Author Topic: இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சள்  (Read 453 times)

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa

#மஞ்சள் #இருக்க #அஞ்சேல்!

மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது.

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள 'கர்க்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.

'கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்;

சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது.

விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது.

காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள்.

இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும்.

மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.



உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால