Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 222  (Read 2217 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 222
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline Guest 2k

பரந்தோங்கி விரிந்திருக்கிறது
காலத்தின் சாட்சியமாய் நின்றிருக்கும்
ஒரு நெடுமரம்.
கைவிரித்து அழைக்கிறது அதன்
நீண்ட நிழல்
தாயின் மடியினை ஒத்த அரவணைப்பில்
ஓராயிரம் கதைகளை சொல்லிச் செல்கிறது
அந்நெடுமரம்

கால காலமாக வந்திருந்து
வாழ்ந்து செல்லும் மனிதர்களுக்கு
மனிதர்களின் கதை மட்டும் தான் தெரிந்திருக்கிறது
காலத்தின் கதையை கூட கூறிச் செல்லும்
மரங்களின் கதை தெரிவதேயில்லை
அந்நெடுமரத்தின் கதையினை கூறும்படி அதன்
தாய்மடியில் தலை சாய்த்திருந்தேன்.
தெரிந்தோ தெரியாமலோ என் மூதாதயர்
விதைத்து சென்றனர்
இவ்விதையை
கவிழ்ந்தாடும் ஒரு குடையின் பாங்கோடு
இந்த மரம் வளர்ந்து நிற்க போகும்
விந்தை அறியாமல்

எத்தனையோ பருவங்களை கடந்து
முதிர்ந்து நிற்கும் இம்மரம்
எந்நாளும் வெயிலை ஏந்திக் கொண்டு வெயிலை தந்ததில்லை
மண்ணையும் மனதையும் குளிர்விக்கும்
வித்தையை
இம்மரம் அறிந்துகொண்டது தான் எங்ஙகனம் ?

கேள்வியின் பதிலென
அசைந்தாடி தென்றலை தருவிக்கும்
பேரன்பின் புன்னகை தவிழ்ந்தாடும்
என் அவ்வாவின் சாயல்.
மழை ஏந்தி சாரல் உதிர்க்கும்
இந்நெடுமரத்திற்கு
ஒருகணம்
தூக்கி சுற்றி ராட்டினமாடும் என் தாத்தனின் சாயல்
என் மூதாதயரும்,
அவர்களின் மூதாதயரும், அவர்களின் மூதாதயரும்
அறிந்திடாத கதைக்களுக்கும் கூட
இந்நெடுமரமே
சாட்சி

ஒரு முறை பச்சையை சூடி நிற்கும் மரம்
மறுமுறை முதிர்ந்தவரின் தோலென இலையை உதிர்த்து நிற்கிறது
இந்நெடுமரம்
உண்மையில் மனிதனும் மரமும் ஒன்றுதானோ
முதிர முதிர நினைவுகளை உதிர்த்துக் கொள்கிறான் மனிதன்
ஒவ்வொரு முறை ஒரு இலை உதிரும் பொழுது
ஒரு நினைவை உதிர்க்கிறது மரமும்

காய் தந்து, கனி தந்து
மழை தந்து, நிழல் தந்து
காலம் காலமாக
கொடுத்துக் கொண்டே இருக்கும்
இந்நெடுமரத்திற்கு
என்னதான் இருக்கும் எதிர்பார்ப்பென?
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது என்றது
நெடுமரம்,
சிரித்துக்கொண்டேன்.
ஆம்,
எடுப்பது மட்டும் தான் மனிதனின் வேலை.
என்றோ ஒரு நாள் வெட்டி வீழ்த்தப்பட்டு
அவ்விடம் தரிக்கும் மனிதனுக்கு தெரியாது
அது ஒரு நெடுமரத்தின் இடமென்று
ஒரு உயிர் வாழ்ந்த இடமென்று.
ஏனெனில் மனிதனுக்கு எடுப்பது மட்டும் தான் தெரியும்.

வெட்டி வீழ்த்தி வேரோடு பிடுங்கி
மரங்களை கூட துகிலுறியும் வித்தையை
மனிதன் மட்டுமே கற்றறிந்திருக்கிறான்
வீழ்வது அவன் மூதாதயரின் சாட்சியென்பதை அவன்
அறிந்திருப்பதில்லை
வீழ்வது அவன் சந்ததியின் வாழ்வென்பதை அவன்
அறிந்திருப்பதில்லை
இருந்தும் மரத்திற்கு யாதொரு கோபமும் இருப்பதில்லை இம்மனிதர்கள் மீது
ஏனெனில் மரங்களுக்கு கொடுப்பது மட்டும் தான் தெரியும்

இப்பொழுதும் கூட,
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
என் குற்ற நட்ட கணக்குளில் ஆர்வமற்று
யாரென்றறியறியாத
திக்கற்றவளின் கவலை போக்கும் தாய்மடியென
தன் கதை சொல்லி
ஆதரவு நிழல் நீட்டும்
இந்நொடி இந்நெடுமரம்
ஒரு ஆதித்தாய்
ஒரு தெய்வம்
ஒரு பேரன்பு
ஒரு பெரும்நிழல்
பிறந்திருக்கலாம்
நானும்
நிழல் தரும் ஒரு மரமென

« Last Edit: June 23, 2019, 02:50:02 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
மாக்களாய், மாறி போகும் மக்களே,
நான் எண்ணிலடங்காது  இருந்தேன்,
அவ்வப்போது உங்களை மன நிறைவடையும்  வரை  மகிழ்வித்தேன்,

உனது தேவைக்காக மரம்  தானே என்றெண்ணி,
என்னை நீ வேருடன்  வீழ்த்தினாய், வீழ்தது நான் அல்லவே, 
உன் வாழ்வாதாரமே.
என் அருமை புரிந்தும் என்னை நீ வீழ்த்த  துடிப்பது ஏனோ?.

உன் நிழல் உன்னை பிந்தொடரும் முன்பே
என் நிழல் உன்னை அரவணைத்ததை  ஏன் மறந்தாய்?
நான் இல்லாது நீ ஏது  சிறிதும் சிந்திக்க மாட்டாயா?

மரம்  என்ற என்னை வீழ்த்திய பின் மழை  என்ற
என் உறவை நாடுவதிலே அர்த்தம்  என்ன?

இறைவன்  எனை  படைத்தது, 
படைப்பிணங்களாகிய உங்களை பாதுகாக்கவே. 
என்னை வளர்த்தெடுங்கள் , வாழ வழி தாருங்கள், 
நான் வாழ நினைப்பது எனக்காக அல்ல உங்களுக்காக...

நீங்கள்  என்னை வீழ்த்த நினைத்த  பொழுதும்,
நான் உங்களை வாழ  வைக்கவே விரும்புகிறேன்.... 

ஏழையின் உறவாளனும் நானே,
பண முதலைகளின் பகையாளியும் நானே..

இப்படிக்கு..  மனக்குமுறலுடன் மரம் என்ற நான்....


MNA.... 🤨🤨🤨
« Last Edit: June 23, 2019, 03:11:36 PM by Unique Heart »

Offline JeGaTisH

முடிவிலா மேகம் கூட
மனிதனுக்கு மழை தருகிறது !
வெறும் மரம் என அறுத்துவீசும் மனிதனுக்கு
அது இளைப்பாற நல்ல நிழலையே தருகிறது .

சூரியனை இரண்டு
கைகளால் மரத்திட முடியாது
ஆனால் மரம்  கிழை கொண்டு
உன்னை காப்பாற்றுகிறது !

ரோடு போட பல மரங்களை
மலைகளை குடைகிறாய் !
இன்று உன் பேச்சுக்கு
குடையென நிட்பதோ ஒரு மரம் !

வரும் காலம் மரம் என்ற ஒன்றை
பூங்காவில் பார்க்க செய்து விடாதே !
அது நீர் இல்லா நிலம் போல
மரம் வளர்த்து  நீர் பெரு !


நான் உங்கள் SINGLE ஜெகதீஷ்

Offline KuYiL

 விதைகளாய் சிதறிய நாங்கள் இன்று வேர்களாய் விருச்சம் ஆனோம் !

தேசம் தொலைத்த அகதிகள் நாங்கள்!
கிளைகள் கட்டிய கூரையில்
வேர்கள் பின்னிய கட்டிலில்
இலைகள் வீசும் சாமரத்தில்
இதோ என்று மூன்று
தலைமுறைகள் கண்டுவிட்ட பின்னும்
தாய் நாடு பாசம் மண்வாசனையாய்
உயிரோடு ஓட்டிக்கொண்டது
களி மண்ணில் நாத்து நட்டு
கரிசல் மண்ணில் பருத்தி எடுத்து
செம்மண்ணில் வீடு கட்டி
வானத்து மேககங்ளை ஓட்டடை
என நினைத்து வான் தூசி துடைக்க
ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள்
தாத்தனும் தாத்தியும் கட்டியிழுத்த சுமூகம்
வீரமும் அன்பும் கட்டுக்கடங்கா காட்டுவெள்ளம்
பரம்பரைக்கு வேர் எங்கள் தாய் நாடு
விடியலை நோக்கி ஒவ்வொரு நாளும்
அரசாங்க உத்திரவு படிக்க அதிகாரிகள் தேடி வர
பள்ளி கூட பிள்ளைகளாய்
ஒன்று கூடி நாங்கள்
நாடு செல்லும் ஆசையோடு
தாவங்கட்டையில் முட்டு கொடுத்த கைகள்
தாய் நாடு திசை பார்த்த  கண்கள்
அரிசி வாங்க ரேஷன் கார்டும்
அடையாளம் சொல்ல ஆதார் அட்டையும்
உயிர் வாழ மட்டும் வரவில்லை ஐயா
நாங்கள்
உயிர் பிழைக்க ஓடி வந்த நாங்கள்
உயிராய் நினைக்கும் தாய்நாட்டுக்கு
உறவுகளோடு ஒன்றாய் சென்றிட
கடல் கடைந்து குடி பெயர்ந்து செல்ல
கடவு சீட்டு வாங்கும் கனவோடு இருக்கும்
எங்களுக்கு .......................
செத்தாலும் சொந்த நாட்டில் விதையாய் எம்மண்ணில் விழ ஆசை .....




Offline ShaLu

மரங்களை மண்ணோடு அழித்துவிட்டு
மலர்ச்சியை தேடி அலையும் மனிதனே..
மரங்கள் இல்லையெனில்
மலர்ச்சி ஏது? மகிழ்ச்சி ஏது ?

எதிர்கால சந்ததியை பற்றி
எள்ளளவும் நினையாமல்,
எழில்மிகு மரங்களை
எச்சலனமுமின்றி வெட்டி எறிகிறான்.
 
சுவாசிக்க உறுதுணை புரியும்
மரங்களை மனசாட்சியின்றி வெட்டுவது,
சுவாசம் தந்த அன்னையையே
வெட்டுவதற்கு சமமென  தெரியாமல்...

பசுமை என்பதெல்லாம் பகற்கனவாய் ஆயிற்று
பதற்றமின்றி மரங்களை அழிக்கும்
படுகொலையினால்..

நீரின்றி அமையாது உலகென்பர்
அந்நீரை தருவது மரங்கள்தானே?
மானுட சந்ததிக்கு மறுவாழ்வு வேண்டுமெனில்
மரங்களை நடுவோம்! மனிதம் காப்போம் !

Offline SweeTie

ஓங்கி வளர்ந்த மரம்
பரந்து நிற்கும்  கிளைகள்
தாங்கி பிடிக்கும் வேர்கள்
வெயிலில் கொடுக்கும் நிழல்
மழையில் பிடிக்கும் குடை

பறவைகளுக்கு சரணாலயம்
மிருகங்களுக்கு  இரவில்   சன்னதி
மக்களும் மாக்களும்  இன்புற்று வாழ
இயற்கை  வழங்கிய  மூல வளம்

கற்றதை  மறந்தான் மனிதன்
விற்பதை  சிந்தையில் கொண்டான்
மரங்களை அழிக்கத் துணிந்தான்
பணப் பொதிகளை  தோழிலே  சுமந்தான்

காடுகள் அழிந்து நாடுகள் தோன்றின
காட்டு  வாழ் மிருகங்கள்  நாட்டினுள்  புகுந்தன   
மனிதனும் கொண்டான் மிருகத்தின் பண்புகள்
மாறிய அவனுமே  வன்மத்தில் இறங்கினான்

அநீதிகள் மலிந்தன  அவதிகள் தோன்றின
துன்பமும்  சூழ்ச்சியும்  தொடர்ந்தே வந்தன
பற்றிடும்  சுவாலைகள் சுட்டுப்பொசுக்கின
சாம்பல்கள்  மட்டுமே எஞ்சிக் கிடந்தன

மரங்களை நடுவோம்  மானிடம் காப்போம்
நீரின்றி வாடும் நிலத்தையும் காப்போம்
சோர்வினில்  வாழும் உழவர்கள்  காப்போம்
பாரிலே  பஞ்சம் பறந்திட  செய்வோம் 
« Last Edit: June 25, 2019, 08:22:21 PM by SweeTie »

Poocha

  • Guest
ஒற்றை ஆலமரம்

யார் விதைத்த விதையில்
உதித்ததோ நானறியேன்
ஆனால்
சுட்டெரிக்கும் சூரியனின்
வெயிலில் இருந்து
தினம் எங்களை
காப்பாற்றும்

குடும்ப அட்டையில்
சேர்க்காத
குடும்பத்து உறுப்பினர் போல
வாழ்வியலில்
விசாலமாய்
கலந்திருக்கும்

விழுதுகள் பரப்பி
வேறூன்றி
படர்ந்திருக்கும்
அரும்மருந்தாய்
தன்னையே
அர்பணித்திருக்கும்

பஞ்சாயத்து பல
கண்டிருக்கும்
சந்தைகள் பல
கூடியிருக்கும்

வாலிப வயதினரின்
ரகசியம் பல
தன்னுள்  கொண்டிருக்கும்

தலைமுறை
பல கண்டிருக்கும்
தன்னுள் பல
பேர் அறியா
ஜீவராசிக்களுக்கும்
அடைக்கலம்
கொடுத்திருக்கும்

ஊஞ்சலாட
விழுதுகள்
கொடுத்த மரம்
மரங்கொத்தி
கொத்துகையில்
வலிக்கவில்லை

மனிதா,

வெட்ட
நீ
கோடாளி கொண்டு
வருகையில்
ஏனோ
விழுதுகள்
மரத்தின்
கண்ணீர்  துளிகள்
போல தெரிகிறது

வெயிலில் நின்று
வெட்டுகையில்
இளைப்பாற
எங்கு செல்வாய்
யோசித்ததுண்டா
நீ ?

வரும்
சந்ததிக்கு
என்ன சொல்வேன்

பலன் பல தந்த
மரத்தை அழித்தோம்
சாலை எனும் ஒரு
பலன் பெற
என்றா ?!

மரத்தின்
அருமை தெரியாமல்
சாலையின் பெருமை
சொல்லும்
மூடனிடம்
என்ன சொல்ல

மழை நீர்
வேண்டினும்
வெட்டாமலிரு

நீங்காத
நினைவுகள்
தந்து
எங்கள் ஊருக்கு
என்றும்
முகவரியாய்
இருக்கும்

ஒற்றை ஆலமரம் ..

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


ஒற்றை ஆலமரம் நான் !
ஓங்கி வளர்ந்து படர்ந்து
கொப்பும் கிளைகளுமாய் ..
பூக்களும் கனிகளுமாய் வீற்றியிருக்கிறேன்  !

என்னை வெட்ட வரும் மனிதா ! நில் !
ஒரு நிமிடம் என் கதையை கேள் !
ஓரறிவு படைத்த உயிர் முதல்
ஐந்தறிவு விலங்குகள் வரை ..
நான்தான் புகலிடம் !

எத்தனையோ ஜீவராசிகளின் ..
உறைவிடம் நான் !
சிறு எறும்பு , பூச்சிகள் முதல்
சில்வண்டுகளும் ..சிறு பறவைகளுக்கும் ..
வசிப்பிடம் நான் !

அவை மட்டுமா?
உன் போன்ற மனிதர்களும் ..
என்னை அண்டி பிழைப்பவரே !

என் கிளைகளில் தூளி கட்டி போடும்
பச்சிளம் குழந்தைகளுக்கும் ....
ஊஞ்சல் கட்டி விளையாடும் சிறுவர்களுக்கும்
காய் , கனி பறிக்க வரும்
விடலைகளுக்கு மட்டுமன்றி ..
காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கி ..
என் நிழலில் காதல் பரிமாறிக்கொண்ட
இளசுகளுக்கும் தூதுவன் நானே !

இதய சின்னத்தை கல்வெட்டுகலாய் ...
செதுக்கி பெயர் பொறித்த ..
காதல் பறவைகளுக்கும் சரணாலயம் நான்தான் !
ஊர் வம்பு பேசவும் ...பஞ்சாயத்து தீர்ப்புகளை
பக்குவமாய் சொல்லவும் ..
நான்தானே நீதிமன்றம் இங்கு !

இயற்கை அன்னையின் வாரிசுகள் நாங்கள் !
இரவில் சந்திரனின்
குளுமையில் உறங்கினால் ...
காலையில் கதிரவன் தம் கரம் கொண்டு
என்னை தட்டி எழுப்புவான் !
என் இல்லத்தில் நடைபெறும்
வானத்து திருவிழாக்களுக்கு ..
வானவில் தோரணம் கட்ட....
மேகங்கள் இடியாய் மத்தளம் கொட்ட ..
மின்னல் தோழி படம் பிடிக்க ...
மழை சாரல் அட்சதை தூவி ஆசிர்வதிக்கும் ! 


இதோ !இன்று ...
என் மரநிழலில் ஓர் மாநாடு போடவும் ...
அத்தனை மக்களுக்கும் ...
சுவாசிக்கவும் ..வாசிக்கவும்
இடம் கொடுத்து இருக்கிறேனே !

சொல் இப்போது.....
என்னை வெட்ட இன்னும் மனம் இருக்கிறதா ?
என்னை வெட்ட கொண்டு வந்து இருக்கும்
கோடரியும் என் கிளைத்துண்டுகளில் தான்
செய்யப்பட்டுள்ளது ....

இன்று என்னை வெட்டினால் ..
நாளை நீ சுவாசிக்கும் காற்றுக்கும்
காசு கொடுக்க வேண்டி இருக்கும் !
நன்றி மறக்காதே !
நன்மை செய்யும் என்னை
வாழ விடு ..நீயும் வாழ்ந்து விடு !
« Last Edit: June 27, 2019, 09:31:48 AM by RishiKa »