Author Topic: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??  (Read 5985 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனுசர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல ........................................... ஆஹா கதைல திருப்பமா ... திருபுங்கா பார்க்கலாம் என்ன வருதுன்னு ஆவலாய் இருக்கேன்
                    

Offline Gotham

ஏற்கனவே முடிவ படிச்சுட்டீங்களா?  :-[

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இல்ல நான் குணா பட ஸ்டைல் ல சொனேன் .. ஹிஹிஹிஹி  ;D
                    

Offline Gotham


இறுதிப்பாகம்
--------------------------------------------------------------------------------------------------------

சீக்கிரமே ஜெஸ்ஸிய நான் பிரிய வேண்டி வரும்னு நினைக்கல. ஆனா நடந்துச்சு. ‘வாழ்க்கையில சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வரும்’னு தெரியும். சந்தோஷம் வரும் போது துக்கம் அடுத்து வரும்ங்கற நெனக்கக் கூட மாட்டோம். எப்பவுமே அந்த சந்தோஷம் நிரந்தரமானதுன்னு நெனப்பு இருக்கும். ஆனா துக்கம் வரும் போது எப்போடா சந்தோஷம் வரும்னு இருக்கும். முன்னாடி சந்தோஷமா இருந்த தருணங்கள நெனச்சுப்போம். அதே மாதிரி தான் வாழ்க்கையில அந்த கால கட்டத்துல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துட்டேன் போல. யார் கண்ணு பட்டுச்சோ.. அன்னிக்கு காலைல அந்த பிரச்சனை ஆரம்பிச்சது.

காலைல கண்முழிக்கும் போதே எஞ்சினீயரம்மாவோட அழுகை சத்தம் தான் கேட்டுது. அவங்க நிறைமாச கர்ப்பிணியா இருந்தாங்க. அப்போ அழக்கூடாதாம். ஆனா அதிகமா அழுதாங்க. கைக்கு கிடைச்சதையெல்லாம் கீழே போட்டு உடைச்சாங்க. என்னமோ பெரிசா தப்பு நடந்திருக்குனு மட்டும் புரிஞ்சுது. ஆனா அதுக்கு மேல தெரியல. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஓடிப் போய் எஞ்சினீயரம்மாகிட்ட நின்னேன். என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு ஓன்னு அழுதாங்க. எனக்கும் அழுகை அழுகையா வந்துச்சி. ஏன்னு மட்டும் தெரியல.

எஞ்சினீயர் ஒரு ஓரமா அமைதியா இருந்தார். வாய தொறந்து எதுவும் பேசல. வீடு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல துணியெல்லாம் ஒரு பெட்டியில எடுத்து வச்சுக்கிட்ட எஞ்சினீயரம்மா என்னைக் கூப்பிட்டாங்க. ஓடிப்போய் அவங்க காலை உரசிக்கிட்டு நின்னேன் தலையை தொங்கப்போட்டுக்கிட்டு. அவங்க ஒரு கேப் வர சொல்லி இருந்தாங்க. என்னை கேப்ல ஏற சொல்லும் போது திகீர்னு இருந்துச்சு. ‘எங்க போறோம்?’ ஜெஸ்ஸிய விட்டுட்டு. ‘ஒன்னுமே புரியல’. ஆனாலும் ஏறினேன். ஏறும் போது திரும்பி பார்த்தேன். வீட்டு வாசலில் எஞ்சினீயர் சோகமே உருவாக நின்றிருந்தார். பக்கத்து வீட்டில் அதே மொட்டைமாடியில் ஜெஸ்ஸி கம்பிகளுக்கிடையே தலையை விட்டு வாலை வேகமா ஆட்டினா. அவளுக்கு நான் பிரியப் போவது தெரிஞ்சுடுச்சு. ‘அவள் கதறினா..’ போகாதேனு. எனக்கு வேற வழி தெரியல. ‘ எங்கேயும் போகல. சீக்கிரமே வந்துடுவேன்னு’ சொல்லிட்டு ஏறினேன். ஆனா உள்மனசில ஏதோ ஒன்னு தோணுச்சு. ‘இனிமே எஞ்சினீயரம்மா எஞ்சினீயர் கூட வாழ மாட்டாங்க’னு. ஜெஸ்ஸி பக்கத்துல க்ளாராம்மாவும் சோகமா இருந்தாங்க. ‘என்ன பிரச்சனையோ.. ஆனா என் காதல் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுடுமா?’ நினைக்க நினைக்க பகீரென்றது. ஜெஸ்ஸி இல்லாத வாழ்க்கைய என்னால நெனச்சுப் பார்க்கவே முடியல. ‘நான் ஜெஸ்ஸிய லவ் பண்றேன். என்னையும் அவளையும் சேர்த்து வையுங்க’னு கத்தலாம் போல இருந்துச்சு. ‘என்ன பண்ண.. மனுஷங்க உணர்வை புரிஞ்சுக்கற அறிவை எங்களுக்குப் படைச்ச ஆண்டவன் எங்க உணர்வை புரிஞ்சுக்கற அறிவை அவங்களுக்கு வைக்கலியே’. கண்ணில் நீருடன் நான் ஜெஸ்ஸிய பார்க்க அவளிட பரிதவிப்பை அந்த கண்ணீரில் உணர முடிஞ்சது.

வண்டியில போகும் போது எஞ்சினீயரம்மா என் தலையை வருடி,

“கவலைப்படாத மார்க்.. இனி நாம அங்க போகப்போறதில்ல. இடம் கொடுத்தது என் தப்பு தான். இப்படி டேனியலும் க்ளாராவும் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கல. இனி எனக்கு நீயும் உனக்கு நானும் தான் துணை.”

கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. பக்கத்து வீட்டு பழக்கம், ஒரே கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்தது எஞ்சினீயரையும் க்ளாராம்மாவையும் நெருங்கச் செஞ்சிருக்கு. அவங்களுக்குள்ள பழக்கம் எஞ்சினீயரம்மாக்கு தெரிய வர வெடிச்சிருக்காங்க. என் மேல வச்சிருந்த மாதிரி அவங்க எஞ்சினீயர் மேலயும் கண்மூடித்தனமா பாசம் வச்சிருந்தாங்க. அத புரிஞ்சிக்காம எஞ்சினீயர் தப்பு பண்ணிட்டார். ‘ எஞ்சினீயர் மேல பரிதாபமா இருந்தது.’ அவரும் எஞ்சினீயரம்மாவ ரொம்ப காதலிச்சார். ஆனா சூழ்நிலையை மட்டும் குத்தம் சொல்ல முடியாது. அவர் செஞ்சது சரியா தப்பானு சொல்ல நான் ஒன்னும் மேதாவியான ஆறறிவு ஜீவனில்லையே. எல்லாத்தையும் விட ஜெஸ்ஸிய பிரிஞ்ச வலி தான் என்னைப் புரட்டிப் போட்டது. காதல்னு இருந்தா வலியும் சேர்ந்தே இருக்கணும்னு ஆண்டவன் இந்த உலகத்தை படைச்சுட்டான் போல. பிரிவு ரொம்ப ரொம்ப கொடுமையானது. எஞ்சினீயரம்மா இனியும் சமாதானமா போவாங்கன்னு எனக்குத் தோணல.

நினைக்க நினைக்க மனசு வெறுமையா இருந்தது. டென்மார்க்கிலேயே இருந்த தன் தோழி வீட்டுக்கு எஞ்சினீயரம்மா போனாங்க. அவங்க நாங்க தங்க இடத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. ‘எவ்வளவு தான் நினைத்தாலும் மறக்க முடியாது ஜெஸ்ஸியுடன் நான் இருந்த தருணங்களை’. எங்கிருந்தோ வந்த எங்க இரண்டு பேரையும் ஏர்போர்ட்ல பார்க்க வச்சு ஒருத்தருக்கொருத்தர் ஏங்க வச்சு, பக்கத்து பக்கத்து வீட்டில தங்க வச்சு, அழகான நாட்டில காதலிக்க வச்சு.. பின்ன பிரிச்சு பார்க்கிற இந்த ஆண்டவன் எப்பேர்ப்பட்ட சாடிஸ்ட். ‘சாப்பிட பிடிக்கல. தூங்க பிடிக்கல… எதுவுமே பிடிக்கல. அங்க என் ஜெஸ்ஸி என்ன பண்ணிட்டு இருக்காளோ? அவளும் என்னை நெனச்சு சாப்பிடாம இருக்காளோ?’ தெரியல.

நாங்க போன ஊர்ல ஏகப்பட்ட டாக் இருந்துச்சு. ஆனாலும் யார் கூடவும் பேசத் தோணல. தனிமையே எனக்கு சொந்தம் மாதிரி ஆயிடுச்சு. எஞ்சினீயரம்மாக்கு குழந்தை பொறந்துச்சு. செக்கச் செவேல்னு ஆண் குழந்தை. பக்கத்துல நான் போனா இன்ஃபெஷன் ஆயிடும்னு சொன்னாங்க. அதனால நான் இன்னும் தனிமைல வாட ஆரம்பிச்சேன். நாட்கள் இப்படியே போகப் போக என் உடல் மெலிய ஆரம்பிச்சுது. கண்கள் சோர்ந்து போக ஆரம்பிச்சுது. குழந்தை பிறந்த சந்தோஷத்துல இருந்த எஞ்சினீயரம்மா என்னை கொஞ்சம் கொஞ்சமா கவனிக்க ஆரம்பிச்சாங்க.

“ஏன் டா.. ஏன் சரியா சாப்பிட மாட்டேங்கற..?”

நான் மௌனமாய் தலையாட்டினேன். என் செய்கை அவங்களுக்கு எஞ்சினீயர பத்தின நெனப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவங்க கண்ணில் மெல்லிதாய் சோகம். என்னை மாதிரி துணையை பிரிஞ்சு இருக்கற வேதனை.

“எஞ்சினீயர பிரிஞ்சு உன்னாலேயே இவ்ளோ நாள் இருக்க முடியலியே.. நான் எப்படி இருந்திருப்பேன் சொல்லு?”

அவங்க வலி எனக்குப் புரிஞ்சுது. காதலிக்கறவங்க வலி பிரிஞ்ச இன்னொரு காதலனாலேயோ காதலியாலேயோ மட்டும் தான் முழுமையா உணர முடியும். என்னால அவங்கள உணர முடிஞ்சுச்சு. ஆனா அவங்களுக்கு… ‘ இந்த உலகத்துல எத்தனையோ பேர் இருக்க நான் ஜெஸ்ஸிய மட்டும் தான் காதலிச்சேன்னு’ என்னால அவங்களுக்குப் புரியற மாதிரி சொல்ல முடியல. பதிலா என்னால கண்ணீர மட்டுமே விட முடிஞ்சுது. குழந்தை பிறந்த நேரம் எஞ்சினீயரம்மாவோட கோவம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது.

என் நிலையையும் பார்க்க அவங்களால முடியல. முடிவா, “குழந்தைய அவர் முகத்துல காட்டணும். வா.. போய் பாத்துட்டு வரலாம்” னு எஞ்சினீயரம்மா சொன்னப்ப எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. எப்படியாச்சு ஜெஸ்ஸிய பாத்துடலாம்ங்கற நெனப்பே அவ்ளோ சந்தோஷத்தை குடுத்துச்சு. போற வழியெல்லாம் ஜெஸ்ஸிய பத்தின கனவுகள். அவள முத முதலா பாத்தது, பேசினது, சிரிச்சது.. திரும்பவும் என் ஜெஸ்ஸிய பாக்கப் போறேன்.

எங்க வீடு இருக்கற ரோட்டுல திரும்பும் போது அவ வீடு கண்ணுல பட்டுது. வீடு வெளில பூட்டி இருந்துச்சு. மனசுல திக் திக்னு சத்தம். ஜெஸ்ஸி இப்போ அங்க இல்லியா. க்ளாராம்மா எங்க போயிருப்பாங்க….? மனசுல வலியோட ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே எஞ்சினீயர் எங்கள எதிர்பார்க்கல. அவர் தனியா தான் வாழ்ந்திட்டு இருக்கார். எஞ்சினீயரம்மாவ பாத்ததும் ஓடி வந்து கட்டிப்புடிச்சிக்கிட்டு ஆயிரம் ஆயிரம் மன்னிப்பு கேட்டார். பிரிவு அவரையும் பாடா படுத்தி இருந்துச்சு. குழந்தையை ஆசைத் தீர கொஞ்சினார். அப்புறமா என்னைப் பார்த்தார்.. அவர்கிட்ட பல விஷயங்கள் கேக்கணும்.. ‘முதல்ல க்ளாராம்மா எங்க.. ஜெஸ்ஸி எங்க’. என் தலையை கோதிக்கிட்டே எஞ்சினீயரம்மாகிட்ட பேச ஆரம்பிச்சார். ‘க்ளாராம்மா வீட்டை காலி பண்ணிக்கிட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. தெரியாம நடந்த தப்பு அவங்கள ரொம்பவே பாதிச்சிடுச்சு. குடும்பத்தை பிரிச்ச பாவம் அவங்கள நோகடிச்சுடுச்சு.’ தலையில் மறுபடியும் இடி. ‘அப்போ என்னால ஜெஸ்ஸிய இனிமே பாக்கவே முடியாதா…?’ ஏன் இந்த சோதனை.

அப்போ தான் அது நடந்துச்சு. வீட்டுக்குள்ளே இருந்து பழக்கப்பட்ட குரல். திரும்பி பாத்தேன். என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை. இதென்ன கனவா..? ஆம். கதவோரத்தில் ஜெஸ்ஸி நின்னுட்டு இருந்தா..அவ கண்ணுல கண்ணீர். என்னைப்பார்த்ததும்.. ஓடிக்கூட வரமுடியாம கால்கள் பின்னிக்கிட்டு. எப்படி..? எப்படி? இரண்டு பேரும் ஆசைத் தீர ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி விளையாடினோம். மறுபடியும் என் ஜெஸ்ஸிய பார்க்க வச்ச ஆண்டனுக்கு கோடானுகோடி நன்றி சொன்னேன்.

அன்னிக்கு சாயந்திரம் மாடில அதே ஊஞ்சல்ல நானும் ஜெஸ்ஸியும் சூரியன் மறையும் அந்த ரம்மியமான தருணத்தில் பேசிக்கிட்டு இருந்தோம். கீழே ஹாலில் எஞ்சினீயர் தன் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்போ ஜெஸ்ஸிக்கிட்ட கேட்டேன்…

“எப்படி.. நீ மட்டும் எப்படி?”

என்னைப் பார்த்து கிறக்கமா சிரிச்சா…

“நீ போனதும் உயிரே போன மாதிரி இருந்துச்சு. ராப்பகலா தூக்கமில்லாம கஷ்டப்பட்டேன். க்ளாராம்மாவும் என்னைவிட நொந்து போயிந்தாங்க. தப்பான சந்தர்ப்பத்துல ஒரு குடும்பம் குலைஞ்சு போயிடுச்சேனு”

“ம்ம்..”

“அப்போ தான் தனியா போறதா முடிவெடுத்தாங்க.. எஞ்சினீயர்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தப்போ நான் அவர் காலை கட்டிக்கிட்டு விட மாட்டேனுட்டேன். என்னை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தாங்க… நான் விடல.”

“ஏன்?”

“என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் எஞ்சினீயரம்மா அங்க வருவாங்கன்னு தெரியும். அப்போ நீயும் வருவ. உன்னை ஒரு தடவையாவது பாத்துடலாம்னு தான்…” சிரித்து சிரித்து உள்ளத்த கொள்ளை கொண்டாள்.

“வராமலேயே போயிருந்தா..?”

“கண்டிப்பா வருவன்னு தெரியும்.. அப்புறம் க்ளாராம்மா என்னை இங்கேயே விட்டுட்டு போயிட்டாங்க..”

“ம்ம்..” அவள் மேல் இருந்த காதல் இன்னும் பல மடங்காச்சு. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் போது திடீரென்று அந்த கேள்வியை கேட்டாள்..

“மார்க்.. க்ளாராம்மாவையும் சரி.. எஞ்சினீயர் அவர் பொண்டாட்டியையும் சரி.. அவங்க காதலையும் உணர்ச்சியையும் நம்மலால புரிஞ்சுக்க முடியுது. ஆனா நாம் ரெண்டு பேரும் காதலர்கள். நம்மை பிரிக்கறோம்ங்கற உணர்வே அவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு…?”

சிரித்துக் கொண்டே என் குரல் தூரத்தில் எதிரொலிக்க சொன்னேன்..

“ஏன்னா.. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல…அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. புனிதமானது…

Offline Gotham

இந்த கதைக்கு ஒரிஜினலா நினச்சிருந்த முடிவு வேற. அதன் சுருக்கத்த நாளைக்கு பதியறேன்

Offline Anu

இந்த கதைக்கு ஒரிஜினலா நினச்சிருந்த முடிவு வேற. அதன் சுருக்கத்த நாளைக்கு பதியறேன்

haha. nice ending.
animals vachi aduvum dog vachi love story first time padikiren.
very nice :)


Offline Gotham


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இந்த கதையும் அதில் வெளி பட்ட உணர்வுகளும் மிகவும் அருமை...
டாக் லவ் என்று தோணல....முதல் பார்வை ,. முதல் காதல் , முதல் சந்தோசம் ,. முதல் பிரிவு .,ஏக்கம், ஊடல் , கூடல் . எல்லாமே அருமை..

படிக்கும் போதே சிரிச்சிகிட்டே ன் தான் படிச்சேன்....

முதல் பாகத்துல


 மனிதர்களுக்கு நாய்க்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தையே சொல்லி இருக்கீங்க... நல்லா இருக்கு

இனிமே எங்களுக்குள்ள திட்டிக்கணும்னா ‘போடா மனுசப்பயலே’னு தான் திட்டிக்கணும் போல.


இந்த இடம் நல்ல இருக்கு...


இரெண்டாம் பாகத்துல...

ஜெசிய பார்த்த நொடியில என்ன ஒரு வர்ணனை...அருமை


அங்க ஒரு காதல் காவியம் அரங்கேறுவது தெரியாம மனுஷங்கல்லாம் இயந்திரம் மாதிரி தங்களோட வேலைய பாத்துட்டு இருந்தாங்க......

 சூப்பர்...

ஒரு வேலை காதல் வந்தால் தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் இயந்திர தனமாக இருப்பதாக  தெரியுமோ???

மூன்றாம் பாகத்தில்



அவ பேரு ஜெஸ்ஸின்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவை அவ பேர அவங்க சொல்ற போதும் அப்படியே அடி வயித்துல ஜிலீர்னு ஒரு உணர்வு வரும். காதலிச்சுப் பாருங்க. அப்ப புரியும்.....

காதல் உணர்வின் நல்ல வெளிபாடு

இருவரின் முதல் பேச்சு ரொம்ப  நல்ல இருக்கு..

படிக்கும் போது ஒரு படமே கண் முன்னுக்கு வந்த போல இருக்கு...


எஞ்சீனியரும் க்ளாராம்மாவும் ஒரே ஆபிஸில தான் வேலை பாத்தாங்க. அதனால நாங்க அடிக்கடி அவங்க வீட்டுக்குப் போறதும் அவங்க எங்க வீட்டுக்கு வர்றதும்னு வாழ்க்கை போச்சு.


இந்த இடம் படிக்கும் போது ஏதோ நடக்கும்னு தோனுச்சு...ஆனால் இந்த காதலில் இப்படி நினைக்க கூடாதுன்னு நினைச்சேன்...
ஆனால் நான் நினைச்சது போல நடந்துச்சு....


நான்காம் பாகத்தில்
 
ஒவ்வொரு தடவை ஜெஸ்ஸிய பாக்கற போதும் அன்னிக்கு தான் புதுசா பாக்கற மாதிரி இருக்கும். அவ்ளோ புத்துணர்ச்சியோடு இருப்பா. கண்ணில அந்த காந்தப்பார்வை அப்படியே சுண்டி இழுக்கும்.

மனஷனுக்கும். நாய்க்கும் ஒரே பீலிங் தான் போல....நல்ல இருக்கு,,, சினிமா கதாநாயகர்கள் சொல்ற போல இருக்கு..

நிறைவு பாகத்தில

இந்த முடிவை நினைச்சு பார்க்கல...
மனஷங்க பிரிந்து டாக் லவ்-அ சேர்த்து வச்சிட்டாங்க..

ரொம்ப நல்ல இருக்கு கௌதம் வாழ்த்துக்கள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Gotham

Nandri Shruthi. ovvoru partum padichu pudicha idangala sonathuku.


Eluthum pothu ethaiyum plan pannama eluthinathu. appadiye flowla.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹ்ம்ம் அட நா அணிக்கு எதசாயா சொன்ன மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்லதானா ... ஹஹஹா ... கோதம் கதை ரொம்ப நேர்த்தி ... ரொம்பவே மனசை கொள்ளை கொள்ளும் கதை .. ஒரு நாயை வைத்து கதை இவ்ளோ அழகாய் கொண்டு போக ஆண்கிலபடதில்தான் முடியும் என நினைத்தேன் .. அனால் அசத்திவிட்டீர்கள் போங்கள்..
                    


Offline Gotham


கதை மார்க் மறுபடியும் எஞ்சினீயர் வீட்டுக்கு வருவதிலிருந்து தொடர்கிறது.
-----------------------------------------------


எஞ்ஜீனியரம்மா எஞ்சினீயர பார்க்க போகலாம்னு சொன்னப்ப எனக்கு தலைகால் புரியாத சந்தோஷம். நாலுகால் பாய்ச்சல்ல வீட்ட சுத்தி வந்தேன். எஞ்சினீயர பார்க்க போற சந்தோஷம்னு அவங்க நெனச்சாங்க. அந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் என்னோட ஜெஸ்ஸிய பார்க்க போறேங்கற சந்தோஷமே எனக்கு அதிகமா இருந்தது. அவளும் என்னை மாதிரியே சாப்பிடாம மெலிஞ்சு போயிருப்பாளோ. எதுவானாலும் பரவாயில்ல இனி அவள விட்டு பிரியக்கூடாதுனு முடிவு பண்ணினேன்.


ஒரு மத்தியான வேளையில எஞ்சினீயரம்மா அவங்க குழந்தை மற்றும் நான், எல்லோரும் திரும்ப எஞ்சினீயர் வீட்டுக்கு புறப்பட்டோம். வழியெல்லாம் ஜெஸ்ஸிய பத்தின நினைப்பு தான். கார் ரோட்டுல முன்னே செல்ல அவளைப்பத்தின நினைவில நான் பின்னோக்கி போனேன். ஏர்போர்ட்ல அவள பாத்தது, அப்புறம் பார்க் அப்புறம் பக்கத்துவீட்டு தேவதையா அவ வந்ததுன்னு. எல்லாத்தையும் நெனச்சு பாக்கும் போது எனக்கு நானே சிரிச்சிக்கிட்டேன்.


எஞ்சினீயர் வீட்ட நெருங்கும் போது மனம் கன்னாபின்னானு தவிச்சது. இதயத்துடிப்பும் எகிற ஆரம்பிச்சது. ஜெஸ்ஸி வீட்ட தாண்டி தான் எஞ்சினீயர் வீட்டுக்கு போகணும். வெளியில எட்டி பார்த்தேன். ஒரு நிமிஷம் கண்ண இருட்டற மாதிரி இருந்துச்சு. உலகம் ரொம்ப வேகமா சுத்தற மாதிரி ஒரு உணர்வு.


ஆமா. ஜெஸ்ஸி இருந்த வீடு பூட்டிக்கிடந்தது. ரொம்ப நாளா அங்க ஆட்கள் யாருமே இல்லேனு தெரியற மாதிரி ஏகத்துக்கும் செடி வளர்ந்திருந்தது. மனசு பூரா ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு ஓலமிட்டது. கண்ணுல தண்ணி ஆறா கொட்ட ஆரம்பிச்சது. என்ன ஆச்சுன்னு தெரியலியே. ஜெஸ்ஸி எங்க போயிருப்பா.? தவியா தவிச்சேன்.


வீட்டுக்குள்ள போனதும் தான் தெரிஞ்சது. ஜெஸ்ஸியும் ஜெஸ்ஸியோட ஓனரும் எப்போவோ வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாங்கன்னு. என்ன மாதிரியே ஜெஸ்ஸியும் மனசுல அழுதிருப்பான்னு நெனச்சேன். என்ன பண்ண? எங்க போனான்னும் தெரியல. அவள தேடிக்கிட்டும் போக முடியாது. மனசு முழுக்க பாரத்தோட வீட்ட சுத்தி வர ஆரம்பிச்சேன். எஞ்சினீயரம்மா எஞ்சினீயர் கூட மறுபடியும் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சாங்க. மனசுல ஆயிரம் வலிகள் இருந்தாலும் அதெல்லாம் காட்டிக்காம நடைபிணம் மாதிரி வாழ ஆரம்பிச்சேன்.


காலம் எல்லா காயத்துக்கும் மருந்துனு சும்மாவா சொன்னாங்க. என்னோட காயங்களும் ரணங்களும் ஆற அந்த நாளும் வந்தது.
« Last Edit: September 24, 2012, 10:05:19 AM by Gotham »

Offline Gotham

ஹ்ம்ம் அட நா அணிக்கு எதசாயா சொன்ன மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்லதானா ... ஹஹஹா ... கோதம் கதை ரொம்ப நேர்த்தி ... ரொம்பவே மனசை கொள்ளை கொள்ளும் கதை .. ஒரு நாயை வைத்து கதை இவ்ளோ அழகாய் கொண்டு போக ஆண்கிலபடதில்தான் முடியும் என நினைத்தேன் .. அனால் அசத்திவிட்டீர்கள் போங்கள்..
அதனால் தான் கேட்டேன். முடிவு தெரியுமா என்று? கதையை படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஏஞ்சல்.

Offline Gotham

தனிமையா என்னோட நாட்களும் வாழ்க்கையும் போயிட்டு இருந்தப்போ அந்த சம்பவம் நடந்துச்சு. பூட்டிக்கிடந்த பக்கத்து வீட்டுக்கு யாரோ ஒரு நாள் குடிவந்தாங்க. அன்னிக்கு கொஞ்சம் சத்தமா இருந்துச்சு. பொதுவா இங்க இருக்கற வீட்டுல சத்தமே அதிகம் கேக்காது. யாருடான்னு எட்டிப்பாத்தேன். ஒரு அப்பா அம்மா பையன் கொண்ட குடும்பம் அது.

அவங்க எல்லோரு வீட்ட செட் பண்ற வேலையில இருந்தப்போ நான் வீட்டுக்கு முன்னாடி இருந்த புல்வெளியில சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். என்கூடவே துணைக்கு என் ஜெஸ்ஸியோட நினைவுகளும். என்னால அவ கண்ண மறக்க முடியல. அப்படி ஒரு பார்வை. அதுவும் கடைசியா அவள விட்டு பிரிஞ்சு போறப்ப அவ என்னை பார்த்த பார்வை இருக்கே.. யப்பப்பா..

இப்படியே அவ நினைவுல என்னோட வாழ்க்கைய ஓட்டிடலாம்னு இருந்தப்போ அந்த சத்தம் கேட்டுச்சு. திரும்பி பார்த்த ஜெஸ்ஸி இருந்த வீட்டு பால்கனியில இன்னொரு டாக். இது பூடுல் வகை. குட்டியா பூனை மாதிரி பம்மிக்கிட்டு இருந்துச்சு. என்னை தான் கூப்பிட்டுச்சு போல. ஜெஸ்ஸியோட நினைவுகள்ல இருந்தவன தொல்லை பண்ணுதுனு மொறச்சு பார்த்தேன். பயந்துட்டு வீட்டுக்கு உள்ளே ஓடுச்சு.

அப்புறமா சில நாட்கள் அப்படியே போச்சு. அந்த டாக் அவங்க வீட்டு பால்கனியில நின்னு என்ன லுக் விடறதாவே இருந்துச்சு. 'என்னை தான் சைட் அடிக்குதுனு நல்லாவே தெரிஞ்சுது. என்ன பண்ண ஐயாம் சாரி. என் மனச நான் ஏற்கனவே ஒருத்திக்கிட்ட கொடுத்திட்டேனு' சொல்லலாம்னு பார்த்தேன். யாருன்னே தெரியல எதுக்கு நம்ம கதைய போய் சொல்லணும்னு விட்டுட்டேன். 'என்ன மாதிரி ஒரு நல்ல திடகாத்திரமான ஆண் டாக்-அ பாத்திருக்காதோ'. இப்படி பாக்குது இந்த டாக்.

அப்போ தான் அது நடந்தது. திடீர்னு ஒரு குரல்.

"ஜெஸ்ஸி...."

என் உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சது. ரொம்ப நாள் கழிச்சு அவ பேர கேக்கறேன். திரும்ப என்னைத் தேடி வந்துட்டா போல. கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் அவள தேடினேன். காணல. திடீர்னு குரைக்கற சத்தம். பக்கத்து வீட்டு மாடியில இருந்த டாக் பௌ பௌன்னு கத்திட்டு வீட்டுக்குள்ள ஓடிச்சு. அப்போ தான் தெரிஞ்சுது. அந்த டாக் பேரு ஜெஸ்ஸி தான்னு.

நீங்க எத்தன பேர் காதலிச்சிருக்கீங்கன்னு தெரியல. காதலிச்சுப்பாருங்க. காதலியோட பேர் வச்சிருக்கறவங்க மேல தனிபாசம் வரும். அப்படி தான் முதன்முதலா அந்த டாக் சாரி சாரி.. ஜெஸ்ஸி மேல எனக்கிருந்த கோவம் போக ஆரம்பிச்சுது. அடுத்த நாள் அவ மாடியில நின்னப்ப கொஞ்சமா சிரிச்சேன்.

அவ என்கிட்ட பேச ஆரம்பிச்சா.

"என்ன திடீர்னு சிரிக்கற?"

"இல்லே. பக்கத்து பக்கத்து வீட்டில இருக்கோம். முறச்சுக்கிட்டா இருக்க முடியும். அதான்."

"ஓ. இப்போ தான் தெரிஞ்சுதாக்கும். இதுவரைக்கும் ஒரு சிரிப்பு கூட இல்லே.. க்கும்.." தலையை வெட்டினாற்போல் இடித்தது. எனக்கு சிரிப்பாய் வந்தது. அந்த மேனரிசம் கூட நல்லா தான் இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம். முதல்ல பொதுவா பேச ஆரம்பிச்சு பிறகு நல்லா பேச ஆரம்பிச்சோம். பழைய ஜெஸ்ஸி விட்டுப்போன காயங்களுக்கு புது ஜெஸ்ஸி மருந்து போட ஆரம்பிச்சா. அவ கூட பேசும் போது மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.

புது ஜெஸ்ஸியின் சேஷ்டைகள் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு. அப்புறம் அந்த வீட்டுலேர்ந்து யாராச்சும் எங்க வீட்டுக்கு வந்தா ஜெஸ்ஸியும் வர ஆரம்பிச்சா. நிறைய பேசினோம். முதல்ல நட்பா தான் நினைச்சிருந்தேன். மெல்ல மெல்ல பழைய ஜெஸ்ஸியோட இடத்த பிடிக்க ஆரம்பிச்சா. ஒருநாள் அவகிட்ட சொல்லிட்டேன்.

"ஜெஸ்ஸி. உன்ன எனக்கு புடிச்சிருக்கு. உனக்கு?"

அப்படியே மொறச்சா. பயந்துட்டேன்.

"இத சொல்ல உனக்கு இவ்வளவு நேரமா என்ன? வந்த நாள்லேந்தே உன்ன எனக்கு புடிக்கும். மெஜஸ்டிக்கா கம்பீரமா நீ நிக்கறப்போ உன்கூடவே இருக்கணும்னு தோணும்."

வானத்துல மறுமுறையா பறக்க ஆரம்பிச்சேன். இப்படியே எங்க காதல் அத்தியாயம் தொடங்கிச்சு. இதுக்கு மறுபடியும் சோதனை அவ ஓனர் மூலமா வந்தது. விடுமுறைக்கு ஒருவாரம் வெளியூர் போனாங்க. அப்போ ஜெஸ்ஸியையும் கூட்டிட்டு போனாங்க. அழுகையே வந்துச்சு. மனசில்லாம விடைகொடுத்தேன்.

அடுத்த நாள்லேந்து தனிமை. அப்படி ஒருநாள் உட்கார்ந்திருந்தப்போ என் வாழ்க்கையில நடந்த சம்பவங்கள யோசிச்சுப்பாத்தேன். ஜெர்மனி, டென்மார்க், அப்புறம் பழைய ஜெஸ்ஸி.. ஸ்ஸ்ஸ்.. இத்தனை நாளா அவள பத்தின நெனப்பையே மறந்திருந்தேன் புது ஜெஸ்ஸியால. சிந்தனை வேற மாதிரி போச்சு. இப்போ புது ஜெஸ்ஸி மேல இருக்கறது காதலா இல்லே பழைய ஜெஸ்ஸி மேல இருந்தது உண்மை காதலா?

நிறைய யோசிச்சு அந்த விடைய கண்டுபுடிச்சேன். என்னன்னு கேக்கறீங்களா?? கதையோட தலைப்ப மறுபடியும் படிங்க.

'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?'

ஆமாங்க. இதுவரைக்கும் நான் லவ் பண்ணியிருக்கிறது. ஜெஸ்ஸிங்கற பேர தான். எந்த நாயாயிருந்தாலும் பரவாயில்லே. ஆனா ஜெஸ்ஸிங்கற பேர்ல இருந்தா காதலிச்சிருப்பேன்னு தோணுச்சு.

ஹலோ.. என்ன பாக்குறீங்க.. அடிக்க வராதீங்க.. பௌ..பௌ...

--- முற்றும்---

பி.கு: கதையில் வரு சில காட்சிகளால நான் காதலை கொச்சைப்படுத்தறேனு யாரும் நினைக்க வேண்டாம். இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கலாம்னு சொல்றது தான் இந்த கதை. : )

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அட பாவிகளா .. நாய் காதல்னது சரியாதான் போச்சு  >:(... ஹிஹி  நல்ல சமாளிபி^கேசன்  ... நல்லா தான் இருக்கு இந்த முடிவும்