FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 08, 2018, 11:29:53 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: Forum on September 08, 2018, 11:29:53 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 199
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/199..jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: JeGaTisH on September 09, 2018, 12:13:10 AM
காற்றாக நான் வந்து உன்னை சேர
கருமேகமாக மாறி என்னை சுழற்றுகிறாய்.

மேகமாய் நீ இருந்து என்னுடன் சேரும்பொழுது
மழையாய்  மாறி மண்ணில் வீழ்கிறாய்
உன்னோடு  சேர  நான் கண்ட கனவெல்லாம்
மண்ணோடு முடிகிறது.

சூரியனை கூட  உன்னால் மறைக்க முடியும்
என்னை மணக்க முடியாததேனோ !

உன்னை தீண்டி கண்ணீர் சிந்த வைக்க எனக்கு மனமில்லை
உன்னை பார்க்காமல் வாழ எனக்கும் மனமில்லை

தள்ளிநின்று தவிக்கிறேன்
தற்கொலைக்கும்  வழி  இல்லை
உன்னுடன் வாழவும் விதி  இல்லை
வாழ்கிறேன் உயிரின்றி
வாடுகிறேன் நீ இன்றி

வாழ்ந்தால்  உன்னோடு  வாழ்வதென மகிழ்வோடு
வாழ்கிறேன் மனநிம்மதியோடு !
 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: JasHaa on September 09, 2018, 01:45:26 AM
மேனியெங்கும் மெல்லிய அதிர்வலைகள்...
விழியோரத்தில் கண்ணீர்....
ஐயோ  நான்  காதல் வயப்பட்டு   விட்டேனே....

சுட்டெறிக்கும் சூரியனாய் அவன்....
குளிர்  நிலவாய் நான்....
எப்படி   இது சத்தியம்  ?
இருந்தும்  காதல் கொண்டேனே  ....

விழி நிறைய  கனவு  சுமந்து...
 விடிய  விடிய விழித்திருந்த  அவன்
காதல்  சொன்ன தினம்...

உயிர்வரை ஊடுருவும்  அவன் ஒற்றை  பார்வை  ...
யாரும்  இல்லாத மரத்தடியில்  அணைத்து இருந்த  ஒரு  நொடி  ....

இன்றும்  இதழ்கடையில்  இ்னிக்கும்
 இதழ்  முத்தம்  ....

இன்றும் என்றும்
அவன் என்னவனே...
 நிலவாய் உன்னுடன்  இருக்க  விளைத்த  நான்....
உன்  காதல் எனும்  மோகத்தில் 
மேகமாய்  உன்னுள்  தொலைந்து  மறைந்தேன்  ....
காலமே  கடத்தி   போ என்னை  ....
மீண்டும்  காதலை...
காதலாய் கசிந்துருகி ...
மேகமாய்  அவனை தீண்ட....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: AshiNi on September 09, 2018, 12:45:54 PM
சிக்கு புக்கு ரயிலாய்
 என் மனதுள் ஓடுபவளே...
மனம் அள்ளும் தாவணியாய்
 என் உள்ளம் நாடுபவளே...

மலை கடல் கடந்தும்
  எனக்குள் வாழ்பவளே...
தேசம் பல தாண்டியும்
  என்னுயிரை ஆள்பவளே...

பத்தமடை பாய் அதுவும்
 என் அருகே உனை தேட,
என் கனாக்களில் எல்லாம்
 உன் விம்பம் அலைமோத...

உன்னை காண வேண்டி
 நானும் செத்து பிழைக்க,
என் வீட்டு பூந்தோட்டம்
 உன் வாசம் கூவி அழைக்க...

எத்தனை துன்பம்
 நம் தூரம் எண்ணி...
என் இதயம் பறித்த
  நீயன்றோ என் கன்னி...

உன் நினைவுகள்
 சில்லென வருகையில்
குளிர் நிலவின் ஞாபகம்...
 உன் நினைவுகள்
எனை சுடுகையில்
 மின்னும் கதிரவன் ஞாபகம்...

நம் காதலுக்காய்
 இயற்கையும் உருகிடுதே...
நம் திருமணத்துக்காய்
  என் ஆவலும் பெருகிடுதே...

எப்போது உன் அதிர்வுகள்
 என் மனம் தீண்டிடினும்
அப்போது என் விழிகள்
 தூய வானம் தேடிடுதே...

தொலைவுகள் நமை பிரித்தாலும்
 மேகங்கள் எம் விம்பம் சேர்த்திடுதே...
நாமிருவர் இணைவதை
  காதல் வானும் ஓவியமாய் வரைந்திடுதே...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: Guest on September 10, 2018, 01:12:19 AM

உணர்வுகள் ஆர்ப்பரித்த ஒரு அதிகாலையில்
 என்னை தேடி களைத்திருந்தாய்..

பீறிட்டு கிளம்பிய அன்பை புத்துணர்ச்சி ஊட்டும்
ஒரு அதிகாலை வாழ்த்தோடு தொடர்ந்திட முனைகையில்,

எங்கோ தென்பட்ட ஒரு உதாசீன ரேகை
 ஒன்றால் உணர்வுகள் சூறையாடப் பட்டதாய் உணர்ந்து...

தொண்டை அடைக்க இல்லாத ஏதேதோ
 காரணம் சொல்லி தூரமாகிறாய்.

உணர்வதும், உணர்த்தலும் சேர்ந்து தானே வாழ்க்கை..
பின்தொடர்ந்து வரும் என்னை,
தெரியும் உனக்கு
என் அன்பும் தெரியும் என்பது உண்மையாகவே இருந்தாலும்

ஒவ்வொரு முறையும் உனக்கான
 அன்பை உணர்வுப்பூர்வமாய்
உணர்த்துதல் என்
கடமை தானே!!!.

மன்னித்துக்கொள்!
காத்திருக்கிறேன்...

உன் அருகாமை முன்போல் இதமானதாக இல்லை..
நீ இருப்பதாலேயே உயிர்பெற்ற பல
பொழுதுகள் என் நினைவுகளில் இப்போதும் உண்டு.

உன்னை பிரிவதென்பது வாழ்க்கையின்
ஆகப்பெரிய இழப்பாக இருந்த ஒரு காலம் இருந்தது.

தேடல்கள் காலத்திற்கு உட்பட்டவை..
இறந்த காலங்கள் தேடல்களோடே இறந்து விடுகின்றன.

என் அருகாமை உனக்கு தரக்கூடும்
அசௌகரியம் எனக்கு அயர்ச்சி அளிக்கிறது.

எந்நேரத்திலும் நீ விடைபெறலாம்,

இந்த அருகாமை இதமானது தான்..
ஆனாலும் உன் அருகாமை முன்போல் இதமானதாக இல்லை...

ஏன் சொல்லவே இல்லை
 என மாற்றி மாற்றி கேட்டு ஆதங்கம் கொள்கிறோம்....

நிராகரிப்பு நிகழாமலே நிராசையாகி
போன அந்த காலத்தை ஆராய்ந்து, ஆராய்ந்து
 ஓய்ந்து போகிறோம்.

உனக்கும் எனக்கும் இடையே நாம்
 உருவாக்கிய கையெட்டும் தூர இடைவெளிகளினூடே
வெட்கப்பட்டு, தலை கவிழ்ந்து கடந்து சென்றிருக்க கூடும் காதல்.

நீயும் நானும் உணரவே இல்லை..

வெறுப்பின் நூலாம்படைகள்
 சூழாத பேரன்பு உன்னோடானது.

காலமும், தூரமும் சேர்ந்து
உண்டாக்கிய பாதிப்பென்பது அனுதாபத்தையும்,
ஆதங்கத்தையும் கூட்டிப் போயிருக்கிறது என்பது மட்டுமே..

உன்னை வெறுத்தல் சாத்தியமில்லாத
 நிலையென்பது உன்னை நேசித்தல் சாத்தியமில்லை
 என்பதற்கான ஆறுதலாகி மாறுதலாகி நீளும்.

சுழன்றோடும் காலச்சக்கரம்
நம்மை நசுக்கி போகட்டும், ஆயினும் நம் நேசத்தை
துயில் கொள்ள வைத்தலைத் தாண்டி
ஏதும் செய்திட இயலா..

காலங்கள் தாண்டி எங்கேனும் காணுகையில் சிந்திப்போகும்
ஒரு புன்சிரிப்பில் இயல்பு மாறாமலே உயிர்த்திருக்கும் அது....உண்மை காதலாய்......
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: KoDi on September 10, 2018, 02:24:58 AM
மேக வீதியில்
காதல் பறவைகளாய்
கற்பனை உலகில்
காதல் சுகத்தில்
கவலைகள் மறந்து 
பறந்த அத்தருணங்கள்   
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் இனிக்கும்

மின்மினி பூச்சிகள்
கண்களில் ஒளியாய் 
சிரிக்கும் பூக்கள்
முகந்தனில் அழகாய்
வெண்ணொளி வீசும்
பகலின் நிலவாய்
பார்த்தேன் உன்னை
பனியின் சிலையாய் 

கூடு விட்டு
கூடு பாய்ந்து
என் இதய பெட்டகத்தில்
காதல் கவிதை விதைத்தாய் 
பூவைக் கண்ட
பட்டாம் பூச்சியாய்
உன்னைத் சுற்றியே   என்
காதல்  அலைகள் எப்போதும்
 
மின்சார பார்வை
மின்னலின் தாக்கம்
மேகத்தின் குளிர்ச்சி
மிதந்து வரும் தென்றல்
அத்தனையும் உணர்ந்தேன்
அழகாய் உன்னருகில்
அதில்  என்னை இழந்தேன்
நின் காதல் சிறையில்

நிலையில்லா  உலகில்
அணையா விளக்காய்   
நானே உலகமென
எனைப் போற்றும் நாயகியே
உன்னை  ஆரத்தழுவும்
ஆசையில் துடிக்கிறேன் 
அன்பே ஓடி வா!
என் மார்பில் முகம் சாய்க்க!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: RishiKa on September 10, 2018, 02:05:49 PM

அந்தியில்  செம்மீன்கள் உலா வரும்..
ஆகாயமும் ஒரு மங்கையே!

மாலையில் ....
மொட்டு மலருகின்ற..
கவிதை நொடிகளில்..

காதலன் அவனுக்காக ...
அலங்காரங்களின்  உறைவிடம் அவள்!

விண்மீன்களை  முத்து ஆக்கி....
தன் கரு நீல  குழலுக்குள்...
செருகி கொண்டு....

நிலவினை பொட்டாக ...இட்டு....
அவள் காதலனுக்காக ....
காத்து கொண்டு இருக்கிறாள்!

தன் இதய மேகத்தினை ....
தூது விட்டு தவிக்கிறாள் அவள்!

கட்டிளங்காளையை ...
கவர்ந்து இழுக்கவோ...
ஜாலம் செய்யும் மின்னல்கள்...

அவனை கண்டதால்....
மகிழ்வுடன்  நகைக்கும் ...
ஒலி அலைகளோ ...
இடிகள் தாம் !

காதலன் அருகில் வந்ததால்...
மேனியின் சிலிர்ப்போ..
குளிர்ந்த காற்று...!.

உள்ளம் கவர்ந்தவன்....
உடனே சென்று விட்டதால்..
விடும் கண்ணீர் தான் மழையோ!..

இரவு முழுதும் அழுதும்....
அவன் காணாததால்...

சோர்ந்து ..களைத்து ...
நின்ற பொழுது....

காதலனாக ...இளம்பரிதி ...
தன் ரதங்களை.....ஓடியவாறு....

அருகில் வரும்போதோ ....
செவ்விய கன்னங்களில் ...
நாணத்தோடு ....
புலருவாள் ...

வான் மகள் !

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 199
Post by: SweeTie on September 11, 2018, 08:09:52 AM
உறவு  சொல்ல வேண்டி இரவெல்லாம் காத்திருந்து
காலைக்  கதிரவன்  செங்கதிர்களைப்  பரப்பிய பொழுதில்
மூடிய என் கண்மடல்கள்  சற்றே திறக்க,  சட்டென
உள்ளே  நுழைந்தான் அனுமதியின்றி

காதலைச் சொல்ல  நாழிகை  பார்க்கிறான்  எனத்தெரிந்தும்
வேதனையேதுமின்றி,  சொல்லிடும்  நாழிகை சிறப்பாக அமையவேண்டி
சொற்பன   உலகில்  சுதந்திரமாய்  உன்னோடு  கைகோர்த்து
குறும்புகள்   செய்ததை   நான் கற்பனையில் ரசித்து வந்தேன் 

அருகருகே  இதயங்கள்  படபடத்து அமர்ந்திருக்க
உஷ்ணத்தின்  கொடூரத்தில்  நம்முடல்கள்  வெடவெடக்க
தெரிந்தும் தெரியாமல் நீயும் ;  புரிந்தும் புரியாமல் நானும்
 நடிக்கும்  நாடகத்தில்   நம்மை மிஞ்ச யாருமில்லை.

காதல் மழையில்  காலமெல்லாம் உன்னுடன் சேர்ந்து
ஒரு குடையில்  நனையவேண்டுமென  இனம்புரியா ஆசைகளை
சொல்ல நினைக்கும்போதெல்லாம்  நீ கைநழுவிப் போகிறாய்  என்றாலும்
உன் இதயத்தின் துடிப்புகளை  அறியும் என் இதயம்

கிழக்கு வானில் உதிக்கும் ஆதவனை எதிர்கொள்ளும் தாமரைபோல் 
தூரத்தில்  உன் காலடி  ஓசை கேட்டு  திறந்த விழிகள் மூடாது  காத்திருக்க
உன்னுடனே  அழைத்துவந்த என் நாணம்,  துள்ளிவந்து  என்னை கவ்வ
என் கால் கொலுசு இசைபாட விரல்கள்  தீட்டும்  அழகான ஓவியங்கள்.

காலை வெயிலில்  கடற்கரை மணலில்  நெடு நடையும்
மாலை கதிரவன் மங்கும் ஒளியில்  மடிமீது தூங்கியும்
சோலைக் கிளிகள் போல்  கெஞ்சலும் கொஞ்சலுமாய்
காதலின் போதையில்  காலமெல்லாம்   நிலைத்திருப்போம்