Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 210  (Read 1746 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 210
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


கல்லறை பூக்கள் !

உன் கல்லறை பூக்கள்
என்றும் வாடியதே இல்லை !
என் கண்ணீர் பூக்களில் 
என்றும் நனைந்து இருப்பதால் !

எங்கோ தூர தேசம் சென்று விட்டதாய்
எண்ணி கொள்கிறேன் !
திரும்பி வாரா உலகத்திற்கு
நீ பயண பட்டதை
உணராமல் !

ஆகாய வெளிகளில் ...
தேவதையை தேடுகிறாய் நீ !
அருகினில் நான் இருப்பது தெரியாமல் !
என்றோ சென்று விட்ட ஜீவனுக்கு
இன்று உயிர் கொடுக்கிறாய்
உன் நினைவுகளால் !

மரித்து போன நினைவுகளை ..
நீ நியாபகப்படுத்துகிறாய்
மறந்து விடு என்று சொல்லி !

நான் ஒரு பொன்கூண்டு கிளி !
விரும்பி அடைபட்டு போனவளுக்கு ..
சிலுவைகளும்  புதிது அல்ல !
சிறகுகளும் தேவை இல்லை !

நீ வரும் பாதை பார்த்து
காத்து கொண்டு இருக்கிறேன் !
நாந்தான் அங்கு வர வேண்டி
இருப்பதை அறியாமல் !


« Last Edit: February 26, 2019, 10:32:21 AM by RishiKa »

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
தேவதைப்பெண்ணே!!

நித்தமும் நிந்திக்கிறேனடி  உனை
நினைவுகளை கொல்லமுடியாமல் தவிக்கிறேனடி 
அவசரம் பழகுதலை அவசரமாக
கற்று கொண்டையோ  ?

கனவுகள் கோடி கண்டேனடி  !
உன் நெஞ்சில் கள்வனாக 
உன் கிள்ளை மொழியினிலே 
பிள்ளையாக வாழ்ந்திட வேண்டுமென

உன் தலைமுடி கோதி உறங்கும்  உனை
மடி  தாங்கிட  வேண்டுமென
அடி மீது அடி வைத்து நீ நடக்கையில்
உன் நிழலாக  மாறிட  வேண்டுமென

அதிகாலையில்  என் விழி கொண்டு
உன் விழித்தாள் திறந்திட வேண்டுமென
உனக்கு பிடித்த உணவை  என் இதழ் 
கொண்டு கொடுத்திட  வேண்டுமென

எனை காலமெல்லாம்  கண்ணீர் சிறையினில் 
தள்ளி, நூல் கொண்டு நீ ஆடும்
ஆட்டத்தினில்  சிக்கிசிதறுகிறேனடி...

விதியோடு விளையாட  முடியாமல்
உயிர்க்கூடு  துறந்து  உன்னை நோக்கி
விண்ணில் பாய்கிறேனடி  ...
ஆத்மாவாக!
வாழ்ந்திட வேண்டுமென

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
நினைவுகள் 
காயங்களின் அடையாளம்! 
மறையாத வடு! 

உன்னை 
பார்த்ததும் பிரிந்தேன் 
நீ 
பிரிந்ததும் மரணித்தேன் 
உன் நினைவுகள் 
என்ன தட்டி எழுப்ப 
மரணம் நிச்சயம் 
என்று   
தெரிந்தும் உயிர்த்தேன்...

எப்படி சொல்ல 
என் நிலையை  உன்னிடம் ?
மரணித்து விட்டேன் 
நீயோ 
என் இதயத்தை 
பிரேத பரிசோதனை 
செய்கிறாய் 
நீயோ 
என்னிடம் உள்ள உன் நினைவுகளுக்கு 
உணர்ச்சியை ஊட்டுகிறாய்
என் நினைவுகள் உயிர் பெற்றால்
நடக்கும் பேராபத்தை 
நீ அறிவாயா ?
என் நினைவுகள் புத்துணர்ச்சி பெற்றால் 
என்னை  மீண்டும் கொன்றுவிடும் அதை 
நீ அறிவாயா?
விபரீதம் தெரியாமல் செயல் படுகிறாய் 
எத்தனை முறை இறப்பேன்… 

நாம் பேசும் நிமிடங்கள் 
குறைந்ததால் 
நீ என்மேல வைத்திருக்கும் அக்கறை 
குறைந்து போகுமா என்ன?
என்று 
எனக்கு நானே 
ஆறுதல் கூறி கொள்கிறேன் 
அதே ஏக்கம் 
உனக்கும் இருக்கும் என்று 
என்னை நானே தேற்றி  கொள்கிறேன் 
நாம் பேசும் நிமிடங்கள் 
குறைந்து போனதற்கு 
காரணம்
நீயா ?நானா ?என்ற 
சிந்தனை ஆழமாக இறங்கி 
விடுகிறது ..
என்ன செய்வேன் நான் ..

உன்னை பிரிந்த  நாளில் இருந்து
என் மூளைக்கும் இதயத்திற்கும் 
இடையே கடும் விவாதம்…
என் மனம் மட்டுமே   
உன்னை எண்ணி
போர்புரிந்து கொண்டிருந்தது மூளையிடம்… 
அவள் பேசவில்லை என்றாலும் 
என் நினைவுகள் அவளை தீண்டும்… 
பேரழகனே வந்தாலும் 
நான் மட்டுமே  அவள் அழகன்
என்று இருப்பாள்… 
அவளை அவளே மறந்து போகும் 
சூழ்நிலை வந்தாலும் 
என்னை மறந்திடமாட்டாள்… 
அவளுக்குள் இருக்கும் 
என் இதயம் துடித்து கொண்டிருக்கும் 
எனக்கே எனக்காக மட்டும் …
ஆனால் இன்று 
என் மனம் மூளையிடம் 
தோல்வி அடைந்தது…

சில நினைவுகள் 
நினைவுக்கு வரும் பொழுது 
கண்களில் நீர்வீழ்ச்சி 
இதயத்தில் பனிப்போர்… 
சுகமாய் இருந்த என்  நினைவுகள் 
இன்று 
சுமையாய் மாறிப்போனது 
சுதந்திரமாய் இருந்த என் இதயம் 
இன்று 
முள்வேலியில் சிக்கியுள்ளது ..
சில நேரங்களில் 
உன் நினைவுகள்
அமிர்தமாய் தித்திக்கும்…   
சில நேரங்களில் 
உன் நினைவுகள்
விஷமாய் கொல்லும்… 
இதற்கிடையில்
என் இதயமோ கால் பந்தாகி போனது… 

மறக்க நினைக்கும் 
நிமிடங்கள் 
புத்துயிர் பெற்று மீண்டும் 
உயிர்த்தெழுகிறது உன் நினைவுகள்
ஆழமாய் புதைந்து போன 
உன் ஞாபங்கங்கள் துளிர்க்கிறது ..
அழிக்க நினைக்கும் சுவடுகள் 
கண்ணுமுன்னே காட்சி தருகையில் 
என்ன செய்வேன் நான் ?

என் கனவுகளை 
எண்ணி  நான் பயந்தோட
உன் நினைவுகளோ 
என்னை தடுக்கின்றது 
என் நிதானத்தை 
இழக்க செய்யும் உன் நினைவுகளை 
நான் என்ன செய்ய ?

இரவை கொல்லும் பகலாய் 
என்னை கொல்கிறது 
உன் நினைவுகள் ..
எனக்கு வேண்டாம் உன் நினைவுகள் 
உன் பிரிவை தாங்கும் 
வலிமை  எனக்கு இல்லை
என்னை முழுதாய் அழித்துவிட்டு போ
வேண்டவே வேண்டாம்
உன் நினைவுகள் என்னில்…
எடுத்து செல் ..

உன் நினைவுகள் 
என்னை விட்டு நீங்கி விடுமா ?
என் இதயத்தை கூறு போட்டுக்கொண்டிருக்கும்   
உன் நினைவுகள் என்னை விட்டு நீங்குமா ?
இந்த வலியை சொல்ல 
என் கண்ணீரை விட 
என் கிறுக்கல்களே சிறந்த வழி…
கிறுக்குவது நானாக இருந்தாலும் 
என்னை கிறுக்க வைப்பது 
உன் நினைவுகள் தான் 
எதிர்பார்ப்பு இல்லாத உறவு 
மீண்டும் ஏற்படாத ஒரு ஏக்கம் 
கண்ணீர்க்கு ஆறுதல் 
சந்தோசத்திற்கு ஆதரவு 
என்றும் இறக்கிவைக்காத இனிமையான சுமை… 
மறக்க விரும்பாத நினைவு 
எழுத்துக்களில் மௌனம் 
எண்ணிய போது அழுகை…
காலங்கள் எல்லாம் கடந்து போக 
காயங்கள் மறைந்து போக 
கனவுகள் எல்லாம் கானல் நீராய் மாறி போக 
நினைவுகள் எல்லாம் நீங்கி போக 
இன்றைய நிகழ்வுகள் மட்டும் உறைந்திட 
இனியதாய் ஒரு வாழ்க்கை மலர்ந்திட 
ஆவல் கொண்டுள்ளேன்...

உன்நினைவுகள் என்னுள்
இருக்கும் வரை
இது சாத்தியம் இல்லை…

நீயோ திடமானவள்
உன் ரணங்களை நீ எதிர்த்து நிற்பாய்  என்று 
நான் அறிவேன்…
நீயோ பிடிவாதக்காரி 
உன் முடிவில் உறுதியாய் இருப்பாய் என்று
நான் அறிவேன்… 
ஆனால் 
நீ  போராடுவதை  பார்க்கும்   
தைரியம் எனக்கு இல்லை   
நீ தன்னந்தனியாய்
தவிப்பதை கண்டுகொள்ளாமல்
இருக்கும் இதயம் என்னிடம் இல்லை…
நீ என்னை 
பிரிந்து போகையில் 
என் உயிரை எடுத்து சென்றாய் 
அதுபோல 
எஞ்சி என்னுள் இருக்கும்   
உன் நினைவுகளையும் 
வேரோடு பிடுங்கி சென்று விடு… 
வேண்டாம் இந்த பாரம் 
தேவதையே
நீ என்றும் நலமாக இருப்பாய்யென்ற 
மன ஆறுதலோடு 
புத்தம்புதியதாய்
பிறக்க ஆசை கொள்கிறேன்.... 

உன் நினைவுகளை எடுத்து செல்

 

 

Offline Dong லீ

மெல்லிய மழை நீர்துளிகளை
கருவில் சுமக்கும் மேகங்கள் தன்
வெள்ளி மின்னல்களின்
இதமான அரவணைப்பில்
அழகிய நீர் குழந்தைகளை
சுகமாய் பிரசவித்த
இனிய காட்சியொன்றில்
காதலாடினான்  தலைவன்

தலைவனவன் அழகில்
உருகி மருகி கிறங்கிய
மேக நங்கையவள்
மழைத்துளிகளை பொழிய
 மறந்தவளானாள்
அவன் அழகில்
உறைந்தவளானாள்

கிறக்கம் கட்டுண்டு மீண்டவள்
சிறகடித்து கீழிறங்கினாள்
வான்சிறை விட்டு

மழை குழந்தைகளின்
 மடியென வீற்றிருந்த
 பூமித்தந்தையை வணங்கி
  நெருங்கினாள் தலைவனை

தலைவனவனின் மூச்சுக்காற்று
மெலிதாய் உரச
 துடிதுடித்தவள்
மழைநீரென உருகி
தலைவனவனின்
 கன்னத்தில் குதித்து
மார்பில் சாய்ந்து
காதலில் கரைந்து
காற்றோடு கலந்தாள்

 மீண்டும் மேகமாய் மாறிட
தன் பயணத்தை தொடங்கியிருந்தாள்

இவை எதுவும் அறியா தலைவன்
மிக்சர் டப்பாவை சுத்தம் செய்திருந்தான்
« Last Edit: February 28, 2019, 02:58:00 PM by Dong லீ »

Offline JeGaTisH

அண்டத்தில் பிறந்த நான் பிண்டமாகி போகும்  ஓர் பெண்மேல் கொண்டேனே காதல் !

சிறகு கொண்ட சின்ன சிட்டே
உன் இதய சிறையில் என்னை அடைப்பாயா !

உன்னை சேரும் வழியில் என் உயிர்
கை நீட்டிய நீ கடைசிவரை வருவாய் !

காற்றில் என் மூச்சி சிதறியது
காதல் மோகத்தில் என்னுயிர் பிரிந்தது !

கல்லறை கூட கனமானது
உன் கைவிரல் பிடிக்கும் பொழுது !

என் உயிர் போகும் நிலையிலும்
உன் முகம் பார்க்க பதறியது என் மனம் !

என்னை அழைத்து செல்ல வந்தது ஓர் கை
அது நம்பிக்கை என அறியாமல் கை விட்டேன்  !

என்னை அழைத்தது ஓர் குரல்
அது நீயென பின்பு அறிந்தேன்
கண்ணில் ஓடிய கானல் நீர்
காதலி அவள் முகம் காண
கண்கள் மெல்ல மூடியது இருள் சூழ !




அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ்
« Last Edit: March 01, 2019, 06:09:02 PM by JeGaTisH »

Offline ! Viper !

அன்றொரு இரவு என் வாழ்வை மாத்தியது
ஒரு  கனவு,, அந்த கனவில் நான் கண்ட  ஒரு அழகிய தேவதை

 என் விழி ஓரங்களில் மட்டும் அவள் தென்பட்டால்
தன் அழகிய முகத்தை முழுதாக காட்டாமல் அங்கும் இங்கும் ஓடியபடி,,
சிரிப்பு மழைகளில் ஒரு நிறஞ்ச புன்னகையுடன் என்னை சுற்றி வந்தால்
சிரித்தபடியே என் முன்னாள் அந்த தேவதை அழகிய சிரிப்புடன் தோன்றினால்

எங்கோ நன்று பரச்சயமான முகம்,,
அவளின் அன்பு எனக்கென எழுதப்பட்ட அன்பானவளாய்,, நான் கண்ட  காட்சி
ஆவலுடன் இருக்கும் நேரங்களில் எனது உலகம் பூ பூத்தது
சந்தோசத்திற்கு முற்றுப்புள்ளி அற்ற ஒரு வாழ்வு

அதிகாலை கண் விழிக்கையில்,, நான் கண்டது அனைத்தும் கனவா?
யார் இவள்? யார் அந்த தேவதை,, கனவுலகில் நன்கு அறிந்ததுபோல்
அவளுடன் இருக்கும் என் அன்பு அழகிய வண்ணம் ,,
அனால் கண் விழிக்கையில் அவள் யார் என்று எண்ணம்

மீண்டும் இரவு உறங்கியபின் கனவுலகில் இன்னோர் பரிமாணத்தில் அந்த தேவதை
என்னுடன் கைகோர்த்து என்னை அழைத்து சென்றால்

அவளின் அணைத்து செயல்களும் நான் அறிந்திருந்தேன்
இவள் எனக்கானவள் என்று உணர்ந்தேன்
எத்தனை யுகங்கள் ஆனாலும் இவளுடன் தொடரும் என்று நினைத்தேன்

அதே போல் கண் விழிக்கையில் அவள் யார் என்ன என்று சிந்திக்க தொடங்கினேன்
அதெப்படி கனவுலகில் அவள் எனக்கு நன்கு தெரிந்தது போல் ஒரு பழக்கம் ,,
அனால் கண் விழிக்கையில் யார் என்று முணக்கம்,,

நாட்கள் செல்ல செல்ல கனவுலகம் நிஜமாகமும்
நிஜஉலகம் கனவாகவும் என்ன தோன்றினேன்

எப்பொழுது காலை விடியும் என்று நினைப்பதை விட
எப்பொழுது சீக்கிரம் இரவு வரும் உறங்க என்று மனம் என்ன தோன்றியது

ஒரு நாள் என் தேவதை
இதற்கு பிறகு உங்கள் கனவில் என்னை காண முடியாது
அனால் நிச்சயம் ஒரு நாள் திரும்ப வருவேன்
காத்திரு என்று கூறினால்

அதை கேட்டதும் என் மனம் உடைந்தது
ஏன் என்று கேட்டதும் அவள் ஒரு சிறிய சிரிப்புடன்
மறைய தொடங்கினாள்

அன்று இருந்து இன்று வரை ஒவ்வரு இரவும் கனவுலகில் அவள் வருகிறாளா ?
அன்பு பரிமாணத்தில் எப்பொழுது என்னை ஈட்டு செல்வாள் என்று
ஒவ்வரு இரவும் தேட தொடங்கினேன்

என்றாவது ஒரு நாள் அவள் வருகை திரும்ப வரும் என்று,,
நிலை இல்லாத கனவில் அர்த்தமில்லா  நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

எதோ ஒரு பரிமாணங்களில் எனது காதலும்
அவளின் வருகையும் காத்துகொண்டு இருக்கின்றது

கனவு கனவாக போய்விடக்கூடாது என்று அவள் வருகைக்காக காத்திருக்கும்
ஓர் பரிமாண கனவு காதலன்

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
காதலே_பொய்_காதலே_வலி

காதல்
கலாச்சாரத்தில்
கட்டமைக்கப்படுகிறது
கசப்பான உண்மை.!

வார்த்தைகளால் இதயம் புகுந்தது
விழியில் நுழைந்தது என்று
கனவுலகில் சஞ்சாரிக்கலாம்....!
நடைமுறை சாத்தியமில்லா
காதலை சுமந்து
அவதி பெறும் ஆண்களே...!

காதல்கள்
பெரும்பான்மை தோல்விகளில்...
தன்னை தூக்கிலிட்டு கொண்டுள்ளன...!

வெற்றி பெற்ற காதல்களோ
வாழ்க்கையில் தோல்விகளில் ...
வேதனைகளில்...

காதலில் விழுந்தவன்
காதலை தவிர
கவனம் எதிலுமில்லை....

செல்லுலாய்டுகளின் உணர்ச்சிகளில்
பணம் பார்க்கும் காதலை எல்லாம்
மனிதன் உண்மை என்று நம்பி
ஊனப்பட்டு கொண்டிருக்கிறான்....!

பெண்ணோ
கலாச்சார மாற்றத்திற்கு
தயாரில்லை...
ஆணோ
தாய் தந்தை பிரிவை
ஏற்க முடியா சூழல்...!

புகுந்த வீடு
அநேகமாக மகிழ்ச்சி குறைவு என்று
எண்ணி விட்டால் வாழ்வில் இருள்
சூனியமாய் வலம் வரும்....!

காதலித்தவளைகைப்பிடிக்க
போராட்டங்கள் எத்தனை
நபர்களின் ஆன்மா மீது
இது ஒரு ஆச்சரிய விந்தை.!

இனியொரு விதி செய்ய
வேஷமில்லா காதல் உள்ள
பெண்ணை காண நானும்
காத்திருக்கிறேன்....!

என்னுள் ஒரு சந்தேகமும் கூட
இன்று காதலிப்பவள்
இதற்கு முன்பு வேறு எவரையும்
காதலித்து தோற்றவளாயிருந்து
துணைக்கு ஒரு தேடலாக கூட
இருக்கலாம்...!

ஆணுக்கு முதலாகவும் இருக்கலாம்.
தோல்வியாகவும் இருக்கலாம்...
நிலை இல்லா வாழ்வில்
நிலைகொள்ளா மனங்கள்
வியப்பில்லை...!

இதுதான் நடை முறை
என்று நினைத்தால்
காதல் ஓரங்கட்டப்பட்டு
வாழ்க்கை மேலோங்கும்....!

வலிகளின் விளிம்பு நிலை
விரக்தியில் அனுபவங்கள் ஏராளம். ..!
கற்பனைகள் வாழ்வியலை
வழிநடத்தாது...!


நிஜம் மட்டுமே வாழ்க்கை
நிழல் பிம்பங்கள் இல்லை...


Offline Guest 2k

அந்தியின் இருள் கவிழ்தல் போல்
வெகு சாதரணமாக
நிகழ்கிறது மரணம்.
எதிர்பார்த்தவைகளாய், எதிர்பாராதவைகளாய்,
நிகழ்த்தப்பட்டவைகளாய்,
நிகழத்தபடுபவைகளாய்,
இவைகளோடு
வெகு சாதாரணமாய்
நிகழ்ந்தேறுகிறது ஒரு தற்கொலை

இழப்புகளும்
இழப்பின் வழி மீண்டெழுதல்களும்
நினைவுகளும்
நினைவின் வழி மீண்டெழுதல்களும்
சாத்தியப்பட்டவர்கள்
எங்ஙனமோ வாழ்ந்து முடிக்கிறார்கள்,
வலுவுள்ளதே பிழைக்கும் என்கிற விதிப்படி.
அதே விதியை நிச்சலனமாய் கடந்து
விரலிடுக்களுள் வழிந்தோடும்
செங்குருதியின் வெம்மையில்
வெகுசாதரணமாய் ஒரு
நடத்து முடிகிறது ஒரு தற்கொலை

வந்து சென்றவர்களும், வாழ்ந்து முடித்தவர்களுக்கும் வாழ்வதற்கென்று
விட்டு சென்ற மிச்சங்களின் எச்சங்களாய்
வாழ்கிறோம்
யாரோ ஒருவன் சொல்லிச் சென்றான்
மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்
என்று
அவ்வுண்மையை
உணரும் முன்னமே
வெகுசாதாராணமாய் கயிற்றின் முடிச்சுகளில் ஒரு தற்கொலை அரங்கேறுகிறது

சூன்ய உணர்வுகளும், அநாமதேய குற்ற உணர்ச்சிகளும்,
பெருங்கோபங்களும், அநீதியான காரணிகளும்,
அயர்ச்சிகளும், அழுத்தங்களும்,
வாழ்விலிருந்து தப்பி ஓடும் மார்க்கங்களும்,
அபத்தங்களும், அநாதரவுகளும்
இப்படியாகவே வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயங்களும்
வெகு லகுவாக, பிரக்ஞையற்று
நிகழ்த்திச் செல்கிறது ஒரு தற்கொலையை

எல்லாவித நம்பிக்கை உடைப்புகளிலிருந்தும்
புதியதொரு வெறுப்பு பிறக்கிறது
உலக நியதிகளில்
நம்பிக்கை இழக்கும் நேரங்களில்
எதேனும் ஒரு ஒளிக்கீற்று
தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலே
இத்தற்கொலையை
சிறிது நேரத்திற்கு ஒத்திப் போடலாம்

இறப்பின் தேவதை
எனை கைநீட்டி அழைக்கும் இந்நொடி
ஒரு கணம்
தடுமாறும் மனதினை
நாளை என்றொரு விதி
நியாயப்படுத்திப் பார்க்க சொல்கிறது
வலுவுள்ளதே பிழைக்கும் என்கிற
நியதியை சோதித்துப் பார்க்க சொல்கிறது
ஒளிக்கீற்றின் சாத்தியங்களுக்காக
காத்திருக்க சொல்கிறது
மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் தான்
என
உலகம் செல்லும் வழியில்
வாழ்ந்து முடிக்க சொல்கிறது

நாம் வாழ்வோம்,
வாழ்ந்து முடிப்போம்,
பின் சாவோம்

உண்மையில்,
தற்கொலைகளை இறப்பின் தேவதைகளே
ஒத்திப் போடுகின்றன
« Last Edit: March 01, 2019, 05:37:43 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்