Author Topic: மென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ  (Read 3762 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கணினியில் இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் நிறுவ வேண்டி இருக்கும். நீங்கள் நிறுவி வைத்து இருந்த அனைத்து மென்பொருள்களையும் இழக்க வேண்டி வரும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட எளிதான வேலையாக இருக்கும். ஆனால் தேவையான மென்பொருள்களை பயர்பாக்ஸ், VLC, சாட்டிங் மென்பொருள் என்று மீண்டும் இணையத்தில் தேடி ஒவ்வொன்றாக தரவிறக்கி நிறுவது சலிப்படி தரக்கூடிய ஒன்று.

இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு ஒட்டு மொத்தமாக கணினியில் நிறுவிடலாம்.

நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள 'Get Installer' என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றை நிறுவும் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.



இப்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்க பட்டு உங்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காமல் கணினியில் நிறுவப்பட்டு விடும்.


நிறைய வேலையும் மிச்சம். உங்கள் நேரமும் மிச்சம்.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Thanks enaku adikadi use akum ithu
10 days munadi than format paninen
apa koduthuruntha use akirukum
anyway ini use panikuren

Offline செல்வன்



பயனுள்ள தகவல் . இதை நானும் பயன்படுத்தி பார்க்கிறேன் .