Author Topic: இழப்பும் இயல்பும்  (Read 165 times)

Offline thamilan

இழப்பும் இயல்பும்
« on: August 19, 2016, 07:11:07 PM »
சுகமாய் இருக்கிறது
இப்போதெல்லாம்
மனைவியின் கை சூட்டைவிட
மகனின்  கைச்சூடு

மனைவியின் முத்தத்தை விட
மகளின் முத்தம்

மனைவியோடு தனிமையை விட
குழந்தைகளோடு தனிமை 

அதிகமாக பயணிக்கிறேன்
தாரத்தின் திசை மாறி
தகப்பன் திசையிலே

இந்த ரசவாதம்
இழப்பின் குறியீடா - எனில்
எதை இழந்தேன்!!!
இழந்ததினால் தானே பெற்றேன்
எப்படி இழப்பாகும்!!!

இது இழப்பு அல்ல
இயல்பு என அறிந்தேன்
இயல்பே இழப்பானது
இழப்பே இயல்பானது
« Last Edit: August 21, 2016, 08:42:53 AM by thamilan »

Offline SweeTie

Re: இழப்பும் இயல்பும்
« Reply #1 on: August 21, 2016, 06:57:45 AM »
உங்கள் பக்குவத்தைப் பார்த்து வியக்கிறேன்  தோழரே.
அருமை  உங்கள் கவிதை.   வாழ்த்துக்கள்.