் இங்கே வழங்குகிறோம்.
ஆப்பிள் ஐபோன்-5, கேலக்ஸி எஸ்-3 என்ற ஸ்மார்ட்போன்களுக்கு தான் இத்தனை வரவேற்பும். இன்னும் வெளி வராத இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.  ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன், ஒரு தனி தன்மையை கொண்டதாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஒன்றும் குறைந்தது அல்ல. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதால், சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும்.
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் திரை வசதி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், ஐபோன்-5 ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில் பெரிய திரையை கொண்டதாக தெரிகிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில்  4.6 இஞ்ச் அமோல்டு திரை உள்ளது.
ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் குவாடு கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸைனோஸ் 4212 பிரசஸரும் பொருத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலின்படி பார்த்தால் அதி வேகத்தினையும், சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அதிக பிக்ஸல் துல்லியம் கொண்ட கேமராவினை கொண்டாதாக தெரிகிறது. இதில் 12 மெகா பிக்ஸல் கேமரா அழகான புகைப்படங்களை இன்னும் அழகாக கொடுக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் கூடுதலாக டியூவல் லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பமும் இருப்பதாக தெரிகிறது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நிறைய புதிய தொழில் நுட்ப வசதிகள் இருக்கும். ஐபோன்-5, சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக வரவேற்பினை பெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளி வந்த பிறகு இதன் முழு தகவல்களையும் பார்க்கலாம்.