Author Topic: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~  (Read 1470 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நல்ல நூல்களைக் கற்போம்


பெண்களுக்கு அழகு எது?

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின்  அன்பையும் உதறித் தள்ளுவதே  அறிவுடைமை.
* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய  வேண்டும்.
* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான  வழி முறையாகும்.
* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம்  வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக்  காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக்  காப்பதே பெண்ணுக்கு அழகு.
* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல்  நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி  ஏற்படுத்தித் தரும்.
* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.
- அவ்வையார்


நல்ல நூல்களைக் கற்போம்

* கடவுள் உனக்குக் கொடுத்திருக்கும்
சக்தியை அறிந்து கொள். அறிந்து முயற்சி செய்தால் அறம் செய்ய முடியும். சக்தி இல்லை என்று நினைப்பது தவறு.
* இன்பம் தருவது போல் தோன்றும்
பழக்க வழக்கங்களுக்கு இடம் தரக்கூடாது. அப்படி செய்தால் துன்பம் உன்னை வந்து சேராது.
* நற்குணமுடைய ஒருவருக்கு நாம் சிறிய உதவி
செய்தாலும், அவர் அதை மறவாமல் நமக்குப் பெரிய அளவில் உரியவாறு உதவி செய்யத் தவறமாட்டார்.
* நாம் எவ்விதக் கைமாறும் கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
* கற்க வேண்டிய நூல்களைக் கற்று உனது
அறியாமையை நீக்கிக் கொள், அதேபோல் நல்ல
நூல்களைக் கற்பதிலிருந்து விலகக்கூடாது.
* நல்ல செயல்களை நீயே முன் நின்று செய்வதுடன், மனம் அறிய உண்மையாக வாழ்வதே நேர்மையான வாழ்க்கை.
* நீ கற்றறிந்தது கடுகளவு தான். கற்க வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது என்பதை மனதில் இருத்திக் கொள்.
-அவ்வையார்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #1 on: August 13, 2012, 06:28:32 PM »
கற்றது கையளவு தான்!

* நாம் கற்ற விஷயங்கள் வெறும் கைப்பிடி மட்டுமே. இன்னும் கற்கவேண்டிய விஷயங்கள் இந்த பரந்த பூமியைப் போல எவ்வளவோ இருக்கின்றன. அதனால் படித்து விட்டோம் என்ற இறுமாப்பு கூடவே கூடாது.
* உள்ளத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி அவற்றை அடிமையாக்குவதே வீரம். அழியாத கல்வியே நிலையான செல்வம். பிறருக்கு அடிமையாகாமல் சுயமாக சம்பாதித்து உண்பதே உயர்ந்தது.
* முறையான பயிற்சியினால் சித்திரம் வரையப் பழகலாம். நாவின் பயிற்சியால் செந்தமிழில் பேச முடியும். மனப்பயிற்சியால் கல்வியில் தேர்ச்சிபெறலாம். ஆனால், நண்பர்களிடம் உண்மையான நட்புடன் பழகுதல், உயிர் இரக்கம் காட்டுதல், இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்தல் ஆகிய நற்குணங்கள் ஒருவனுக்கு
பிறவியிலேயே அமையவேண்டும்.
* அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும். பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதியராய் வாழ்வதாகும். வீடு என்பது இம்மூன்றையும் மறந்து கடவுளைச் சிந்திப்பதாகும்.
-அவ்வையார்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #2 on: August 13, 2012, 06:29:32 PM »
வெற்றியின் ரகசியம்

* கொக்கு சிறிய மீன்களை ஓடவிட்டு, பெரிய மீன்கள் வரும்வரை காத்திருந்து பிடிக்கும். அதுபோல, அறிவுடைய நல்லவர்கள். ஒரு செயலில் வெற்றி பெற தகுந்த நேரம் வரும்வரை அமைதியாக காத்திருப்பர்.
* நீர் வற்றிய காலத்தில் பறவைகள் குளத்தைவிட்டு ஓடிவிடும். அதுபோல, ஒருவன் செல்வத்தை இழந்த காலத்தில் உதவாமல் ஓடும் உறவினர்கள் உண்மையானவர்கள் அல்ல. நீரற்ற குளத்தில் கொட்டி, ஆம்பல் போன்ற தாவரங்கள் எப்படி காய்ந்து கிடக்குமோ அதுபோல அப்போதும் பிரியாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்.
* பசி என்னும் பாவி ஒருவனைப் பிடித்துவிட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவு, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் என்னும் பத்து குணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருவனை விட்டு விலகிவிடும்.
* வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்பவன் மானத்தை இழப்பான்.  திருடன் என்னும் பெயர் பெறுவான். பாவத்தைச் செய்து அழிவான். மற்றவர்களால் பழிக்கப்படுவான்.
-அவ்வையார்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #3 on: August 13, 2012, 06:30:32 PM »
விரதம் என்பது எது?

* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.
* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.
* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல்
ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
-அவ்வையார்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #4 on: August 13, 2012, 06:31:27 PM »
நன்மை தரும் செயல்

* நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைக்கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர்தம் நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.
* பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால், சிறிய இதழ்களைக் கொண்டிருந்தாலும் மகிழம்பூவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்குப் பயன்படாது. கடல் அருகே மணற்குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு பயன்படும்.
* பொன்னால் செய்த குடம் உடைந்த பின்னும் பொன்னாகப் பயன்படும். அதுபோல, சிறந்த பண்புகளுடைய செல்வந்தர் வறுமை நிலையை அடைந்தாலும் முன்புபோலவே தன்முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார்கள்.
* நோய் உடலோடு பிறந்தே இவ்வுடலை அழிக்கிறது. அதுபோல, உடன்பிறந்தவர்களும் நமக்கு தீங்கு செய்யலாம். எங்கோ மலையில் இருக்கும் மூலிகை நோயைப் போக்குவதுபோல நமக்கு உறவில்லாமல் எங்கோ ஓரிடத்தில் பிறந்தவர்கள் கூட நமக்கு உதவி செய்வதும் உண்டு.
* கல் பிளவு பட்டால் மீண்டும் ஒன்று சேராது. அதுபோல, கடுமையான கோபத்தால் பிளவுபட்ட கீழ்மக்கள் மீண்டும் ஒன்று சேரமாட்டார்கள். நீரில் உண்டான பிளவு அந்த நிமிஷமே ஒன்று கூடிவிடுவதைப்போல, அறிவில் சிறந்தவர்களின் கோபமானது தோன்றிய அந்த அளவிலேயே மறைந்துவிடும்.
அவ்வையார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #5 on: August 13, 2012, 06:32:20 PM »
இங்கு இரண்டே ஜாதி தான்!

* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்ளை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது.
* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.
* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.
* சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.
* உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.
* தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.
* ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.
-அவ்வையார்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #6 on: August 13, 2012, 06:33:53 PM »
கோபத்தை மறந்து விடுங்கள்



* நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைகளைக் கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர் தம் நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.
* பெரிய பரப்புள்ள கடல் நீரைக் குடிக்க முடியாது. அதன் கரையிலுள்ள சிறிய ஊற்று நீரை குடிக்கப் பயன்படுத்தலாம். அதுபோல, எதையும் சிறிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
* பொன்னால் செய்த குடம் உடைந்த பின்னும் பொன்னாகப் பயன்படும். அதுபோல, சிறந்த பண்புகளுடைய செல்வந்தர் வறுமை நிலையை அடைந்தாலும் முன்புபோலவே தங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்வார்கள்.

* நோய் உடலோடு பிறந்தே இவ்வுடலை அழிக்கிறது. அதுபோல, உடன்பிறந்தவர்கள் நமக்கு தீங்கு செய்ய லாம். எங்கோ மலையில் இருக்கும் மூலிகை நோயைப் போக்குகிறது. அதுபோல, நமக்கு உறவில்லாமல் எங்கோ பிறந்தவர்கள் உதவி செய்வதுண்டு.

* கல் பிளவுபட்டால் மீண்டும் ஒன்று சேராது. அது போல, கடுமையான கோபத்தால் பிளவுபட்ட கீழ்மக்கள் மீண்டும் ஒன்று சேரமாட்டார்கள். நீரில் உண்டான பிளவு அந்த நிமிஷமே ஒன்று கூடிவிடுவதைப்போல, அறிவில் சிறந்தவர்களின் கோபமானது தோன்றிய அந்த அளவிலேயே மறைந்துவிடும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #7 on: August 13, 2012, 06:35:17 PM »
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது



* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங் களை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது.

* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.

* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.

* சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும்.
அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.

* உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கின்றனர். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

* தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.

* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வர்.

* ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள்
மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி
வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச்
செய்யுங்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #8 on: August 13, 2012, 06:36:39 PM »
மழை பெய்வது யாருக்காக?



பசிப்பிணி என்ற பாவி ஒருவனைப் பிடித்து விட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவுடைமை, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் ஆகிய குணங்கள் மறைந்து விடும். தி வருவாய்க்குத் தக்க வகையில் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானத்தை இழப்பான். நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவினை இழந்து விடுவான். திருடன் என்று பெயர் எடுப்பான். ஏழு பிறப்பிலும் பாவத்தைச் செய்ய வேண்டி வரும்.
துன்பங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக உடல் இருக்கிறது. இந்த பொய்யான வாழ்க்கை நிலையானது என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் தர்மமே நம் துன்பத்தைப் போக்க வல்லது.நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியாகப் புல்லுக்கும் பாய்வது போல, மண்ணுலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும் அவருக்காகவே மழை பொழிகிறது. அம்மழைநீரால் உலகில் உள்ள அனைவரும் பயன் பெறுகின்றனர். நாம் வருந்தி அழைத்தாலும் நமக்கில்லாத பொருள் கிடைக்காது. நமக்கான பொருளை வேண்டாம் என்று புறக்கணித்தாலும், அது நம்மை விட்டு நீங்காது. இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் வருந்துகின்றனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #9 on: August 13, 2012, 06:38:13 PM »
மனம் தெளிந்த நீராகட்டும்



* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.

* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.

* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #10 on: August 13, 2012, 06:39:25 PM »
உண்மைக்கு புறம்பாக பேசாதீர்!



நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். கோபம் என்னும் தீயை அணைத்து விட வேண்டும். இல்லாதவர்களுக்கு செய்யும் உதவிகளைத் தடுப்பது கூடாது. தன்னிடம் சிறப்பாக உள்ளவற்றை பிறருக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் தானே வலியச் சென்று சொல்லக்கூடாது. நல்ல செயல்களைச் செய்வதில் உள்ள ஆர்வத்தை தளரவிடக் கூடாது. ஒருவரிடம் தனக்கு உதவவேண்டும் என்று யாசிப்பது கூடாது. உலகியல் நடைமுறைக்கு ஏற்ப உதவி செய்யும் உயர்ந்த குணத்தோடு வாழ வேண்டும். கற்க வேண்டியவைகளைத் தேடி நாள்தோறும் கற்றுக் கொண்டேயிருத்தல் வேண்டும். பிறருடைய வாழ்க்கை முன்னேற்றத்தைப் பற்றிப் பொறாமையால் தவறாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.விளைபொருள்களை அளக்கும்போது குறைத்து அளத்தல் கூடாது. கண்ணால் கண்டதை மாற்றி உண்மைக்குப் புறம்பாக வேறு ஒன்றாகச் சொல்லக்கூடாது. கேட்பவர்களுக்கு இனிமை ஏற்படும் வகையில் நயமாகப் பேச வேண்டும். பெற்றோர்களான தாயும் தந்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பயனை எதிர்பாராமல் பிறர் செய்த உதவியை எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் மறப்பது கூடாது. மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்தி அதன் பயனை உண்டுவாழ்தல் கூடாது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #11 on: August 13, 2012, 06:40:42 PM »
எல்லாம் இறைவன் செயல்



* நல்லோருக்குச் செய்த உதவி கல்மேல் பொறித்த எழுத்தாக நிலைத்திருக்கும். தீயோருக்குச் செய்த உதவி நீர்மேல் எழுதிய எழுத்தாக சுவடு தெரியாமல் அப்போதே அழிந்து விடும்.
* நீருள்ள குளத்தில் இருக்கும் பறவைகள் நீர் வற்றியவுடன் குளத்தை விட்டு நீங்கி வேறு இடம் சென்று விடும். அதுபோல, செல்வ வளத்தில் உடனிருந்த நண்பர்கள் வறுமை வந்ததும் நம்மை விட்டு அகன்று விடுவர்.
* அல்லி, நெய்தல் மலர்கள் நீர் வற்றிய காலத்திலும் குளத்தை விட்டு நீங்காமல் இருப்பது போல, வறுமை வந்த போதும் உண்மையான உறவினர்கள் நம்மை விட்டு அகல மாட்டார்கள்.
* பொன்னால் செய்த குடம் உடைந்த பின்னும் பொன்னாகவே பயன்படும். அதுபோல சிறந்த பண்புகளுடைய செல்வந்தர் வறுமையில் வாடினாலும் பிறருக்கு நன்மையே செய்வர்.
* நினைத்த பொருள் ஒன்றாகவும், கிடைக்கும் பொருள் வேறாகவும் அமைவதும், அவ்வாறு இல்லாமல் நினைத்த பொருளே கிடைப்பதும், நினையாத ஒன்று நாம் எதிர்பாராத நிலையில் கிடைப்பதும் நம் வாழ்வில் நிகழ்கின்றன. இவை எல்லாம் நம்மை ஆளும் இறைவனின் செயலே ஆகும்.
* வரவுக்கு மேல் செலவு செய்பவன் தன்மானத்தை இழப்பான். அறிவு கெட்டு அலைவான். செல்லுமிடங்களில் திருடன் என்று பழி தூற்றப்படுவான். நல்லவர்களால் இவன் மிகப் பொல்லாதவன் எனறு எண்ணப்படுவான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #12 on: August 13, 2012, 06:42:25 PM »
லட்சுமியுடன் வருபவர்கள் யார்?



மரம் தன்னை வெட்டுபவர்களுக்கும் நிழல் தந்து வெயிலால் வாடாமல் நம்மை காக்கிறது. அதுபோல, அறிவுடையவர்கள் தாம் வாழும் காலம் வரைக்கும் தமக்கு தீமை செய்தாலும், தம்மை நாடி வருபவர்களுக்கு தம்மால் முடிந்த வரையில் நன்மைகளையே செய்வர். சந்தனக்கட்டையை எவ்வளவு தேய்த்தாலும், அது தன் வாசனையிலிருந்து ஒரு சிறிதும் குறையாது. அதுபோல, பிறருக்கு கொடுத்துதவி வாழ்வதில் இன்பம் காணும் நல்லவர்கள், தாங்கள் வறுமையில் வாடினாலும் தன் இயல்பான கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்கள்.ணஉறவினர்களையும், செல்வச்செழிப்பையும், நல்ல அழகையும் திருமகளாகிய லட்சுமி வரும்போது நம் வீட்டுக்குள் அழைத்து வருவாள். அவள் நம்மை விட்டு நீங்கினால் மேற்சொன்னவையும் அவளோடு சேர்ந்து நீங்கி விடும். "சிவாயநம' என்று எண்ணித் துதித்து வாழ்வோருக்கு ஒரு நாளும் துன்பம் இல்லை. விதியை வெல்லும் மந்திரம் இது. தண்ணீரின் நிறமும், சுவையும் அது உள்ள நிலத்துக்கேற்ப அமையும். நல்லோரின் பெருமை அவர்களுக்குள்ள உதவும் பண்பினால் மட்டுமே அமையும். கண்ணின் பெருமை கருணையால் அமையும். பெண்களுக்கு கற்பு கெடாமல் வாழும் வலிமையே பெருமையாக அமையும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ நல்ல நூல்களைக் கற்போம் ~
« Reply #13 on: August 13, 2012, 06:44:00 PM »
பிறரை பழித்துப் பேசாதீர்



* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.

* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.

* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.