Author Topic: நாம் இப்படியே விட்டுவிடப்படுவோமா?  (Read 973 times)

Offline Yousuf

அன்பு சகோதர, சகோதரிகளே! மகத்தான ஓர் உண்மையை ஏந்தி கொண்டு வரும் இம்மடலை மிக்க கவனத்துடன் படியுங்கள்.

நேர்வழியை பின்பற்றுபவர்களுக்கு இடேற்றம் உண்டாகட்டும்!

நிச்சயமாக நாம் இந்த உலகில் நிரந்தரமாக இருக்க போவதில்லை. எந்த ஆண்டில், எந்த நாளில், எந்த நேரத்தில் நம்மை மரணம் கவ்விகொண்டுவிடும் என்பதை அறியமாட்டோம். குர்'ஆண் கூறுகிறது:

"நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தாலும் சரியே! (மரணத்தை உங்களால் தடுக்க முடியாது)" (அல்-குர்'ஆண் 4 :78)

நீங்கள் பலகோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கலாம்; பல பதவிகளுக்கு அதிகாரியாக இருக்கலாம்; நினைத்ததை சாதிக்கும் வீரனாக இருக்கலாம் ஆனால், மரணத்தை விட்டு தப்ப முடியாது.

அல்லாஹ் கூறுகிறான் :

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில் தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சோர்கத்தில் நுழைவிக்க படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்ககூடிய (அற்ப) இன்பத்தை தவிர வேறில்லை." (அல்-குர்'ஆண் 3 :185)

மரணத்தை போல் மறுமையும் நிச்சயமானது!

மரணத்தை நம்மால் தவிர்க்க இயலாதது போல் மறுமை நாளையும் தவிர்க்க இயலாது. 'மறுமை' என்றால் என்ன தெரியுமா? அதுதான் இந்த உலகத்திற்கு ஓர் இறுதி நாள்! அந்த நாளுக்கு பிறகு எந்த நாளும் இல்லை; கிழமையும் இல்லை!

அல்லா கூறுகிறான்:

"எழுதப்பட்ட கடிதத்தை சுருட்டுவது போல் நாம் வானத்தை சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.  முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம் மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை செய்தே தீருவோம்." (அல்-குர்'ஆண் 21 :104)

"அந்நாளில் இந்த பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்தது)  வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்விற்கு முன் கூடிவிடுவார்கள்." (அல்-குர்'ஆண் 14 :48)


நிச்சயம் விசாரிக்கபடுவோம்!

அந்த நாள் ஒரு விசாரணை நாள். நியாயத் தீர்ப்பு நாள். இப்பூமியில் படைக்கப்பட்ட முதல் மனிதரிலிருந்து இறுதியாக பிறந்த கடைசி மனிதன் வரை எல்லோரையும் அல்லா விசாரிப்பான். அதற்காக மீண்டும் நம்மை உயிரோடு எழுப்புவான்.

நாம் மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலும் எரித்து சம்பலக்கப்பட்டிருந்தாலும், எந்த நிலையில் இறந்திருந்தாலும், நிச்சயம் மீண்டும் உயரி கொடுக்கப்பட்டு எழுப்பபடுவோம்.


குர்'ஆண் கூறுகிறது :

"மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவ(னான அல்லாஹ்  ஒருவ)னுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது. அந்நாளில் பாலுட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள். அவர்கள் ( மதியிழக்கும் காரணம்) போதையினால் இல்லை. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதனை கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிலந்துவிடுவார்கள்)"
(அல்-குர்'ஆண் 22 : 1 ,2)


இந்த உண்மையை மறந்தவர்களுக்கு அல்லாஹ் மேலும் கூறுகிறான்:

"அன்றி, மெய்யாகவே நீங்கள் சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) "தண்டனை எப்பொழுது வரும்?" என்றும் (பரிகாசமாகக்) கேட்கிறார்கள்.

ஒரே ஒரு சப்தத்தை தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்கவில்லை! (இதனை பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களை பிடித்து கொள்ளும்.

அந்நேரத்தில் அவர்கள் மரண வாக்குமூலம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)

(மறுமுறை) 'எக்காலம்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள். மேலும் "எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையிலிருந்து எழுப்பியவர்கள் யார்?" என்று கேட்ப்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) "அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் (உங்களுக்கு) கூறிவந்த உண்மையும் இதுதான்" (என்று கூறுவார்கள்).

அது ஒரே ஒரு சப்தத்தை தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டு வரப்பட்டு விடுவார்கள்.


அந்நாளில் எந்த ஆத்மாவுக்கும் (அதன் நன்மையை குறித்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்பட மாட்டது. அவர்கள் செய்தவற்றுகே தவிர ( வேறு எதற்கும்) அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டது." (அல்-குர்'ஆண் 36 :48 -54)

நிச்சயம் அல்லாஹ் நம்மை உயிர்ப்பிப்பான்!

அல்லாஹ் கூறுகிறான் :

மனிதனை ஒரு துளி இந்திரியத்தில் இருந்து தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாக (நமக்கு மாறுசெய்ய முற்ப்பட்டு) விடுகிறான். (மரணித்தவர்களை நம்மால் உயிர்ப்பிக்க முடியாதென எண்ணிக்கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரனத்தை நம்மிடம் எடுத்து காட்டுகிறான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகி போன இந்த எலும்பை உயிர்பிப்பவன் யார் என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான். (நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: முதன் முறையாக அதனை படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்பிப்பான். அவனே எல்லா படைபினத்தையும் மிக அறிந்தவன். (அல்-குர்'ஆண் 36 :77 -79)

மக்களில் பலர் தாங்கள் மறுபிறவி எடுத்து மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறப்பதை நம்பி வருகிறார்கள். இது ஒரு மாக கற்பனையாகும்; பொய்யாகும். இறைவன் நமக்கு இவ்வுலக வாழ்வை ஒரு தடவை மட்டுமே தருகிறான். இந்த வைப்பு ஒரு தவணை! இத்தவனை காலம் முடிந்துவிட்டால், இதே உலகில் மீண்டும் நம்மை படைக்க மாட்டான். நமது உயிர்களை, மறுமைநாள் வரை தன் கட்டுபாட்டிற்குள் வைத்து விடுவான்.

மறுமையில் என்ன நடக்கும்?

ஒவ்வொரு மனிதனும், தான் உலகில் வாழும்போது எப்படி வாழ்ந்தான், என்ன செய்தான் போன்ற விவரங்களை கொண்ட செயலேடுகள் அந்தந்த மனிதனின் தகுதியைப் பொறுத்து அவனுடைய வழக்கரத்திலோ, முதுகுக்கு பின்னாலிருந்து இடக்கரத்திலோ கொடுக்கப்படும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"ஆகவே (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ, அவர் மிக்க இலகுவாக கேள்வி கணக்கு கேட்க்கபடுவார். அவர் சந்தோசப்பட்டவராக (சொர்க்க சோலையிலுள்ள) தம்முடைய குடும்பத்தாரிடம் திரும்ம்புவார். எவருடைய செயலேடு அவருடைய முதுகு புறம் கொடுக்கப்பட்டதோ அவர் (தனக்கு) கேடுதான் என்று சப்தமிட்டுகொன்டே நரகத்தில் நுழைவார்". (அல்-குர்'ஆண் 84 :7 -12)

"ஒவ்வொரு மனிதனின் செயலை பற்றிய (விரிவான தினசரி குறிப்பை) அவருடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவருக்கு ஒரு புத்தகமாக வெளியே கொண்டுவருவோம். அவர் (தனக்கு முன்) அது விரித்து வைக்க பட்டிருப்பதை பார்ப்பார். (அச்சமயம் அவரை நோக்கி) "உன் (செயல்களை பற்றிய பதிவுப்) புத்தகத்தை நீ படித்துப்பார், இன்றைய தினம் உன்னுடைய கணக்கை பார்க்க நீயே போதுமானவன்" (என்று கூறுவோம்.) (அல்-குர்'ஆண் 17 :13 -14)


நன்மை, தீமைகள் எடை போடப்படும்!

மறுமைநாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை நிறுப்பதற்கு தராசுகள் வைக்கப்படும். அதில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் சிறிதும் அநீதியிளைக்கப்படாது.

"ஆகவே, எவர் ஓர் அணு அளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டு கொள்வார். (அவ்வாறே) எவர் ஓர் அணு அளவு தீமை செதிருந்தாரோ அதனையும் அவர், (அங்கு) கண்டு கொள்வார்". (அல்-குர்'ஆண் 99 :7 -8)

"எவர்களுடைய (நம்னையின்) எடை குறைகிறதோ அத்தகையோர் தமக்கு தாமே நட்டம் விளைவித்தவர்கள். அவர்கள் எந்நாளுமே நரகத்தில் தங்கி விடுவார்கள். அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்பு போசிக்கி கொண்டிருக்கும். அவர்கள் (உதடுகலேல்லாம் வெந்து சுருண்டு முகம்) விகாரமானவர்களாக இருப்பார்கள்". (அல்-குர்'ஆண் 23 :103 -104)

"எவரேனு ஒரு நன்மையை செய்தால் அவருக்கு அதை போல பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையை செய்தால் அதை போன்றதே தவிர (அதிகமாக) அவருக்கு கூலி கொடுக்கப்பட மாட்டாது. மேலும் அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்-குர்'ஆண் 6 :160)


சொர்க்கமும் நரகமும் உண்மையே!

சொர்க்கம் என்பது அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்ந்த நம்பிக்கையாலர்களுக்கென தயார் செய்து வைத்திருக்கும் இன்பங்கள் நிறைந்த இல்லமாகும். அதன் அருட்கொடைகளை எந்த கண்ணும் பார்த்தில்லை; எந்த மனிதனுடைய கற்பனையிலும் உதித்ததில்லை.

அல்லாஹ் கூறுகிறான் :

"அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நான் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண்குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது". (அல்-குர்'ஆண் 32 :17)

நரகம் என்பது வேதனைகள் நிறைந்த இடமாகும். தன்னை நிராகரித்த அநியாயகாரர்களுகென  அல்லாஹ் அதனை தயார் செய்து வைத்துள்ளான். அதில் உள்ள வேதனைகளும் மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அநியாய காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைதான் தயாற்படுத்தியுள்ளோம். அந்த நரகத்தின் சுவாலைகள் அவர்களை சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைபோலுள்ள நீரே அவர்களுக்கு கொடுக்கப்படும். (அவர் அதனை குடிப்பதற்கு முன்னதாகவே)
அது அவர்களுடைய முகத்தை சுட்டுக் கருக்கிவிடும். மேலும், அது மிக்க (அருவருப்பான) கேட்ட பானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கேட்டது". (அல்-குர்'ஆண் 18 :29)


வெற்றிக்கு வழி!

"ஆகவே (உங்களில்) எவர் அல்லாஹ்வை (ஏக இறைவனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறாரோ அவரை சொர்கங்களில் புகசெய்வான். அதில் சதா நீரருவிகள் ஓடிகொண்டிருக்கும். என்றென்றும் அவர் அதில் தங்கிவிடுவார். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்கையை அழகுபடுத்திவிடுவான்". (அல்-குர்'ஆண் 65 :11)

மறுத்தால் கேடுதான்!

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவர்கள் என்றென்றும் அதில் தங்கி விடுவார்கள். (அவர்களைக்) காப்பற்றுவோரையும் (அவர்களுக்கு) உதவி செய்வோரையும் அங்க அவர்கள் காண மாட்டார்கள். நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டி பொசுக்கும் நாளில் "எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீல்படிந்திருக்க வேண்டுமே?" என்று கதறுவார்கள்". (அல்-குர்'ஆண் 33:64 -66).