Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 213  (Read 4018 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 213
இந்த களத்தின்இந்த  நிழல் படம் CHIKU அவர்களால்   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline JeGaTisH

கடலை உன் கால் நுனிக்கு கூட்டிவந்தேன்
உன் பவள பாதங்கள் நனையவேண்டுமென

சலிக்காது உன்னை
காண வரும் உதயம் போல
மனம் தளராது   நீ பணி  செய்யவேண்டும் 
பலன் தவறாமல் வந்தடையும்

காலங்கள் ஒவ்வொன்றும் பழமாகக் 
கனியும்  போது  பறித்துக்கொள் !

புரியாத   உன் அறிவுக்கு  சாட்சி
அழியாத இந்த  நீலக் கடல்

நீ காட்டும் அன்பு கடலளவு ஆனாலும்
நீ பார்க்கும் மக்கள்
கடல் வாழ்  மீன்கள் போல !

தண்ணீரில் கலந்திருப்பது உப்பு
பெண்பிள்ளை மேல் எவரேனும்
கை வைப்பின் அது தப்பு

பெண் பிள்ளைகளுக்கு
நல்ல தொடுதல் எது
கெ ட்ட தொடுதல் எது
என சொல்லி கொடுக்கும் முன்
 தொடுதலே தப்பு என தெரிந்துகொள்

காணும் அனைத்து மீன்களும்
நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல
அவைகளை தெரிந்து பழகுவது நன்று !

என் மனதில் வாழும்
என் செல்ல மஹாராணியே !
மணலினில் வீடு கட்டி
விளையாடும் சிறு முத்தே 
நாளை  நல்லதோர் விடியலைவேண்டி 
அனுதினமும் உயிர்ப்பேன் உனக்காய்  !
  !
« Last Edit: March 20, 2019, 08:55:08 PM by JeGaTisH »

Offline யாழிசை

ஆழியின் ஆழத்தைக் கூட அளவிடலாம்.....
ஆருயிர் தந்தையே... உன் அன்பின் ஆழத்தை ...
அகவைகள்  கடந்தாலும் அளவிட முடியவில்லையே....

அகத்திலும் முகத்திலும்
அன்பை உணர்த்தும் அப்பா ....
உமது அர்ப்பணிப்பு தான் அப்பப்பா......

கரம் கோர்த்து கடற்கரை மணலில் பதிந்த
காலடி தடங்கல் கண்களில் மறைந்தாலும்
உமது சிறு கண்கள் கொஞ்சும் பார்வை
ஒருக்காலும் மறையாது ... தந்தையே   

கடலின் அலைகள் உயருகையிலே ...
கடல் வானிலே கார்முகில்கள் கூடுகையிலே...
கரம் பிடித்து : கண்கள் மலர ...
கண்ணிமைக்காமல் இயற்கையை வியந்த
காலங்கள் கண் முன்னே நிற்கின்றன ... தந்தையே ..!


அலையின் ஆர்ப்பரிக்கும் சத்ததிலும் ....
அமுதென கேட்க்கும் உம் குரலும் ...
ஆண்டுகள் பல கடந்தும்...
ஆறா வடுவாக எமது காதின் மடலை ..
வருடி செல்கின்றன தந்தையே ...... 



Offline thamilan

கடற்கரையில் குழந்தைகள் கட்டிய
மணல் வீட்டைக் கூட
காலால் உதைக்க மனம் வராது
ஆனால் நீ ?
கையில் கிடைத்ததையெல்லாம்
வாரி
வாயில் போட்டுக்கொள்ளும்
பிஞ்சிக் குழந்தைகளையும்
வாரி ….
சீ உன் ஈரம் வெளிவேஷம் தான்

உன்னைக் காட்டி
என்குழந்தைக்கு எத்தனை முறை சொல்லியிருப்பேன்
நீ அழகானவள் அமைதியானவள் அன்பானவள் என
எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டாயே
உன் கோரத்தாண்டவத்தை கண்ட
என் குழந்தை
தண்ணீரைக்கண்டாலே அலறும்படி
செய்து விட்டாயே

உன் பவிசெல்லாம்  தெரிந்துதான்
எங்கள் பெரியவர்கள் உனக்கு பெயரிட்டார்கள்
பஞ்சபூதமென
கடலே….
இப்பொது புரிகிறது பூதமென்றால் என்னவென்று

ஓ.....
உடம்பு முழுவதும்
விஷம் கொண்ட கடலே
இப்போது தான் புரிகிறது
நீலநிறம் உனக்கு எப்படி
வந்ததென்று ….

உன்னை அலைமகள் என்று
கும்பிட்டோம்
இல்லை நீ கொலைமகள்
உன் உடல் பசிக்கு
எத்தனை உயிர்களை பலியாக்கினாய்
சிறுவர் பெரியோர் முதியோர் என்ற
பாகுபாடில்லாமல்
எல்லோரையும் அள்ளி விழுங்கி -இல்லை 
கடல் அரக்கி நீ

எங்கள் உயிர்களை பொய்யாக்கினாய்
உடல்களை புழுவாக்கினாய்
உணர்வுகளை சருகாக்கினாய்
எங்கள் விளை நிலங்களை தரிசாக்கினாய்
பட்டப்பகலில் நிலத்தை கற்பழித்த
உனக்கில்லையே ஒரு
இ. பி. கோ.   
« Last Edit: March 18, 2019, 07:08:38 PM by thamilan »

Offline SweeTie

நீலப் பெருங்கடலே  நிம்மதி  வேண்டுமென 
மாலைப்  பொழுதினிலே  உன் காலடி தேடிவந்தேன்
அலைகளை பிறப்பிக்கும் அன்னையும் நீ
உயிர்களை  பழிவாங்கும்   கொள்ளையும் நீ
அகிலத்தை அழித்திடும் சக்தியும் நீ
அதிர்ச்சியை தோற்றிடும்  அண்டமும் நீ

மேற்கில்   மறையும்  சூரியனும்
கிழக்கில் உதிக்கும்  சந்திரனும் 
காதலில்  நாணும்  மங்கைகள் போல் 
நானிச் சிவந்து வெட்கித்துப்போவர்   
இருளை விழுங்கிய கருப்பு பேரழகன்
காதலன்  நீ  அருகில்  இருக்கையில்

சின்னக் குழந்தை இவள்  முகத்தில்
பூரிப்பு  காணுகிறாள்  உனைக் காணுகையில்
அவள் கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பில் நானும்
கொள்ளை இன்பம்  கொள்கின்றேன் 
தீர்க்கமாய் தெரியவில்லை உன் ஆழம்  - இருப்பினும்
பெண்களின்  மன ஆழம் உன் ஆழமெனப்  புரிவேன்.

நாடிவரும் காதலரை சேர்த்துவைக்கும்  நீயே 
சேராத  காதலர்  உயிர் பறிக்கவும் செய்வாய்
உன் அலைக்  குழந்தைகளை அனுப்பி
சிறுவர் கட்டும் மணல்வீடுகளை  அழிக்கவும் செய்வாய்
காமக்  கொடூரர்களின்  கையில் சிக்கிய பெண்கள்போல்
உன்  கொடூர  பிடியில் சிக்கிய  நாடுகளும்  எத்தனையோ.

இயற்கை  அன்னையில்   ஒருத்தி நீ
நிலப் பரப்பைவிட  அதி பரப்பு கொண்டவள் நீ
கடல்மாதா   அலைமகள் என  பேயர்கள்  கொண்டவள் நீ
பெண்களை தொடரும் பிரம ராட்சதர்கள் வாழும்
அண்டத்தில்  நிகழும் அக்கிரமங்களால்   நீ
 கொள்ளும்  கோபம்   நியாயமானதே  தாயே
 

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
தந்தையானவன்,
சில நேரங்களில் எனது தாயுமானவன் நீ!
என்னுள் ஒரு தேடலை விதைத்தவன் நீ !!

விரல் பிடித்து நடை பயின்ற 
காலம் தொட்டு உன் நிழலில்...
வளர்ந்த எனக்கோ நீதானே
ஆதர்சநாயகன் !

என்றோ நீ ஸ்பரிசித்த மலரின்
மென்மையை பகிர்ந்து  என்னையும் 
மென்மையை உணர்ந்திடசெய்தாய்

இளவயதினில் நீ சந்தித்த 
சோதனைகளையும் , வேதனைகளையும் 
விவரித்து என்வாழ்வியல் 
பாதைகளை  எதிர்கொள்ள  செய்தாய்

பள்ளிபாடம் விடுத்தது நீ ரசித்த 
கம்பனையும் ,கல்கியையும் அறிமுகப்படுத்தி
எனக்கென்று உலகம் வியாபித்து தந்தாய்.. 

சில நேரங்களில் என் செயலால் 
உனை இம்சித்தபோதும்... கோபம்கொள்ளமல்
தேவதை என தாங்கியவன்...

காலங்கள் கடந்து முன்னோக்கி போய்விட்டது..
மீண்டும் உன்வி ரல் கோர்த்து நடக்க 
ஆசையாய் தேடுகிறேன்..
கரங்களை, விரல்களை...

Offline Jabber

அங்கும் இங்கும் ஓடும் நீர் நீ...
    தோளில்  சுமக்கும் தேர் நான்...

பிரிந்தால் வாட்டும் நெருப்பு நீ..
   உலகம் காட்டும் பொறுப்பு நான்..

ஓடி மறையும் நீராவி நீ..
  வாடி வதங்கும் மேதாவி நான்..

அன்பை பொழியும் மேகம் நீ..
       அள்ளி  பருகும் தாகம் நான்...

புன்னகை பொழியும் மழை நீ..
     நனைந்து போன எழுத்துப்பிழை நான்...

பாசம் பொதிந்த குளம் நீ..
     சுற்றி பூக்கும் சோளம் நான்..

தாவி ஓடும் ஆறு நீ..
    தாங்கி நிற்கும் சேறு நான்...

என் தேசம் சூழ்ந்த கடல் நீ...
          நீந்தி பழகும் உடல் நான்...


Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
அன்பு மகளே !ஆசை மகளே !

என்னை தந்தையாக்கி தலைநிமிர செய்தவளே!
என்றும் தன்மானத்தை காக்க வந்தவளே !
இவ்வுலகில் வாழ சில அறிவுரைகள் !

வளரும் காலத்திலும் வாலிபத்தின் கோலத்திலும்
வாழ்க்கையை மாற்றி விட ..
அநேகர் வருவார் அடுக்காக ..
நண்பர்களை கவனமா தேர்ந்தெடு !

நன்றாகப் பழகும் அனைவரும் 
நண்பர்கள் இல்லை என்ற தெளிவு இருந்தால் ..
சில துரோகங்களையும்...
பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம் !

கல்வியில் சிறந்த விளங்கி ...
ஆத்ம திருப்தி அளிக்கும் வேலையை தேடிக்கொள் !
உன்  பலமும் பலவீனமும் அறிந்து
சமுதாயத்தில் உனக்கென்ன ஒரு இடம் ....
சிம்மாசனமிட்டு  அமர வேண்டும் !

மாட்டு சந்தையாயும் பங்கு சந்தையாயும் ஆன
கல்யாண சந்தையில் ...
உன்னை விலை பேச விடமாட்டேன் !
உன் மனதுக்கு பிடித்தவனை தேடி..
கண்முன்னே நிறுத்துவேன் !
உன் காதல் கணவனோடு ..
காலம் முழுக்க நீ வாழும் வாழ்க்கையை
ரசித்து மனம் மகிழ காண்பேன் !

உன் கண்மணிகள் பெற்று ...
சீரும் சிறப்புமாய் வளர்க்க..
அவர்களோடு இதே போல ..
இதே கடற்கரையில்  கை கோர்த்து...
விளையாட அழைத்து வருவேன் !

ஓர் தந்தை ஆக  எனது மனம் ...
துதிக்கிறது இறைவனிடம் !
என் குழந்தை போல பல தேவதைகள்
உலவும் இவ்வுலகை காப்பாற்றி விடு..
கயவர்கள் இல்லா கண்ணியம் மிக்க
சொர்கமாய் மாற்றி விடு !


« Last Edit: March 19, 2019, 01:13:32 PM by RishiKa »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.


என்னை முதன் முதலில் தூக்கி
என் நெற்றியில் முத்தமிட்டு
என் சின்ன கைகளுக்குள்
உம் விரலை இட்டு முகமலர்த்தவர் நீர்

என் புன் சிரிப்பிலும்
மழலை மொழியிலும்
குழந்தை குறும்பிலும்
இந்த உலகை மாறாதவர் நீர்

நான் எட்டுவைத்த முதல்
காலடியை தன் உள்ளத்தில்
பதிய  வைத்தவர் நீர்

என் கால்கள் கல்லில்
மோதினால் என்கண்களில்
கண்ணீர் வர முன் தான் உள்ளத்தில்
உத்திரம் சிந்தும் காவலன் நீர்

நான் ஏதேனும் ஒரு தவறு செய்து விட்டால்
முதலில் என்னை கண்டித்து
அடுத்த கணமே என்னை அமுதமாய்
அள்ளி கொஞ்சுபவர் நீர்

என் தனிமையில் யாரும் எனக்கில்லை
என்று இருக்கும் அந்த நொடியில்
சிணுங்கும் கைபேசி திரையில்
தெரியும் அவர் முகம்

மாற்றம் ஒன்றே மாறாமல் உள்ள
இவ்வுலகில் என்றும்
மாறாத அன்பை வழக்கும்
என் அன்பு தந்தை நீர்

Offline KuYiL

உன் தாய் உன்னை கருவில்
சுமந்த போதே என் மனக்கருவில்
நான் வரைந்த ஓவியங்கள் எல்லாம்
உயிர் பெற்று வந்ததாய் உணர்ந்த தருணம் - உன் முகம்!

நீ தானே எனக்கு எல்லாம்
என்று என் கை கோர்த்த போது
புதிதாய் முளைத்த நரை நினைத்து
என் மீசை முறுக்கி கொண்ட கர்வன் நான்!

கனவுகளில் வந்த காவிய நாயகியெல்லாம்
எங்கோ தொலைந்து போயின
உன் மழலை சிரிப்பின் முன் !
என் சாம்ராஜ்யத்தின்
நிரந்தர இளவரசி நீயே ஆனாய் !

உனக்கு பிடித்த நாயகன் யார் என்று
 கேட்ட போது தயங்காமல் என் அப்பா என்று
 என் கன்னங்களில் உன் எச்சில் முத்தம்
 பட்ட போது புனிதம் அடைந்தேன் நான் !.

நீ எனக்கு தகப்பன் என்ற பதவி உயர்வு கொடுத்த போது
நான் பெண்களின் கண் பார்த்து மட்டும்
 பேசும் பண்பறிவாளனாய் பரிணாமம் எடுத்தேன்!

என்னை முழு மனிதனாய் பார்க்கவைத்த நிலை கண்ணாடி நீ !
என் நிழல் உன்னை தொடர்கையில்
 காமுகனோ , கயவனோ உன்னை நெருங்க விடுவதில்லை –
இது இந்த ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளில் மேல்
நான் செய்து கொடுக்கும் சத்ய பிரமாணம்!