FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on May 16, 2019, 12:07:32 AM

Title: முடிவிலி உறக்கம்
Post by: Guest 2k on May 16, 2019, 12:07:32 AM
முடிவிலி உறக்கம்

முடிவிலியான கட்டாயங்களின் வழி
நிகழும் பொருளற்ற ஈகங்கள்
முடிவிலியான காரணிகள்
நிகழ்த்திச் செல்லும்
நியாயமற்ற இழப்புகள்
முடிவிலியான பாதைகளின்
அர்த்தமற்ற காத்திருப்புகள்
முடிவிலியான
அநாமதேய நிலைகளின்
உண்மை பெயர்கள்
முடிவிலியான எல்லாவித குழப்பங்களுக்கும்
தற்போதைய தேவை
முடிவிலியான நீண்டதொரு உறக்கம்
மட்டுமே
Title: Re: முடிவிலி உறக்கம்
Post by: RishiKa on May 16, 2019, 08:53:05 AM
வாழ்வின் மாயங்களுக்கும் வலிகளின் காயங்களுக்கும்  மருந்து
நீண்டதொரு உறக்கம் தான். ஆனால் உறக்கத்திற்கும் இரக்கம்
இல்லையே தோழி! என் செய்வது? :-[ :'(
Title: Re: முடிவிலி உறக்கம்
Post by: Guest 2k on May 17, 2019, 07:48:56 AM
உண்மை தான் பேபி. உறக்கத்திற்கு இரக்கம் வேணும்னா கூட அதுக்கும் நம்ம மனசு தான் மனசு வைக்கனும் 😂