Author Topic: நானே தொலைந்த கதை !  (Read 557 times)

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
நானே தொலைந்த கதை !
« on: March 22, 2019, 01:56:27 PM »
நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே !
உன் இதயம் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
நீயும் ஒரு கள்ளி என கண்டு கொண்டேன்
இது கள்வர்களின் காதல் கூடாரமோ !!

உன் விழியால் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சோலையில் குயிலாகிறேன்

கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா !
பேசாமல் முத்தம் கேட்கவா !!

வெயில் காயும் சாலையிலே
மழை தூவும் ஆனந்தமாய்
முன்பனி  காலத்தில் இரவினில்
உன் மார்பு சூட்டின் கதகதப்பாய்

தனிமை நீங்கும் வேளையிலே
காதல் நம்மை காற்றைப் போல
எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே....”

Offline Jabber

Re: நானே தொலைந்த கதை !
« Reply #1 on: March 28, 2019, 02:19:08 PM »
வணக்கம் JasHaa (Don't want to spoil by change this name into tamil..),

                கடந்த சில நாட்களாக தங்கள் கவிதைகளை வாசித்துக்  கொண்டு இருக்கிறேன்.. தங்களின் வார்த்தை பிரயோகங்கள் தனித்துவமாக உள்ளது.. மென்மையும் கோர்வையும் கலந்து ஒரு சேர அழகாக எழுதுகிறீர்கள்.. பிழைகள் இன்றி எழுத முற்படுவது பாராட்டுக்குரியது. மென்மேலும் தங்களின் படைப்புகள் இங்கே பதிவு செய்ய வாழ்த்துகிறேன்..

             நன்றி.

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
Re: நானே தொலைந்த கதை !
« Reply #2 on: March 30, 2019, 09:55:24 PM »
Hi jab,
மிக்க நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு ...
 தமிழின் மீது நான் கொண்ட ஆர்வமே
 என் எழுத்துக்களின் தாக்கம்