Author Topic: ஆண் - ஒட்டகம்  (Read 650 times)

Offline Guest

ஆண் - ஒட்டகம்
« on: December 30, 2018, 03:38:38 AM »
இன்று மட்டுமல்ல
நேற்றும் அதற்கு முந்தைய
தினமும்தான் மழை வேண்டி
நிற்கிறது அரபு தேசத்து பாலைவனக்காடுகள்...
.
கார் மேகங்களை
காத்துநின்றதேயி்ல்லை
ஒட்டகக்ககூட்டங்கள் -அனல்
கொஞ்சும் மணற்காடுகளில்
தன் பரந்த பாதங்களை பரப்பி
அனாயாசமாய் உலாத்துகின்றன...
.
ஒவ்வொரு துளி வியர்வையினின்றும்
ஊற்றைடுக்கும் உப்பின் இறுக்கம்
என் சட்டையின் மார்பில்
என்தேசத்து வரைபடத்தை
வரைந்து படியவைக்கிறது....
.
எம் தேசத்தினின்றும்
எப்போதோ கரை கடந்து வந்த
மயிர் நிறைந்த தலைகளி்ல்
இப்போதெல்லாம் மின்னலடிக்கும்
வழுக்கைகளும் எப்போதோ மரித்தும்
மடியாதிருக்கும் நரைமுடிகளும்...
.
பதிற்றாண்டுகளை
கரைத்துக்கொண்டே இருக்கிறான்
ஒரு கணம் அல்ல அரை நொடிகூட
நின்று யோசிப்பதற்கு இடம்
கொடுக்கவில்லை நிதானமற்ற தேடல்கள்...
.
வயிற்றுப்பசிக்காய் வண்டி ஏறியவன்
இன்னும் தன் நிறுத்தத்தை
தேடிக்கொண்டேயிருக்கிறான்...
.
தான் செல்லும் பயணத்தினூடே
இடை நிறுத்தங்களில் அவசரவசரமாய்
ஏறி அதே வேகத்தி்ல் இறங்கிச்செல்பவர்களை
நமட்டுச்சிரிப்போடு கடந்துசெல்கிறான்...
.

ஒவ்வொரு அறையிலும்
சிந்திக்கிடக்கிறது அவன் இரவுகள்
பிறசவித்த சிந்தனைகள்
மகனின் கல்வி மகளின் திருமணம்
வீட்டுமனைக்கடன்
இவைகளுக்கிடையே வந்து வந்து
கலைந்துபோகிறது அவள் முகம்...
.
பாலைவனத்துத் தலையணைகளை பத்திரப்படுத்துங்கள் தலைமகன்களே
அவைகள் சகித்துக்கொண்டன
உங்கள் கோபங்களையும்
தாபங்களையும் கண்ணீரையும்
கனவுகளின் தீராத அலர்ச்சைகளையும்...
.
ஒரு நிறுத்தத்தில் என்
பயணத்தை நிறுத்திக்கொண்டபோது
என்னை வரவேற்க யாருமே
வந்திருக்கவி்லை.....
.
இதோ நான் தலை சாய்க்கும்
புதிய தலையணையில்
லேவண்டர் வாசம்
குமட்டுகிறது எனக்கு...!! ஆமாம்...!!
.
குரட்டை சப்தத்தை
கடிந்துகொள்ளும் மனைவி
என் வியர்வை நாற்றத்தை
வெறுக்கும் பிள்ளைகள்
ஏதுமற்றவனாய் பாற்கும் உறவுகள்
என தனித்துவிடப்பட்ட
கறுப்பு ஒட்டகமாய் நான்....
.
சில காலடித்தடங்கள்
தென்படுகிறது தூரத்தில்
சில கிழட்டு ஒட்டகக்கூட்டங்கள் இப்போதுதான் அவ்வழியே
கடந்து சென்றிருக்கக்கூடும்...
.
மீண்டுமொரு பயணத்தை
அக்காலடித்தடங்களில்
பற்றுகிறேன்...
என் பழைய தலையணையைத்தேடி
பத்திரமாக இருக்கும்
பாலைவனக்காட்டில்...!!!
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: ஆண் - ஒட்டகம்
« Reply #1 on: December 30, 2018, 08:54:28 AM »

டொக்கு நண்பரே!
நாங்கள் அறிவோம் !
பாலைவனக்காட்டில் பொசுங்கி போனது ,,,,
பழ மரங்களும் செடிகள் மட்டுமல்ல !
உங்களை போன்றோரின் ..
இளமை சுகங்களும் ...ஆசை கனவுகளும்தான் !
உங்கள் பெருமூச்சின் அனல் காற்றே ..
இங்கு மழை மேகங்களாய்.....
அதில் துளிர் விடும்
மரங்களின் கிளைகளுக்கு தெரிவதில்லை !
வேர்களின் வேதனைகளும்..
தியாகங்களும் ...!
ஆனாலும்  உறவுகளுக்காக ...
உழைத்திடும் உங்களுக்கு எல்லாம் ..
எங்களின் வணக்கங்களும் பிராத்தனையும் !

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஆண் - ஒட்டகம்
« Reply #2 on: January 10, 2019, 04:41:20 PM »



அழகான கவிதை, அருமையான வரிகள்!  :)

வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.  :)