Author Topic: கோவிலுக்கு சென்று சாமியை வழிபட வேண்டுமா  (Read 777 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கோவிலுக்கு சென்று சாமியை வழிபட வேண்டுமா


ஒரு குழந்தை தனது தாயிடம் கேட்டது 'கோவிலுக்கு எதுக்கு போகணும்', அதன் தாய் சொன்னாள் 'சாமி கும்பிடணுமில்ல', குழந்தை கேட்டது 'நம் வீட்டில் தான் தினமும் சாமி கும்புடுரோமே', அதற்க்கு தாயிடம் பதிலில்லை. அந்த குழந்தை தாயின் சொற்படி கேட்டாகவேண்டும் தனது தாய் தன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் எதற்க்காக கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டும் என்கின்ற கேள்விக்கு பதிலின்றி சென்று வந்தது. குழந்தை சில காலம் நோய்வாய் படுக்கையில் கிடந்தது அப்போது அந்த தாய் குழந்தையின் சுகத்திற்க்காக வேண்டிக்கொள்ள தினமும் கோவிலுக்குச் சென்று வருவதாக குழந்தையிடம் சொன்னாள், அந்த குழந்தை கேட்டது அம்மா நீ மட்டும் தினமும் கோவிலுக்கு சென்று எனக்காக வேண்டிக்கொண்டால் போதுமா அப்போது எனக்கு சுகம் கிடைத்துவிடுமா என்றது. அந்த தாய் தன் குழந்தையிடம் நிச்சயம் சுகம் கிடைத்துவிடும் அதனால்தான் நான் தினமும் கோவிலுக்கு செல்கிறேன் என்றாள்.

சில மாதங்களுக்குப் பின்னர் குழந்தை நலமுடன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள் அவளுடன் ஒன்றாக பள்ளியில் படித்து வந்த குழந்தையொன்று உடல் நலமின்றி சில நாட்கள் பள்ளிக்கு வராமல் போனது, அப்போது அக்குழந்தை தனது அம்மாவிடம் எனது வகுப்பில் படிக்கும் பெண்ணுக்கு உடல் நலமில்லையென சொன்னார்கள் அதனால் நீ தினமும் கோவிலுக்கு சென்று அவளுக்காக வேண்டிக்கொள் அப்போதுதான் அவள் சீக்கிரம் நலமடைவாள் என்றது. அதற்க்கு அந்த தாய் அந்த குழந்தைக்காக அந்த குழந்தையின் தாய் கோவிலுக்குச்சென்று வேண்டிக்கொள்வார்கள் நாம் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொள்ளும் அவசியம் இல்லை என்றாள். அதற்க்கு அந்த குழந்தை மீண்டும் தன் தாயிடம் 'அவளுக்கு அப்பா அம்மா யாருமே இல்லை, அவள் அநாதை' என்றாள்.

இப்போதும் அந்த தாயிடம் குழந்தையின் கேள்விக்கான பதில் இல்லை. குழந்தை வளர்ந்து பெண்ணாகிறாள் அவளுக்குள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில் கிடைக்காமலேயே இருந்து வந்தது. காலப்போக்கில் அவளது பெற்றோரும் இயற்க்கை எய்தினர், எப்போதும் போல சாதாரண ஜுரம் வந்து படுத்திருந்தபோது தான் சிறு வயதில் தனது தாயிடம் கேட்ட அதே கேள்விகள் நினைவிற்கு வந்தது. யாரிடமாவது இதற்க்கான பதிலை தெரிந்து கொண்டே ஆகவேண்டுமென எண்ணினாள் அதற்காக பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தாள், சிலர் சில புத்தகங்களை படிக்க சொன்னார்கள். சிலர் சில அப்பியாசங்களை கற்றுக்கொண்டு அதன்படி இருந்தால் இதற்க்கான சரியானதொரு விடை கிடைக்கும் என்றனர். எல்லா மத குருக்களிடமும் ஆலோசனைகள் கேட்டு அறிந்தாள், அவள் தேடிய கேள்விக்கான பதிலை விட அதிகமாகவே அறிந்து கொண்டாள்.

தேடிய பதில் கிடைத்த பின்னர் அதை பிரசங்கிக்க வேண்டும் என்கின்ற உந்துதல் அவளுக்குள் உருவானது, அதற்க்கு காரணம் தன்னை போன்றே பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் கடவுள் வழிபாடுகளை களைந்தெரிவதா தொடர்வதா என்று அறியாமல் வாழும் பலர்க்கு பயனுற வேண்டும் என்று நினைத்தாள், தன் எஞ்சிய வாழ்நாளில் அதையே தனது முழுநேர பணியாக ஆக்கிகொண்டாள். கோவில் என்பது தெய்வம் இருக்குமிடம் என்றால், மனிதர்களால் கட்டிய கோவில்களில் கடவுள் வந்து தங்குகின்றாரா, வீட்டிலோ மற்ற இடங்களிலோ கடவுளை வணங்குவதால் கடவுள் நமது வேண்டுதல்களை கேட்க்க மாட்டாரா. அப்படியென்றால் கோவில்கள் எதற்க்காக உண்டாக்கப்பட்டது. கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது மனிதர்களால் ஏற்ப்படுத்தப்பட்டதா அல்லது தெய்வம் மனிதர்களிடம் தனக்கென்று கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறியதா.

இதுபோன்ற கேள்விகளுக்கு நியாமான நேர்மையான பதிலை தேடுகின்ற போது மதங்கள் + தெய்வங்கள் + மனிதர்கள் + கோவில்கள் = தெய்வ வழிபாடுகள் + நம்பிக்கைகள் = வணங்குதல். வணங்குதல் மட்டும் எல்லாவற்றிலும் அடிப்படையானது என்பது தெளிவாகும், வணங்குதலில் அவரவர் விருப்பத்தின்படி அமைந்துகொள்வதற்க்கு தடை ஏதுமில்லை என்றாலும் தான் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் சரியானதொரு விளக்கத்தை அர்த்தத்தை அறிந்து செயல்படுதல் என்பதே சரியான வழிபாடு