Author Topic: Bairavaa பைரவா  (Read 1777 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Bairavaa பைரவா
« on: November 21, 2018, 05:38:35 PM »
நில்லாயோ

மஞ்சள்  மேகம்
ஒரு  மஞ்சள்  மேகம்
சிறு  பெண்ணாக  முன்னே  போகும்
பதறும்  உடலும்
என்  கதறும்  உயிரும்
அவள்  பேர்  கேட்டு  பின்னே  போகும்

செல்ல  பூவே
நான்  உன்னை  கண்டேன்
சில்லு   சில்லாய்
உயிர்  சிதற  கண்டேன்

நில்லாயோ  நில்லாயோ
உன்  பேர்  என்ன
உன்னாலே  மறந்தேனே
என்  பேர்  என்ன

கனவா கனவா
நான்  காண்பது  கனவா
என்  கண்  முன்னே  கடவுள்  துகளா
காற்றின்   உடலா

கம்பன்  கவிதை  மடலா
இவள்  தென்  நாடு  நான்காம்  கடலை
சிலிக்கான்  சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை  நதியோ
வெளியூர்   நிலவோ

நில்லாயோ  நில்லாயோ
உன்  பேர்  என்ன
உன்னாலே  மறந்தேனே
என்  பேர்  என்ன

செம்பொன்  சிலையோ
இவள்  ஐம்பொன்   அழகோ
பிரமன்  மகளோ
இவள்  பெண்பால்   வெயிலோ

நான்  உன்னை  போன்ற  பெண்ணை  கண்டதில்லை
என்  உயிரில்   பாதி  யாரும்   கொன்றதில்லை

முன்  அழகால்  முட்டி   மோட்சம்  கொடு
இல்லை  பின்  முடியால்  என்னை  தூக்கிலிடு

நில்லாயோ  நில்லாயோ
உன்  பேர்  என்ன
உன்னாலே  மறந்தேனே
என்  பேர்  என்ன

பட்டய கெளப்பு

பட்டய கெளப்பு  குட்டையா  கொழப்பு
பட்டய  கெளப்பு  பட்டி  தொட்டி  எல்லாம்
பட்டய  கெளப்பு
குரவ மீன பிடிக்க  குட்டையா  கொழப்பு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை
அது  பட்டினியா  கெடக்கு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை
அது  பட்டினியா  கெடக்கு


சேத்த சக்கரை  ஒடம்ப  குளிக்கும்
சேர்த்த பணமோ  உசுர  குறைக்கும்
பாத்து  பாத்து  செலவழிக்கணுமே

பிள்ளை    நிலவு  கரைக்கு  வருது
வெள்ளி  கெரகம்  விலகி  வருது
காசை வீசி  கணக்கு  பண்ணணுமே

காசை  எடு  காத்தும் திசைய மாத்தும்
காசை  எடு  உன்  கடலில்   ரயிலும் போகும்
காசை  எடு  இமயம்  கொஞ்சம்   குனியும்
காசை எடு
பூட்டி   வச்சி  என்ன  பண்ண  போற
 அல்லி  கொடு  இல்லை  ஆட்டம்  போடு
சிங்கம்  எல்லாம்  சேமிக்காது
ஜிலென்று  கொண்டாடு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை
அது  பட்டினியா  கெடக்கு

வாழனுமே எழ பாழ நம்ம  வாழ்த்தணுமே
உன்   எதிரி  வந்த  மோதி  பார்க்கணுமே
ஏய்க்கும்  கூட்டம்  என்றால்  சாய்க்கணுமே
நீதி  கேட்டு  தம்பி  நீயே  நில்லு
புத்தி  சொல்லு  இல்ல  போட்டு  தள்ளு

அட  தப்புதப்பா   விஜயன்   வில்லு
தர்மத்தில்  நெலச்சி  நில்லு
ரெண்டாயிரம்  ஆண்ட  வாழ  போற
சும்மா  பூட்டி  வச்சி  எதுக்கு
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி  இல்லை
அது  பட்டினியா   கெடக்கு

பட்டய கெளப்பு  குட்டையா  கொழப்பு
பட்டய  கெளப்பு  பட்டி  தொட்டி  எல்லாம்
பட்டய  கெளப்பு
குரவ மீன பிடிக்க  குட்டையா  கொழப்பு

கட்டு  கட்டா சேர்த்த  நோட்டு  கட்டு
வெறும்  பூட்டு  போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம்  ஒரு  வங்கி இல்லை
அது  பட்டினியா  கெடக்கு