FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on October 19, 2019, 01:40:52 PM

Title: எக்ஸ்ட்ரீமிசம்
Post by: Guest 2k on October 19, 2019, 01:40:52 PM
மனிதர்களிடம் நம்பிக்கை இழக்கும்
தருணங்களில்
ஆதர்சமாய் இருக்கும்
தனிமை
மனிதர்கள் தரும் துணையைவிட
ஆசுவாசமானதாய் இருக்கிறது

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரேயடியாக காதல் செய்,
ஒரேயடியாக விலக்கி வை
நிம்மதியாக.
எதற்கும்
எவ்வித எல்லைகளும் இல்லை
எக்ஸ்டீரிமிசம் என
அதற்கு
எப்பொழுதோ பெயரிட்டுவிட்டனர்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்த மனிதனையும்
நம்பாதே
எனக் கூறிச் செல்கிறான்
ஒரு மனிதன்
ஞானமா?
இல்லை எச்சரிக்கையா?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்பும், நேசக்கரங்களும்,
துரோகமும், வன்மங்களும்
என அனேக விதமான கலவையான
உணர்வுகள் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருக்கும் அங்காடியில்
அவரவர் தேர்வுக்கு
அவரவரே விலை

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எல்லாவித நம்பிக்கை உடைப்புகளிலிருந்தும்
புதியதொரு
நம்பிக்கை பிறக்கிறது
மீண்டும் உடைக்கப்படும்
என அறிந்தும்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவடில்லாமல்
கடலில் கலக்கும் நதிக்கு
மௌனம்
என்றொரு பெயர்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நினைவடுக்குகளின்
காயங்களை
கீறி பார்க்கும் நாளில்
சாளரம் ஓரம் விழும்
மெல்லிய சாரல்
மருந்தென காயங்களை
நீவி செல்கிறது
Title: Re: எக்ஸ்ட்ரீமிசம்
Post by: சிற்பி on October 19, 2019, 05:01:49 PM
Chikku ma really super