Author Topic: டூத் பேஸ்ட் பல்லை மட்டுமா சுத்தம் பண்ணும்!!!  (Read 2410 times)

Offline Anu

காலையில் எழுந்ததும் பற்களை துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட், பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தை நீக்கும். மேலும் அவை சிரிக்கும் போது முகத்திற்கு பளிச்சென்ற ஒரு தோற்றத்தையும் கொடுக்கும். இத்தகைய டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்து, வெள்ளையான நிறத்தை தருவதோடு, வீட்டில் இருக்கும் சில பொருட்களையும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. அது என்னென்ன பொருட்கள் மற்றும்எவ்வாறு என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* வெள்ளி மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்கள் அல்லது பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்வதற்கு டூத் பேஸ்ட் சிறந்த பொருள். இந்த பொருட்களில் ஏதேனும் சற்று நிறம் மங்கியிருப்பது போன்று தெரிந்தால், அப்போது கொஞ்சம் டூத் பேஸ்டை, அதில் தடவி தேய்த்தால், வெள்ளி மற்றும் தங்கம் பளிச்சென்று ஆகும்.
* டூத் பேஸ்ட் லெதர் ஷூக்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுகிறது. இப்போது ஷூக்களில் ஏதேனும் கரை பட்டிருந்தால், அப்போது டூத் பேஸ்டை அதில் தடவி ஈரமான துணிகளை வைத்து துடைத்தால், கரைகள் போய்விடும்.
* வீட்டில் இருக்கும் காலி இடங்களில், ஏதேனும் விளையாடும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு கால்களில் கண்டிப்பாக அழுக்குகள் இருக்கும். அப்போது அதனை டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தால், அழுக்குகள் மறைந்து, கால்களும் அழகாக இருக்கும்.
* பாத்திரங்களில் துருக்கள் பிடித்திருந்தால், அந்நேரத்தில் டூத் பேஸ்ட் வைத்து தேய்த்து சுத்தம் செய்தால், துருக்கள் விரைவில் நீங்கிவிடும்.
* டைமன்களில் மோதிரம் அணிந்து அதில் அழுக்குகள் புகுந்து, அதன் அழகான வெள்ளை நிறத்தை பாதித்தால், அப்போது ஒரு மென்மையான பிரஸ்-ஐ எடுத்துக் கொண்டு, அதில் பேஸ்டை தடவி, சுத்தம் செய்தால், அழுக்குகள் விரைவில் வெளியேறிவிடும்.
* மியூசிக் மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள், அடிக்கடி வீட்டில் சிடி/டிவிடிகளில் பாட்டு கேட்பதால், அவை தேய்ந்து கீறல்கள் ஏற்பட்டிருக்கும். அப்போது டூத் பேஸ்டை அதில் தடவி, ஒரு முறை துடைத்தால், பிறகு சிடி/டிவிடிகள் நன்கு பாடும்.
* குழந்தைகளுக்கு பால் பாட்டில்களில் பாலை ஊற்றிக் கொடுத்து, அடிக்கடி பயன்படுத்துவதால் அதில் வரும் பால் நாற்றத்தால் குழந்தை பாலை சரியாக குடிக்காமல் இருக்கும், அப்போது புதிதாக பாட்டிலை வாங்காமல், அதில் வரும் நாற்றத்தை முற்றிலும் போக்க, டூத் பேஸ்டை, பிரஸில் தடவி தேய்த்து கழுவினால், அதில் வரும் நாற்றம் போய்விடும்.
* கைகளில் அணியும் வாட்சை தினமும் பயன்படுத்துவதால், அதன் பேண்ட்களில் அழுக்குகள் இருப்பது போன்று காணப்படும், அப்போது டூத் பேஸ்டை அதில் தடவி, பின் ஒரு ஈரத் துணியை வைத்து துடைக்க வேண்டும். பின் அதனை ஒரு ஈரமில்லாத சுத்தமான துணியால் துடைத்தால், வாட் புத்தம் புதிது போல் காணப்படும்.
* வீட்டுச்சுவர்களில் க்ரையான்களை வைத்து குழந்தைகள் படம் வரைந்து விளையாடுவார்கள். அத்தகைய கரையை போக்க டூத் பேஸ்ட் வைத்து துடைத்தால், அந்த கரைகள் போய்விடும்


Offline Gotham

payanula thagavalkaluku nandri anu

Offline Anu

 
payanula thagavalkaluku nandri anu
paaraatuthaluku nandri gotham