FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 07, 2018, 12:43:24 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: Forum on October 07, 2018, 12:43:24 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 201
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/forum2018/OVIYAM%20UYIRAAGIRATHU/201.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: பொய்கை on October 07, 2018, 11:17:36 AM
உழவு நசிந்ததனால் நானும்
நிலவு க்கு பொழைக்க போனேன்
செலவு செய்ய காசு இல்லே
நிலவையே விற்க போறேன்...

களவு மனம் எனக்கில்லை
உழைக்கவும்  வழியுமில்லை
பிஞ்சு வயறு பசிப்பதனால்
பெற்ற வயறு துடிப்பதனால்
நிலவையே விற்க போறேன்...

ஓடி உழைச்சாலும் இப்போ
ஒருகாசு மிஞ்சலையே
கணவன் குடிக்க இப்போ
கை காசு காணலையே
நிலவை பிடிச்சு நானும் 
வீதியில விற்க போறேன்...

ஓலை குடிசையில்
ஒளிவீசி வந்தவளே
காதலர் கற்பனையில்
கனவாய் மிதந்தவளே
ஏழை என் கூடைக்குள்
எப்படித்தான் வந்தாயோ?

கூடைக்குள் வந்த நிலா
கூப்பாடு போடும் முன்னே
எடைக்கு எடையாக
யாரேனும் பொன்கொடுத்தால்
இறங்கி வரும் அவளை
இப்போதே விற்றிடுவேன்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: AshiNi on October 07, 2018, 12:23:03 PM
அந்தி பதுங்கும் பொழுதினிலே
  பனிமழை வரப்போகும்  வேளையிலே
மானிடம் ஓய்வு நாடும் நேரத்திலே
  மின்னலையே கொய்யும் புன்னகையுடன்
பல ஏக்கங்கள் மனதினுள் தாளமிட
  வீடு திரும்புகிறாள் பொண்ணுத்தாயி...

கட்டாந்தரையின் தோல் நெய்யும் வெப்பமும்,
  வியர்வையின் நாசி வெறுக்கும் மணமும்
அவளின் இனிப்பான கனவுகளை கலைத்திடக்கூடுமோ...!

உழைப்பின் தீவிர அயற்சியும்,
  வறுமையின் அதீத வாட்டமும்
அவளின் வெறிகொண்ட முயற்சிகளை சிதைத்திடக்கூடுமோ...!

கல்வியேட்டின் வாசனையை
  தான் நுகராவிடினும்
அவள் வாரிசு நுகரவோ
  இப்பாடுபடுகிறாள்...!?
தன் பாதங்கள் ஏந்தும்
  சூட்டுக் காயங்களை
அவள் பிஞ்சு ஏந்தாதிருக்கவோ
  இப்பாடுபடுகிறாள்...!?

அவளின் கரு இரவுகள்
  வெண் பகலாய் மாறுமோ...!
அவளின் இம்சை வாழ்க்கையில்
  குதூகலம் குடியேறுமோ...!

ஒரு வரியாய் உள்ள உன் சீவியமும்,
  புகழ்பெற்ற காவியமாகுமே...!
ஒரு துளியாய் உள்ள உன்
காலமும்,
  ஆனந்தம் நிறைந்த சாகரமாகுமே...!

உன் அயரா முயற்சியால் உன் நகல்,
  ஓர் நாள் பெருமையேந்தி விண்ணை வெல்வான்!
உன் உண்மை உழைப்பால் உன் மகன்,
  ஓர் நாள் புன்னகையேந்தி மண்ணை ஆள்வான்!

இருளாய் இருக்கும்
  உன் வாழ்விலே
ஒளியேற்ற இதுவரை யாருமில்லையோ..?

கலக்கம் கொள்ளாதே தாய்மையே...!

உன் அவலம் கண்டுதானே
  ஒளிரும் கதிரவனும்
உன்னோடு வருகிறான்,
  உன்னை பதம் பார்க்கும் ஏழ்மைக்கு ஒளியேற்றவல்ல...
  நீ விடாது பின்தொடரும்
உன் முயற்சியின் பலனுக்கு ஒளியேற்ற...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: JeSiNa on October 08, 2018, 12:19:16 PM
வாழ்க்கையில் போராட வேண்டி இருக்கிறது

வாழ்க்கையே போராட்டமாய் இருக்கிறது

பொறுப்பற்ற கணவனிடம்

போராட தைரியமும் இல்லை ..

உடலில் வலிமையும் இல்லை ..



வறுமை நிறைந்த எங்களுக்கு

வாழ வழியும் இல்லை இந்நாட்டில்

சோதித்து பார்ப்பதோ ஆண்டவனின்

விளையாட்டு..

பசியும் பட்டினியும் எங்களுக்கு

புதிதல்ல..

என்பிள்ளை வாழ்க்கைக்கு சேர்த்துவைக்க

கையில் ஒன்றும் இல்லை ..


வேறு தொழிலும் அறியாமல்

நடவு நட நானும் போனேன்

வியர்வை சிந்தி உழைத்த

கடமைக்கு கூலி கிடைத்த

இன்பத்திலே....


பச்சிளம் குழந்தையின் பசியை போக்க

அந்தி சாயும் மலையிலே

கதிரவனை ஏந்தி வந்தேன் வீதியிலே ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: JasHaa on October 08, 2018, 04:55:03 PM
கதிரவன் விற்பனைக்கு 

கருவாகி  உருவாகினேன் 
அன்னை மடியில் ...
கள்ளிப்பாலில்  தப்பித்து  ...
கனவுலகை  ஸ்தாபித்து ...
பிள்ளை  பருவத்தை 
அடுக்களையில்  பறிகொடுத்து  ...
பருவ  வயதில் பெண்மையை 
காக்க  ஓடிகளைத்து  ....
தந்தை எனும்  ஆண் சமூகம்  விட்டு...
கணவன்  எனும் ஆண்
கரம்பற்றி
கனவுகளை  விற்று   அடிபெயர்தென்
புகுந்த  வீடு  எனும் புகலிடத்தில்  ....
என்னையும்    பெண்ணாய்
உணர  வைத்து  மகவு  எனும்
மாணிக்கத்தை  தந்து 
இறைவனடி   சேர்த்தனன்...
 மகளாய்,  சகோதரியாய்,
மனைவியை  , மருமகளை
பிறருக்காக  வாழ்ந்து   வாழ்ந்து
சிதிலமாகி  போன  என் வாழ்வை 
புதுப்பிக்க  வந்த எனதருமை 
மகள்  /  மகன்  காக  ...
கனவுகள் தொலைத்த 
நான் கதிரவனை  விற்கிறேன்  ...

வீழ்வேனென்று   நினைத்தாயோ
சமூகமே... சமுகமே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: RishiKa on October 08, 2018, 06:17:39 PM


சூரியன் பிம்பத்தை ....
தூக்கி பிடித்த நிலா..

சுமந்த  கூடையும் ...
ஓவியமாச்சு !

கையில்  பிடித்த  குட்டி  நிலவும் ...
ஊர் வலம்  போச்சு ....

உழைத்த  களைப்பு  ..
தெரியும்  விழிகளிலும்..

பரந்து வலிக்கும்  ...
பாரத்தை சுமக்கும்...
பத்து  விரல்களும் ...

நடையில் தெரியும் ...
சிறு  அயர்வும் ...

மழலை பிடித்த..
தோள் வலி கைகளுக்கு ....

கை  வீசி  நீ  நடந்தாலும் .
அழுக்கு உடையிலேயும்...

உன்  அழகிய  சிரிப்பில் ...
அலை   பாய விட்டாய் அடி!

கால்  கடுக்க ..நீ  நடக்கையில் ...
உளவு  பார்க்கும்  கதிரவன் ....

உன்  கூடையில்  குடியேறியது  ஏன் .?
பொதி  சுமக்கும்  உன்னை ..
நெஞ்சில்  சுமப்பவர்  யாரோ ....

வாழ்க்கை பயணம்...
வெகு  தூரம்  இருந்தாலும்.....

வாழும்  முறையும் ...
வகுத்து  தந்தது அல்ல ....

ஆனாலும்  உன்  நடையில் ...
தெரிகின்ற   கர்வம் ...
உலகை வென்ற..
பெருமிதம் காட்டுதடி...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: ReeNa on October 08, 2018, 09:32:17 PM
இருள் சூழ்ந்த வாழ்க்கையில்
இரு நிமிடம் சூரிய கதிர்கள் என்னை தொட்டது
இயற்கை உயிர் ஊட்டிய சூரியன்
இயலாமையில்  இருந்த என்னை பார்த்து சிரித்தது

அந்தி  நேரம் ஆனந்த நேரம்
அலைந்து தீர்ந்த கால்கள் ஓய்வெடுக்கும் நேரம்
கூடையில்  எடுத்து  செல்ல ஒன்றும் இல்லாமல் கசந்தேன்
கூடவே வந்த செல்லப்பெண்ணை நினைத்தேன்
வாடிய அவள் முகத்தை புன்னகை செய்ய

வானத்தின் அலங்காரமாய் இருந்த சூரியனை
வாடின என் பெண்ணுக்கு  பரிசாய் குடுக்க எண்ணினேன்
ஓரமாய் கள்ள சிரிப்பை சிரித்தேன்
ஒற்றை பாதையில் வேகமாய் கூடையில்
சூரியனை அள்ளிக்கொண்டு ஓடினேன்

ஒளித்து வைக்க வழி தேடினேன்
கதிரவன் உஷ்ணம் என்னை வாட்டியது
பிரபஞ்சமே அவனை தேடியதால்
அவனை சிம்மாசனத்துக்கே அனுப்பிவிட்டேன்

சுட்டெரிக்கும் சூரியனை
சுட்ட பெருமை எனக்கே உரியது
மனதில் தோன்றியது 
ஒரு புதிய நம்பிக்கை!!   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: SweeTie on October 09, 2018, 05:57:28 AM
வாய்   வயிற்றைக் கட்டி  சேனையில பயிர் செஞ்சு
சேய்  வயிற்றை நிரப்ப காலையில போனவள் நான்
சாய் பொழுது வேளையில சந்திரனும் உதிக்கையில
போனவளை காணல்லன்னு  தேட யாரும்  இல்லாம
ஓலை குடிசையில  ஒண்டியா  வாழ்கிறவள்   

சீர் சிரத்தை இல்லாம  செஞ்சுவைச்ச கலியாணம்
சொந்த பந்தம்  தொலையாம  செஞ்சுவைச்சா  பெரியவங்க 
மருதாணி வைச்சு அழகுபார்த்த ஆச மச்சான்
 கால  புடிச்சு கால் கொலுசு போட்ட மச்சான்
இன்று  சீர் வரிசை கேட்டு  காலால் அடிக்கிறானே

பால்போல் நிலவெறிக்க  பாய் விரிச்சு படுத்த திண்ணை
உண்ட களைதீர  உருண்டு படுத்த திண்ணை
இப்ப  வெறிச்சோடி போய்கிடக்கு மச்சானும் போயாச்சு
ஊர்க்கண்ணு  உறவுக்கண்ணு  நாய்க்கண்ணு நரிக்கண்ணு
யாரு கண்ணு பட்டுச்சோ   எங்க உறவும் போயாச்சு

பொண்ணாக  பொறந்துட்டா கண்ணுறக்கம் ரெண்டுமுறை
பிறப்பு ஒரு உறக்கம்  இறப்பு  மறு  உறக்கம்
பெத்தவனும் போயாச்சு  கொண்டவனும் போயாச்சு
அப்பன் இல்லாப்  புள்ளைக்கு  அப்பனுமாய் நானிருக்கேன்
அரை வயிறு  நிரம்ப  ஆடி ஓடி  உழைக்கின்றேன்


 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 201
Post by: joker on October 09, 2018, 11:31:13 AM
எல்லா பெண்ணையும் போல் தான்
என்கனவும் சிறகடித்து பறந்தது
கன்னி பெண் வயதில்

மன்னனின் மகளும் அல்ல
அரண்மனை இளவரசியும் அல்ல
அது என் தவறும் அல்ல

தினம் உழைத்து தின கூலி வாங்கி
தினம் தினம் செத்து  பிழைக்கும்
நாடோடியாய் வாழ்வது தான்
நான் வாங்கி வந்த வரமா ?

எந்த கவலையும் இல்லை
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
இந்த சூரியன் மட்டும் தினம்
உதிக்க வேண்டும் என்பதை தவிர

காய்கறிகளை கூடையில் விற்று
கிடைத்த காசு என் மடியில் உண்டு
என் கை பிடித்து நடக்கும்  என் குட்டி
மகள் உடன் உண்டு

ஒரு வாரமாய் பெய்த மழையில்
பசி மறந்து தண்ணீரே மருந்தென்று
இருந்தோம்

மழையில் காணாமல் போன சூரியனும்
இதோ
இன்று தான் காலை தான் உதித்திருந்தான்

இன்று என் மகளுக்கும், கணவனுக்கும்
பிடித்த உணவு சமைத்து
இரவு வரும் நிலவின் ஒளியில் அமர்ந்து
சாப்பிட வேண்டும்

கட்டாந்தரையில் பாய் விரித்து
மகளுக்கு நிலவை காட்டி
தாலாட்டு பாடிட 
மகளும்,, என்  கணவனும்
என் மடியில் தூங்கிட வேண்டும்

இன்பம் என்றும்  இது போதும்
இரவு இது நீண்டிட வேண்டும் என்று தான்

இதோ

இந்த சூரியனை கூடைக்குள் இட்டு
ஒளித்து வைக்க இடம் தேடி ஓடுகிறேன்

நீங்களும் சொல்லிடாதீங்க
சூரியனை காணாளனு பிராது
ஏதும் குடுத்திடாதீங்க  ;D ;D ;D

                    ****ஜோக்கர் ****