Author Topic: மனையாளும்_மனையாள்  (Read 546 times)

Offline Guest

மனையாளும்_மனையாள்
« on: September 28, 2018, 04:41:50 PM »

துயிலெழுதலில் துவங்குகிறது
அவளுக்கான பொறுப்புகள்..

களைப்பையோ ஓசையில்லாமல்
போன கைபேசியின் எச்சரிக்கை
ஒலியையோ(அலாரம்)
காரணம் சொல்லி
காலம் தவறிய ஒரு விழித்தெழுதலை
நியாயப்படுத்திட முடியாதவள் அவள்

பள்ளிசெல்லும் அவள் குழந்தைகள்
தாயென அவள் இருப்பதாலேயே
தூங்கும் நேரம் குறித்தோ
விழிக்கும் நேரம் இதுவெனவோ
குறிப்பெடுப்பதில்லை.

வேலை நிமித்தம்
வெளியில் செல்லும் கணவன்
வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டி
செல்ல நேர்கையில் அலாரங்களை நம்புவதில்லை

பிள்ளைகளையும்
பலநேரங்களில் கணவனையும்
குறித்த நேரத்தில்
துயிலெழுப்புதல் என தொடங்கி
பள்ளி வாகனத்தை துரத்திப் பிடித்தலில் முடியும்
தினசரி அவள் ஆடிக்கழைக்கும்
Video Game-ன் Level 1.

"இவ்ளோ சீக்கிரமா ஏன் மா?"
என துயிலெழுப்பும் அவள்
செயலுக்காய் குறைப்பட்டு
கொள்கின்றனர் மற்றவர்கள்.

தாமதமாகும் ஒரு நாளில் வெளிப்படும்
"சீக்கிரமா எழுப்பிருக்கலாம்" கள்
அவளை கோபப்படுத்துவதில்லை

அவள் குடிக்கும்
சிக்ரி கலந்த காஃபியின்
நறுமணம் மட்டுமே அவளுக்கான
காலைச் சிரிப்பு

காலையுணவோடு மதியஉணவை
தயார்படுத்தி அனுப்பிய பிறகான
அவளது தேடல்களின் முயற்சிகளையோ
முன்னேற்பாடுகளையோ குறித்து
அதிக அக்கறை கொள்வதில்லை இவ்வுலகம்

முன்மாலைகளில் அவளுக்கான
அவளுக்கு விடையளித்து மீண்டும்
ஆடத்துவங்குகிறாள்தினசரி அவள்
ஆடிக்கழைக்கும் Video Game-ன் அடுத்த Level களை

பிள்ளைகளுக்கான வீட்டுப் பாடங்களையோ
இரவு உணவு குறித்தான திட்டமிடல்களையோ
தொந்தரவு செய்வதில்லை ரிமோட் தொடாத
அவளது தொலைக்காட்சி தேடல்

பின்னிரவுகளில் இறுதியாய்
துயிலச்செல்லுகையில் இனியொரு
தினத்திற்கான ஆடிக் கழைத்தலுக்காய்
தயாராகிறது அவளது Gaming Console.

மனையாளும்_மனையாள்..







என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ