FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: சாக்ரடீஸ் on August 22, 2018, 04:29:21 PM

Title: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 22, 2018, 04:29:21 PM
அறிவு (Knowledge) அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல். ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல்.

"பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு.
பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு"
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்....!
Post by: சாக்ரடீஸ் on August 22, 2018, 04:31:49 PM

அண்டார்டிகாவில் உள்ள
பெரும்பாலான பனிப் பாறைகள்
குடிப்பதற்கு தகுந்த
சுத்தமான நீரால் உருவானவை.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 23, 2018, 11:03:51 AM

சாலைகளில் (Road) சிலவற்றை அவென்யூ என்கிறோம். எதைத் தெரியுமா? சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் இருந்தால்தான் அவென்யூ.....(Avenue).

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 24, 2018, 10:41:50 AM

மழை நீரில் 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஒடி கடலை அடைகிறது .
மீதி 72 சதவீதம் ஆவியாகி காற்று மண்டலத்தை மீண்டும் அடைகிறது.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 25, 2018, 10:48:23 AM

அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கடல் வழியைக் கொலம்பஸ் பயன்படுத்தினார்.
அவர் பயணம் செய்த கப்பலின் பெயர் [highlight-text]'சாண்டா மரியா'[/highlight-text]

[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 26, 2018, 10:40:36 AM

கடல் வாழ் உயிரினத்தைச் சேர்ந்த கட்டில் ஃபிஷ் என்ற விசித்திரப் பிராணிக்கு மூன்று இதயங்கள் உள்ளன.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 27, 2018, 12:02:05 PM

உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல்[highlight-text] 'குயின் விக்டோரியா' [/highlight-text]ஆகும்.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 28, 2018, 10:47:54 AM
சீன மொழிக்கென்று தனி எழுத்து கிடையாது. ஒவ்வொரு வார்த்தையும் ஓர் எழுத்தாகும்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 29, 2018, 11:28:22 AM

'கராத்தே' என்றால் 'வெறும் கை' என்று பொருள்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on August 31, 2018, 05:32:36 PM

ஆங்கிலத்தில் 1 முதல் 999 எண்கள் வரை எழுதும்போது A என்ற எழுத்தே வராது.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 01, 2018, 11:13:00 AM

கூடைப் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை 600 கிராம்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 02, 2018, 05:29:49 PM

காது கேளாதவர்க்கான கல்வி முறை முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 03, 2018, 11:29:23 AM

ஒட்டகப் பால் திரவ வடிவில் இருக்கும். கறந்ததும் அப்படியே கட்டியாகி விடும். மிகவும் சத்து நிறைந்தது.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 04, 2018, 10:56:15 AM

விமானம் ஓட்டிய முதல் பெண்மணி செல்வி [highlight-text]'யேல் பிங்கில் டீன்'[/highlight-text].
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 05, 2018, 11:18:55 AM

சென்னையில் உள்ள [highlight-text]பக்கிங்காம் கால்வாய்[/highlight-text]
அடையாறு – கூவம் ஆறு இணைக்கும் பகுதி. இதற்கு இப்பெயர் எப்படி வந்தது? இதனை வெட்டியவர் [highlight-text]பக்கிங்காம் என்ற சென்னை கவர்னர்[/highlight-text]. ஆண்டு 1876. அது கடுமையான பஞ்சகாலம். மக்களுக்கு வேலை கொடுக்கவே இத்திட்டம் அன்று நடைமுறைப் படுத்தப்பட்டது.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 06, 2018, 11:27:16 AM

[highlight-text]ஜோர்டான் நாட்டில்[/highlight-text], ஒரு நகரில் ஒரு பழைய சுவர்.....[highlight-text] 9800 ஆண்டுகளுக்கு [/highlight-text]முன்பு கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகின் பழைமையான சுவர் இதுவே.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 07, 2018, 11:52:28 AM

ஒரு மழை மேகத்தில் [highlight-text]6 டிரில்லியன்[/highlight-text] நீர்த்துளிகள் இருக்கும்.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 08, 2018, 11:30:31 AM

தூங்க வைக்கும் ராகம் ~ [highlight-text]நீலாம்பரி. [/highlight-text]
விழித்தெழ வைக்கும் ராகம்‍‍‍~ [highlight-text]பூபாளம்[/highlight-text]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 09, 2018, 11:14:53 AM

மனிதக் கண்களின் எடை [highlight-text]1.5 அவுன்சுகள்[/highlight-text] மட்டுமே ஆகும்.

[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 10, 2018, 11:44:24 AM

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு சுவிட்சர்லாந்து.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 11, 2018, 06:37:37 PM

புத்தரின் பிச்சை பாத்திரம் ஆப்கானிஸ்தானில் உள்ளது.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 12, 2018, 11:19:18 AM

உலகிலேயே மிகவும் பழமையான தலைநகர் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்தான்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 13, 2018, 01:42:33 PM

ராபர்ட் கிளைவ் பிரபு தான் தமிழ்நாட்டில் மைல் கற்களை நட்டு வைத்தவர்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 14, 2018, 11:33:50 AM

பாலின் தரத்தை அளவிடப் பயன்படுத்தும் கருவி லாக்டோமீட்டர்.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 15, 2018, 11:16:24 AM

இந்தியாவின் முதல் ரத்த வங்கியை 'யு.என்.பிரம்மச்சாரி' என்பவர் 1939-ஆம் ஆண்டு கல்காத்தாவில் தன் 39-வது வயதில் நிறுவினார்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 16, 2018, 11:13:36 AM

மீன் தூங்குவதில்லை என நினைக்கிறோம். இது தவறு. மீன்களும் உறங்குகின்றன. மீனுக்கு இமை இல்லாததால், அது விழித்திருப்பது போலத் தெரியும். பாம்பும் தூங்காதது போல அறிவோம்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 17, 2018, 11:18:31 AM

கழுத்து இல்லாத ஒரே உயிரினம் மீன் ஆகும்.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 19, 2018, 11:21:39 AM

மனித மூளையின் நினைவுத்திறன் [highlight-text]நான்கு டெராபைட்[/highlight-text] அளவை விட அதிகமானது.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 20, 2018, 11:41:13 AM

காற்றுநகரம் எனப்படுவது[highlight-text] சிகாகோ.
[/highlight-text]
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 21, 2018, 10:56:23 AM

சராசரியாக 15 கிலோ எடை கொண்ட [highlight-text]'காண்டர்'[/highlight-text] கழுகுகள்தான் பறக்கக்கூடிய பறவைகளில் அதிக எடை கொண்டவை.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 22, 2018, 11:53:24 AM

நவரத்தினங்களில் ஒன்றான[highlight-text] மாணிக்கத்தை[/highlight-text] கண்டுபிடித்தவர் [highlight-text]கே.கிளாஸ் 1884ம் ஆண்டு.[/highlight-text]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 23, 2018, 01:05:26 PM

இந்தியா விமான சர்வீஸ் AIR INDIA, - INDIAN AIRLINES என்று இருவிதமாக அழைக்கப்படுவது ஏன்? ஏர் இந்தியா என்பது வெளிநாட்டு விமானப் போக்குவரத்து, ஏர்லைன்ஸ் என்பது உள்நாட்டுப் போக்குவரத்தின் பெயர்.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 25, 2018, 12:10:51 PM

சாதாரண கோழிகளின் முட்டைகளை  வேக வைக்க சுமார் நான்கு நிமிடமாகும். ஆனால் நெருப்புக் கோழியின் முட்டையை வேக வைக்க சுமார் 40 நிமிடங்கள் வரை ஆகின்றன.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 26, 2018, 11:18:40 AM

ஜப்பான் 'ஓசுமி' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 28, 2018, 02:02:30 PM

இந்தியாவில் நீண்ட பகல் கொண்ட நாள் [highlight-text]ஜீன் 22.[/highlight-text]
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 29, 2018, 10:54:04 AM

இந்தியாவில் முதன்முதலில்[highlight-text] கிரிக்கெட் போர்டு 1921ல்[/highlight-text] அமைக்கப்பட்டது.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on September 30, 2018, 10:58:50 AM

[highlight-text]'இளஞ்சிவப்பு நகரம்'[/highlight-text] என்று அழைக்கப்படுவது ஜெய்ப்பூர்.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on October 01, 2018, 11:48:49 AM

[highlight-text]வெனிசுலாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி[/highlight-text], நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல் 20 மடங்கு உயரமானது.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on October 02, 2018, 11:11:19 AM

சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்தவர் சர்.ஐசக் நியூட்டன்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on October 03, 2018, 01:13:53 PM

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும்[highlight-text] 'டக் ரெஸ்டாரண்ட்'[/highlight-text] ஒரே நேரத்தில்[highlight-text] ஒன்பதாயிரம் பேர்[/highlight-text] வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியதாம்.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on October 06, 2018, 11:27:32 AM

எந்த திட உணவும் சாப்பிடாது, வெறும் டீ மட்டும் 22 ஆண்டுகள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர்[highlight-text] ‘சத் பவர் பாய் டோபேர்’ [/highlight-text]என்பவர். இவர் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாயத் மாவட்டத்துக்காரர்.

[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on October 07, 2018, 10:58:07 AM

ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு [highlight-text]ஒரு கிலோ உண‌வும், ஒன்றரை லிட்டர் தண்ணீரும் தேவை. இதே போல் 12 கிலோ காற்றும் சுவாசிப்பதற்கு தேவை.[/highlight-text]
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 01, 2018, 11:20:47 AM

உலகின் மிகப்பெரிய சர்ச், ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சர்ச்.[highlight-text] உயரம் 394 அடி. நீளம் 692 அடி. இங்கே 390 சிலைகள் உள்ளன. 8000 மக்கள் [/highlight-text]ஒரே நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம்.
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 02, 2018, 11:16:33 AM

[highlight-text]'அனஸ்தீசியா' (உணர்வு நீக்கி)[/highlight-text] மருந்துகளை [highlight-text]'ஆலிவர் வென்டால் ஹோம்ஸ்'[/highlight-text] என்ற விஞ்ஞானிதான் முதன்முதலில் தயாரித்தார்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 03, 2018, 11:36:14 AM

பூமியில் இருந்து பார்க்கும் போது வானவில் அரை வட்டமாகத் தெரிகிறது அல்லவா, இதை விமானத்தில் இருந்து பார்த்தால் முழு வட்டமாகத் தெரியும்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 04, 2018, 11:05:48 AM

தேநீர் என்று அழைக்கப்படும் Tea அருந்தும் பழக்கம் முதன்முதலில் சீனாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு – கி.மு.விலேயே இப்பழக்கம் தோன்றியது. சீனாவில் பால் சேர்க்காத ‘ப்ளாக் டீ’ – சர்க்கரை இல்லாது அருந்துவார்கள். பால் – ஜீனி சேர்த்து பருகும் பழக்கம் இந்தியாவில்தான் அதிகம். சீன சக்கரவர்த்தி ‘ஷன்நுங்’ என்பவர் இப்பழக்கத்தின் தந்தை. கி மு. 2337- ல் சீனாவில் டீ அறிமுகம். 1644 - ல் இங்கிலாந்தில் டீ அறிமுகம். 1800 கி,பி. முதல் உலக நாடுகளில் டீ பிரபலம் ஆனது.

கொதிப்பதற்கு வைத்த நீரில் எதிர்பாராவிதமாக விழுந்த தேயிலை... அதன்மூலம் உருவானதே இப்பழக்கம். இன்று உலகில் மாபெரும் பானமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா, இலங்கை தேயிலை உற்பத்தியில் சிறப்பிடம் பெறுகின்றன.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 05, 2018, 11:17:36 AM

பின்கோடு 1972 – ல் அறிமுகம். அஞ்சல் குறியீட்டில் 6 எண்கள் உண்டு. முதல் எண் மாநிலத்தைக் குறிக்கும். இரண்டாவது துணை வட்டம், முன்றாவது எண் பட்டுவாடா மாவட்டத்தையும், இறுதி மூன்று எண்கள் அஞ்சல் நிலைய எண் ஆகும்.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 06, 2018, 11:15:36 AM

கடலில் வாழும் டால்பின் மீன்கள் அமெரிக்காவில் உள்ள கடல் ஆராய்ச்சி நிலையங்களில் உதவியாளர்களாகப் பணி செய்கின்றன. கடலுக்குள் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு கரையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் கருவிகளை எடுத்துச் சென்று கொடுக்கின்றது.

சில சமயம் கடலுக்குள் வழி தவறவிட்ட ஆராய்ச்சியாளர்களைக் கண்டு பிடித்து வழிகாட்டி அவர்கள் ஆராய்ச்சி செய்யும் இடங்களை அடைய உதவுகிறது.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 07, 2018, 11:36:25 AM

கொக்கோ மரம் 40 அடி உயரம் வரை வளரும். அதன் காய்கள் ஓரடி நீளம் இருக்கும். பலாக்காய் காய்ப்பது போன்று மரத்துடனேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த காய்களின் கொட்டைகளை வறுத்துத்தான் கொக்கோ பொடி செய்யப்படுகிறது. இதன் பிறப்பிடம் தென் அமெரிக்கா.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 08, 2018, 11:30:31 AM

நோயாளிகளின் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிக்கு 'இதயத் துடிப்புமானி'(ஸ்டெதஸ்கோப்) என்று பெயர். இதனை 1819-இல் பிரான்ஸ் நாட்டைச்  சேர்ந்த 'லென்னக்' எனும் விஞ்ஞானி முதன்முதலில் கண்டுபிடித்தார். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு தொடக்கத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிறகு, அனைத்து நாடுகளிலும் இக்கருவி பயன்படுத்தப்பட்டது.
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 09, 2018, 11:48:13 AM

எட்டுகால் பூச்சி என்ற பெயர் கேட்டு இருப்பீர்கள். எட்டுக்கண் பூச்சி எது? அதுவும் எட்டுக்கால் பூச்சிதான். ஆம் அதற்க்கு கண்களும் எட்டு.

Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 12, 2018, 12:24:38 PM

பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதருக்கு ஓசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது [highlight-text]OC[/highlight-text] என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை [highlight-text]ON COMPANY SERVICE [/highlight-text]என்ற குறித்து – கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த [highlight-text]OCS என்பதே OC என ஆகி, ஓசி ஆகிவிட்டது.[/highlight-text]
[/size][/color][/glow]
Title: Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...???
Post by: சாக்ரடீஸ் on December 13, 2018, 11:22:20 AM

எட்டாம் எண் சீனர்களுக்கு பிடித்தமான எண். காரணம், அதை ஓர் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர்.[highlight-text] 2003-ஆம் ஆண்டில் சீன விமான நிறுவனம் ஒன்று 88888888 [/highlight-text]எனும் தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட[highlight-text] தொகை 2,80,723 டாலர் தொகையாகும்.[/highlight-text]