Author Topic: நோய் எதிர்ப்பு சக்தி தரும் தக்காளி  (Read 169 times)

Offline Ayisha

  • Golden Member
  • *
  • Posts: 2512
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ✤ Loneliness Is Beautiful And Empowering ✤

தக்காளியின் பழம், காய், இலை, விதையில் மருத்துவ குணங்கள் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் தக்காளி
புற்றுநோய் வராமல் தடுக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், குடல் புண்களை ஆற்ற கூடியதும், சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டதும், உடல் எடையை குறைக்க கூடியதுமான தக்காளியின் மருத்துவ குணம் மிக சிறந்தது.

தக்காளியின் பழம், காய், இலை, விதையில் மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சத்துக்களை அதிகம் கொண்டது. தக்காளி முக்கியமான உணவாக பயன்படுகிறது. இதன் இலைகள் மேல்பூச்சு மருந்தாக பயன்படுகிறது.

தக்காளியை பயன்படுத்தி ஆஸ்துமாவுக்கான தேனீர் தயாரிக்கலாம். தக்காளியை நீர்விடாமல் தோலுடன் அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சுக்கு, மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால் ஆஸ்துமா பிரச்னை சரியாகும். சளி, இருமல் இருக்கும்போது எடுத்துக்கொண்டால் அவைகள் குறைய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சிறிது தேன் சேர்த்து கொடுக்கலாம்.

சுவாச கோளாறுகளை போக்கும் தன்மை உடைய தக்காளி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும். நுரையீரல் புற்றுக்கு மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடியது. உள் உறுப்புகளை பலப்படுத்தும்.

தக்காளியை பயன்படுத்தி குடலில் ஏற்படும் தொற்று, புண்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தக்காளியை வட்டமாக வெட்டி, புளிப்பில்லாத தயிரில் நனைத்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது. மார்பக புற்றுநோயை தடுக்கும் மருந்தாகிறது.

தக்காளியை பயன்படுத்தி முகப்பொலிவை அதிகப்படுத்தும் மேல்பூச்சு தயாரிக்கலாம். வருகின்ற மாதங்களில் வெயில் அதிகளவில் இருக்கும். புற ஊதா கதிர்கள் தோலில் வேர்குரு போன்ற துன்பங்களை தரும். வெயில் படுவதால் தோலில் கருமை நிறம் ஏற்படும்.

இந்நிலையில், முகம், கை, கால்களில் தக்காளி சாறு பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் கருமை நிறம் மாறும். சுருக்கங்கள் மறைந்து போக்கும். தக்காளி சாறு தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் உள் உறுப்புகள் பலமாகும். உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.

தக்காளியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். இதில், வெட்டி வைத்த தக்காளி துண்டுகளை வைத்து லேசாக வதக்கிய பின் மிளகுப்பொடி சேர்க்கவும். சுவைக்காக உப்பு சேர்க்கலாம். காலை உணவை குறைத்துக் கொண்டு இதை சாப்பிட்டுவர உடல் எடை குறையும்.

உணவாக பயன்படுத்தி வரும் தக்காளி, புற்றுநோயை தடுக்கிறது. அமிலச்சத்தை குறைக்க கூடியது. பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் இதய ஓட்டம் சீராக இருக்கும். மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது.