Author Topic: காதலுக்கு ஏது தடை  (Read 4645 times)

Offline தமிழன்

காதலுக்கு ஏது தடை
« on: February 07, 2014, 02:03:41 PM »
விமான நிலையத்தில் எல்லா கடமைகளும் முடிந்து போடிங் லௌஞ்சில் வந்தமர்ந்தேன். இன்னும் 30 நிமிடங்கள் இருந்தன. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகம் போல இருந்தன.

     இருப்புக் கொள்ளாமல் எழுந்து அங்கும் இங்கும் நடந்தேன். அங்கே நிறைய பேர் இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு வித பூரிப்பு. எல்லோர் முகத்திலும் எப்போது உள்ளே கூப்பிடுவார்கள் என்று ஒரு பரபரப்பு தெரிந்தது. தாய் நாட்டை மறுபடி பார்க்கப் போகிறோம், தாய் தந்தையரை பார்க்கப் போகிறோம், மனைவி குழந்தைகளை பார்க்கப் போகிறோம், காதலி காதலனை பார்க்கப் போகிறோம், இப்படி ஒவ்வொருவர் முகத்திலும் பூரிப்பும் படபடப்பும்.
      எல்லாவற்றையும்  விட்டுவிட்டு அந்நிய நாட்டில் வருட காலம் வேலை செய்வதும் ஒரு கொடுமை தான். பணம் தேடி கடல் தாண்டி வருகிறோம். எல்லாவற்றையும் கடலுக்கு அப்பால் தொலைத்து விட்டு. ஒரு வழியாக விமானத்துக்குள் அழைக்கப்பட்டு இருக்கையில் அமர்ந்தோம். விமானம் பறக்கத் தொடங்கியது

    என் மனம் விமானத்தை விட வேகமாக பறக்கத் தொடங்கியது.என் பயணத்துக்குக் காரணம் ஒரு கடிதம். 5 வருடங்களா ஆகி விட்டது  நான் நாட்டை விட்டு வந்து. இன்னும் போகவில்லை. போக மனம் வரவில்லை. வாழ்க்கையே சூனியமாகி இருந்தால் பைத்தியம் ஆகிவிடுவேனோ என்ற பயத்தில் நாட்டை விட்டே வந்தேன். அதன் பிறகு அங்கு போக மனம் வரவில்லை.

       என்னை நாட்டை விட்டு போக வைத்தது ஒரு கடிதம். மறுபடி நாட்டுக்கு போக வைப்பதும் ஒரு கடிதம்.
   நாட்டை விட்டு போக வைத்தது காதலின் கடிதம். மறுபடி போக வைப்பது அம்மா அனுப்பிய கடிதம்.
      நம் காதல் நிறைவேறப் போவதில்லை. என்னை மறந்துவிடு. நான் நாளை வெளிநாடு போகிறேன்'. இது என் காதலின் கடிதம்.
      'அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடம். இந்த கடிதத்தை தந்தியாக பாவித்து உடனே வா. ' இது அம்மாவின் கடிதம்.
         அப்பாவுக்கு என்ன நடந்ததோ? ஒன்றும் தெரியவில்லை. கடிதம் கண்டதும் வீட்டுக்கு போன் பண்ணினேன். யாருமே போன எடுக்கிறாங்க இல்ல. அக்கா வீட்டுக்கும் போன் பண்ணினேன். அங்கும் அதே  கதை தான்.
       உடனே ஆபீஸ்ல எமெர்ஜென்சி லீவ் போட்டு வீட்டுக்கு புறப்பட்டு விட்டேன்.

         விமானத்தில் சாப்பாடு கொண்டு வந்து தந்தார்கள். சாப்பிட்டு விட்டு எல்லோரும் தூங்கத் தொடங்கினார்கள். நானும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
        அவள் இப்போது எப்படி இருப்பாள்?  இந்த 5 வருடங்களில் நிச்சயம் கல்யாணம் முடிந்திருக்கும். பிள்ளைகளும் இருப்பார்கள். ஊரில் இருப்பாளா அல்லது வெளிநாடு சென்றிருப்பாளா?
     பல கேள்விகள் மனதில் படையெடுத்தன. பார்த்து 6 வருடங்கள் ஆகின்றன. இது வரை அவளை பற்றி ஒரு செய்தி கூட தெரியாது.
          என் மனம் அவளை சந்தித்த முதல் நாளை நினைத்துப் பார்த்தது. மறக்கக் கூடிய நாளா அது?
     பச்சை மரத்தாணி போல மனதில் பதிந்து விட்ட நாளல்லவா அது.
     
       நான் இஞ்சினியரிங் முடித்து விட்டு வேலை தேடத் தொடங்கிய பருவம் அது. படிப்பு படிப்பு என்று நாள் முழுக்க ஓடி களைத்திருந்த தருணம். கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு வேலை தேடுவோம் என ப்ரீயாக இருந்தேன்.
       எனக்கு காலேஜில் ஒரு நல்ல நண்பன் இருந்தான். நாங்கள் இருவரும் சிறு வயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள். எனது உற்ற நண்பன் அவன். பெயர் ராபின். அவன் கிளாஸ் மேட் மட்டுமல்ல, எனது அத்தை பையனும் கூட 
        நான் மனம் விட்டு பேசும், எனது எல்லா ரகசியங்களும் தெரிந்த ஒரே நண்பன் அவன் தான். சொந்தமாக இருந்தாலும் அவன் வீட்டுக்கு நான் அடிகடி போனதில்லை. எதாவது விஷேசம் என்றால் போவேன்.  மற்றபடி நாங்கள் சந்திப்பது எல்லாம் வெளியில் தான்.
       அவனுக்கு 2 தங்கைகள் இருக்கிறார்கள். என்னோடு நன்றாக பேசுவார்கள். 
          அன்று நானும் அவனும் காலையில் ஒரு இடத்துக்கு போக இருந்தோம். அவன் என்னை அவன் வீட்டுக்கு வரச் சொன்னான். நான் போன போது அவன் அப்போது தான் தூங்கி எழும்பி இருந்தான். சரியான சோம்பேறி. என்னை கண்டதும் குளிக்கச் சென்றான். ஏற்கனவே லேட். உடைகளை  கூட அயன் செய்தில்லை. நான் நீ போய் குளி நான் அயன் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு அயன் செய்ய ஆரம்பித்தேன்.
    தலை குனிந்து அயன் பண்ணிக்கொண்டேருந்த நான் " ராபின் அயன் முடிந்து விட்டதா" என குரல் கேட்டு திரும்பினேன். அங்கே முன்னே பின்னே பார்த்திராத ஒரு பெண் நின்டிருந்தாள். என்னை கண்டதும் பதறி விட்டாள்.
      நான் நிலைகுலைந்து  விட்டேன். அவள் பார்த்த ஒரு பார்வை....... அந்த பார்வையில் நான் உருகிய மெழுகாகி விட்டேன். அவள் அறையை விட்டு ஓடி விட்டாள். நான் மின்னல் தாக்கியவனாக செயலிழந்து நின்றேன்.
                  சான்ஸ்சே  இல்ல. இப்படி ஒரு கண்ணை நான் பார்த்ததே இல்லை. பெரிய உருண்ட கண்கள். அதன் வாள் வீச்சில் வெட்டுண்ட மரமானேன் நான்.
                  எனக்கு ஏதும் ஓடவில்லை. அவள் கண்கள் மறுபடி மறுபடி என்கண் முன் தோன்றிக் கொண்டிருந்தன.
   'யார் அவள்? அத்தையின் பெண்களும் இல்லை.' ஒன்றும் புரியவில்லை எனக்கு. யோசனையில் அப்படியே நின்றிருந்தேன்.
      ராபின் குளித்து விட்டு சிரித்தபடி வந்தான். " என்ன மச்சான் பேய் அடித்தது போல நிற்கிறாய்?" அவன் குறும்பாகக் கேட்டான்.
       " யாருடா அவ?" பயந்து விட்டேண்டா" நான் படபடப்புடன் கேட்டேன்.
     அது தங்கச்சியோட வேலை பார்க்கும் அவ சினேகிதி. எங்க வீட்டில் ஒருத்தி போல. நீ வந்தது அவளுக்கு தெரியாது. தங்கச்சி அயனை எடுத்து வர சொன்னதால் ரூமுக்கு வந்திருக்கிறாள். உன்னை நான் என்று நினைத்து பேசி இருக்கிறாள். நீ திருப்பிப் பார்த்ததும் பயந்து விட்டாள்.நான் குளிக்கப் போனது  அவளுக்கு தெரியாது. என்னை கண்டதும் நடந்ததை சொன்னாள்.
    அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
சரி வா உன்னை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
நான் அவன் பின்னால் நடந்தேன். ஹல்லில் அவள் அவன் தங்கைகளுடன் உட்கார்ந்து இருந்தாள். என்னை கண்டதும் ஒரு அசட்டு சிரிப்புடன் தலை குனிந்து கொண்டாள்.
         "இது எனது ப்ரண்ட் கம் மச்சான். பேரு குமார். இது அசீமா. இவங்களோட ப்ரண்ட் கம் ஒன்ன வொர்க் பண்ணுறவங்க. எங்க வீட்டுல ஒருத்தி மாதிரி"
       ராபின் எங்கள் இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
"இவனை கண்டு பயப்படாத. உலகத்துல இருக்கிற ஒரே நல்லவன் இவன் தான். எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன். இன்றைய இளைஞன் என்று சொல்லுவதற்கே தகுதி இல்லாதவன்."
    அவன் சொல்வதைக் கேட்டு அவளுக்கே சிரிப்பு வந்தது. ஆமா இத்தனை நல்லவர் எப்படி இத்தனை கெட்டவருக்கு நண்பரானார்? எதிரும் மறையும் ஒன்று சேரும் என்பது இதை தானா?" அவள் கிண்டலாக கேட்டாள்.
         நாங்கள் இருவரும் போகும் இடத்துக்கு புறப்பட்டோம்.
வழி நெடுக அவளை பற்றி அவன் சொன்னது இது தான்.
         அசீமாவும் அவன் தங்கைகளும் நல்ல நண்பர்கள். ஒரே இடத்தில் ஒன்றாக வேலை பார்கிறார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடம் ராபினின் வீட்டுக்கு அருகில் இருப்பதால் தினமும் அவள் வீட்டில் இருந்து பஸ்ஸில் வந்து இவர்கள் வீட்டுக்கு வந்து மூவரும் ஒன்றாக வேலைக்குப் போவார்கள்.
ஹோலிடே வந்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்து விட்டு போவாள். அத்தனை நெருக்கம்.
        நான் வீட்டுக்கு வந்த பிறகும் காலையில் அடித்த சென்ட் போல அவள் எண்ணம் மனதினில் கமகமத்தது. அவள் கண்கள் இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. அவள் ஒன்றும் பேரழகி இல்லை. ஆனால் அவள் கண்கள் ஒன்று போதும், ஒருவரை கவர. அத்துடன் அவள் சிரிப்பு மனதை சுண்டி இழுக்கச் செய்யும்.
     இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. இது எனக்கு புது அனுபவம். என் வாழ்வில் எந்த ஒரு பெண்ணும் என்னை கவர்ந்தும் இல்லை. யாரையும் நான் நினைத்துப் பார்த்ததில்லை.

       இரவு முழுவதும் அவள் கண்கள் கண்ணாமூச்சி ஆடின. அவள் நினைவுகள் என் தூக்கத்துடன் ஆடு புலி ஆடிக்கொண்டிருந்தன.
             
         அதன் பிறகு அடிகடி அத்தை வீடு செல்லத் தொடங்கினேன். அடிகடி அவளையும் சந்தித்தேன், நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசும் அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். விடுமுறை நாட்களில் அவள் அங்கு வருவாள். நாங்கள் அனைவரும் பீச், பார்க் என்று எங்காவது போவோம்.
            அவளின் குணநலன்கள் எனக்கு பிடித்திருந்தன. நல்ல இரக்க சுபாவம் உள்ளவள், எல்லோரோடும் அன்பாக பழகுபவள், எதையும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்பவள், இதையெல்லாம் அவளோடு பழகிய சில நாட்களில் தெரிந்து கொண்டேன்.
      அவள் சிறிது சிறிதாக என் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். எப்போதும் அவளை பார்க்க மாட்டோமா என்றிருக்கும். எப்போது விடுமுறை வரும் என்றிருக்கும்.
             இப்படி 6 மாதங்கள் ஓடின. என் காதலை அவளிடம் எப்படி தெரிவிப்பது ? நேரே சொல்ல எனக்கு தைரியம் இல்லை. சொல்லாமல் இருந்தால் என் காதல் எப்படி கை கூடும்? புரியவில்லை எனக்கு.

         கடைசியாக ஒரு முடிவெடுத்தேன். ஒரு நாள் நானும் என் நண்பன் ராபினும் தனித் இருக்கும்போது  நான் பேச்சை எடுத்தேன்.

    " ராபின் உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். எப்படி பேசுவது என்று தெரியவில்லை." நான் தயங்கி தயங்கிப் பேசினேன்.
     ராபின் என்னை புதுமையாகப்  பார்த்தான். " என்னடா என்றும் இல்லாமல் பீடிகப் போடுகிறாய். என்ன விஷயம்?"
       நீ எப்படி எடுத்துக் கொள்வாயோ என பயமாக இருக்கிறது. நான் தயங்கித் தயங்கிப் பேசினேன்.
        " என்னிடம் என்னடா பயம். நீ நண்பன்டா. என் தோளை அணைத்தபடி அன்பாகக் கேட்டான்.
          " ராபின் நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன்". ரொபினால் ஆச்சரியத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
     டேய் என்னடா சொன்ன, நீ காதலிக்கிறாயா?" நம்பமுடியாமல் கேட்டான். நான் ஆம் என்று தலையை அசைத்தேன்.
            யாருடா அவ? இந்த முனிவனை மயக்கிய அந்த அகலிகை யாரடா" அவன் ஆச்சரியமாக கேட்டான்.
            எனக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. எப்படி பேசுவது என்று புரியாமல் தடுமாறினேன்.
            "எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை ராபின். நீ தவறாக நினைப்பாயோ என்று பயமாக இருக்கிறது." நான் தயங்கி தயங்கி பேசினேன்.
            "நான் ஏதும் தப்பா நினைக்க மாட்டேன். நீ பயபடாமல் சொல்லுடா. நீ யாரை விரும்புகிறாய்? " ராபின் தைரியம் ஊட்டினான்.
           "நான் அசீமாவை விரும்புகிறேன்."  சொல்லி முடிக்குமுன்பு என் உடலெல்லாம் வேர்த்து விட்டது.
              ராபின் என்னை வியர்பாகப் பார்த்தான். ' நீ உண்மையில் தான் சொல்லுகிறாயா?" நம்ப முடியாமல் கேட்டான். நான் ஆம் என்று தலையசைத்தேன்.
             நீ சொல்லத் தயங்கிய போது, நீ எனது தங்கைகளில் ஒருத்தியை தான் விரும்புகிறாயோ என்று நினைத்தேன். கதை இப்படி போகிறதா? " அவன் பரிகாசமாகப் பேசினான்.

            "தப்பா நினைக்காதடா மச்சி." நான் குற்ற உணர்வில் தயக்கமாக பேசினேன்.

    " டேய், நீ எனது தங்கையை விரும்பி இருந்தா கூட உனக்கு நான் சபோர்ட் பண்ணுவேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதா? உன்னைப் போல ஒருத்தன் காதலிக்க பெண்கள் கொடுத்து வைக்கணும். நான் இருக்கிறேன்  உனக்காக." ராபின் ஆதரவாக பேசினான்.
      "ஆமா அவளுக்கு உனது காதல் தெர்யுமா?"
     இல்ல ராபின், நான் தான் அவளை விரும்புகிறேன். அவள் விரும்புகிறாளா என தெரியாது."
      " தெரிஞ்சிகிட்ட போச்சி. சரி அவ நமது மதம் இல்லை. அவ முஸ்லிம். அது உனக்கு தெரியும் தானே"
          நான் ஆம் என தலையசைத்தேன்.
   " இதால பிரச்னைகள் இரண்டு பக்கமும் வரும். உனக்கு தெரியும் தானே?"
      " தெரியும் ராபின். அதை பற்றி நான் கவலைப்படவில்லை. உனக்கே தெரியும் நான் இதுவரை இந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. இவளை பார்த்த நாள் முதல் நான் நானாக இல்லை ராபின். அவளுக்காக எதையும் செய்யலாம் என தோன்றுகிறது. அவள் கிடைப்பாள் என்றால் நான் எல்லாவற்றுக்கும் தயார்." நான் உறுதியுடன் சொன்னேன்.
  " சரி, அவள் மனதையும் முதலில் அறிவோம். ஆனால் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். அவளை எந்த காரணத்துக்காகவும் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கை விட மாட்டேன் என் சத்தியம் செய். நான் உனக்கு எல்லா வகையிலும் உதவி பண்ணுவேன். ஏனென்றால் அவளும் எனக்கு ஒரு தங்கை போலத்தான்."
        "நான் ராபினின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன். சத்தியமாக  யாருக்காகவும் எதற்காகவும் அவளை கைவிட மாட்டேன்."
      " சரி பார்ப்போம் உன் நெற்றியில் அவள் பெயர் எழுதப்பட்டு இருகிறதா என."

         அன்று முதல் அவள் வீட்டுக்கு வந்தால் ராபினும் அவன் தங்கைகளும் என்னையும் அவளயும் ஒன்றிணைத்து கிண்டல் பண்ணத் தொடங்கினார்கள். ராபின் அவன் தங்கைகளிடமும் எனது காதலை சொல்லிவிட்டான்.
       அவர்கள் செய்யும் பரிகாசத்துக்கு அவள் மறுப்பு சொல்வதில்லை. மாறாக நாணத்துடன் சிரிப்பாள்.

        இப்படி நாட்கள் ஓடின. அவளுக்கும் என்மேல் ஈடுபாடு இருப்பதாகவே எங்களுக்கு தோன்றியது.
     விடுமுறை நாட்களில் அவள் ராபின் வீட்டுக்கு வந்து தங்கி இருந்து விட்டு மாலையில் போகும் போது நானும் ராபினும் தான் பஸ்ஸில் அவள் வீடு வரை துணைக்குப் போவோம்   
       
       அப்படி பஸ்ஸில் போகும் போது என்னை அவள் அருகில் இருக்க சொல்லிவிட்டு ராபின் தனியாக போய் அமர்வான். அவள் அருகில் தனியாக இருந்தாலும் என் காதலை பேச எனக்கு வார்த்தைகள் வராது. ஒன்றுமே பேச மாட்டேன். அவளும் ஏதும் பேசமாட்டாள்.
          அவளை விட்டு வரும் போது ராபின் என்னை தாறுமாறாக திட்டுவான், நான் பேசாமல் இருப்பதற்காக. இப்படி இருந்தால் எப்படி உன் காதல் நிறைவேறும் என கத்துவான். என்றாலும் அவள் அருகில் இருக்கும் போது வார்த்தைகள் தொண்டையை தாண்டி வருவதில்லை.
           கடைசியில் ஒரு நாள் பஸ்ஸில் ஏறும் போது என்னை வேறு இருக்கையில் அமரச் சொல்லி சைகை காட்டி விட்டு அவன் அவள் அருகில் அமர்ந்தான். நான் அவர்கள் பின் இருக்கையில் அமைந்தேன்.
     பஸ் ஓடிக்கொண்டிருந்தது. ராபின் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
   " அசீமா நான் உன்னிடம் ஒரு விஷயம் பேசணும்."
    அவள் என்ன என்பது போல ராபினை பார்த்தாள்.
   " அசீமா உன்னை குமார் விரும்புகிறான். வேறு யாராறிருந்தாலும் நான் உன்னிடம் இதைப் பற்றி பேசி இருக்க மாட்டேன். குமார் எனது நல்ல நண்பன். அது மட்டுமல்ல எனக்கு தெரிந்த வரை ரொம்ப நல்லவன். இது வரை எந்த பெண்ணையும் அவன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அவன் மனதில் முதலில் காதலை உண்டாக்கிய ஒரே பெண் நீ தான்.
உன்னை பார்த்தது முதல் உன் நினைவில் இருக்கிறான். உன் விருப்பத்தை தெரிந்து கொள்ளலாமா?"
          அவள் சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். பின்னால் இருந்த எனக்கு குளிர்ஜுரம் வந்தால் போல உடம்பு முழுவதும் நடுங்கியது. என்ன சொல்லப் போகிறாளோ என் நடுக்கமாக இருந்தது

       அவள் மெதுவாக வாய் திறந்தாள்." எனக்கு குமார் என்னை விரும்பும் விஷயம் நேற்றே தெரியும். மல்லிகா ( ராபினின் தங்கை) நேற்று ஆபீஸ்சில் வைத்து சொன்னாள்."
         "சொன்னாளா, என்னிடம் அது பற்றி ஏதும் அவள் சொல்லவில்லை." ராபின் ஆச்சரியமாக சொன்னான்.
        " நான் தான் சொன்னதாக சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். உங்கள் வாயால் வரட்டும் என்று இருந்தேன்."
           " அதும் ஒரு வகையில் நல்லதாக போய் விட்டது. சரி உனது விருப்பம் என்ன?" ராபின் ஆவலுடன் கேட்டான்.
            என்னை யார் காதலிப்பது? நல்லவரா இல்லை கெட்டவரா?" அவள் குறும்பாகக் கேட்டாள்.
         " நல்லவன் தான்." 
 " அப்போ அவர் அல்லவா கேட்க வேண்டும்? நீங்கள் என்ன அனுமாரா?"  அவள் கலகலவென சிரிந்தாள்.
        "அட போம்மா, அவன் காதலை என்னிடம் சொல்லவே என்ன பாடுபட்டான். உன்னிடம் சொல்வதென்றால் மறுஜென்மம் வரை நீ காத்திருக்க வேண்டும். அப்போதும் என்னை தான் கூப்பிடுவான்." ராபினும் ஆவலுடன் சேர்ந்து கொண்டான்.
எனக்கு சரியான கூச்சமாக இருந்தது.

        "சரி சரி கதைக்கு வருவோம். உனது விருப்பம் என்ன? " ராபின் அவளிடம் கேட்டான்.
     ', உங்கள் தங்கைகளின் ரெகமெண்டண்ட்கலை பார்க்கும் போது பயப்படாமல் விருப்பம் என்று சொல்லத்தான் தோணுது. அது போக நான் பழகியவரைக்கும் எந்த குறையும் தெரியல. சோ எனக்கும் ஓகே தான்."
       எனக்கு சந்தோசத்தில் சத்தம் போட்டு அசீமா ஐ லவ் யூ என்று கத்த வேண்டும் போல இருந்தது. பனிமலையில் நின்னு ஐஸ் க்ரீம் சாப்பிட்டது போல உடம்பு முழுவதும் ஜில் என்று இருந்தது.
         அதன் பிறகு அடிகடி நாங்கள் தனிமையில் சந்தித்தோம். நிறைய பேசினோம். வாழ்கையே அழகாகத் தெரிந்த்தது. உலகமே சொர்க்கமாகவும் அவள் தேவதையாகவும் தெரிந்தாள்.
      அவளுக்கு 4 தங்கைகள். ஒரு அண்ணன். அவன் திருமணம் முடித்து குடும்பஸ்தன். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். சிறிது கஷ்டப்பட்ட குடும்பம். அவள் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது.
         எனக்கும் 2 அக்காவும் 2 தங்கைகளும் இருந்தார்கள். நான் ஒருத்தன் தான் ஆண்பிள்ளை. ஒரு அக்காவுக்கு திருமணம் முடிந்து விட்டது. 
அவள் முஸ்லீம் நான் கிறிஸ்தவன்.
          கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தான் ஆகா வேண்டும் என்பது பழமொழி. எங்கள் காதலும் எங்கள் வீட்டாருக்கு தெரிய வந்தது. காதலில் நாங்கள் உலகை மறந்திருந்தாலும், உலகம் விழித்திருந்து எங்களை வேவு பார்க்கத்தானே செய்யும். அப்படி பார்த்தவர்களால் அவள் வீட்டுக்கு தெரிய வந்தது. அவள் வீட்டில் பிரச்சனை ஆரம்பமானது.
        அவள் தனியே வருவது குறைந்தது. வேலைக்கு போகும் போதும் அண்ணன் கூட வரத்  தொடங்கினான்.
              திடீர் என அவளை வேலையில் இருந்தும் நிறுத்தி விட்டார்கள். ராபினின் தங்கை நிலைமையை அறிய அவள் வீட்டுக்கு போன போது அவள் வீட்டில் யாரும் அவளுடன் முகம் கொடுத்து பேசியில்லை அசீமாவையும் அவளுடன் பேச விடவில்லை.
     எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவளை பார்க்காமல் பேசாமல் ஒவ்வொரு நாளும் நரகமாக தோன்றியது.
       இதற்கிடையில் எனது சின்ன அக்கா நான் அசீமவை பற்றி எனது டைரியில் எழுதி வைத்திருந்ததை பார்த்து விட்டு அம்மாவிடம் போட்டு கொடுத்து விட்டாள்.
          எங்கள் வீட்டிலும் பிரச்சனை ஆரம்பமானது. முதலில் எனக்கு ஒரு தொழில் இல்லை அது போக மதப் பிரச்சனை. மதம் தான் மனிதர்களை மதம் கொள்ள வைக்கிறதே.
         என் வீட்டில் எனக்கு ஆறுதல் எனது அப்பாவும் பெரிய அக்காவும் தான்.  இருவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள். அதும் அப்பா எதையும் தெளிவாக யோசிப்பவர். அக்கா என்மேல் உயிர்.
      அம்மா இந்த காதலுக்கு சம்மதியேன் என் ஒற்றை காலில் நின்றாள். நானும் என்பங்குக்கு அவளை என்னால் மறக்க முடியாது என் உறுதியாக இருந்தேன்.

      ஒரு நாள் ராபின் தங்கைக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள் அடுத்த நாள் அவளும் அவள் தங்கையும் கடைக்குப் போவதாக. என்னை வரச் சொல்லி இருந்தாள்.
        அடுத்த நாள் அவள் சொன்ன நேரத்துக்கு அவள் சொன்ன கடைக்கு போனேன். அவள் வந்திருக்கவில்லை. நான் அந்தக் கடையை விட்டு சிறிது தூரம் போய் அவள் வரும் வரை காத்திருந்தேன். கடையில் நின்று வேறு யாராவது வந்து விட்டால் பிரச்சனை தானே. அதனால் கொஞ்சம் தூரமாக போய் நின்றேன்.
          சிறிது நேரம் கழித்து அவள் தங்கையுடன் வந்தாள். நான் நிற்பதை வரும் போதே  பார்த்து விட்டாள். என்னையும் அந்தக் கடைக்குள் வரும் படி சைகை காண்பித்து விட்டு உள்ளே சென்றாள். நானும் உள்ளே சொன்றேன்.
அவள் தன தங்கைஎடம் தேவையானதை வாங்கும் படி சொல்லி விட்டு என் அருகில் வந்தாள். அந்த தங்கை அவளுக்கு சபோர்ட் போல தெரிந்தது. அவள் என்னை பார்த்து புன்னகைத்து விட்டு வேறு பக்கம் சென்றாள்.
        அசீமாவின் முகம் வாடியிருந்தது. கண்கள் சோர்ந்து போய் இருந்தன. அதில் இருந்த ஒளியை காணவில்லை. என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அதில் சோகம் தெரிந்தது.
         என்ன நடந்தது அசீமா? உன்னை மறுபடி பார்பேன என தவித்து விட்டேன்." என் கண்கள் பனித்தன.
         "எனக்கும் தான் குமார். நான் வீட்டுக் கைதியாகி விட்டேன். எல்லாம் வெறுப்பாக இருக்கிறது." அவள் தளுதளுதக் குரலில்  பேசினாள்.
          " சரி இப்போது என்ன தான் சொல்கிறார்கள்?"
     " என்ன சொல்ல போகிறார்கள்? இந்த மதம் தான் நம் முன்னே இருக்கும் சுவர். நானும் எத்தனையோ போராடி விட்டேன். எந்த ஜென்மத்திலும் வேறு மதத்தவனுக்கு என்னை கொடுக்க மாட்டார்களாம். அப்படி என் விருப்பம் போல நடப்பதென்றால் வீட்டில் எல்லோரும் தற்கொலை பண்ணிக் கொள்வார்களாம். எங்கும் போக விடுகிறார்கள் இல்லை . அப்படி போனாலும் யாராவது கூட வருகிறார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை குமார்." அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
          எனக்கு மனமே வெடித்து விடும் போல இருந்தது. அவளை நான் என்றும் இப்படி பார்த்தது கிடையாது. அவள் சிரித்த முகம் எங்கோ தொலைந்து போனது.
       " நான் என்ன பண்ணட்டும் , சொல் அசீமா, உனக்காக எதையும் பண்ணத்தயார். மதம் தான் தடை என்றால் நான் உங்கள் மதத்துக்கு வருகிறேன். அப்போது சரி உன்னை எனக்கு தருவார்களா?"
        " குமார் முதலில் உங்களுக்கு ஒரு வேலை இல்லை. அது போக உங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களுக்கும் கல்யாண வயதில் அக்கா, தங்கைகள் இருக்கிறார்கள். உங்கள் மத மாற்றத்தால் அவர்கள் எதிர்காலம் என்னாகும்? "

       அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை என்னிடம்.
  " நான் யாரை  பற்றியும்  கவலைப்படவில்லை அசீமா. நீ கிடைக்க நான் என்ன வேணுமானாலும் பண்ணுவேன். நீ இல்லாவிட்டால் நான் என்னாகுவேனோ எனக்கே தெரியாது. நான் என்ன பண்ணும் சொல்லு." எனக்கு மனம் வெடித்து விடும் போல இருந்தது.
      " குமார் நமது நலனுக்காக நமது குடும்பத்தை சிதைப்பதா? நாம் முடிந்தவரை போராடுவோம். அதன் பிறகு இறைவன் விட்ட வழி. என்னால்  மறுபடியும் எப்போது உங்களுடன் பேச கிடைக்குமோ தெரியவில்லை. என்னால் முடிந்தால் ராபின் வீட்டுக்கு மெசேஜ் அனுப்புகிறேன். டைம் ஆச்சி நான் போகணும். இல்லாட்டி வீட்டுல சந்தேகப்படுவாங்க."
    அவள் புறப்பட்டாள். அவளை பிரியப் போகிறோம் என்றதும் தவிப்பாக இருந்தது. அவளுடன் அப்படியே கூட போகணும் போல இருந்தது.
         “குமார் கவலைபடாதிங்க. நம்ப தலையில் என்ன எழுதி இருக்கோ அது தான் நடக்கும். மூளையை போட்டு குழப்பிக்காதிங்க. நடப்பது நடக்கட்டும் என அமைதியாக இருங்க. இது தான் என்னால சொல்ல முடியும். நாம் மறுபடி சந்திப்போமா எனக்கு தெரியல."

     அவள் போய் விட்டாள்.  எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. அவள் இல்லாமல் ஒரு வாழ்க்கையா? நினைத்துப் பார்க்க முடியவில்லை. எங்காவது அமர்ந்து மனம் விட்டு அழவேண்டும் போல இருந்தது. நான் நடை பிணமாக வீடு வந்து சேர்ந்தேன்.
        ஒரு 3 மாதம் ஆகிவிட்டது அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை. அவள் நினைவு நாளுக்கு நாள் என்னை  கொல்ல ஆரம்ம்பித்தது. பைத்தியம் போலானேன். தாடி வளர்ந்து, உடம்பு மெலிந்து கிட்ட தட்ட நடைபிணம் போலானேன்.
         என்னை பார்த்து வீட்டாருக்கும் கவலை கூடியது.  என் நிலை பொறுக்க முடியாமல் அப்பா ராபினை கூட்டிகொண்டு அசீமா வீட்டுக்குப் போய் இருக்கிறார். எது எனக்கோ வீட்டில் யாருக்கும் தெரியாது. அங்கு போய் என் நிலை சொல்லி அசீமாவை தன் மகனுக்கு கட்டித் தரும் படி கேட்டிருக்கிறார். அவர்கள் மறுத்து அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள். இது சில நாட்களுக்குப் பிறகு ராபின் சொல்லி தான் எனக்குத் தெரியும்.
        அப்பாவை நினைக்க பெருமையாக இருந்தது. அதே நேரம்  அழுகை வந்தது. எத்தனை அருமையான அப்பா. எனக்காக போய் அவமானப்பட்டு வந்திருக்கிறார். அவர் காலில் விழுந்து அழ வேண்டும் போல இருந்தது.
           ஒரு மாதம் போய் இருக்கும். ராபின் வந்து வீட்டுக்கு வரும் படி அழைத்தான். நானும் போனேன்.
“குமார் நேற்று அசீமா வந்திருந்தாள் அவள் அம்மாவுடன். இந்த கடிதத்தை உன்னிடம் தரச் சொல்லி விட்டு போனாள்." ராபின் ஒரு கடிதத்தை கையில் தந்தான்.

      நான் படபடக்கும் நெஞ்சுடன் கடிதத்தை படித்தேன். அதில் ஒரு சில வரிகளே இருந்தன.
       " குமார் என்னை மறந்து விடுங்கள். நான் நாளை வெளிநாடு போகிறேன்." கடிதத்தில் இருந்தது அவ்வளவு தான்.
     எனக்கு தலை சுற்றியது. கீழே விழுந்து விடாமல் இருக்க அருகில் இருந்த கதிரையை பிடித்துக் கொண்டேன். கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் கொட்டியது
     எல்லாம் முடிந்து விட்டதா? என் காதல் அவ்வளவு தானா?எத்தனை இலகுவாக சொல்லி விட்டாள், மறந்து விடு என. உண்மை காதலின் நிலை இது தானா? என் மனம் வலியில் அழுதது.
         “அவ நேத்து வந்தாட மச்சி. அவ சொந்தகாரங்க யாரோ கனடால இருக்கிறாங்களாம். அவங்க தான் அவளுக்கு அங்கு வேலை பார்த்து கொடுத்திருக்கிறார்கள். நாளை விடியக் காலையில் பயணமாம். பயணம் சொல்ல அம்மாவுடன் வந்திருந்தாள். அம்மா கூட இருந்ததால் ஒன்றும் பேச முடியவில்லை மச்சி. "
        என்னால் ஏதும் பேச முடியவில்லை. பேசும் நிலையில் நான் இல்லை. உலகமே சூனியமானது போல தோன்றியது.

           நாட்கள் நகர்ந்தன. எனக்கு ஊரில் இருக்கவே பிடிக்கவில்லை. அவள் நினைவு என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்ம்பித்து. இப்படி இருந்தால் நான் பைத்தியம் ஆகிவிடுவேன். மறந்து விடு என்று போய் விட்டவளை நினைத்து பைத்தியம் ஆகுவதை விட எனது குடும்பத்துக்காக உழைக்கலாம்  என வெளிநாட்டில் வேலை தேட ஆரம்பித்தேன். வேலையும் கிடைத்தது. வெளிநாடு வந்து 5 வருடங்களில் அக்கா, தங்கைகளின் திருமணத்தையும் முடித்து விட்டேன். அவர்கள் திருமணத்துக்கு கூட நான் ஊருக்கு போகவில்லை.
         அவள் இல்லாத ஊருக்கு போகவே பிடிக்கவில்லை. 5 வருடங்களாக அவள் நினைவை மட்டும் துணையாய் கொண்டு இருந்து விட்டேன்.

            விமானம் தரை இறங்கப் போவதாக அறிவித்தார்கள். நான் நினைவுகளை மூட்டை கட்டி விட்டு இறங்க ஆயத்தமானேன்.
         விமானம் தரையிறங்கி நான் விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்துக்குள் நுழைத்தேன் .
        இந்த 5 வருடங்களில் விமான நிலையம் முற்றாக மாறிபோய் இருந்தது. நான் கஸ்டம்ஸ் எல்லாம்  முடித்துக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்தேன். பாங்கில் பணத்தை மாற்றிக் கொண்டு டாக்சி பிடிக்கலாம் என அந்த கவுண்டரை நோக்கி நடந்தேன். வரவேற்பறை நிரம்பி வழிந்தது.. வருபவரை வரவேற்கும் ஆவல் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.
      எல்லோரும் பார்த்தபடி நடந்த என் நடை பிரேக் போட்டது போல திடீரென நின்றது.

      அங்கே நிற்பது யார்? என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. கண்களை கசக்கிக் கொண்டு மறுபடி பார்த்தேன்.
       அவளே தான். நான் கனவு காண்கிறேனா என் கையை நானே கிள்ளிப் பார்த்தேன். வலித்தது.
          அவளா அல்லது வேறு யாராவதா?  அதே மின்வெட்டும் கண்கள். அதே தேன் சொட்டும் புன்னகை. கொஞ்சம் மெருகேறி பார்க்க இன்னும் அழகாக இருந்தாள்.
          யாரை வரவேற்க காத்திருக்கிறாள்? ஒரு வேளை அவள் கணவன் இன்று வருகிறானோ? கேள்விகள் அலைபாய நான் மெதுவாக அவளை நோக்கி நடந்தேன். அவள் கூட யாரும் இல்லை. தனியாக நின்றிருந்தாள்.
              நான் வருவதை அவளும் பார்த்து விட்டாள். அவள் முகத்தில் அலாதியான ஒரு புன்னகை.
               நான் அவள் அருகில் சென்றேன். " எதிர்பாராத சந்திப்பு இது. எப்படி இருக்கிறிங்க? யாரை வரவேற்க இங்க நிட்கிரீங்க. உங்க கணவர் இன்னைக்கு வருகிறாரா? நான் கேள்விகளை அடுக்கிக் கொண்ண்டு போனேன்.
        எனது கணவர் இல்லை, எனது வருங்கால கணவர் இன்று வருகிறார். அவரை வரவேற்க வந்தேன்.
     ஓ இன்னும் கல்யாணம் ஆகவில்லையா இவளுக்கு. மனதில் ஒரு சின்ன சந்தோசம்.
          " நான் உங்களுக்கு கல்யாணம் முடிந்து குழந்தைகளும் இருக்கும் என்று நினைத்தேன்."
         அவள் குறும்பாக சிரித்தாள். "ஆமா தனியாகவா விமான நிலையம் வந்திங்க? உங்க வீட்டில் ஒருத்தரும் வரவில்லையா? "
        " நான் எனது மாமா, மாமியோட தான் வந்தேன். " அவள் முகத்தில் புன்னகை மின்னியது.
        " எங்க அவங்க?" நான் ஆவலுடன் கேட்டேன்.
  அதோ அங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள்." அவள் கை நீட்டிய திசையை நோக்கினேன்.
            மறுபடி அதிர்ச்சி. அங்கே உட்கார்ந்து இருந்தது எனது அப்பாவும் அம்மாவும்.
             அதிர்ச்சில் நான் பேச வார்த்தை வராமல் தவித்தேன்.
அப்பா அங்கிருந்து அன்பாக கையை ஆட்டினார்.
            எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுகமில்லாத அப்பா இங்கே எப்படி? அதும் இவள் எப்படி அம்மா அப்பா கூட? எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.
         என் மன ஓட்டங்களை புரிந்து கொண்டது போல அசீமா பேசினாள். உங்கள் குழப்பத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்கிறேன். வாங்க முதலில் அப்பா அம்மாவிடம் போவோம்." அவள் பின்னால்  நான் நடந்தேன்.
           அப்பா அன்பாக என்னை தழுவிக் கொண்டார். அம்மா குழந்தை போல கண்ணீர் வடித்தாள். நான் அம்மாவை பாசத்துடன் தழுவிக் கொண்டேன்.
           இந்த 5 வருசமா நீ எங்களை எல்லாம் மறந்துட்ட இல்ல? " அம்மா சோகமாக கேட்டாள்.
        உங்களை எல்லாம் எப்படி அம்மா என்னால் மறக்கக் முடியும்? அத்தனை பாசம் இல்லாத பிள்ளை நான் இல்லை. என் நிலை, நான் எப்படி வெளிநாடு போனேன் என்று உங்களுக்கே தெரியும். எல்லாவற்றையும் மறக்க 5 வருடங்களாக முயன்றும் முடியவில்லை. இப்போதும் அப்பாவுக்கு சுகமில்லை என்று சொன்னதால் தான் வந்தேன்."
           இல்லாவிட்டால் நீ வர மாட்டாய் என்று எங்களுக்கும் தெரியும். அதனால் தான் அப்படி சொன்னோம்." அப்பா அன்புடன் பேசினார்..
     " அது சரி இவள் எப்படி உங்களுடன்? இவள் வீட்டார் எங்கே?"
       "அசீமா நீ எப்போது வெளிநாட்டில் இருந்து வந்தாய்?" நான் குழப்பத்தில் கேட்டேன்.
          எல்லாவற்றுக்கும் போகும் வழியில் பதில் சொல்வாள். வா வீட்டுக்குப் போவோம். " அப்பா சிரிப்புடன் போக புறப்பட்டார்.
    ஒன்றும் புரியவில்லை. எல்லாம் கனவு போல இருந்தது. கண்ணை விட்டு மறைந்தவள் கண்முன் நிற்கிறாள். அதும் என் பெற்றோருடன். குழப்பமாக இருந்தாலும் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.
         எல்லோரும் வண்டியில் ஏறி புறப்பட்டோம். முன் இருக்கையில் அப்பா இருந்தார். பின் இருக்கையில் நானும் என் அருகில் அவளும் அவள் அருகில் அம்மாவும் இருந்தோம்.
        "சரி இப்போ சரி என்ன நடக்குது என்று சொல்லுங்களேன். இல்லாட்டி என் தலை வெடித்துவிடும் போல இருக்கு." நான் தாங்க முடியாமல் கேட்டேன்.
       மூவரும் சிரித்தார்கள். "சரி நான் சொல்லுகிறேன்." அசீமா முன்வந்தாள்.
        நான் என்னை மறந்து விடுங்கள் என்று கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு போனேன் தானே.என் வீட்டுக்கு உங்க அப்பா வந்து என்னை பெண் கேட்டதும் என் வீட்டார் மறுத்ததும் உங்களுக்கு தெரியும் தானே.அதன் பிறகு நான் ஏதும் தப்பான முடிவு எடுத்து விடுவேன் என எனக்கு சம்மந்தம் பேச தொடங்கினார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
   " நாம் நினைத்தாலும் ஒன்று சேர முடியாத நிலை. முதலில் உங்களுக்கு ஒரு தொழில் இல்லை. அடுத்தது நீங்கள் விரும்பிய படி என் மதம் மாறி வந்தால் உங்கள் அக்கா தங்கைகளின் எதிர்காலம் கேள்விகுறி ஆகிவிடும். உங்கள் அப்பா விரும்பியபடி நான் உங்கள் வீட்டு மருமகள் ஆனால் எனது தங்கைகளின் எதிர்காலம் நாசமாகிவிடும். அவர்களை யாரும் திருமணம் முடிக்க மாட்டார்கள். எல்லாம் நடக்கட்டும் என்று நான் காத்திருந்தால், எனக்கு கல்யாணம் நடந்து விடும். நமக்கு தேவை கால அவகாசம். நீங்கள் உங்கள் கடமைகளை முடிக்க வேண்டும். நானும் எனது கடமைகளை முடிக்க வேண்டும்.அதன் பிறகு யாருக்கும் பயப்படத் தேவை இல்லை.
       அதனால் தான் நான் வெளிநாடு செல்ல முடிவெடுத்தேன்.
உங்களை மறந்து விடுவதாக, நான் வெளிநாடு போய் வந்து அவர்கள் விருப்பப்படி நடப்பதாக சொன்னதும் எனது வீட்டார் உடனே சம்மதித்தனர். அவர்கள் முன்பாகத் தான் உங்களுக்கு கடிதமும் எழுதினேன்.
       இதை எல்லாம் உங்களிடம் சொல்ல  முடியாது. சொல்ல எனக்கு அவகாசமும் இல்லை. சொன்னாலும் என் நினைவில் நீங்கள் உருப்படியாக ஏதும் பண்ண மாட்டிர்கள். என் நினைவில் பைத்தியம் போல அலைவீர்கள். என்னை மறந்து விடு என்று சொன்னால், நான் இனி இல்லை என்று கொஞ்ச நாளில் நீங்கள் நிலை மாறுவிர்கள் என எதிர் பார்த்து தான் அப்படி சொன்னேன். நான் நினைத்த படி நடந்தது. நீங்களும் வெளிநாடு சொன்றிர்கள் உங்களால் அக்கா தங்கைகளின் திருமணமும் முடிந்தது. நானும் எனது தங்கைகளின் திருமணங்களை முடித்து விட்டேன். அம்மாவும் இல்லை. போன  வருடம் அவர்கள் இறந்து விட்டார்கள். இப்போது எனக்கு பயமில்லை. நீங்களும் இப்போது முக்கிய கடமைகளை முடித்து விட்டிர்கள். அதனால் நான் ஊருக்கு திரும்பினேன்."
      நான் இடை மறித்தேன். " நீ மறந்து விடு என்று சொன்னதால் நான் உன்னை மறந்து விட்டு வேறு யாரும் காதலித்திருந்தால்?"
    அவள் கலகலவென சிரித்தாள். " உண்மை காதல் ஒரு முறை தான் வாழ்வில் வரும். அது வந்தால் இறந்தாலும் அது நம் மனதை விட்டு மறையாது. அந்த உண்மை காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்காக நீங்க மதம் மாறவும் தயாரா இருந்திங்க. நீங்க என்றும் மாற மாட்டீங்க என்று எனக்கு தெரியும்." அவள் சொல்வதை கேட்க சந்தோசமாக இருந்தது. இதனை நம்பிக்கையா இவளுக்கு என்மேல'
             நான் போனாலும் உங்க நடவடிக்கைகள் எல்லாம் எனக்கு தெரியும். அடிகடி நான் மல்லிகாவோடு போனில் பேசுவேன். அவள் மூலம் உங்களை பற்றி எல்லாம் எனக்கு தெரியும். நீங்கள் வெளிநாடு போனது, உங்கள் வீட்டில் நடந்த விசேஷங்கள் எல்லாம் எனக்கு தெரியும். நான் மல்லிகாவோடு பேசுவது ராபினுக்கு கூட தெரியாது. நான் தான் யாருக்கும் சொல்ல வேண்டாம் என அவளிடம் சத்தியம் வாங்கி இருந்தேன். நாங்கள் பேசுவது ராபினுக்கு தெரிந்தால் அவன் உங்களிடம் எப்படியும் சொல்லுவான். பிறகு நான் நினைத்தபடி ஏதும் நடக்காது. "
    அவள் நிறுத்தி மூச்சி வாங்கினாள். " சரி நீ எப்படி எங்கள் அம்மா அப்பாவோட  சேர்ந்தாய்?" நான் ஆவலுடன் கேட்டேன்.
         ' நான் ஊருக்கு வந்ததும் எனது அண்ணா மறுபடி எனது திருமண பேச்சை எடுத்தான். நான் உங்களை தவிர வேறுயாரும் முடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அண்ணன் பிரச்சினை பண்ணினான். நான் வீட்டை விட்டு போறதா சொல்லிட்டு  நேரே உங்க வீட்டுக்கு வந்தேன்.
  உங்க அம்மா அப்பாவிடம் எல்லாவற்றையும் சொன்னேன். அவங்களும் என்ன ஏத்துகிட்டாங்க." அவள் சந்தோசமாக சொன்னாள்.
     " உங்களை வர வைக்கணும். அத்தோட உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கணும் என்று நான் தான் அப்பாவுக்கு சீரியஸ் என கடிதம் போட சொன்னேன்." அவள் குறும்பாக என்னை பார்த்து சிரித்தாள்.
       “நீ எங்கள் மதம் மாற சம்மதமா? உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் வேண்டாம்.”
        அவள் அன்புடன் எனது கையை தனது கையால் பற்றிக் கொண்டாள். எனக்காக நீங்கள் மதம் மாற தயாராக இருக்கும் போது, உங்களுக்காக நான் மாற மாட்டேனா?
            அம்மாவின் முகத்திலும் அப்பாவின் முகத்திலும் சந்தோசப் புன்னகை தெரிந்தது.
      உண்மை காதலுக்கு ஏதும் தடை இல்லை தான். விட்டு கொடுப்பு, உண்மையான அன்பு இருந்தால் எந்த காதலும் உலகில் நிச்சியம் ஜெய்க்கும்


                 



       

       

     
« Last Edit: November 13, 2014, 09:11:03 AM by தமிழன் »

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: காதலுக்கு ஏது தடை
« Reply #1 on: February 11, 2014, 09:24:01 AM »



Somali chance eh ila ne story eluthura vitham oru author polave irku.. ne inum nerya storys eluthi ne periya
level la varanum nu :) wish panren.. na un strys ku fan agiten :) somali..
superbbbb.. no words to say.. inum unala better uh pana mudiyum. al the best .
ne oru eluthalara vantathuku apram engala ealam maranthiratha :) ftc forum la epavm un eluthu irkanum :)

Offline தமிழன்

Re: காதலுக்கு ஏது தடை
« Reply #2 on: February 11, 2014, 09:07:09 PM »
நான் என்னைக்கும் உங்க நண்பன் தான் பின்கி. எனது படைப்புகள் என்றும் FTC ல வரும். உனது அன்புக்கு நன்றிமா

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: காதலுக்கு ஏது தடை
« Reply #3 on: February 15, 2014, 02:39:12 PM »
உண்மை காதலுக்கு ஏதும் தடை இல்லை தான். விட்டு கொடுப்பு, உண்மையான அன்பு இருந்தால் எந்த காதலும் உலகில் நிச்சியம் ஜெய்க்கும்


Somali sema lines ithu .. rombo super uh elthrka alga irku kathai karpanaigl elam. unmayana stry uh life la patha mari irnthchu padkrapa.. oru eluthalar na avnga stry padikrapa nama avangaloda kathai la irka kathapaathirama thoananum namake nadakara pola athu mari irunthathu un story. neyum periya eluthalaraa vara en valthukal EN iniya nanbanukku

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: காதலுக்கு ஏது தடை
« Reply #4 on: June 22, 2017, 11:57:26 PM »
nan oru sec aluthutan
nanba sema

Offline thamilan

Re: காதலுக்கு ஏது தடை
« Reply #5 on: November 21, 2017, 10:48:35 PM »
nanri niya

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: காதலுக்கு ஏது தடை
« Reply #6 on: December 12, 2017, 04:35:42 AM »
"உண்மை காதலுக்கு ஏதும் தடை இல்லை தான். விட்டு கொடுப்பு, உண்மையான அன்பு இருந்தால் எந்த காதலும் உலகில் நிச்சியம் ஜெய்க்கும்..." so true!!!

Nice story  :'( :'( :'(

Offline thamilan

Re: காதலுக்கு ஏது தடை
« Reply #7 on: December 12, 2017, 01:37:35 PM »
masha
nanri

Offline SweeTie

Re: காதலுக்கு ஏது தடை
« Reply #8 on: December 13, 2017, 08:41:36 PM »
தமிழன் உங்க கதையை படிச்சு  எனக்கும் இப்போ கதை எழுதுற
ஆசை வந்திருக்கு.    கதை சூப்பர் .....வாழ்த்துக்கள்

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: காதலுக்கு ஏது தடை
« Reply #9 on: April 07, 2018, 11:47:35 PM »

தமிழ் ணா உங்க காதல் கதை என்னையும் அழ வைத்து விட்டது :'( :'(

 சூப்பர் அண்ணா  :) :)