Author Topic: ஆண் சாதி லட்சணங்கள்  (Read 5013 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆண் சாதி லட்சணங்கள்
« on: March 15, 2012, 05:10:58 PM »
ஆண் சாதி லட்சணங்கள்

ஆண்களின் சாதிவகை



பெண்களைப் போலவே ஆண்களிலும் நான்கு வகையுண்டு. அவை

 
■முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண்,
■மான் சாதி (அ) மத்திம சாதி ஆண்,
■காளை சாதி (அ) அதம சாதி ஆண்,
■குதிரை சாதி (அ) அதாகம சாதி ஆண் ஆகியவையாகும்.

 
 
முயல் சாதி
 ஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.
 
 
 
மான் சாதி

 அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்.
 
 
 
காளை சாதி

 மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.
 
 
 
குதிரை சாதி

 கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு கொள்வான்.