13
« Last post by Shahina on April 17, 2024, 11:59:35 PM »
அனைவரும் வணக்கம்
இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல் மதராசபட்டினம் திரைப்படத்திலிருந்து" பூக்கள் பூக்கும் தருணம்"
இத்திரைப்படம் 2010-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெளிவந்த ஒரு அழகான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்க, ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் ஒரு முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை கல்பாத்தி எஸ். அகோரம் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சுவாரஸ்யமான காதல் மற்றும் தேசபதி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், இந்திய ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ள படமாகும். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாஹ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி கொன்சால்வேஸ் எடிட்டிங் செய்துள்ளார்.