FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on November 09, 2018, 08:01:28 PM

Title: மன்னிப்பு
Post by: JasHaa on November 09, 2018, 08:01:28 PM
மன்னிப்பு 

மந்திர சொல்லடி  நீ
உன்னை வேண்டுபவர்க்கு  நீ எட்டாக்கனி 
பரம்பரியத்தில் நீ மகத்துவம் 
எளிதாக  கேட்கப்படும்  மன்னிப்பு
சில சமயங்களில்  கடந்து விடுகிறது 
வேண்டி விளையும் மன்னிப்பு சில சமயங்களில் நம்மை  ரணமாய்  வலிக்க  செய்கிறது
இறைவனே  தவறு  இழைத்தவனே...  வரங்களை வாரி வழங்கி  வஞ்சித்து  கொண்டவனே  !!
தவறுகள்  துரோகங்கள் அல்ல ...
குழந்தைகளுக்கு  கற்று  கொடுங்கள் மன்னிக்க
மன்னிப்பு நம்  ஸ்நேகிதியென  !
அண்ணனின் சீண்டல்கள் 
சிணுங்கலுடன்  கடக்க 
அக்காவின் கோபங்களை 
கொஞ்சலுடன்  கடக்க
தம்பியின் குறும்புகளை 
தாயன்புடன்  கடக்க
சாலையில் எளியோரின்  தவறுகளை  புன்னகையுடன்  கடக்க
உயிர் ஸ்நேகிதத்தின்   கலாட்டாக்களை  கனிவுடன்  கடக்க
சொல்லிகுடுகள் ....
தவறுகளுக்கு  தான் மன்னிப்பென்று  துரோகங்கள்....
 இதை எப்படி கடப்பது 
கண்களின்   நீராய்
செவிகளின் ரீங்காரமாய் 
தொண்டை குழியின்  நெருஞ்சி  முள்ளாய்
நெஞ்சாக்கூட்டில் நித்தமும்
அலைக்கழிக்கும்  அரூபமாய் 
இதயம் எனும் பெட்டகத்தின் 
கசக்கி  பிழியும்  வேதனையை
எனக்கு கற்று கொடுங்களேன் 
துரோகங்களை கடந்து செல்ல  ...
ஒன்றிரண்டு  துரோகங்கள்
ரணமாய் கீறிக்கிழிக்கும் ...
எனக்கு வலிப்பது  இல்லை....ஏன்னெனில் 
துரோகங்களே  என் வாழ்வு ....
வலி எனும் வாழ்வு  ....
Title: Re: மன்னிப்பு
Post by: SweeTie on November 12, 2018, 05:07:43 AM
கவிதை அருமை.    மூச்சுமுட்டும்  வரிகளை  விட்டு விட்டு எழுதினால்
கவிதை இன்னும் அழகு பெறும்.   வாழ்த்துக்கள்.   மேலும்  நந்தவனத்தில்
உங்கள் மலர்கள் பூக்கட்டும்
Title: Re: மன்னிப்பு
Post by: JasHaa on November 15, 2018, 11:36:06 PM
Nandri sis