Author Topic: மட்டன் கொத்து கறி வடை  (Read 673 times)

Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁
தேவையானப் பொருட்கள்.

மட்டன் கொத்து கறி   – 200 கிராம்
பூண்டு – 4
காய்ந்த மிளகாய் – 2
பச்ச மிளகாய் – 1
கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்
தேங்காய் துருவல்  – கால் மூடி
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய மல்லி இலை  – 2 கைப்பிடி
கடலை பருப்பு – கால் கப்
மைதா,கார்ன்பிளர்  மாவு  – தலா 1 ஸ்பூன்
எண்ணை –  தேவையான அளவு

செய்முறை

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைகவும்.

கொத்திய கறியை கழுவி  அதில் சிறீதளவு தண்ணீர் காய்ந்த மிளகாய்,பூண்டு, பச்ச மிளகாய், உப்பு போட்டு  வேக வைத்து தண்ணிரை வற்ற விடவும்.

அதனுடன் வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிறட்டி, கொத்து மல்லியும், தேங்காயை துருவலையும்   சேர்த்து  கரம் மசாலா   ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து  சேர்த்து வதக்கி  ஆறவக்கவும்.

ஆறியதும்  மிக்சியில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு  அதனுடன்  ஆற வைத்த  கலவையை போட்டு நல்ல அரைத்து தனியாக  எடுத்து வைத்து கொள்ளவும்.

உதிர்ந்து போனால் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறிக்கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  மாவை வடைகளாக தட்டி போட்டு மிதமான தீயில் 2 பக்கமும் திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

சுவையான மட்டன் கொத்து கறி  வடை ரெடி.
« Last Edit: June 09, 2018, 01:57:54 AM by DoRa »