Author Topic: நவீன தொழில்நுட்பத்துடன் புதிய நிகான் கேமரா  (Read 2051 times)

Offline Anu

நிகான் நிறுவனம் தனது கூல்பிக்ஸ் கேமரா வரிசையில் பல கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அதன் கூல்பிக்ஸ் வரிசையில் உள்ள எல் பிரிவில் ஒரு புதிய கேமராவை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய கேமராவின் பெயர் கூல்பிக்ஸ் எல்810 ஆகும். இந்த பழைய கேமராக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த புதிய கேமரா ஒரு மேம்படுத்தப்பட்ட டிவைசாக வந்திருக்கிறது.
இந்த கூல்பிக்ஸ் எல்810 கேமராவின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் அது சிசிடி இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. இந்த சென்சார் 16.1 மெகா பிக்சலைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த கேமராவில் 26 எக்ஸ் ஆப்டிக்கல் சூம் நிக்கர் லென்சும் உள்ளது. மேலும் இந்த கேமரா லென்ஸ் சிப்ட் வைப்ரேசன் ரிடக்சன் (விஆர்) வசதியையும் கொண்டுள்ளது.
இந்த கேமராவின் அகல ரேஞ்சைப் பார்த்தால் அது 22.5 மிமீ முதல் 585 மிமீ ஆகும். மேலும் இந்த கூல்பிக்ஸ் எல்வரிசை கேமராதான் முதன் முதலாக உயர் மின் திறன் கொண்ட சூமைக் கொண்டுள்ளது. இந்த கேமராவின் பின்புறம் 3 இன்ச் அளவில் டிஎப்டி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இது ஏஏ பேட்டரிகளைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த கேமரா பல நிறங்களில் வருகிறது.
இந்த கேமராவின் டிசைன் பக்காவாக இருக்கிறது. மேலும் இந்த கேமரா ஒரு தரம் வாய்ந்த உறுதியான கேமரா ஆகும். குறிப்பாக இது  சிவப்பு, ஊதா மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. அதனால் கேமரா அசையாமல் தெளிவான படங்களை எடுக்க முடியும்.
இந்த கேமரா அடக்கமாக இருந்தாலும் தொழில் ரீதியிலான போட்டோக்களை எடுக்கும் சக்தியைக் கொண்டது. மேலும் இதில் உள்ள தொழில் நுட்பங்கள் மூலம் மிக அதிகமான தூரத்திலிருந்தும் தொலைவில் உள்ள படங்களை மிகத் துல்லியமாக எடுக்க முடியும்.