இறைவன் ஆசிகள் என்றும் பொழிய நீண்ட ஆயுளும் நல்லாரோக்கியமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வீராக...
-இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்-
"GAB தலைவா"
FTC குடும்பம் சார்பில் உங்களுக்காய் இந்த சகோதரி வழங்கும் ஓர் கவி.....
இறைவன் தரணியில்
வந்துதிக்கச் செய்த ஆண்மகனே
முதலில் நீ ஓர் நல் உள்ளம்...
தாய் தந்தையின் அன்பை
காலத்துக்கும் வெல்பவனே
ஞாலத்தையும் வெல்லத் துணிவான்!
அவ்வகையில் பெற்றோருக்கு
நிச்சயம் நீ ஓர் சிறந்த புத்திரன்...
சொந்தங்களை தாண்டியும்
உண்மை உறவுகளை தேடி அலையும்
ஏக்கங்களுக்கு,
"என்னோடு வாருங்கள்" என கரம் தந்து
அன்பு உறவுகளை அறிமுகம் செய்து
உணர்வுகளுடன் கலக்கச் செய்வதில்
நீ ஓர் உறுதியான உறவுப் பாலம்...
இரத்தப்பந்தம் போல
உடன் பிறப்பின் பிரதியாக
கட்டித்தழுவும் கைகள் தேடினோர்க்கு
நீ ஓர் இனிய சகோதரன்...
நட்பின் அர்த்தமும் ஆழமும்
தெரியா மானிடர்க்குள்ளும்
நட்பின் கீதத்தை ஒலிக்கச் செய்த
நீ ஓர் நட்பின் இலக்கணம்...
முகமறியா நபர்களின்
மனங்களை கோர்த்து
நட்பு எனும் எல்லையில்லா மாலையாக்கி
மணம் வீசச் செய்யும்
நீ ஓர் அதிசயப் பிறவி...
தடைகள் பல வந்திடினும்
மலைகள் பல கண்டிடினும்
உன் பின்னே வருவோர்க்கு
நட்பின் பாதையை
சீராக்கி கூட்டிச் செல்லும்
நீ ஓர் உன்னத வழிகாட்டி...
நீ பிறந்த நாளாம் இன்று...
ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம் என
நீ எண்ணிடினும்,
நண்பர்கள் இணையத்தள
அரட்டை அரங்கத்தின்
ஒவ்வொரு உள்ளமும் உன்னை
கொண்டாடி மகிழ்கிறது...
இறைவனின் துணை கொண்டு
நீ கண்ட பெரும் வெற்றி
"நண்பர்கள் இணையத்தள அரட்டை அரங்கம்"
தமிழரின் நட்புக்காய்
நீ அமைத்த சிம்மாசனம்
"நண்பர்கள் இணையத்தள
அரட்டை அரங்கம்"
நீ இல்லையேல் அன்று,
FTC குடும்பம் இல்லை இன்று!
உனக்காக இக்குடும்ப உள்ளங்கள்
சமர்ப்பிக்க எண்ணும்
அனைத்து வாழ்த்துக்களும்
இக்கவிக்குள் அடக்கம்...
எதிர்ப்புக்கள் வந்தாலும் எதிர்கொண்டு
தன்னை நேசிப்போரை காப்பவன்
வீரன் என்றால்,
பிரளயங்கள் கண்டாலும் கலங்காது
FTC குடும்பத்தை உன் குடும்பமாய் தாங்கும் நீயும்
"எம் தமிழ் வீரனே...!!!"