Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 221  (Read 1973 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 221
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 548
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
உருண்டு திரண்ட உலகமிது..
சுருண்டு போனது ஏழ்மையினால்.
சிறந்த பிறப்பாம் மனித இனம்..
வறண்டு போனது சுரண்டலினால்.

மருந்து காணா நோய் ஒன்றே..
அதுதான் பசி என்றார் முன்னோர்.
அப்பிணி பிடித்த கூட்டமொன்றை..
அவனியில் படைத்தார் சில வரியோர்.

ஏழ்மை கொண்ட மனித இனம்..
தாழ்மை கொண்டே தலைகவிழ..
வாய்மை இல்லா வரியவர்தான்..
வாரி சுருட்டி வாழ்கிறாரே.

கழனி எல்லாம் சீர் செய்து..
பசுமை போர்த்தி பயிர் செய்து..
ஊரார் பசிதனை தீர்த்திட்ட..
உழவனுக்கின்று சோரில்லை.

பருத்தி பஞ்சில் நூல் செய்து..
பாங்காய் அதில்தான் துணி நெய்து..
நாட்டார் மானம் காத்திட்ட..
நெசவாளிக்கு உடையில்லை.

அவசியமென்றே நாம் எண்ணும்..
அறை பலகொண்ட இல்லமதை..
அழகியல் சேர்த்தே நமக்களித்த..
கலைஞனுக்கிங்கோர் வீடில்லை.

இப்படியான இழிநிலையை..
எதுதான் நம்மில் புகுத்தியதோ?
என்றே கொஞ்சம் எண்ணினாலே..
எல்லாம் சீராய் மாற்றிடலாம்.

கம்யூனிச கொள்கைகளை..
கச்சிதமாக பயன்படுத்தி..
இச் சமுதாய சீர்கேட்டை..
எளிதாய் நாமும் சரிசெய்து..
சுரண்டி பிழைக்கும் மனிதர்களை..
சுதந்திரமற்று போகச் செய்வோம்.!!!
     பொதுவுடைமைவாதி    பீன்.....
[/b]
[/size][/color]
« Last Edit: June 17, 2019, 07:15:26 AM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline KuYiL

எட்டு நாடுகள் சேர்ந்து எழுதிய ஏழைநாடுகளின்  தலையெழுத்து !

தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
ஜகத்தினை அழித்திடுவோம்
உலக பொதுமொழி பேசிய
நாங்கள் எட்டு நாடுகளின்
அடங்கா பண பசிக்கு
இரையாக போகும் மரண நிமிடங்கள்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்பே எங்கள் உலக தத்துவம்"
பொதுநலம் பேசிய நாங்கள்
சுயநல சாட்டையில்
சுழற்றி விட்ட பம்பரங்கள் !
ஒட்டிய வயிறும் உடல்
போர்த்திய தோல் மட்டுமே
எங்கள் சொத்து உரிமை
உயிர் தேய ஓடாய் உழைக்கும்
எங்களை பிணம் தின்னும்
கழுகுகளாய் கொத்தி தின்ன
ஆவென வாய் பிளந்து
உழைப்பை சுரண்டும்
பண பெருச்சாளிகள்
நீங்கள் போடும் வரிகள்
எங்கள் தோலின் உயிர்
உறிஞ்சிய சுருக்கங்கள்
உங்கள் நாகரிக உடையில்
காணாமல் போன எங்கள்
கோமணங்கள்
உங்கள் வெகுமான வசதிகளில்
எங்கள் எதிர்காலங்கள்
அடமானம் வைக்கப்பட்டன
நாகரிக வளர்ச்சியை உங்கள்
ஆலை சாம்ராஜ்யங்கள் பறைசாற்றலாம்
ஒரு பிடி சோறும் ஒரு முழ ஆடையும்
உங்கள் முன்னால் உணவாய் ஆகலாம்
மாற்றம் மட்டுமே மாறாது என்றால்
இந்த கோவண ஆண்டியும் ஒருநாள்
உன் முன்னே உன்னை விழுங்கும்
திமிங்கலம் ஆகும் காலம் விரைவில் வரும்....
அனைவரும் சமம் என்று
கல்லறைகள் காவியம் எழுதும் போது
கொக்கரித்த ஆணவமும்
குடை பிடித்த அதிகாரமும்
கொழுத்து திரண்ட பண வயிறும்
இல்லாதவனின் குரல் எல்லாம் ஒன்றாய்
ஒலித்தால் ஓடும் இடம் இன்றி
கல்லறையில் மண்டியிடும்














 

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
மனிதனிடம் மனிதம் தேடிய நாட்கள்
என்றோ முடிவுக்கு வந்து
இன்று
மனிதனை மனிதன் உண்ணும்
பணநாயகம்
ஜனநாயகம் என்பது பொய்த்து
நாட்களாகின்றன
இன்று
பணக்கார முதலைகளின் கைவசம்
பணநாயகம் எனும் ஜனநாயகம்


உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டும்
முதலாளிகள்!
மக்களாட்சி பொய்த்து
நாட்களாகின்றன
இன்று நடப்பதெல்லாம்
முதலாளித்துவ ஆட்சி
மாடு போல் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு
உண்ண ஏது உணவு?
உழைப்பாளிகளின் உயிர் உறுஞ்சும்
முதலாளிகளின்
வயிறல்லவா இங்கு நிறைகிறது?!


மக்களிடம் ஏது அரசுக்கு
அன்பும் அக்கறையும்
பொய் புரட்டும் சுயநலமும்
கரைபுரண்டோடும்
ஜனநாயகம என்கிற பணநாயக
வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படுவது
உழைப்பாளிகளின் உழைப்பல்லவா


கால் வயிறு கஞ்சிக்கு வக்கற்ற
உழைப்பாளியின்
மொத்த உழைப்பையும் உயிரையும்
திருடுகின்றனர்
முதலாளி எனும் பணப் பெருச்சாளிகள்


உலகிற்கே உணவளிப்பான்
விவசாயி
அவன் வீட்டு அடுப்பிலோ
பூனை தூங்கிக் கிடக்கும்
ஆளும் ஏகாதிபத்தியம்
எந்தவித கவலையுமென்றி
குற்றவுணர்ச்சிகளுமின்றி
உழைப்பெனும் ரத்தத்தை
உறிஞ்சிக் குடிக்கின்றன


பண்டமாற்று வழக்கொழிந்து
பணம் புழங்க துவங்கிய நாள் முதல்
இன்று வரை
ஏழை தான் சுரண்டப்படுகிறான்
அவன் ஒட்டு மொத்த
வாழ்வாதாரம் முதற்கொண்டு


பணமுதலைகளின் பிடியில் இருந்து
என்று மீளுவர் இந்த
ஏழைகளும்
விவசாயிகளும்
உழைப்பாளிகளும்
நாமாவது பணநாயகத்தை உடைத்தெறிந்து
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்
உண்ணும் உணவையும் கூட
பகிர்ந்தளிப்போம்
« Last Edit: June 20, 2019, 01:09:08 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
உயிர்களின் தாகத்தை தீர்க்கும்
கிணறுகள் இன்று
வானத்தை பார்த்து
மழைக்காக தவிக்கின்றது

பரந்து விரிந்து இருந்த ஏரிகள் இன்று
லேக் வியூ குடியிருப்புகளாகவும்
கணிப்பொறி நிறுவனங்களாகவும்
உயர்ந்து நிற்கிறது

நீலமும் நீளமும் நிறைந்த
அசைந்து ஓடிய நதிகள் இன்று
கோலா பாட்டில்களில்
அடைக்கப்பட்டுள்ளது 

அன்பாய் நம் பாதங்களை
முத்தமிட்ட கடல்கள் இன்று
தொழில்துறை கழிவுகளால்
அசுத்தமாய் மாறிப்போனது

யார் காரணம் ?
யாருக்கான அரசு இது ?
மக்களுக்கா இல்லை
முதலாளிகளுக்கா

மனிதனே மனிதனின்
ரத்தத்தை உறியும்
அட்டை பூச்சியாய்
மாறிக்கொண்டு இருக்கிறது
இந்த சமூகம் 

விவசாயிகளின்
மெலிந்த உடல்
சுருங்கிய தோல்
உள்வாங்கிய வயிறு
அரசே
இதை பார்த்துமா 
நீங்கள்   
முதலாளிகளுக்காக உழைக்கிறீர்கள்??

நீங்கள் போடும் எட்டு வழிசாலை
நிலத்தில் அல்ல அவர்களின் நெஞ்சில்
நீங்கள் எடுப்பது ஹைட்ரோகார்பன்
அல்ல விவசாயின் உயிர்

அரசே
இது எல்லாம் பார்த்து
நங்கள் துவண்டு போகமாட்டோம்
எங்கள் போராட்டங்களில் இருந்து
பின்வாங்கவும் மாட்டோம்
 
இது பெரியார் மண்
ஒரு பிடி மண்ணுக்கும் கூட
சொந்தம் கொண்டாட விடமாட்டோம்
அண்ணாவை பார்த்த மக்களவை இன்று
அண்ணாந்து  பார்க்கிறது
இது வெறும் துவக்கம் தான்
தொடரும் ...
அகற்றிடுவோம் முதலாளித்துவ அரசை

வாழ்க பெரியார் !
வாழ்க தமிழ்  !
வெல்க தமிழ் !

« Last Edit: June 21, 2019, 07:25:39 PM by சாக்ரடீஸ் »

Poocha

  • Guest
வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது

நம்முள்
ஒட்டிக்கொள்ளும்
உறவாய் உயிராய்
சில மனிதர்கள்

சிலரோ
நம்முள் ஒட்டிக்கொண்டிருக்கும்
உயிரை ,
கரும்பு சாறு
பிழியும் இயந்திரத்தில்
சிக்குண்டு வெளியே வரும்
சக்கை போல்  பிழிந்து எடுக்கவே
உடன் இருப்பார்

அவருக்கொரு
பெயருண்டு
முதலாளி

ஒரு சான் வாயிருக்காகவும்
சுயம் காப்பாற்றிக்கொள்ளவும்
வளைந்து  வளைந்து
கொடுத்து

முதுகெலும்பும்
வளைந்தே போயிற்று
நிமிர்ந்து நிற்க திராணியின்றி

சில நேரம் தோன்றும்
கோபமும் எரிச்சலும்,
பற்றி எரியும்
உணர்வின் கொந்தளிப்புகளும்
என்னை நம்பி வீட்டிலுருக்கும்
உறவுகளின் பசியின் கொடுமையை
எண்ணிப்பார்க்கையில்
அணைந்துவிடுகிறது
நீரூற்றாமல்

நிமிடத்தில்
வீழ்ந்து
துகள் துகளாய்
உடைந்து போய்விடும்
வாழ்விது என தெரிந்தும்

அடக்குமுறையின்
அடையாளங்கள்
அழிந்து போகும்வரை

வாழ்க்கை
எத்தனை வித விதமான
மனிதர்களை
கடந்து செல்ல வைக்கிறது



Offline JeGaTisH


பசியும் பட்டினியுமாய்
பாமரன் பக்கத்திலே !
பார்ட்டியும்  கும்மாளமுமாய்
பணக்காரன் வீட்டினிலே !

தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல்
உலகினை அழித்துவிடு
என்று சொன்னார் பாரதி !
இன்று ஊழல் கையில் சிக்கி
மக்கள் உயிர் ஊசலாடுகிறது !

முதலை போல வாய் திறக்கும்  மனிதா
உன் மனதில் ஓர் ஈரம் இல்லையோ !
ஏழையின் எக்கிய வயிறுகள்
உண்டு எத்தனை நாட்களாயின  !

பாமரன் கேட்பதோ ஒரு வேலை சோறு
அதை கொடுக்க மனமின்றி கைகளோ முடமாக
பணக்காரன் மேலும் பணக்காரனாக..
ஏழை இன்னும் ஏழையாக,,
ஒவ்வொரு பணக்காரனும்
மற்றவர் உழைப்பை அட்டைபோல்  உறிஞ்சி
அவனை இன்னும் ஏழை ஆக்குகிறான் !

இனியாவது ஏழையின் முகத்தில் சிரிப்பிருக்கட்டும் 
பணக்காரன் மனதில் கொஞ்சம்  பாசமிருக்கட்டும்




அன்புடன் single ஜெகதீஷ்