Author Topic: தங்க மீன்கள் 💞 தந்தை மகள் 💞  (Read 496 times)

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰



💜💜பிரசவ அறைக்கு வெளியே உன் முதல் அழுகை கேட்ட நொடி, அப்பாவாய் நான் பிறந்தேன் கண்மணியே!

💜💜 அக்கனமே என் இளவரசிக்கு அழுகை அறியா ஓர் உலகை கொடுக்க தயாரானேன் ஒரு தகப்பனாய்!


💜💜 இந்த பூமியில் பூத்த புன்னகை தேவதை இவள்!

💜💜அவள் தரும் முத்தத்தில் என் இன்னலை மறக்கச் செய்பவள்!

💜💜சிரிப்பின் ஓசையால் என் சினத்தை சிதறச் செய்பவள்!

💜💜அவளின் கை விரல் தீண்டலால் என் காயங்களை ஆறச் செய்பவள்!

💜💜அவளின் மழலை மொழியில் உலகையே மறக்கச் செய்பவள்!

💜💜அவள் விடும் கண்ணீர் துளியில் என் மனதை கலங்கச் செய்பவள்!

💜💜அவள் ஊட்டிவிடும் ஒரு வாய் சோற்றில் தாயின் அன்பை தருபவள்!

💜💜அவள் கொலுசின் ஓசையால் பல கீதங்களை இசைப்பவள்!

💜💜என் விரல் பிடித்து அழகாய் நடை பழகுபவள்!

💜💜என் உயிரிலே கலந்தவள்!  💜💜என் உலகமென மாறியவள்!

💜💜அப்பா என்ற ஒரு வார்த்தையால் என்னை கட்டிப்போட்டவள்
!

💜💜 என்ன தவம் செய்தேன் நீ என் மகளாய் பிறப்பதற்கு!

💜💜உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை

💜💜எனினும் ஆயுள் உள்ளவரை என் நெஞ்சில் சுமப்பேன் கண்மணியே!💜💜