Author Topic: கி.மு வில் கடவுள்!  (Read 737 times)

Offline Yousuf

கி.மு வில் கடவுள்!
« on: March 01, 2012, 08:08:51 PM »
ஓரிறையின் நற்பெயரால்


"ஆரம்பத்தில் பல தெய்வ கொள்கையில் விற்றிருந்த மனித சமூகம் பின்னாளிலே ஓரிறையின் பக்கம் ஈர்க்கப்பட்டது."

இப்படிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடவுளுக்கும் மனித சமூகத்திற்கும் உள்ள உறவுக்குறித்து கருத்து பொதுவாக இவ்வுலகத்தில் நிலவி வந்தது.

ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் (ANTHROPOLOGY) தொடர்பான ஆய்வுகளும், அகழ்வராய்ச்சி (ARCHAEOLOGY) குறித்தும் மிகதுல்லியமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மேற்கண்ட கருத்தியலுக்கு மாற்றமாய் ஒரு முடிவை சொன்னது.
 அதாவது,  மனித சமூகங்கள் மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஓரிறைக்கொள்கை வலம் வர தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக.,

    "மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது"  - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)

     " ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் ,  ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.


இந்த ஆய்வுகளை வைத்து மட்டுமின்றி தர்க்கரீதியாகவும் மனிதமூலங்களின் ஆரம்பம் ஓரிறைக்கொள்கை என்பதை நிருபிக்கலாம்.

இன்று பல தெய்வ கொள்கைகள் மற்றும் கடவுள் மறுப்புகள் இருக்கிறதென்றால். அவை இவற்றிற்கு எதிரான மூலத்திலிருந்து தான் பெறப்பட்டிருக்க வேண்டும். அதாவது இவை இரண்டுக்கும் எதிராக பின்பற்றப்படும் ஒருக்கொள்கை இருந்தால் மட்டுமே இவை இரண்டும் இப்போது பின்பற்றப்பட சாத்தியம். ஆக கடவுள் மறுப்புக்கு எதிராக கடவுள் ஏற்பும், அதே நேரத்தில் பல தெய்வ கொள்கைகளுக்கு எதிராக ஒருக்கொள்கையும் இருக்கவேண்டுமானால் அது ஓரிறைக்கொள்கையாக தான் இருத்தல் வேண்டும்.

     நாத்திகத்தின் பொதுவான சித்தாந்தம் பரிணாமம் மூலமே மனித உயிர்களின் உற்பத்தி தொடங்கியது என்பதே! சரி ஒரு வாதத்திற்கு அதை ஏற்றுக் கொண்டாலும் உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?

 அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?   


இயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,

    இல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.?
    கடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற்கு கடவுள்  குறித்து யாரால் விளக்க முடியும்...?
    அதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..? -


தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்...  தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன?

  இதெற்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் தருவதாக இருந்தால் ஆதிமனிதர்கள் இயற்கையே உயிர் உருவாக்கியாக ஏற்காமல் இயல்பாகவே கடவுளைக்குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் .எனினும் அவர்களுக்கு பின்பற்ற வேண்டியவைகள் குறித்து விளக்கி கூற அவர்களிலிருந்தே ஒருவர் கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டு அந்தந்த சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது தான் உண்மை.

இதை அல்லாஹ் தன் மறையில்


(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்... (02:213)
என தெளிவாக ஆதி மனித நிலைக்குறித்து கூறுகிறான்


ஆக ஓரிறையின் பால் மக்களை அழைக்கும் செயலானது முஹம்மது நபி அவர்களால் புதிதாக தொடங்கப்பட்டதல்ல. மாறாக ஆதி மனிதரிலிருந்து தொடங்கி நபி மூஸா (MOSES), நபி ஈஸா (JESUS) வரையிலுமே பின்பற்றப்பட்டது - பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி முஹம்மது நபி அவர்களின் வருகையோடு முற்றுப்பெற்றது.

ஆக எல்லா இறைத்தூதர்களுமே அல்லாஹ் என்ற ஓரிறையை ஏற்க சொல்வதற்கே மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். மாறாக அல்லாஹ்வை வணங்குமாறு முஹம்மது நபிகள் மட்டும் புதிதாய் இஸ்லாத்தை போதிக்கவில்லை. இதற்கு ஒரு எளிய உதாரணம் பாருங்கள்.

இஸ்லாத்தை விமர்சிப்போருக்கும் தெரியும் முஹம்மது நபிகளின் தந்தை பெயர் அப்துல்லாஹ் (அப்து (அடிமை) + அல்லாஹ்) என்று . இதற்கு பொருள் அல்லாஹ்வின் அடிமை. முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...?


முஹம்மது நபியா....?!

அல்லாஹ் என்ற பதம் முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்போர் இதற்கு பதில் தரட்டும்.

. . .
 உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.

   எனினும் மனிதனின் சிந்தனையோட்டத்தில் ஏடுக்கும் தவறான முடிவுகள் அவர்களை பல தெய்வ கொள்கைக்கு வழிவகுத்தது. அதிலும் சொற்ப பிரிவு மக்கள் கடவுள் மறுப்புக்கு செல்ல நேரிட்டது. ஆக பல தெய்வ கோட்பாடுகள் தெளிவற்ற முறையிலே உள்ளதால் அவற்றை விமர்சிக்க நாத்திகம் பெருமுயற்சி எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாம் தன் கோட்பாடுகளை இன்றளவும் தெளிவாக வைத்திருப்பதால் அவை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கின்றன.

 ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை "நான் முன்னாள் முஸ்லிம்" இவ்வார்த்தையை கேட்கும் நடு நிலையாளர்கள் கூட இஸ்லாத்திலும் குறைப்பாடுகள் இருப்பதாக தான் உணர்வார்கள். ஆனால் பாருங்கள் அவர்களில் எவரும் வானம் மற்றும் பூமியின் அமைப்புகளை பார்த்தோ, சந்திர சூரிய இயக்கங்களை அறிந்தோ அல்லது பால்வெளி மாற்றங்களை ஆராய்ந்தோ அவை இறைவனால் படைக்கப்பட வாய்ப்பில்லையென இஸ்லாத்தை விட்டு வெளியே வருவதில்லை.

மாறாக தனக்கு சொல்லிதரப்பட்டவைகளையும் -அறிமுகம் செய்து வைக்கப்பட்டவைகளுமே இஸ்லாமாக உணர்ந்து அதை ஏற்கின்றனர்.அவர்கள் தவறாய் கற்ற இஸ்லாத்தை பின்னாளில் ஆய்வறிவோடு ஓப்பிடும் போது அது இஸ்லாத்தையே தவறாக காட்டுகிறது. ஆக இஸ்லாத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிராகவும் விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்கும் போதே இதை நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால் எதையும் தர்க்கரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் ஆராய்ந்து பின்பற்றும் நாத்திகர்கள் பலர் இஸ்லாம் நோக்கி வருகிறார்கள் இதற்கு என்ன காரணம்...?

வெற்று ஊகங்களையோ, போதிக்கப்பட்டவைகளை மட்டுமோ ஏற்று இஸ்லாத்தை நோக்கி வருவதில்லை. மாறாக ஆய்வுரீதியான சிந்தித்து அதன் விளைவால் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்..
 
எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.