Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 225  (Read 1896 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 225
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   அனோத் அவர்களால்      வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


LioN

  • Guest
தனிமையி

துடிக்கும் இதயத்தை
நிருத்த முடியவில்லை,
துடிப்பதே உனக்காகத்தான்-என
தெரிந்ததால் அதைசெய்ய மனமுமில்லை.

ஏங்கிடும் மனதிற்கு
தெரியவில்லை,
தான் ஏங்கிடும் ஏக்கத்திற்கு
விடைதான் ஏதுமில்லை.

பாதைகள் துளியும்
குறையவில்லை,
தனிமையின் தூரத்திற்கு
ஏதும் எல்லையில்லை.

வருமையின் ஈரம்
காயவில்லை,
இருந்தும் உனை மறந்து வேரொரு
வழிதேட தோன்றவில்லை.

உள்ளத்தின் காயங்கள்
ஆரவில்லை,
பக்கத்தில் அணைத்து முத்தமிட
நீயுமில்லை.

கனவிலும் காட்சிகள்
முடியவில்லை,
அறிந்தேன்
இதுவே தனிமையின் கோர எல்லை.

Offline இளஞ்செழியன்

     
ஒரு விளக்கு போதும்.
விடியும் வரை இருளை
நேசித்துக் கொண்டிருப்பேன்.
ஒளிச் சிதறல் எந்தன்
கண்ணீரில் தெரியலாம்.
தலையணை அணைத்து
நனைந்து போகலாம்.
ஆகாரமின்றி அழுது
கலைந்து அடிவயிறும்
வலி அனுபவிக்கலாம்.
யாரேனும் வந்தென்னை
நலம் விசாரிக்கலாம்.
பிணி போக்க பிராத்திக்கலாம்.

அழாதே என்றுரைக்கலாம்.
சிலர் உரிமையோடு
கண்ணத்தில் அறையலாம்.
சிலர் அணைக்கலாம்.
காரணம் கேட்கலாம்.
ஆறுதல் சொல்லலாம்.
அவர்களும் கூடவே சேர்ந்து
அழுது தொலைக்கலாம்.
விடியலும் பிறக்கலாம்.
வீங்கிய கண்ணங்கள்
வற்றிப் போகலாம்.
வழக்கம் போல் குளித்து
வேலைக்கும் போகலாம்.

வெளிச்சத்தில் அனைவரும்
பொறாமைப்படும் படி
சந்தோஷமாக சுற்றித்
திரியலாம். இரண்டு
வேளையும் நிம்மதியாய்
சாப்பிடலாம். மதியம்
ஒரு மணி நேரம் ஆழ்ந்து
உறங்கலாம். இரவின்
கவிதைகளைப் படித்து
இவனே சிரிக்கலாம்.
பயணம் செய்யலாம்.
பலரையும் சந்திக்கலாம்.

ஒன்றை மறக்க வேண்டாம்
பிரியப்பட்ட மனமே.
மீண்டும் இந்தக் கதிரவன்
உறங்கச் செல்வான்.
கடலோ கருந்திரைப்
போட்டு மூடப்பட்டிருக்கும்.
வானோ சின்னச் சின்னச்
ஒளி விளக்கு விண்மீனில்
பரிதவித்துக் கிடக்ககும்.
தெருக்களும், சாலைகளும்
வெறிச்சோடிப் போகும்.
காகம் கரையாமலிருக்கும்.
நாயோ குரைப்பதை
விடுத்து ஊளையிட்டுக்
கொண்டு இருக்கும்.

அப்போது மீண்டும் அந்த
இருள் சூழ்ந்து நிற்கும்.
ஒற்றை விளக்கு மட்டும்
போதுமானதாயிருக்கும்.
நிச்சயமாக அவள் நிழல்
உனக்குத் தென்படும்.
பேசிக் கொண்டு நடந்த
இடங்கள் உந்தன்
நினைவில் பிரதிபலிக்கும்.
ஒளியெல்லாம் மறையும்.
அவள் குரல் மட்டும்
கேட்கும். போகப்போக
இன்னிசையெல்லாம்
உக்கிரமாகத் தொடங்கும்.
தலையணை உன் கண்ணீரை
சுவைக்க வேண்டியிருக்கும்.

அப்போது உனக்குத்
தேவைப்படும் ஏதேனும்
ஓர் மடியை பகலிலேயே
சம்பாதித்து விட்டிறு.
அத்தனைக் கணங்களைத்
தாங்கும் மனங்களைத்
தேடிப் பிடித்துப் பற்றிக்கொள்.
நீ பெற்றிருக்கும் பெரிய
சொத்தாக அதுவேயிருக்கும்.
இன்னும் விடியவில்லை.
அழுது புலம்பு, நாளைய
நியாபகங்களுக்கான
மடிகள் இவ்வுலகில் ஏராளம்

தனிமையை உணர்ந்தீர்களேயானால்
பேசாதிருக்காதீர்கள்
இருளான இல்லத்தின்
கதவுகள் அடைப்பட்டு விட்டால்
அறைகளெல்லாம் வெறிச்சோடி விடும்



     
பிழைகளோடு ஆனவன்...

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 343
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
தனிமை...

தனிமை ஒருவரை  தெளிவு படுத்தும்  என்பார்கள்.

ஆனால் ஏனோ தெரியவில்லை தனிமையை நான் விரும்புவதில்லை.

நான் தனிமையில் இருப்பேனாகின். அன்று  என்னுள் புதைந்திருக்கும் நினைவுகள்
என்னை வினவுகின்றன.

உன்னுள்  புதைந்திருக்கும் நான் உனக்கெப்படி உதவாமல் போனேன். 
எனை பற்றி சிந்திக்க மறந்ததேனோ என்று.

ஒருவகையில்  தனிமை  எனக்கும்  உபயோகம் ஆகும்,
என் உறவானவளின் நினைவுகளை உருவக படுத்த்தும் 
 நேசம் கொண்ட வரிகளை சிந்திக்க உதவும் கணம் அது..   

நான்  தனித்து இருக்கும் நொடியெல்லாம்
என்னுள் தனிமையின் குரல் என்னை நினைவு  செய்யும். 
நீ  தனித்து விட்டாய், உன் வாழ்வின் மகிழ்ச்சி தனை இழந்து விட்டாய் என்று..

இவ்வுலகில் தனிமையை விரும்பாதோர் யாரேனும் இருப்பின்.
அப்பெயர் பட்டியலில் முதல் பெயர் MNA........
« Last Edit: August 03, 2019, 03:14:43 PM by Unique Heart »

Offline KuYiL

என் வழி தனி வழி !.....

புத்தகசுமை  தந்ததோள்வலியை விட
கனவு  மூட்டைகளை   சுமக்கும்
என்  இதய வலி   அதிகம் !

தினமும்  விடியும்  காலை ..
நிதமும்   நடக்கும்  அதே சாலை ..
ஒவ்வொரு  நாளும்  கடந்து
போகும்  சாலை   ஊர்திகள்....

இதையெல்லாம்  தாண்டிய  ஒரு விஷயம் .....
அமெரிக்கா  செல்வது தான்
ஜென்ம பலனாய் நினைக்கும்
என் குடுப்பம்......

பதினாறு   வருடமாய்  படித்த
பாடத்தை  விட  காதில்
அதிகம்   ஒலித்த ஒரே சொல்
"அமெரிக்கா" தான் ....

தூதரகத்தை  பார்த்து  கண்ணில்
ஒற்றி   கொள்பவர்கள் ஏராளம் ...
ஏனோ நான் மட்டும்
விதி விலக்காய்  எப்போதும் !

கரை இல்லா  என்ஆசைகள்
காற்றாற்று   வெள்ளம் தான்..
இரவென்றும் பகலென்றும்
தெரியாத  நான்கு சுவர்களுக்குள் ...

அடங்கி போன  வாழ்க்கையில்
முடங்கி போன ஆசைகளோடு
இமைமூடா சிவந்த விழிகளில்
எந்திரமாய்  கணிப்பொறியில்
சிக்கிய மனித mousegal .......

விசைப்பலகை தட்டி விறல் சொடுக்கும்
நேரத்தில் கணிசமாக கொட்டும்
டாலர்களை விட...

இசை பலகை தட்டி விறல் மீட்டும்
இதய ராகத்தில் எனை மறந்து
உலகையும் மறக்க செய்வேன்...

இயந்திரமாய் இதயம் மாறி போன       
மானுடம் சொல்லும் ஒரு நாள் ...
உன்  இசையின் ஒலி கேட்டால்
நின்று போன என் இதயம்
உயிர் துடிக்கும் என்று..

என் வாழ்க்கை என் வரம்..
அது மற்றவர்களின் சாகா வரமாய்
மாறினால் அந்த கணம் போதும்
என் வாழ்வின் பயனை அடைய...
மன்னித்து விடுங்கள் என் அம்மா...
என் வழி தனி வழி .....







Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !

வயலோரம் நான் நடந்து
அயலோடுதான் பேசி
தருவோடு உறவாட
உருவான  நாள் எங்கே ?

மணலோடு விளையாடி
மனதோடு இசைபாடி
கணந்தோறும் கனி தேடி
அலைகின்ற நாள் எங்கே ?

குயிலினத்தின்  ஓசையை
துயிலில்லா ஆசையாய்
அதிகாலை வேளையில்
கேட்டு வந்த  நாள் எங்கே ?

ஆலமரத்து விழுதுபோல்
ஆயிரம் சொந்தம் இருந்ததை
டாலர் கையில் இருந்துமே
தோழரைக் காணும்   நாள் எங்கே?

அயல் நாட்டில் அலைந்தோடி
தாய் நாட்டின் மணம் நாடி
தவிக்கின்ற வாழ்வையே
எதிர்நோக்கும் நாள் எங்கே?

மிடிமை தேசம் துரத்த
அடிமை நேசம் உணர்த்த
உடைமை அனைத்தும் வெல்ல
கடந்து வந்த தடம் தேடி
ஒரு  நாள் காத்திருப்பேன்.
« Last Edit: July 19, 2019, 04:01:12 PM by அனோத் »

Offline SweeTie

நியூ யார்க்  நகரமே !!
உலகின்  முதல்  அழகி நீதானே !!
உன் அழகில் மயங்கி  உன்னை நாடிவரும்
வேற்று நாட்டு  காளையரை 
கவரும் கன்னியும் நீதானே!
டாலர்களைக்  காட்டி  மோகத்தை தூண்டும்
மோகனாங்கியும் நீதானே!

உன் உயர்ந்த மாடி கட்டிடங்களில் சொக்கித்தான் போகிறேன்
உன்  அழகான  ரோடுகளிலும்  மயங்கித்தான் போகிறேன்
பாதைகளில்  ஓடும் ஆடம்பர  மோட்டார்களை 
பார்த்து  பிரமித்தும் போகிறேன்
இரவு நேரங்களில்   மின்னல் போன்ற  ஒளிவிளக்குகள்
ஒளிவீசும்  அந்த   உயர்ந்த ரக ஹோட்டல்களும்   
செல்வந்தர்களை   மயக்கி  தன்   ம டியில்   வைத்திருக்கும்
மது  புட்டிகளுடன்  நடமாடும்
பப்ஸ்    கிளப்ஸ்   போன்ற  அழகு ராட்சஸிகள்

நியூ யார்க் நகரமே  நாகரிகத்தின்  உச்சம் நீ !
உன் போலி அழகில்  திக்குமுக்காடிபோகும் இளைஞர்கள்
வீட்டை விற்று  கடன்பட்டு  அனுப்பிவைக்கும்  பெற்றோர்
கடனை  தீர்க்க  பகல் இரவின்றி  குளிர் வெயில்  பாராது
படும் கஷ்டம்தான்    அறிவாயோ
வாழவும் முடியாமல்  சாகவும் முடியாமல்
திரும்பி போகவும் முடியாமல்  அவன் படும் வேதனை
நான்கு சுவர்களுக்குள்  தன்னந்தனியே 
தினம்  தினம்  புழுங்குவது   
அவனையன்றி  யாருக்கு தெரியும் !!!.
 

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


                  சுதேச அகதிகள் !


வேர்களை விட்டு நீங்கி விட்ட
புயலில் தள்ளாடும் விழுதுகள் இவர்கள் !
தானே கண்ணாடி பெட்டிக்குள் சிறைப்பட்டு....
கண்ணீரில் நீந்தும் தங்க மீன்கள் !

உறவுகளோடு குலாவ நேரம் இல்லாமல்
அவர்கட்கு பொருள் ஈட்ட ...
சிறகுகளை விரித்து இடம் பெயர்ந்த
அடிமை பறவைகள் !

வளர் பிறையாய் வளர்த்து விட்ட
தாய் மண்ணை தவிக்க விட்டு ...
தேய் பிறையாய் தன் சுகம் மறந்து
என்றும் அம்மாவாசையாகி   விட்ட நிலாக்கள் !

போதிமரமாய் வாழ்கை சொல்லும் பாடங்கள்!  ...
அதை மறந்து சொகுசாய் வாழ ..
போதை மரமாம் பணம் தேடும் ...
தன்னை தானே வேட்டையாடும் வேடன்கள் !

பிறந்த மண்ணில் வாழ முடியாமல்
பிறருக்காக தன்னை தியாகம் செய்து
இறந்து விட்ட தன் ஆசைகளை
அடமானம் வைத்து விட்ட சுதேச அகதிகள் !