Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 216  (Read 2199 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 216
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline thamilan

இனியவனே
ஞாபக  நதிக்கரையில் நடந்துபோகிறேன்
நினைவுத்தூறல் என்நெஞ்சில் விழுகிறது

கடலை அந்த அந்திவானம்
முத்தமிடும் மாலைப்பொழுது
கிரகாம்பெல் சிணுங்கியது
சந்திக்கவேண்டும் என்கிறாய்
சந்தோசமாய் நானும்
சரி என்கிறேன்

கடற்கரைக்கு வரச் சொல்லி
கட்டளை இடுகிறாய்
"எதையும் தாங்கும் இதயம்
இங்கே உறங்குகிறது"
வாசகம் என்னை வாசிக்கிறது

நேசிக்கிறவளை பற்றி
யோசிக்கும் பொழுது
பின்னாலிருந்து தலையை தடவிக் கொடுக்கும்
உன் மயிலிறகு விரல்கள்……

வந்து நீண்ட நேரம்
ஆகிவிட்டதா?
இதயத்தலம் பற்றி நான்
யோசித்துக் கொண்டிருக்கையில்
இணையத்தளம் போலவே நீ
வினாக்களை வீசுகிறாய்

காத்திருப்பது சுகம்
சுமையல்ல என்றேன் நான்
அவசரமாய் கொஞ்சம் அவசியமாய்
விறல் பற்றி நடக்கிறோம்

நாம் கடந்து போவது கூட கவனிக்காமல்
காதல் பரிட்சையில் காப்பியடிக்காமல்
எழுதிப்பார்க்கும் நவீன
ஆதம் ஏவாள்களுக்கு மத்தியில்

கடற்கரை மணலில் இருவரும்
எதிர் எதிரே அமர்கிறோம்
முகம் பார்க்கிறாய்
மூச்சிக்காற்று என்னை சுடுகிறது

விழிகளால் விசாரிக்கிறேன்
திருமணத்துக்கு தேதி
குறித்து விட்டதாக சொல்கிறாய்
இறப்புக்கு நாள் குறிப்பது
எனக்கு மட்டுமாகத்தான் இருக்கும் என்கிறேன்

நீ காதலை நட்பாக்க முயல்கிறாய்
கல்லறைக்கு வரச் சொன்னது
காதலுக்கு சமாதி காட்டவா
என்கிறேன்

நீ மொவுனிக்கிறாய்

விழிகளில் அமிலம் விழுந்தது போன்று
என் கண்களில்
வெப்ப நீரோட்டம்
உன் நிழல் என்னைத் தொடுகிறது

திரும்பிப் பார்க்கிறேன்
தூரத்தில் நீ
துயரத்தில் நான்

நடந்து செல்கிறாய்
என்னை விட்டு வெகுதூரம்
நான் கடற்கரை மணலை
கையில் அள்ளி எண்ணும் முயற்சியில்
தோற்றுப் போகிறேன்
காதலைப் போலவே

Offline KuYiL

              காதல் விட்டு விடும் தூரம் தான்.............

எழுதுகோல் ஏந்தும் கையில் எந்திர துப்பாக்கி
எழுச்சி என்ற பெயரில் வீழ்ச்சி அடைகிறது மனித இனம்
காதல் வேட்கை கொண்ட காதலன் அல்ல நான்
ஊனமாய் போன மனித சமூகத்தின் ஊன்று கோல் நான்
கானல் நீராய் போகுமென்றால் கனவு ஏன் காண வேண்டும்
இறையடி தேடி இறைஞ்சுகையில் இறையாய் போகும் சமூகம்
எங்கே செல்கிறது  என் மனித இனம்?
விடியும் காலை என் அஸ்தனமா என்கிற பயம்
இதில் எங்கே பெண்ணே என் காதல் மனம்
நட்பு என்கிற பெயரில் கற்பை சூறையாடும் கயவனல்ல நான்
நட்பை மதமாய் மதிக்கும் மனிதன் நான்
உன்னுடன் வாழ்வதை மட்டும்  சுமக்க விருப்பம் இல்லை
என் நாட்டின் மானுடம் காக்க புறப்படும் எனக்கு வானமே எல்லை
உயிர் என்ன விலை பொருளா நண்பி ?
உன் வீடும் என் வீடும் நம் நாடும் வீழ்ந்துகொண்டு இருக்கையில்
நீயும் நானும் காதல் மட்டும் பேசி களிக்க முடியுமா
உன்னை நான் நட்பின் தோழியாய்  பாவித்தேன்
உன்னை போல் தோழியாய் யாருமில்லை எனக்கு
காதல் கை விட்டு நட்புக்கு கை கோரு
காதல் கடலாய் ,வானமாய் இருக்கலாம்
இழந்த உயிரை மீட்டு தருமா உன் காதல் ?
இழப்பின் சோகம் கண்ணீரின் வரிகள்
என் இனத்தின் ஆறா வடுக்கள்
புறப்படு என்னோடு புது யுகம் படைக்க
காதலனாய்  கை கோர்த்து நடப்பதை  விட
நண்பனாய் நாட்டின் நலம் நாடுவோம்
விதி என்று வீட்டில் அடைந்தால் சதியின்
சாகச வலையில் சிக்கி போகும் எதிர் காலம் !
சுயநலத்தில் சொர்க்கம் கண்ட நாம் பொது நலம் மறந்து போனோம்
ஆண் என்பவன் வெறும் பெண் பித்தனாய் சித்தரிக்க பட்டுவிட்டோம்
இதோ ..இந்த  சித்திரத்தை பார்ப்போருக்கு மனதில் தோன்றுவது
ஆண் , ஒரு பெண்ணை கைவிட்டு செல்லும் கயவனாய் தானே
 என் போன்று ஒரு ஆண் மகனும் இருப்பான் என்று இந்த சமூகம் புரியட்டும்
பெண்கள் காதல் மட்டும் செய்யும் போக பாவை அல்ல என்று
சமூகத்திற்கு சவாலாய் நாம் இருப்போம்
சமூக சிந்தனை வந்துவிட்டால் ....
                                 ..... காதல் விட்டு விடும் தூரம் தான் ..






Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!


என் நிகழ்வுகளை தொலைத்த உன் நினைவுகள்
உன்னில் மூழ்கி என் சுயம் தொலைத்த நான்
காயங்கள் புதிதல்ல எனக்கு - ஆயினும்
வலித்திடும்  பிரிவுகள் தரும் ரணங்கள்

கனவுகளை சுமந்து நினைவுகளுடன் போராடி
நிகழும் நமது காதல் யுத்தம் !
காதல் ...

தீண்டும் தீஞ்சுவையாய் உன் பெயர்
உச்சரிக்கையிலே தித்திக்குதடா
தேகத்தினில் ரத்தநாளங்கள்
நர்த்தனமாடிடும்  நாயகனே

நேற்றைய நினைவுகளுடன் நீயும்
நாளைய கனவுகளுடன் நானும்
பிரிவுகளை பரிசளிக்க துடிக்கும்
காயம்பட்ட உன் இதயம்
காயங்களை கடந்து உன்னோடு
பயணிக்க நானும்


காயங்கள் நமக்கு புதிதல்ல
காற்றை போல நமது காதலும்
தென்றலாய்  வருடிய சுகந்தம்
புயலாய் சுழன்றடித்த கலவரம்
கடந்த இந்த நிகழ்வுகள்

எத்தனையோ மோதல்கள்
கடந்தது காதல் இல்லை இல்லை
நமது காதல் !
உன்னில் எனையும், என்னில் உனையும்
தேடி தொலைந்தோமே

பிரிவுகள் நிமிடத்தில் நிகழ்ந்துவிடும்
அந்த ரணங்களை கடந்துவிட  - என்
கல்லறைக்கும்  சக்தியில்லையடா
நினைவுகளை சேமிக்கும் மனப்பெட்டகம்
நீங்காமல் பயணிக்கும் உன்னுடன்   

மீண்டு வருவாயா காதலா
வந்துவிடு !
உன் கையால் மலர்க்கொத்தும்
விழிநீரும் சிந்திவிடு
என் ஆன்மா அமைதி கொள்ளட்டுமாடா

பிரிவு

Offline யாழிசை

காலை கதிரவன் மாலை வேலையில் மஞ்சள் நீராடி சென்றானோ ...
மங்குதடி அவனது வெளிச்சம் ....
மங்கி போவது கதிரவனின் வெளிச்சம் மட்டும் தானோ ....

கடல் அலைகள் மட்டும்  தான்
ஆர்ப்பரித்து மீண்டும் கடலுக்குள் செல்கின்றன
என தப்பு கணக்கு போட்டேன் அடியே கண்ணம்மா ...
என் மனமும் குமுறுதடி கொஞ்சம் கொஞ்சமாய் ....

கொஞ்சி கொஞ்சி பேசி நஞ்சு தனை விதைத்திரோ
கொல்லாமல் இன்று கொன்று எனை வதைத்திரோ
இனிக்க இனிக்க பேசி திளைக்க செய்தீரே ....
இளிச்சவாய் எனத்தான் எம்மை எண்ணீரோ .....

ஆழம் அறியாமல் காலை விட்டேனடி நானும்..
அறிவில்லாத பேதை பெண் என பேரும் பெற்றெனடி...
காதல் கொண்டேன் .. கனவினில் வாழ்ந்தேன் ...
கண்டது என்னவோ பகல் கனவு என உணர்ந்தேன் பின்னே ...

இறைவன் இருப்பது நிஜமெனில்
இன்று கை நழுவி  சென்ற நீ ...
உணர்வாய் வெகு விரைவில் ...
நழுவியது கை மட்டும் அல்ல ...
நங்கை எமது எதிர்பார்ப்பும் என்று ....

பரந்து  விரிந்த விண்ணின் மேல் ஆணை..
விண்ணை முட்டும் உயரம் எழும்பும் அலைகளின் மேல் ஆணை...
அலைகள் வந்து உரசி முத்தமிட்டு செல்லும் கடற்கரையின் மேல் ஆணை....
ஆழம் எதுவென்று அறியதா  இந்த ஆழியின் மேல் ஆணை ....

தங்க முலாம் பூசிய வானின் மேல் ஆணை ....
அந்த வானில் வட்டமிட்டு செல்லும் பட்ஷிகள் மேல் ஆணை .
...[/color]

Offline இளஞ்செழியன்

கணங்களைச் சுறுக்கிக்
காற்றடைத்துக் கொண்டிருக்கிறேன்...
கூடிய சீக்கிரமேப்
பறக்க விட்டு விடுவேன்..!!

கிறுக்கியக் காகிதங்களைக்
கிழித்துக் கொண்டிருக்கிறேன்...
கூடிய சீக்கிரமேக்
கொளுத்தி விடுவேன்..!!

நினைவுப் பெட்டகங்களை
அரைத்துக் கொண்டிருக்கிறேன்...
கூடிய சீக்கிரமேக்
கரைத்து விடுவேன்..!!

பேரின்பச் சாரல்களை
நுரையாக்கிக் கொண்டிருக்கிறேன்...
கூடிய சீக்கிரமேக்
கழுவி விடுவேன்..!!

பார்வைகளைப் பக்குவப்படுத்தித்
தாழிட்டு வைத்துள்ளேன்...
கூடிய சீக்கிறமே
களவாடச் செய்வேன்..!!

சுத்தமாய் இருந்ததை எல்லாம்
அழுக்காக்கிக் கொண்டிருக்கிறேன்...
கூடிய சீக்கிரமே
அழுக்காகி விடுவேன்..!!

உன்னிலிருந்துப் பிரித்தெடுக்கப்
பல நீக்கிகளைக் கொண்டிருக்கிறேன்...
கூடிய சீக்கிரமே
நீக்கப்பட்டும் விடுவேன்..!!

நீயில்லா நாட்கடத்தலுக்குத்
தயாரில்லாமல் இருக்கிறேன்...
கூடிய சீக்கிரமேத்
தேக்கமடைந்து விடுவேன்..!!

கொண்டாடக் காதலில்லாமல்
கவலைக்கிடமாய் இருக்கிறேன்...
கூடிய சீக்கிரமே
தூக்கியெறியப்பட்டு விடுவேன்..!!

ஏகப்பட்டத் தட்டுப்பாட்டில் உன்னை
விடாமல் பிடித்திருக்கிறேன்...
கூடிய சீக்கிரமேத்
தொலைத்தும் விடுவேன்..!!

#உன்னையும்_என்னையும்_நம்மையும்.❤
பிழைகளோடு ஆனவன்...

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அந்தி சாயும் அந்த நேரம்
கடற் கரை ஓரமாக
என் வருகையை பார்த்து
காத்திருக்கும் அவன் கண்கள்

எனக்காக ஏங்கும் அவன் பார்வையை
காண துடிக்கும் என் கண்கள்
எம் இருவரின் வருகைக்கும்
காத்திருக்கும் அந்த நிலா

ஈருடல் தான் ஆனால்
உயிர் ஏதொ ஒன்றுதான்
நானும் அவனும்

அழகாக சென்ற பயணம் அதில்
யாரு கண்பட்டதோ
ஒரு இடைவெளி
யாரில் குறை கூறுவதோ
தெரியவில்லை

இருமனம் இணைவது காதல்
ஆனால்
இரு குடும்பம் இணைவதே
திருமணம்

காதல் பயத்தில் இருந்து
திருமணம் எனும் தடம்
மாறும் போது இந்த இடை வெளி

எல்லாம் அறிந்தே காதலித்தோம்
என்ன நடந்தாலும் உன்னுடன் இருப்பேன்
என்றவன் இன்று  நீ வேண்டாம்
என்று சொல்லும் அளவிற்க்கு ஆயிற்று

எனக்கு தெரியும் உன் 
 இதயத்தில் என்னை தவிர
யாருக்கும் இடம் இல்லை
ஆனால் உனக்கு  உயிர் தந்த
உறவு அதை மறுக்கும் போது
நீ என்ன செய்வாய் என் அன்பே

உறவை மீறிவருமளவிற்கு நீ இல்லை
வரச்சொல்லும் நிலையில் நானும் இல்லை
யாரில் யாரு குற்றம் சொல்லவது

குளுமை தரும் நிலவில்
பற்றிய காதல் தீ
சுட்டெரிக்கும் சூரியன்
முன்னிலை அணைந்தது  தான்
ஆச்சரியம்

Offline JeGaTisH

காதலை கொண்டு
என் மதில் இடம்பிடித்தவளே !
இன்று கதறி அழு குரல்
கேட்கலையோ உன் காதுக்கு !

நாட்கள் என்னி
உன்னை நாடிவந்தேன் !
நான்கே வார்த்தைகளில்
என்னை உன் காலடி
நாயாக மாற்றிவிட்டாய் !

நமக்கென ஓர் உலகம் படைத்தேன்
உன்னை வர்ணிக்க புது மொழி கிறுக்கினேன்  !
காட்டு குயில் காதலி அவள் குரல் கேட்க
அனுதினமும் அழைக்கிறேனே அலைபேசியுடனே  !

நம்மை சேர்க்க ஒர்  ஆளில்லாமல்
காத்தாடியாக பறக்கிறது என் மனம் !
காதலும் கவுள்ந்து  விடுமோ காதல் கடலில்
கரைசேரும் நாளும் எதுவோ காத்திருக்கிறேன் !


ரோஸ்  மில்க்  தம்பி  ஜெகதீஷ்
« Last Edit: May 02, 2019, 06:11:05 PM by JeGaTisH »

Offline SweeTie

போடா போ
காதலை   சாதல் செய்தாய்
கண்ணீரை  வரவழைத்தாய்
கோழை  நீ  நிரூபித்தாய்
போடா போ

கண்டதே காதல்
கொண்டதே கோலம்
வாய் வார்த்தைகள்  ஏராளம்
காதல் ஒரு  மாய வலை
போடா  போ

இணையாத இதயத்தை
இணையத்தில்  இணங்கவைத்து
இருவிழிகள்   இணைக்காமல்
இரவிரவாய்  இன்புற்று
இழந்துவிட்டேனடா 
போடா போ

கண்ணீரில் கண்டாயோ
கற்களின்  கூர்முனை
காதலி  கண்ணீரா
பெற்றவள் கண்ணீரா
பிழைகத் தெரிந்தவனே
போடா போ

இணை  இறந்தால்  வாழாத
அன்றில்கள்  எங்கே
காதலுடன் கைகோர்த்து
உயர பறக்கும்  பருந்துகள் எங்கே
ஆறறிவு  எதற்கு உனக்கு
போடா போ

துச்சமாய்  நினைத்தாய்
தூயவன் இல்லையடா  நீ
கொச்சைப் படுத்தும்  உன்காதல்
எச்சில்  இலைகளானதே 
புரடட்டும்  தெரு நாய்கள்
போடா போ

காலங்கள் மாறும்
என் கண்ணீரை  மாற்றும்
ஜாலங்கள்  வேண்டாம்
நிஜ காலங்கள்  தோன்றும்
வன்மங்கள் அழியும்
வரட்டும் வசந்தம் 
போடா  போ


 
« Last Edit: May 02, 2019, 06:51:30 PM by SweeTie »