Author Topic: காத்திருக்கிறேன்  (Read 669 times)

Offline thamilan

காத்திருக்கிறேன்
« on: November 12, 2018, 06:58:48 PM »
ஜனன சூரியனின்
மறுபதிப்பாய் அவள் முகம்

மரணித்துப் போன
என் மனதில்
மீண்டும் ஒரு உதயம்

என் இதய சூரியன்
என்றோ அஸ்தமாகிவிட்டது
என்றாலும்
என்னுள் உறங்கிக் கொண்டிருக்கும்
அவள் நினைவு
உதய சூரியனே
உன்னைக் கண்டதும் அவ்வப்போது
துயில் எழும்

இளைய சூரியனே - நீ
இருட்டைக் கழுவி துடைத்துவிட்டாய்
அவள் முகம் போலவே
அழகாய்

ஆனால் மாலைச்  சூரியனாய்
அவள் இதயம் மட்டும்
இன்னும் மயங்கிக் கிடக்கிறது
உயிர்களை துயில் எழுப்பிய - நீ
அவள் இதயத்தை மட்டும்
இன்னும் ஏன்
திரை போட்டு மறைத்து வைத்திருக்கிறாய்

பிரபஞ்சம் முழுவதும்
உன் ஜனனத்தால் ஒளிபெற்றது
அவள் இதயம் மட்டும்
இன்னும்
இருட்டாகவே இருக்கிறது

ஜனன சூரியனே
இருட்டுக்குள் தொலைந்து போன
அவள் இதயம் விரைவில்
வெளிச்சத்துக்கு வரும் என
காத்திருக்கிறேன் !

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 980
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: காத்திருக்கிறேன்
« Reply #1 on: November 14, 2018, 11:42:22 AM »
அழகு

Offline JeGaTisH

Re: காத்திருக்கிறேன்
« Reply #2 on: November 15, 2018, 04:21:09 PM »
என்னுள் உறங்கிக் கொண்டிருக்கும்
அவள் நினைவு
உதய சூரியனே
உன்னைக் கண்டதும் அவ்வப்போது
துயில் எழும்...

 ;D ;D ;D ;D காத்திருப்பதும் ஓர் சுகம் ...வாழ்த்துகள் தமிழனா அருமை ..

Offline gab

Re: காத்திருக்கிறேன்
« Reply #3 on: November 19, 2018, 01:00:00 PM »
கவிதை அருமை நண்பா..

அவளின் நினைவு மங்காத சூரியனை போல வாழ்ந்து கொண்டு இருப்பதாக  சொல்லிருப்பது அருமை.