FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: vimal on February 13, 2013, 12:46:42 PM

Title: குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும்
Post by: vimal on February 13, 2013, 12:46:42 PM
ஆண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...
பெண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...
ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட
பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க
ஆண்: பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு
பெண்: மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு
ஆண்: விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு (புத்தம் புதுசாக...)
 (இசை...)
பெண்: சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
 கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா...
ஆண்: சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
 சண்டியர் போல் வம்பு செய்தேனா...
பெண்: அரை டிராயர் போட்ட பையன் நீ
 பாடாத லாவனி
ஆண்: விரல் சூப்பி நின்ன புள்ள நீ
 போட்டாச்சு தாவணி
 விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு
பெண்: வேறென்ன பூப்பு அடைந்த
 விவரம் தெரிஞ்சாச்சு
ஆண்: குறும்பாட்டா திரிஞ்ச பொண்ணு
 ஏன் குமரியாச்சு
பெண்: வேறென்ன உடம்பு உனக்கு
 வழங்க முடிவாச்சு

 (இசை...)

ஆண்: மண்ணாலதான் வீடு கட்டி
 நானும் நீயும் வாழுறப்போ
 மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ
பெண்: கமரக்கட்டு கடலை முட்டாய்
 வாங்கினாக்க வாயில் வச்சு
 காக்காக் கடி கடிச்சு திண்பாய் நீ
ஆண்: கருவாட்டைப் போல தீயில
 என் நெஞ்சை வாட்டுன
 
பெண்: அலங்கார அம்மன் கோவிலில்
 கண்ஜாடை காட்டின
 அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு
ஆண்: வேறாரு ஆடி அசையும் அழகுமணித் தேரு
 அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு
பெண்: வேறாரு கூச்சம் நிறுத்த
 ஈச்சம் மரப்பாய் வா
ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட
பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க